}

Thursday, September 24, 2009

உத்தரவு வாங்கிக்கிறேன் ஓ ஸ்ஸாமியோவ்வ்வ்வ்வ்வ்....

நண்பர்களே.. எனக்கு வேலை கொஞ்சம் அதிகமாகி விட்ட காரணத்தால் பதிவுலகை விட்டு சற்று ஒதுங்கி இருக்க வேண்டிய கட்டாயம்.. ஆகவே இப்போது விடை பெறுகிறேன்..காலமும் கடவுளும் ஒத்துழைத்தால் மீண்டும் சந்திப்போம்...


இதுவரை என் பக்கத்தை மதித்து ,வருகை தந்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி சாமியோவ்வ்வ்வ்வ்வ்...

Friday, September 18, 2009

A - Z -------TAG... TAG ... TAG

எல்லாருக்கும் வணக்கமுங்க.. கொஞ்ச நாளா பதிவுலகத்த விட்டு கொஞ்சம் ஒதுங்கி(நிம்மதியா !!!!) இருந்தேன்.. ஆனா நம்ம கிச்சன் கில்லாடிகளான கீதா,மேனகா, அம்மு மற்றும் கொங்கு நாட்டு தங்கம்(!!) இயற்கை அவர்கள் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்தனர். அதிலும் நம்ம இயற்கை முதலில் அழைப்பு விடுத்து பின் அது வேண்டுகோளாக மாறி அதன் பின் எச்சரிக்கையாக உருவெடுத்து கடைசியாக மிரட்டலாக வந்ததால் இந்த பதிவு...

1. A – Avatar (Blogger) Name / Original Name : / குறை ஒன்றும் இல்லை /ராஜ்குமார் /

2. B – Best friend? : நிறைய இருக்காங்க...
கவுண்டர் : அதில பசங்க எத்தனைன்னு மட்டும் கேளுங்க சார்.. கேப்மாரி சார் இவன்...

3. C – Cake or Pie? : ஃப்ரீயா கிடைச்சா ரெண்டும்

4. D – Drink of choice : சர்க்கரை, ஐஸ் இல்லாத சாத்துக்குடி ஜூஸ்..
கவுண்டர் : நான் சாப்பிடர டிரிங்க்ஸ்ஸே வேரம்மா!!!

5. E – Essential item you use every day? ஆக்ஸிஜன், தண்ணீர் முக்கியமா சாப்பாடு
கவுண்டர் : அப்போ நாங்க எல்லாம் செவ்வாய் கிரகத்திலேயா இருக்கோம்? பாருங்கையா மொக்கைய..

6. F – Favorite color ? என் மனசு மாதிறி வெள்ளை.
கவுண்டர் : டாய் டாய்... உன் மனசு என்ன கலருன்னு எனக்கு தெரியும் ராசா..

7. G – Gummy Bears Or Worms : --------------------------------------->என்னங்க இது?
கவுண்டர் : @!#@!#$@$#@$

8. H – Hometown? -கோவை..

9. I – Indulgence? - ஜனனி ஜனனி...

10. J – January or February? - ஜூலை

11. K – Kids & their name? ஏங்க அது எல்லாம்?

12. L – Life is incomplete without? இதயம், நுரையீரல், மூளை


13. M – Marriage date? ‍ செப்டம்பர் 1 ,2003

14. N – Number of siblings? = எண்ணிலடங்கா ...

15. O – Oranges or Apples?இரண்டும் தான்..

16. P – Phobias/Fears? நாய்...

17. Q – Quote for today? வாழ்க வளமுடன் ,

18. R – Reason to smile? சிரிக்க எதுக்குங்க காரணம்?

19. S – Season? எல்லாம் நல்ல காலம் தான்..

20. T – Tag 4 People?- யாரும் இல்ல....

21. U – Unknown fact about me? அதான் தெரியாதது சொல்லியாச்சு .. அப்புரம் எப்படி தெரியும்?

22. V – Vegetable you don't like? கத்திரிக்காய்

23. W – Worst habit? இருக்கு ... அது மட்டும் ரகசியம்....

24. X – X-rays you've had? இது எதுக்குங்க?

25. Y – Your favorite food? ஹி ஹி ஹி..... எல்லாமே..

26. Z – Zodiac sign? மகர ராசி ,அவிட்டம் நட்சத்திரம் ,ஏங்கக வேறு ஒரு வரன் பாக்குறீங்களா? அப்படி பாத்தா காது கேட்காத, வாய் பேசாத வரனா பாருங்க புண்ணியமா போகும்..
********************************************************************

அன்புக்குரியவர்கள்: அம்மாவும் அப்பாவும்

ஆசைக்குரியவர்:என்ன அடி வாங்க வைக்கிற முயற்சியா ?

இலவசமாய் கிடைப்பது: இலவசமாக குடுப்பதெல்லாமே!

ஈதலில் சிறந்தது: சமயத்தில் ஈவதே!

உலகத்தில் பயப்படுவது: பயப்பட வேண்டிய எல்லாத்துக்கும்

ஊமை கண்ட கனவு: அவ‌ன் பேசுவ‌து மாதிரி

எப்போதும் உடனிருப்பது: என் உயிர் தாங்க ..

ஏன் இந்த பதிவு: இயற்கையிடமிருந்து வந்த மிரட்டலால்!!

ஐஸ்வர்யத்தில் சிறந்தது:வாழத்தேவையான எல்லாமே!!!

ஒரு ரகசியம்: … .............................................

ஓசையில் பிடித்தது: மனதை சந்தோசப்படுத்தக்கூடிய எல்லா ஓசையுமே..

ஔவை மொழி ஒன்று: மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் ,

(அ)ஃறிணையில் பிடித்தது: என் லேப்டாப்..

Friday, September 4, 2009

கோவையில் நடந்த பிரபல பதிவர் சந்திப்பு..............


என்னடா இது எங்கே பார்த்தாலும் இந்த பிரபல சந்திப்பு பற்றி பதிவா போட்டு கலக்குறாங்க..ஆனா நம்மால அப்படி எழுத வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதேன்னு நினச்சப்போ அதற்கு ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது..நமது சிங்கை நாட்டு ரஜினி ரசிகர் மன்ற தலைவர், நமது மூத்த பதிவர்(எப்புடி..) கிரி சென்ற மாதம் தன் மகனுக்கு முடியெடுக்க இந்தியா வந்திருந்தார்..அப்போது எவனோ ஒருவன் பெஸ்கியிடமிருந்து என் மொபைல் நம்பர் பெற்று என்னை அழைத்து ஆச்சர்யப்படுத்தினார் ..விடுவோமா நாம ஏண்டா போன் செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு பேசினேன்!!!

அப்போது ஒரு வேலையாக அவர் கோவை வரவேண்டி இருந்ததால் சந்திக்க முடிவு செய்தோம்.. அப்போது நமது
பெஸ்கியும் அங்கே வர, கிறுக்கல் கிறுக்கன் தனது வீட்டில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் எங்கள் அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்தார்.. ஆஹா சாமி சோறு போடுது என நினைத்து உடனே நான் சம்மதம் தெரிவித்தேன்.. கிரி அண்ணனை தெரிவிக்க வைத்தேன்... ஆகவே அனைவரும் கிறுக்கல் கிறுக்கன் வீட்டில் கூடி சந்திப்பதாக நான்கு மனதாக முடிவு செய்யப்பட்டது...

அண்ணன் கிரி கோபியிலிருந்து வரும் போது சிறிது நேரமாகிற்று.. காரணம் கேட்டதற்கு அவர் வரும் போது ஒன் வேயில் வந்ததாகவும், அதை தடுத்து பிடித்து கேட்ட டிராபிக் கான்ஸ்டபிலிடம் என் வழி தனி வழி என தலைவர் டையலாக்கை சொல்லி தப்பித்து வந்ததாக கூறினார்..ஆனால் தப்பித்து வந்ததாக கூறியது நம்பும் படி இல்லை.. ஒரு வழியாக சிறுவர் மலர் புதிர் போட்டி போல கிறுக்கன் கிறுக்கன் வீட்டை அடைந்தோம்.. இனி இந்த வரலற்று சிறப்பு மிக்க சந்திப்பை தவற விட்ட மக்களுக்காக நடந்ததை நடந்த படி ஒளிபரப்பு..

கிகி : வாங்க வாங்க!!

குஒஇ : வந்திட்டேன்.. நான் தாங்க குறை ஒன்றும் இல்லாத ராஜ்!! இவர் கிரியண்ணன்..

கிகி : (ஆஹா இவன் அன் லிமிடெட் மீல்ஸ் ரெண்டு சாப்பிடுவான் போல இருக்கே!! நாம வேர அளவா செஞ்சு இருக்கோம்..இவனுக்கே பத்தாது போல இருக்கே..) ஓ !! வாங்க வாங்க.. வாங்க கிரி..

கிரி : (அதான் வந்தாச்சு இல்ல.. எத்தன தடவ கூப்பிடுவாங்க) ஹி ஹி ஹி...நல்லா இருக்கீங்களா?

ஏஒ: அடடே வாங்க....இப்போ தான் உங்கள பத்தி பேசிட்டு இருந்தோம்.. எப்படி வழி கண்டு புடிச்சீங்க?

குஒஇ:( அடங்கப்பா ஓசி சோறு கிடைக்கும்னு வந்தா.. எத்தனை சுத்து..) அதெல்லாம் புடிச்சிட்டோங்க..

கிகி : இந்தாங்க ஜூஸ் .. சாப்பிடுங்க..

குஒ இ: ( என்ன இது ஜூஸ் குடுத்து வயித்த நப்ப பாக்கிறாரா?) இல்லேங்க வேண்டாங்க ,.. வர்ரப்ப தான் குடிச்சேன்

கிரி : (எப்ப குடிச்சான்? எனக்கு தெரியாம?) அட ஜூஸ் தானே ராஜ் குடிங்க...

கிகி : ( எப்படியாச்சும் ஜூஸ் குடுத்து கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா...) குடிங்க..

ஏஓ: அப்புரங்க கிரி பயணமெல்லாம் எப்படி இருந்தது? எப்போ கிளம்பரீங்க?

குஒஇ : (என்ன இது இப்ப தான் வந்தோம் .. எப்ப கிளம்பரீங்கன்னு கேட்குறார்.. அப்போ சாப்பாடு இல்லையா..ஜூஸ் வேர வேணாம்னு சொல்லீட்டோம்.. இப்பவே எனக்கு பசிக்குதே..) எங்க் கிளம்பச்சொல்றீங்க?

கிரி : அடுத்த மாசம் 20 தேதி கிளம்பரேங்க..

குஒஇ :(ஓ அப்போ இங்கே இருந்து இல்லையா.. இந்தியாவிலிருந்தா..அப்பாட) ஹி ஹி ஹி..

கிகி : எப்படி போகுதுங்க வேலை எல்லாம்? உங்க ஊர்ல மழைங்களா?

கிரி : நல்லா போகுதுங்க.. ஆமாங்க ரெண்டு நாளா மழை...

குஒஇ : ஏங்க சாப்பிடுலாமா...

கிகி : (ஆஹா.. விட மாட்டான் போல இருக்கே..) அப்புறம் ராஜ்.. உங்க வேலை எப்படி போகுது? நீங்க கோவைதானா?

குஒஇ;( நாம என்ன கேட்டோம் இவர் என்ன சொல்ரார்) எந்த குறையும் இல்லேங்க.. ஆமா சாபிட...

கிரி : நீங்க எந்த ஊர்? என்ன வேலை செய்றீங்க?

கிகி : நான் நாகர் கோவிலுங்க,,. இங்கே வேலைக்காக இருக்கேண்..

ஏஓ: ஏங்க கிரி .. சமீபத்தில நம்ம பதிவுகள் எல்லாம்....

கிரி : (அய்யோ நாம எத பத்தி பேச கூடாதுண்னு நினைக்கிறோமா அத பத்தியே பேசராரே..) சொல்லுங்க

ஏஓ: தனி நபர் தாக்குதலா இருக்கே..என்ன செய்ய?

குஒஇ :( ம்ம்ம்ம்...கூட்டமா போய் கலவரம் பண்ண வேண்டியது தானே) ஏங்க சாப்ப்,,,,,

கிரி : அது நமக்கு எதுக்குங்க.. நாம பாட்டுக்கு நாம எழுத வேண்டியது.. அடுத்தவன் என்ன பண்ணா நமக்கெண்ணாங்க.. எவன் எவன் தாக்குனா நமக்கெண்ணா? நாம யாரையும் தாக்காம இருந்தா சரி..

குஒஇ: (இவ்வளவு விளக்கி சொல்லியும் இன்னும் ஏதோ கேட்பாங்க போல இருக்கே) ஏங்க சாப்ப்...

கிகி : ஆமாங்க கிரி ... இந்த பதிவுலகம் நமக்கு பல நட்புகளை குடுத்து இருக்கு..அதே சமயம் நிறைய எதிரிகளையும் தர வாய்ப்பு இருக்கு.. அதனால நாம கொஞ்சம் கவனமா தான் இருக்கனும்..

குஒஇ: (அய்யோ.. இப்பத்திக்கு விட மாட்டாங்க போல இருக்கே...கவனமா இருக்கனும்னா குலாம் நபி ஆசாத் சொல்ரத கேளுங்க...விக்ரமன் பட டையலாக் மாதிறி பேசுராங்களே..)ஏங்க சாப்ப்ப்...

கிரி : ஆமாங்க அது தான் சரி.. அதனால தான் நான் எந்த சந்திப்பிலேயும் பதிவுகள பத்தி பேசறதில்லை.. ( இனியாச்சும் விடுங்கடா சாமி)

ஏஓ : நாம இப்ப தான் சந்திச்சு இருக்கோம்.. சந்தோசமா இருக்குது.. இது தான் எனக்கு முதல் பதிவர் சந்திப்பு.. இப்படி ஒரு சந்திப்பு சென்னையில நடந்தப்ப என்ன அனுமதிக்கல. அதான் நான் எனக்குன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சேன்...

கிகி : நான் கூட ரெண்டு வருசத்துக்கு முன்னால எழுதீட்டு இருந்தேங்க..ஆனா சூழ் நிலை காரணமா தொடர முடியல..

குஒஇ: ( கொசு வத்தி சுத்தர நேரமா இது.. இங்கே சாப்படு போடராங்கண்ணு காலையில வேர எதுவும் சாப்பிடாம வந்திருக்கேன்.. இப்போ போயி...) ஏங்க சாப்ப்...

கிரி : அப்படீங்களா? அப்புரம் நான் கொஞ்சம் சீக்கிரமா போகணும் .. ஏண்னா பையன் அழுவான் வீட்டில..( இனியாச்சு விடுங்கடா..)

கிகி : ஓ அப்படிங்களா.. நல்ல குடும்பஸ்தர் ஆயிட்டிங்க,..பையன் எப்படிங்க .. ரொம்ப குறும்போ!!

குஒஇ: (ஆஹா ..அடுத்த டாபிக்கா..) ஏங்க சாப்ப்...

கிரி : ஆமாங்க ... ரொம்ப.. இப்ப தான் என் செல்லமாயிட்டு வரான்.. அப்புரம் நான் பண்றதில்ல பாதியாவது இப்போ பண்ணுவான் இல்ல...ரொம்ப சந்தோசமா இருக்குங்க குடும்ப வாழ்க்கை

ஏஓ : நீங்க சென்னையில எத்தன வருசம் இருந்தீங்க ? எங்கே இருந்தீங்க,,.

கிரி : நான் கிண்டியில இருந்தேங்க.. சுமார் 7 வருசம் இருந்தேன்.. நல்லா சென்னைய ரசிச்சேன்.. இப்பவும் என்னோட பல, பழைய நண்பர்கள் சென்னையில தான் இருக்காங்க..

குஒஇ:( சரி.. இனி ஒண்ணும் பண்ண முடியாது..) ஏங்க,,, ( வேணாம்.. வேணும்னே நான் சொல்ரத கேட்காத மாதிறி இருக்காங்க..)

ஏஓ : ஓ அப்போ உங்களுக்கு சென்னை அத்துப்படி ...

கிரி : அப்படி சொல்ல முடியாது.. தெரியும்...

கிகி : சரி சாப்பிட போலாமாங்க..

குஒஇ: (அப்பாட இப்ப தான் புத்தி வந்திருக்கு போல் இருக்கு..)

அனைவரும் சாபிட அமர்ந்தோம்.. கிகி அவர்கள் தன் கையாலேயே சிக்கன். மீன் என அமர்கள படுத்தி இருந்தார். சாப்பிட போகும் முன்னரே முடிவு பண்ணி விட்டேன்.. கிரி அண்ணனை பார்த்தேன் .. அவர் பாவம் கோழி கொத்துவது போல தான் சாப்பிக்கூடும் என அப்பட்டமாக தெரிந்தது....ஆக அவரிடம் அவர்ந்து அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் , ஆனால் நம்ம ஏஓ பல ஊர்களுக்கு சென்று புரோட்டா படமெல்லாம் எடுத்து இருப்பதால அவரே நமக்கு சரியான ஜோடியென அமர்ந்தேன்.. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டோம்.. சாப்பிடும் போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியே இருந்ததே தவிற எந்த பொறாமையும் இருக்கவில்லை..கிகி இன் முகத்துடன் அனைவருக்கும் பரிமாறினார்.. என்னை தவிர அனைவரிடமும் இன்னும் வேண்டுமா இன்னும் வேண்டுமா என கேட்டு பரிமாறினார். ஆனால் என்னிடம் மட்டும் போதுமா போதுமா என மிக மிக எச்சரிக்கையுடனே கேட்டு பறிமாறினார்... ஆனாலும் நாம் தான் சாப்பிட அமர்ந்த உடன் எந்த ஃபார்மாலிட்டியும் பார்ப்பதில்லையே.. கிகி மனதை புண்படுத்தாமல் ஆமாம் இன்னும் வேணும் எனக்கேட்டே வாங்கி சாப்பிட்டேன்..

ஒரு வழியாக விருந்தை முடித்துக்கொண்டு , விருந்துக்கு ஏற்பாடு செய்த கிகி, ஏஓ ஆகியவர்களிடன் நன்றி கூறி நானும் கிரியண்ணனும் விடை பெற்றோம்..






மிக முக்கிய குறிப்பு : பதிவர் சந்திப்பு படங்கள் பற்றி கேட்பவர்களுக்கு.. ஹி ஹி ஹி.. இது முழுக்க முழுக்க கற்பனையான சந்திப்பு.. நடந்திருக்க வேண்டிய சந்திப்பு ஆனால் நேரமின்மையால் முடியவில்லை.. என்வே இந்த கற்பனை சந்திப்பு!!!!