}

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் பிளாஸ் நியூஸ்


வேட்டைக்காரன் படத்தை சன் குழுமம் வேட்டையாடி பின் விஜய் வேட்டையாடி இப்போது எல்லோரும் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள்..


எனக்கு ஈ மெயிலில் வந்த செய்தி..உங்களுக்கு ஏற்கனவே வந்திருந்தாலும் ரசிக்க கூடியதே..

Saturday, November 28, 2009

கவுண்டரும் ஈழ தமிழ் எழுத்து ஆர்வலர் சார்பாக செந்திலும்……

செந்தில் : அண்ணே .. அண்ணே

கவுண்டர் : என்னடா கவுட்டி வாயா? ஏன் இப்படி லாரில அடிபட்ட நாய்
மாதிறி கத்தற?

செந்தில் : ஒண்ணும் இல்லேண்ணே.. உங்கள பாத்து ஈழத்தமிழர் பத்தி
பேசணும்னே..

கவுண்டர் : என்னடா நீதான் உண்மையான ஈழத்த்மிழ் ஆர்வலனா?

செந்த்தில் : அண்ணே.. உண்மையானா ஆளுங்கள் எல்லாம் எதாவது உதவ
முடியுமான்னு பாக்க போய்ட்டாங்கண்ணே..

கவுண்டர் : அப்போ நீ?

செந்தில்: ஹி ஹி ஹி…. சும்மா நேரம் போகாம இருக்க அவங்கள பத்தி
எழுதீட்டு இருக்கேண்ணே

கவுண்டர் : ஓ.. நீ தான அவன்.. வாடி வா.. உன்ன தான் நான் தேடிட்டு
இருந்தேன்..

செந்தில்: அண்ணே இலங்கையில் தமிழர் ரொம்ப கஷ்டப்படுராங்கண்ணே..

கவுண்டர் : இலங்கையில மட்டும் தான் கஷ்டப்படுராங்களா? உங்க பக்கத்து
வீட்டுக்காரன பத்தி கவலைப்படுடா அணுகுண்டு தலையா..

கவுண்டர் : சரி கஷ்டப்படுராங்க என்ன செய்யலாம்?

செந்தில்: ஏதாச்சும் செய்யணுங்க..

கவுண்டர் : அந்த ஏதாச்சும் தான் என்ன?

செந்தில்: போர நிறுத்தணுங்க

கவுண்டர் : எப்படி ? ரயிலுக்கு முன்னாட சிகப்பு கொடி காட்டர மாதிறியா?

செந்தில்: உலகத்தமிழர் எல்லாம் ஒண்ணு சேர்ந்தா நிறுத்திடலாங்க..

கவுண்டர் : எப்படி உலகத்தில தமிழர் எல்லாம் ஒண்ணு சேரணுமா? முதல்ல
உள்ளூர் தமிழர்கள ஒண்ணு சேர்க்க முடியுமாண்ணு
பாருடா ..அப்புரம் உலகத்தமிழர ஒண்ணு சேர்க்கலாம் ..

செந்தில் : இல்லேண்ணா.. போராட்டம் பண்ணலாங்க..

கவுண்டர் : என்ன போராட்டம்?

செந்தில் : போர் வேணாம்னு சொல்லி..

கவுண்டர் : யார் கிட்ட சொல்லி ? எங்கே யாராச்சும் சொல்லுங்க.. யார் கிட்ட
சொன்னா கேட்பாங்க?

செந்தில்: !!?!!??!!!

செந்தில் : தனித்தமிழ் நாடு கேட்டா?

கவுண்டர் : அடி செருப்பால நாயே… இந்தியா மூலமா எல்லாம்
அனுபவிச்சிட்டு இப்போ உனக்கு தனி நாடு கேட்குதோ? கேட்படா
கேட்பே.. உனக்கு இந்தியாவில வாழ பிடிக்கலேண்ணா பக்கம் தான்
இலங்கை அப்படியே நீந்தி போயிடு இல்லே வேர எதாச்சும்
நாட்டுக்கு போயி அங்கே கேளு தனி நாடு வாயிலேயே சுடுவான்..
எல்லாம் இந்தியாவோட தலைவிதிடா..

கவுண்டர் : சரி அத விடு.. நீ என்ன பண்றே?

செந்தில் : நாங்க வலைத்தள எழுத்தாளர்கள்.. ஈழத்தமிழர் படும் பாடு பத்தி
எழுதீட்டு இருக்கோம்.. எங்கள் கண்டனங்களை எங்கள் எழுத்து
மூலமா சொல்லீட்டு இருக்கோம் ,

கவுண்டர் : எத்தன நாளா?

செந்தில் : ரொம்ப நாளா..

கவுண்டர் : எழுதுறத தவிர வேர ஏதாச்சும்?

செந்தில் : இல்லேங்க நாங்க எழுத்து மூலமா தான் போராட்டி இருக்கோம்..

கவுண்டர் : உங்க உணர்வு ரொம்ப சரிடா மண்டையா ..அத நான்
மதிக்கிறேன்.. ஆனா ஒரு சந்தேகம்.. எங்கே , எப்போ எழுதறீங்க?

செந்தில்: எங்க அலுவலகத்தில் தாண்ணே..

கவுண்டர் : அப்படி வாடா பென்சில் மண்டையா.. அப்போ அடுத்தவன் காசுல,
ஃபீரியா பிளாக் கிடைச்சதால உங்களுக்கு ஈழத்தமிழர் மேல பாசம்
வந்து இருக்கு .. அடடா என்ன பாசம்.. ஆமா இதே ஒரு பக்கம் எழுத
10 ரூபாய்னா எழுதுவியா நீ?

செந்தில் : நீங்க ஒட்டு மொத்த தமிழர்கள கொச்சைப்படுத்தறீங்க…

கவுண்டர் : டேய் நாயே நாயே… நான் கொச்சை படுத்தலேடா.. உங்கள மாதிறி
ஆளுங்க தான் .. வெறுமனே எழுதி தமிழன கொச்சைப்படுத்தறீங்க..
தமிழ் மொழி தான்..அதுக்கு உயிர் எல்லாம் இல்லேடா .. தமிழ பேச
மட்டும் பயன் படுத்துடா சண்டை போட எல்லாம் பயன்
படுத்தாதே..

செந்தில் : அப்போ என்ன பண்ண சொல்றீங்க?

கவுண்டர் : யாருக்கு கஷ்டம் வந்தாலும் , நீ கவலைப்பட்டு தான் ஆகணும்..
ஆனா கவலைப்படரது மட்டும் தீர்வு இல்லே.. உன்னால என்ன
பண்ண முடியும்னு பாரு.. முடிஞ்சா ஏதாச்சும் பண்ணு இல்லே
விடு.. அத விட்டுட்டு அத பத்தியே எழுதீட்டு இருந்தா அவனுக்கு
வலி தான் அதிகமாகுமே தவிர குறையாது…

நீங்க எல்லாம் உண்மையான ஈழத்தமிழ் ஆர்வலர்கள்ணா பக்கத்துல இருக்கிர முகாம்கு போய் ஒவ்வொரு குடும்பத்த தத்தெடு.. முடியலயா இப்படி வெட்டியா எழுதற நேரத்தில அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய ஆள் யாராச்சும் கிடைப்பாங்களான்னு பாரு..

செந்தில்: சரிண்ணே .. போய் முயற்சி பன்றேன்..( என்ன இந்த ஆளு.. ஏதோ ஹிட்ஸுக்கு எழுதீட்டு இருந்தா சீரியஸா போய் உதவி கேட்க சொல்ரான்.. இவன இப்படியே விடகூடாது… இவன தமிழ் துரோகியாக்கி எழுதிட வேண்டியது தான்.. )


மிக முக்கிய பின் குறிப்பு : இந்தியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்..முதலில் இந்தியா, பிறகு தமிழ்நாடு, என் குடும்பம், என் சுற்றமும் நட்பும் , என் சக தமிழன், சக இந்தியன் பிறகே மற்ற எல்லோரும் என வாழ பழகிய ஒரு சராசரி இந்தியன்.. ஈழம் பற்றி என்னால் செய்ய முடியாத ஏதாவது எழுதி என்னையும் , பிறரையும் ஏமாற்ற மாட்டேன்..

Saturday, November 21, 2009

தமிழ் ஆதரவாளர்களிடம் சில கேள்விகள்!!!




எல்லோருக்கும் வணக்கமுங்க!!! கடந்த சில மாதங்களாக நமது பதிவுலகில் முக்கிய இடத்தை பிடிச்சது ஈழத்தமிழர் பற்றிய செய்திகளே.. நிற்க .. நான் அதைப்பற்றி ஏதும் எழுதப்போவதில்லை.. எனக்கு சில சந்தேகங்கள்.. அதை தெளிவு படுத்திக்கொள்ளவே ...

1. ஈழத்தமிழர் பிரச்சினையில் யார் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்? காலங்காலமாக நடப்பதாக சொல்கிறீர்கள்.. எப்படியும் இறந்த காலத்தை வாங்க முடியாது.. எதிகாலத்தை நிர்ணயிக்க முடியாது.. ஏனெனில் அமெரிக்கா முதல் ஐ.நா வரை இலங்கையிடம் இதைப்பற்றி வற்புறுத்துகிறார்கள்..

2. இந்தியாவிலிருந்து ஈழத்தமிழர்கள் மேல் பரிதாபப்படும் தமிழர்களுக்கு, நீங்கள் இது வரை எவ்வளவு சக இந்திய தமிழர்களுக்கு உதவி செய்துள்ளீர்கள்?

3. ஒரு வேளை இப்படி பதிவுகளில் எழுதுவதும், சிலரை போற்றுவதும் பலரை தூற்றுவதும் மட்டுமே உங்களால் தமிழர்களுக்கு செய்ய முடிந்த உதவிகளா?

4. கடந்தசில மாதங்களாக முத்துக்குமார் என்வரின் புகைப்படத்தை தத்தம் பதிவுகளில் வைத்து அஞ்சலி செலுத்தினீர்களே இப்போதும் எவ்வளவு பேர் அப்படியே வைத்துள்ளீர்?
ஒரு சமயம் காங்கிரஸ் கட்சியின் முன்னால் அமைச்சர் இளங்கோவன் யார் இந்த முத்துக்குமார் எனக்கேட்டதற்கு பல பதிவர்களும் அவரைத்திட்டி எழுதினீர்களே? இன்னும் கொஞ்சம் காலம் போனால் உங்களில் எவ்வளவு பேருக்கு சட்டென முத்துக்குமார் பெயர் நியாபகம் வரும்?

5. வெளி நாடுகளில் வசிக்கும் சக தமிழர்கள் எவ்வளவு பேர் தமிழர்களுக்கு உதவி செய்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கை, மலேசியா மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் புதியதாக அந்தந்த நாடுகளுக்கு வரும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளை அமைத்து தர ஏதாவது அமைப்பை ஏற்படுத்து உள்ளீர்களா? குறைந்தது தொடர்பு கொள்ளவாவது ஏதாவது வழி உண்டா?

6. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழைப் பூர்விகமாக கொண்ட மக்களால் சக தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடிகிறது?

7. இந்தியாவில் அண்டை மா நிலத்தில் வசிக்கும் தமிழர்கள் எத்தனை பேர் சக தமிழர்களுக்கு உதவும் நிலையில் இருக்கின்றீர்கள்?

8. தமிழகத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைந்து விட்டனர் என நினைக்கிறீர்களா? அது அரசாங்கத்தின் வேலை எனில், ஈழ விசயத்தில் மட்டும் எப்படி நீங்கள் எதையாவது செய்ய முடியும் என நம்புகிறீர்கள்? இந்தியாவில வசிக்கும் , சக இந்தியனுக்கு உங்களால் எதையும் பெற்று தர முடிய வில்லை என்றால் எப்படி அடுத்த நாட்டில் வசிக்கும் தமிழனின் துயர் நீக்க போகிறீர்கள்? உங்களால் ஒரு பைசா அளவுக்கேனும் சக தமிழனுக்கு உபயோகம் உண்டா?

9. ஈழத்தமிழர் மேல் அக்கரை கொள்ளும் எவ்வளவு பேர் உடல் தானம் அல்லது கண் தானம் செய்துள்ளீர்கள்?

10. போர் இல்லாத காலங்களில் அல்லது ஒரளவேனும் நல்ல நிலையில் இருக்கும் காலங்களில் ஈழத்தமிழர்களால் மற்ற தமிழர்களுக்கு என்ன உதவி கிடைத்தது.. இப்போதும் பல நாடுகளில் நல்ல நிலையில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் இந்திய தமிழர்களுக்கு உதவி ஏதேனும் கிடைக்கிறதா?

மேற்கூறிய கேள்விகளுக்கு பெரும்பான்மை கேள்விகளுக்கு இல்லை என பதில் வந்தால் , உங்களுக்கு எந்த தமிழர் பற்றியும் எழுத அருகதை இல்லை... ஆம் என பதில் வந்தால் கண்டீப்பாக ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரு முடிவு வந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்...



ஒரு மிக முக்கிய பின் குறிப்பு :

நானும் அருகதை அற்றவனே... அதனால் தான் இன்னும் ஈழம் பற்றி எந்த இடுகையும் எழுதவில்லை !!! எதோ என்னால் முடிந்த அளவு சக தமிழனுக்கு உதவிவிட்டு பிறகு மற்றர் பற்றி கவலை கொள்கிறேன்......




Thursday, November 19, 2009

அண்டமோனியா அம்மையாரும், சில வீரமான தமிழக காங்கிரஸ் பிரபலங்களும் பிறகு நானும்.. பாகம் 1

வணக்கமுங்க... எல்லோருக்கும் வணக்கம்... கொஞ்ச நாளா பதிவுலகத்திலே இருந்து விலகி இருந்தேன் ஆனால் நான் சில பதிவுகளை படித்து வந்தேன்..கடந்த ஒரு மாத காலமாக சில பதிவுகளில் நான் இட்ட பின்னூட்டம் எனக்கு பல பட்டங்களை தந்தது.. அது வேறும் ஒன்றும் இல்லேங்க உளருவாயன், ஒன்றும் தெரியாதவன் அப்படி இன்னும் சில.. எனக்கு அது முன்பே தெரியும் என்பதாலும் மேற்கூறிய பட்டங்களை தந்தவர் பேரறிஞர்( அண்ணா இல்லேங்க ) என்பதாலும் பிரச்சினை அதுவல்ல....

எனக்கு சில சந்தேகங்கள்... உங்களின் பெருவாரியான, நியாயமான கருத்துக்களின் அடிப்படையில் நான் ஒரு வேளை உண்மையாகவே தவறு செய்து இருந்தால் திருத்திக்கொள்ளவே இந்த பதிவு!!!!

ஒரு சின்ன தெரிந்த கதை பிறகு நிறைய தெரிந்த , தெரியாத விவரங்கள்...

ஒரு காட்டில் மிருகங்களின் தொகை அதிகரிக்கவே அதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் சிங்க ராஜா தவித்தது.. நரி அதற்கு ஒரு யோசனை சொன்னது. அதாவது காட்டில் இருக்கும் அனைத்து மிருகங்களும் ஒரே இடத்தில் கூட வேண்டும் , ஒவ்வொரு மிருகமும் ஒரு நகைச்சுவை சொல்ல வேண்டும். அந்த நகைச்சுவைக்கு அனைத்து மிருகங்களையும் சிரிக்க வைக்க வேண்டும் . ஒரு மிருகம் சிரிக்கவில்லை என்றாலும் கூட நகைச்சுவை சொன்ன மிருகத்தை மற்ற அனைத்து மிருகங்களும் வேட்டையாடிக்கொள்ளலாம் என்பதே அந்த யோசனை.

அதன்படி ஒரு நாளில் அனைத்து மிருகங்களும் ஒன்று கூடின. முதலில் ஒரு கரடி ஒரு நகைச்சுவை கூறியது. அதைக்கேட்ட அனைத்து மிருகங்களும் சிரித்தன ஆனால் ஒரு சுண்டெலி மட்டும் சிரிக்கவில்லை. எனவே அந்த கரடி கொல்லப்பட்டது. பின்பு ஒரு ஒட்டகச்சிவிங்கி கதை சொன்னது அதற்கும் எலியைத்தவிர மற்ற அனைத்து மிருகங்களும் சிரிக்கவே அதுவும் கொல்லப்பட்டது..
இதைக்கண்டு பயந்த படியே ஒரு முள்ளம்பன்றி நகைச்சுவை சொல்ல வந்தது, அதைக்கண்டதும் எலி பயங்கரமாக சிரித்தது.. உடனே சிங்கமும், பிற மிருகங்களும் மிகுந்த கோபத்துடன் எலியைப்பார்த்து காரணம் கேட்டன . அதற்கு அந்த எலி சொல்லியதாம்

ஒன்றும் இல்லை ராஜா! எனக்கு கரடி சொன்ன நகைச்சுவை நியாபம் வந்தது அதனால் தான் சிரித்தேன் என்று..


இந்த சுண்டெலியைப்போலவே நமது தமிழக காங்கிரஸாருக்கு திடீரென ரோசம், கோபம், தன்மானம் எல்லாம் காலம் கடந்து இப்போது வந்துள்ளது.... திமுக வை மிரட்டுகிறதாம்!!!!!


சரி நாம் விசயத்துக்கு வருவோம்.. இந்த பதிவை எழுத காரணமான சம்பவங்கள்

சம்பவம் 1

கீழ்கண்ட புகைப்படங்களை பாருங்கள்..
இரண்டுக்கும் ஏதாவது வேற்றுமை உள்ளதா?
ஒருவர் ஒருவேளை உண்ணாவிரதமிருப்பவர் மற்றவர் ஒரு நாள் மட்டும் ஏழையாக இருப்பவர்... ( ஒரு சமயம் இரண்டாம் வகுப்பில் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போதும் அப்படியா எனக்கேட்டு சொல்லுங்கள்!!!)

எனக்கு வந்த சந்தேகம் என்னவெனில் இந்த பட்த்தில் வேண்டுமானால் முரண்பாடு இருக்கலாம் ஆனால் அதனால் குறைந்த பட்சம் சில ஏழைகளாவது பயன் பெறுவர் என்பதை மறுக்க முடியது, ஆனால் இந்த ஒரு நாள் ஏழையால் எத்துனை பேர் பயனடைந்தனர் ?






































இந்த பதிவுக்கான எனது பின்னூட்டமும் அதற்கான பதிலும்..

கேள்வி : //ஏங்க அப்படியே.. இந்த படத்தையும் பார்த்து எவ்வளவு கஷ்டப்படுராருன்னு சொல்லுங்களேன்!!!! அந்தம்மா இரும்பு சட்டி உங்க தலைவர் புது பிளாஸ்டிக் சட்டி.. அவங்க கால்லசசெருப்பு இல்ல உங்க த்லைவர் கால்ல .... பாருங்க
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi80B3ZTwmK1T4eMfusZIpOTI_iUM41x4vqZ7_mfyyV3jSlCtTUN5QoeKpkcJHu6MSyY6llejhN1T4zO8C5hEh0Fp4xf_S1WErWfdLoQrtTe7I5ZJgEckWWMjg1LAz7Dz7zehzx8QN7AXU/s400/Rahul+Gandhi.jpg //

// குற்றம் பார்க்கில் அரசியல் இல்லேங்க ... எல்லா கட்சியிலேயும் இப்படி நிறைய முரண்பாடு இருக்கு.. :))))))//

பதில் :// குறை ராஜ்குமார், உங்க மொக்கை லாஜிக் தாங்கலை.. ஒரு ஏழையின் மகனின் கஷ்டத்தை அறிந்துக் கொள்ள அந்த மகனின் தாயின் கணவராக மாற வேண்டும் என்பது போல் இருக்கு உங்க கொடுமையான லாஜிக். ஏன் ப்ளாஸ்டிக் சட்டி, கால் செருப்போட நிறுத்திட்டிங்க? புடவை, ரவிக்கை, பாவாடை , வளையல் எல்லாம் ஏன் எங்க தலைவர் அணிந்துக் கொள்ளவில்லை என்றும் கேட்டிருக்கலாம்.//

என் கேள்வி : ஹா ஹா ஹா.. அது லாஜிக் இல்லேங்க.. நீங்க ஒரு படத்த போட்டு கருத்த சொல்ரீங்க. நானும் அவ்ளொ தான்.. புடவை,ரவிக்கை எல்லாம் உங்க சமாளிப்பு.. நான் சொல்ல வந்த கருத்து வேர நீங்க சொல்ரது வேர,.. ஒருத்தர் கஷ்டப்பட்டு செய்ர வேலையில உங்க தலைவரும் எப்படி பங்கெடுத்துக்கிரார் ? அது தான் கேள்வி... என் புருசனும் கச்சேரிக்கு போனான் என்பது போல உங்க தலைவரும் வேலை இல்லே இல்லே கஷ்டப்பட்டு வேலை செய்ராராம்!!!
நீங்க எப்படி பல்லிளிக்கும் பகுத்தறிவுன்னு தலைப்ப நியாயப்படுத்தறீங்கலோ அதே மாதிறி பல்லிளிக்கும் பாட்டளி தோழமைன்னு எடுத்துக்கலாமில்லையா?//

பதில் : நான் ஒரு புண்ணாக்கும் சொல்லலை.. பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டே எமன் என்பதை மட்டும் எப்படி நம்பலாம் என்பது தான் இங்க கேள்வி. புருஷன் கச்சேரி என்பதெல்லம் வழக்கமான உங்கள் அதிமேதாவி அரசியல் அறிவின் அடையாளத்தை தான் காட்டுது. ஒரு தலைவர் சாமானியனின் இடத்திற்கே வந்தால் தான் அவர்கள் கஷ்டம் புரியும் என்று ஒரு பக்கம் கத்திக் கொண்டே, அப்படி யாராவது வந்து அவர்கள் கஷ்டத்தை நேரடியாக உணர்ந்தால் அய்யோ விளம்பரம் , புருஷன் கச்சேரிக்குப் போறான் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறோம். மேனுஃபேக்சரிங் டிஃபெக்ட்.

எனது கேள்வி : இப்படிதான் ஒருதடவ கலாவதின்னு ஒரு அம்மா வீட்டுக்கு போய் கஷ்ட்டப்பட்டு வந்து பாராளுமன்றதில் எல்லாம் பேசினாரு.. இப்போ அந்தம்மா எவ்வளவு வசதியா இருக்காங்கன்னு உங்க தலைவர்தான் சொல்லணும்..

ரெண்டவது இந்த கலைஞர் காப்பீட்டுதிட்டம் விளம்பரம், அணுகுமுறை வேணும்னா தப்பா இருக்கலாம் ஆனா அதனால பல ஏழைகள்(அவங்க திமுகவாகவே இருந்தாலும்) பயனடையராங்க.. ஆனா உங்க தலைவரோட ஏழ்மை உணர் திட்டத்தால எத்தன பேர் பயனடைஞசு இருக்காங்கன்னு சொல்ல முடியுமாங்க?

முக்கியமான ஒரு விசயம்... கருணாநிதி பேசரதெல்லாம் மத்தவங்களுக்கு மட்டும் தான்னு ஊருக்கே தெரியும்.. அப்படி இருந்தும் நீங்க படம் போட்டு விளக்கம் சொல்றீங்க அதே சமயம் உங்க தலைவர் படத்த பத்தி சொன்னா கோவம் வருது :)))))))

பதில் : இந்த சப்பை கேள்விக்கெல்லாம் எங்க தலைவர் பதில் சொல்லனுமா? நானே சொல்றேன். அந்த கலாவதி மஹாரஷ்ட்ரா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வசதியா இருக்காங்க.. கடைசி நேரத்துல விலகிட்டாங்க. கொஞ்சம் செய்தியும் படிங்க.

கருணாநிதியின் திட்டத்தை யாரும் குறை சொல்லலை. அந்த விளம்பரத்தை மட்டும் தான். ஒரு முதல்வருடன் ஒரு எம்பியை ஒப்பிடும் உங்கள் மேதாவித்தனம் மீண்டும் மீண்டும் என்னை சோர்வடைய வைக்கிறது. முதல்வரால் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த முடியும். ஒரு எம்பியால் அவ்வாறு செய்ய முடியாது. மேலும் 100 நாள் கட்டாய வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்த அவரும் காரணம். சில கயவாளிகளால் அது சில இடங்களில் கேவலமாக செயல் படுத்தப் படுகிறது.

என்ன சொன்னாலும் நீங்கள் திருப்தி அடைய போவதில்லை. இனி உங்களுக்கு பதில் சொல்லப் போவதும் இல்லை.


எனது கேள்வி : செய்திய முழுசா படிங்க .. அவங்க ஏன் அந்த முடிவு எடுத்தாங்கன்னு... அவர் ஒரு நாள் எழையா இருந்தும் எந்த பிரியோஜனமும் இல்லாம தான்..


அப்புரம் அந்த ஒப்புமைக்கு நீங்க குடுத்த விளக்கத்திலேயே உங்க மேதாவித்தனமும் நல்லா தெரிய்துங்க.. அவர் வெரும் எம்பியா மட்டும் இருந்தா நான் ஏன் கேட்கபோறேன்..? ஊருக்கே தெரியும் அவருடைய பவர் என்னன்னு..:)))))) உங்கள நினைச்சா சிரிப்பா இருக்கு..விட்டா அவரை தொண்டர் மட்டும் தான்னு சொல்வீங்க போல!!!

அப்புரம் வெரும் எம்பி எப்படி அந்த 100 நாள் திட்டத்திலே பங்கேத்தாருன்னு நீங்க தான் விளக்கணும்..

//இனி உங்களுக்கு பதில் சொல்லப் போவதும் இல்லை//

எதிர் பாத்தேன்.. நன்றி//


நண்பர்களே எனது சந்தேகம் ஒன்று தான் கலைஞரின் பகுத்தறிவு (!!!) ஊரறிந்த உண்மை.ஆனால் ராகுலின் ஒரு நாள் ஏழை நாடகம் ?

கடந்த ஐந்தாண்டுகளாக திமுக என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டது காங்கிரஸின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் தானே? திமுக செய்த அனைத்து ஊழல் காரியங்களும் காங்கிரஸுக்கு தெரியாமல் நடந்திருக்காது ஆகவே அதுவும் ஊழலின் ஒரு பங்காளி,..உண்மையாகவே அவர்கள் கூவுவது போல் இந்தியாவின் மேல் அக்கரை இருந்தால் எந்த ஊழலும் நடக்காமல் தடுத்திருக்க வேண்டும். கெட்டது செய்வது விட அதற்கு துணை போவது பெருங்குற்றமல்லவா? இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் காங்கிரஸ் செய்தது விளக்கு பிடிக்கும் செயலுக்கு ஒப்பானதே !!!!! பாவம் இப்போது தான் விளக்கின் சூடு தெரிகிறது போல உள்ளது !!!!


மிக முக்கிய பின் குறிப்பு : நான் திமுக அபிமானி என நினைப்பவர்களுக்கு நேரமிருந்தால் எனது முந்தைய படைப்புகளை பார்க்கவும் !!!!

Sunday, October 18, 2009

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

நண்பர்கள் அனைவருக்கும்
..
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

..
.
.
.

. 2010 ஆண்டு தீபாவளி வாழ்த்துக்கள்.........

பாருங்க நான் தான் முதல் ஆள் வாழ்த்தரது .. ....... எப்புடி??????????

Friday, October 16, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்!!!!

அனைருக்கும் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Thursday, September 24, 2009

உத்தரவு வாங்கிக்கிறேன் ஓ ஸ்ஸாமியோவ்வ்வ்வ்வ்வ்....

நண்பர்களே.. எனக்கு வேலை கொஞ்சம் அதிகமாகி விட்ட காரணத்தால் பதிவுலகை விட்டு சற்று ஒதுங்கி இருக்க வேண்டிய கட்டாயம்.. ஆகவே இப்போது விடை பெறுகிறேன்..காலமும் கடவுளும் ஒத்துழைத்தால் மீண்டும் சந்திப்போம்...


இதுவரை என் பக்கத்தை மதித்து ,வருகை தந்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி சாமியோவ்வ்வ்வ்வ்வ்...

Friday, September 18, 2009

A - Z -------TAG... TAG ... TAG

எல்லாருக்கும் வணக்கமுங்க.. கொஞ்ச நாளா பதிவுலகத்த விட்டு கொஞ்சம் ஒதுங்கி(நிம்மதியா !!!!) இருந்தேன்.. ஆனா நம்ம கிச்சன் கில்லாடிகளான கீதா,மேனகா, அம்மு மற்றும் கொங்கு நாட்டு தங்கம்(!!) இயற்கை அவர்கள் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்தனர். அதிலும் நம்ம இயற்கை முதலில் அழைப்பு விடுத்து பின் அது வேண்டுகோளாக மாறி அதன் பின் எச்சரிக்கையாக உருவெடுத்து கடைசியாக மிரட்டலாக வந்ததால் இந்த பதிவு...

1. A – Avatar (Blogger) Name / Original Name : / குறை ஒன்றும் இல்லை /ராஜ்குமார் /

2. B – Best friend? : நிறைய இருக்காங்க...
கவுண்டர் : அதில பசங்க எத்தனைன்னு மட்டும் கேளுங்க சார்.. கேப்மாரி சார் இவன்...

3. C – Cake or Pie? : ஃப்ரீயா கிடைச்சா ரெண்டும்

4. D – Drink of choice : சர்க்கரை, ஐஸ் இல்லாத சாத்துக்குடி ஜூஸ்..
கவுண்டர் : நான் சாப்பிடர டிரிங்க்ஸ்ஸே வேரம்மா!!!

5. E – Essential item you use every day? ஆக்ஸிஜன், தண்ணீர் முக்கியமா சாப்பாடு
கவுண்டர் : அப்போ நாங்க எல்லாம் செவ்வாய் கிரகத்திலேயா இருக்கோம்? பாருங்கையா மொக்கைய..

6. F – Favorite color ? என் மனசு மாதிறி வெள்ளை.
கவுண்டர் : டாய் டாய்... உன் மனசு என்ன கலருன்னு எனக்கு தெரியும் ராசா..

7. G – Gummy Bears Or Worms : --------------------------------------->என்னங்க இது?
கவுண்டர் : @!#@!#$@$#@$

8. H – Hometown? -கோவை..

9. I – Indulgence? - ஜனனி ஜனனி...

10. J – January or February? - ஜூலை

11. K – Kids & their name? ஏங்க அது எல்லாம்?

12. L – Life is incomplete without? இதயம், நுரையீரல், மூளை


13. M – Marriage date? ‍ செப்டம்பர் 1 ,2003

14. N – Number of siblings? = எண்ணிலடங்கா ...

15. O – Oranges or Apples?இரண்டும் தான்..

16. P – Phobias/Fears? நாய்...

17. Q – Quote for today? வாழ்க வளமுடன் ,

18. R – Reason to smile? சிரிக்க எதுக்குங்க காரணம்?

19. S – Season? எல்லாம் நல்ல காலம் தான்..

20. T – Tag 4 People?- யாரும் இல்ல....

21. U – Unknown fact about me? அதான் தெரியாதது சொல்லியாச்சு .. அப்புரம் எப்படி தெரியும்?

22. V – Vegetable you don't like? கத்திரிக்காய்

23. W – Worst habit? இருக்கு ... அது மட்டும் ரகசியம்....

24. X – X-rays you've had? இது எதுக்குங்க?

25. Y – Your favorite food? ஹி ஹி ஹி..... எல்லாமே..

26. Z – Zodiac sign? மகர ராசி ,அவிட்டம் நட்சத்திரம் ,ஏங்கக வேறு ஒரு வரன் பாக்குறீங்களா? அப்படி பாத்தா காது கேட்காத, வாய் பேசாத வரனா பாருங்க புண்ணியமா போகும்..
********************************************************************

அன்புக்குரியவர்கள்: அம்மாவும் அப்பாவும்

ஆசைக்குரியவர்:என்ன அடி வாங்க வைக்கிற முயற்சியா ?

இலவசமாய் கிடைப்பது: இலவசமாக குடுப்பதெல்லாமே!

ஈதலில் சிறந்தது: சமயத்தில் ஈவதே!

உலகத்தில் பயப்படுவது: பயப்பட வேண்டிய எல்லாத்துக்கும்

ஊமை கண்ட கனவு: அவ‌ன் பேசுவ‌து மாதிரி

எப்போதும் உடனிருப்பது: என் உயிர் தாங்க ..

ஏன் இந்த பதிவு: இயற்கையிடமிருந்து வந்த மிரட்டலால்!!

ஐஸ்வர்யத்தில் சிறந்தது:வாழத்தேவையான எல்லாமே!!!

ஒரு ரகசியம்: … .............................................

ஓசையில் பிடித்தது: மனதை சந்தோசப்படுத்தக்கூடிய எல்லா ஓசையுமே..

ஔவை மொழி ஒன்று: மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் ,

(அ)ஃறிணையில் பிடித்தது: என் லேப்டாப்..

Friday, September 4, 2009

கோவையில் நடந்த பிரபல பதிவர் சந்திப்பு..............


என்னடா இது எங்கே பார்த்தாலும் இந்த பிரபல சந்திப்பு பற்றி பதிவா போட்டு கலக்குறாங்க..ஆனா நம்மால அப்படி எழுத வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதேன்னு நினச்சப்போ அதற்கு ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது..நமது சிங்கை நாட்டு ரஜினி ரசிகர் மன்ற தலைவர், நமது மூத்த பதிவர்(எப்புடி..) கிரி சென்ற மாதம் தன் மகனுக்கு முடியெடுக்க இந்தியா வந்திருந்தார்..அப்போது எவனோ ஒருவன் பெஸ்கியிடமிருந்து என் மொபைல் நம்பர் பெற்று என்னை அழைத்து ஆச்சர்யப்படுத்தினார் ..விடுவோமா நாம ஏண்டா போன் செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு பேசினேன்!!!

அப்போது ஒரு வேலையாக அவர் கோவை வரவேண்டி இருந்ததால் சந்திக்க முடிவு செய்தோம்.. அப்போது நமது
பெஸ்கியும் அங்கே வர, கிறுக்கல் கிறுக்கன் தனது வீட்டில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் எங்கள் அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்தார்.. ஆஹா சாமி சோறு போடுது என நினைத்து உடனே நான் சம்மதம் தெரிவித்தேன்.. கிரி அண்ணனை தெரிவிக்க வைத்தேன்... ஆகவே அனைவரும் கிறுக்கல் கிறுக்கன் வீட்டில் கூடி சந்திப்பதாக நான்கு மனதாக முடிவு செய்யப்பட்டது...

அண்ணன் கிரி கோபியிலிருந்து வரும் போது சிறிது நேரமாகிற்று.. காரணம் கேட்டதற்கு அவர் வரும் போது ஒன் வேயில் வந்ததாகவும், அதை தடுத்து பிடித்து கேட்ட டிராபிக் கான்ஸ்டபிலிடம் என் வழி தனி வழி என தலைவர் டையலாக்கை சொல்லி தப்பித்து வந்ததாக கூறினார்..ஆனால் தப்பித்து வந்ததாக கூறியது நம்பும் படி இல்லை.. ஒரு வழியாக சிறுவர் மலர் புதிர் போட்டி போல கிறுக்கன் கிறுக்கன் வீட்டை அடைந்தோம்.. இனி இந்த வரலற்று சிறப்பு மிக்க சந்திப்பை தவற விட்ட மக்களுக்காக நடந்ததை நடந்த படி ஒளிபரப்பு..

கிகி : வாங்க வாங்க!!

குஒஇ : வந்திட்டேன்.. நான் தாங்க குறை ஒன்றும் இல்லாத ராஜ்!! இவர் கிரியண்ணன்..

கிகி : (ஆஹா இவன் அன் லிமிடெட் மீல்ஸ் ரெண்டு சாப்பிடுவான் போல இருக்கே!! நாம வேர அளவா செஞ்சு இருக்கோம்..இவனுக்கே பத்தாது போல இருக்கே..) ஓ !! வாங்க வாங்க.. வாங்க கிரி..

கிரி : (அதான் வந்தாச்சு இல்ல.. எத்தன தடவ கூப்பிடுவாங்க) ஹி ஹி ஹி...நல்லா இருக்கீங்களா?

ஏஒ: அடடே வாங்க....இப்போ தான் உங்கள பத்தி பேசிட்டு இருந்தோம்.. எப்படி வழி கண்டு புடிச்சீங்க?

குஒஇ:( அடங்கப்பா ஓசி சோறு கிடைக்கும்னு வந்தா.. எத்தனை சுத்து..) அதெல்லாம் புடிச்சிட்டோங்க..

கிகி : இந்தாங்க ஜூஸ் .. சாப்பிடுங்க..

குஒ இ: ( என்ன இது ஜூஸ் குடுத்து வயித்த நப்ப பாக்கிறாரா?) இல்லேங்க வேண்டாங்க ,.. வர்ரப்ப தான் குடிச்சேன்

கிரி : (எப்ப குடிச்சான்? எனக்கு தெரியாம?) அட ஜூஸ் தானே ராஜ் குடிங்க...

கிகி : ( எப்படியாச்சும் ஜூஸ் குடுத்து கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா...) குடிங்க..

ஏஓ: அப்புரங்க கிரி பயணமெல்லாம் எப்படி இருந்தது? எப்போ கிளம்பரீங்க?

குஒஇ : (என்ன இது இப்ப தான் வந்தோம் .. எப்ப கிளம்பரீங்கன்னு கேட்குறார்.. அப்போ சாப்பாடு இல்லையா..ஜூஸ் வேர வேணாம்னு சொல்லீட்டோம்.. இப்பவே எனக்கு பசிக்குதே..) எங்க் கிளம்பச்சொல்றீங்க?

கிரி : அடுத்த மாசம் 20 தேதி கிளம்பரேங்க..

குஒஇ :(ஓ அப்போ இங்கே இருந்து இல்லையா.. இந்தியாவிலிருந்தா..அப்பாட) ஹி ஹி ஹி..

கிகி : எப்படி போகுதுங்க வேலை எல்லாம்? உங்க ஊர்ல மழைங்களா?

கிரி : நல்லா போகுதுங்க.. ஆமாங்க ரெண்டு நாளா மழை...

குஒஇ : ஏங்க சாப்பிடுலாமா...

கிகி : (ஆஹா.. விட மாட்டான் போல இருக்கே..) அப்புறம் ராஜ்.. உங்க வேலை எப்படி போகுது? நீங்க கோவைதானா?

குஒஇ;( நாம என்ன கேட்டோம் இவர் என்ன சொல்ரார்) எந்த குறையும் இல்லேங்க.. ஆமா சாபிட...

கிரி : நீங்க எந்த ஊர்? என்ன வேலை செய்றீங்க?

கிகி : நான் நாகர் கோவிலுங்க,,. இங்கே வேலைக்காக இருக்கேண்..

ஏஓ: ஏங்க கிரி .. சமீபத்தில நம்ம பதிவுகள் எல்லாம்....

கிரி : (அய்யோ நாம எத பத்தி பேச கூடாதுண்னு நினைக்கிறோமா அத பத்தியே பேசராரே..) சொல்லுங்க

ஏஓ: தனி நபர் தாக்குதலா இருக்கே..என்ன செய்ய?

குஒஇ :( ம்ம்ம்ம்...கூட்டமா போய் கலவரம் பண்ண வேண்டியது தானே) ஏங்க சாப்ப்,,,,,

கிரி : அது நமக்கு எதுக்குங்க.. நாம பாட்டுக்கு நாம எழுத வேண்டியது.. அடுத்தவன் என்ன பண்ணா நமக்கெண்ணாங்க.. எவன் எவன் தாக்குனா நமக்கெண்ணா? நாம யாரையும் தாக்காம இருந்தா சரி..

குஒஇ: (இவ்வளவு விளக்கி சொல்லியும் இன்னும் ஏதோ கேட்பாங்க போல இருக்கே) ஏங்க சாப்ப்...

கிகி : ஆமாங்க கிரி ... இந்த பதிவுலகம் நமக்கு பல நட்புகளை குடுத்து இருக்கு..அதே சமயம் நிறைய எதிரிகளையும் தர வாய்ப்பு இருக்கு.. அதனால நாம கொஞ்சம் கவனமா தான் இருக்கனும்..

குஒஇ: (அய்யோ.. இப்பத்திக்கு விட மாட்டாங்க போல இருக்கே...கவனமா இருக்கனும்னா குலாம் நபி ஆசாத் சொல்ரத கேளுங்க...விக்ரமன் பட டையலாக் மாதிறி பேசுராங்களே..)ஏங்க சாப்ப்ப்...

கிரி : ஆமாங்க அது தான் சரி.. அதனால தான் நான் எந்த சந்திப்பிலேயும் பதிவுகள பத்தி பேசறதில்லை.. ( இனியாச்சும் விடுங்கடா சாமி)

ஏஓ : நாம இப்ப தான் சந்திச்சு இருக்கோம்.. சந்தோசமா இருக்குது.. இது தான் எனக்கு முதல் பதிவர் சந்திப்பு.. இப்படி ஒரு சந்திப்பு சென்னையில நடந்தப்ப என்ன அனுமதிக்கல. அதான் நான் எனக்குன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சேன்...

கிகி : நான் கூட ரெண்டு வருசத்துக்கு முன்னால எழுதீட்டு இருந்தேங்க..ஆனா சூழ் நிலை காரணமா தொடர முடியல..

குஒஇ: ( கொசு வத்தி சுத்தர நேரமா இது.. இங்கே சாப்படு போடராங்கண்ணு காலையில வேர எதுவும் சாப்பிடாம வந்திருக்கேன்.. இப்போ போயி...) ஏங்க சாப்ப்...

கிரி : அப்படீங்களா? அப்புரம் நான் கொஞ்சம் சீக்கிரமா போகணும் .. ஏண்னா பையன் அழுவான் வீட்டில..( இனியாச்சு விடுங்கடா..)

கிகி : ஓ அப்படிங்களா.. நல்ல குடும்பஸ்தர் ஆயிட்டிங்க,..பையன் எப்படிங்க .. ரொம்ப குறும்போ!!

குஒஇ: (ஆஹா ..அடுத்த டாபிக்கா..) ஏங்க சாப்ப்...

கிரி : ஆமாங்க ... ரொம்ப.. இப்ப தான் என் செல்லமாயிட்டு வரான்.. அப்புரம் நான் பண்றதில்ல பாதியாவது இப்போ பண்ணுவான் இல்ல...ரொம்ப சந்தோசமா இருக்குங்க குடும்ப வாழ்க்கை

ஏஓ : நீங்க சென்னையில எத்தன வருசம் இருந்தீங்க ? எங்கே இருந்தீங்க,,.

கிரி : நான் கிண்டியில இருந்தேங்க.. சுமார் 7 வருசம் இருந்தேன்.. நல்லா சென்னைய ரசிச்சேன்.. இப்பவும் என்னோட பல, பழைய நண்பர்கள் சென்னையில தான் இருக்காங்க..

குஒஇ:( சரி.. இனி ஒண்ணும் பண்ண முடியாது..) ஏங்க,,, ( வேணாம்.. வேணும்னே நான் சொல்ரத கேட்காத மாதிறி இருக்காங்க..)

ஏஓ : ஓ அப்போ உங்களுக்கு சென்னை அத்துப்படி ...

கிரி : அப்படி சொல்ல முடியாது.. தெரியும்...

கிகி : சரி சாப்பிட போலாமாங்க..

குஒஇ: (அப்பாட இப்ப தான் புத்தி வந்திருக்கு போல் இருக்கு..)

அனைவரும் சாபிட அமர்ந்தோம்.. கிகி அவர்கள் தன் கையாலேயே சிக்கன். மீன் என அமர்கள படுத்தி இருந்தார். சாப்பிட போகும் முன்னரே முடிவு பண்ணி விட்டேன்.. கிரி அண்ணனை பார்த்தேன் .. அவர் பாவம் கோழி கொத்துவது போல தான் சாப்பிக்கூடும் என அப்பட்டமாக தெரிந்தது....ஆக அவரிடம் அவர்ந்து அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் , ஆனால் நம்ம ஏஓ பல ஊர்களுக்கு சென்று புரோட்டா படமெல்லாம் எடுத்து இருப்பதால அவரே நமக்கு சரியான ஜோடியென அமர்ந்தேன்.. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டோம்.. சாப்பிடும் போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியே இருந்ததே தவிற எந்த பொறாமையும் இருக்கவில்லை..கிகி இன் முகத்துடன் அனைவருக்கும் பரிமாறினார்.. என்னை தவிர அனைவரிடமும் இன்னும் வேண்டுமா இன்னும் வேண்டுமா என கேட்டு பரிமாறினார். ஆனால் என்னிடம் மட்டும் போதுமா போதுமா என மிக மிக எச்சரிக்கையுடனே கேட்டு பறிமாறினார்... ஆனாலும் நாம் தான் சாப்பிட அமர்ந்த உடன் எந்த ஃபார்மாலிட்டியும் பார்ப்பதில்லையே.. கிகி மனதை புண்படுத்தாமல் ஆமாம் இன்னும் வேணும் எனக்கேட்டே வாங்கி சாப்பிட்டேன்..

ஒரு வழியாக விருந்தை முடித்துக்கொண்டு , விருந்துக்கு ஏற்பாடு செய்த கிகி, ஏஓ ஆகியவர்களிடன் நன்றி கூறி நானும் கிரியண்ணனும் விடை பெற்றோம்..






மிக முக்கிய குறிப்பு : பதிவர் சந்திப்பு படங்கள் பற்றி கேட்பவர்களுக்கு.. ஹி ஹி ஹி.. இது முழுக்க முழுக்க கற்பனையான சந்திப்பு.. நடந்திருக்க வேண்டிய சந்திப்பு ஆனால் நேரமின்மையால் முடியவில்லை.. என்வே இந்த கற்பனை சந்திப்பு!!!!

Saturday, August 29, 2009

வாழ வேண்டியது தமிழா இல்லை தமிழரா?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழ்குடி!!
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !!
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு !!!
யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவதெங்ககும் காணோம்!!!!

இவை மட்டும் இன்றி இன்னும் இன்னும் பலச் சிறப்புகள் நம் தாய் மொழியாம் தமிழுக்கு உண்டு.. அதை அணுவளவும் மறுப்பதற்கில்லை..


ஆனால் தமிழால் மட்டும் எத்தனை தமிழனை வாழ வைக்க இயலும்? அன்றும் இன்றும் தமிழ் அரசியல்வாதிகளை மட்டுமே வாழ வைக்கிறதே தவிர தமிழனை அல்ல.. இன்றைய மிக முக்கிய விவாதமாக கருதப்படுவது தாய்மொழிக்கல்வி.. கடைப்பலகை முதல் கழிப்பிடம் வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழ்..அதிலும் சுத்த தமிழ் என்று வேறு பல கொடுமைகள்... இதனால் என்ன உபயோகம்? இந்த லட்சணத்தில் உயர் கல்வி வரை தமிழில் படிக்க வகை செய்ய போகிறதாம்(செய்து விட்டதா??) அரசு!!! அப்படி தமிழால் படித்தால் கண்டீப்பாக முன்னேறவே இயலாது என்பது சத்தியமான உண்மை...

தாய் மொழிக்கல்வி என்றவுடன் நான் அனைவரும் எடுத்துக்காட்டாக கூறுவது ஜப்பான், சீனா போன்ற நாடுகளை தான்.. ஆனால் அது தவிர ரஷ்யா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நாட்டில் தத்தம் தாய் மொழிகளிலேயே கல்வியை கற்க வழி செய்துள்ளன.. அவை இப்படி வளர்ந்த நாடாக காரணம் தாய் மொழிக்கல்வியே .. ஆனால் நமது பிரச்சினை வேறு.. பெயரில் நாடு என ஒன்று இருப்பதால் மட்டும் தமிழகம் தனி நாடாகி விடாது.. ஒரு பெரிய ஜன நாயக(?) நாட்டின் ஒரு மாநிலமே !!! ஆனால் இன்னமும் பிடிவாதமாக தமிழ் மொழியில் தான் கற்க வேண்டும் என கூறுவது ஏன் என தெரியவில்லை..

நம் தமிழகத்தை தவிர ஏனைய பிற மாநிலங்கள் அனைத்திலும் உள்ள மக்கள் தேசிய மொழியாம் ஹிந்தியையும், சர்வதேச மொழியான ஆங்கிலத்தையும் கற்பது நம் அனைவருக்கும் தெரியும்.. ஆனால் நமக்கு மட்டும் ஹிந்தி ஆதாம் ஆப்பிள் போல மறைத்து வைக்கப்பட்டுள்ளது!!! நம்மில் எத்துனை பேருக்கு ஹிந்தி தெரியும்? ஹிந்தி தெரியாமல் எத்துனை பேர் அடுத்த மாநிலங்களில் கஷ்டப்பட்டுள்ளீர்? நான் ஒரு சமயம் ஹைதியில் இருந்த போது நான் பட்ட கஷ்டம்!!!! நமக்கு ஹிந்தியில் தெரிந்தது சில, இல்லை இல்லை மிக சில வார்த்தைகளே.. ஏக், தோ முதல் பத்து வரை, ருக்கோ, ஜாவோ, கித்னா ரூப்யா என்பன அவற்றில் சில....

அங்கே காய் கறி வாங்க இல்லை வேறு ஏதாவது பொருட்கள் வாங்க செல்லும் போது பல வித அனுபவங்கள்!!!! நமக்கு அறைகுறையாக தெலுங்கும் தெரியும் ஆனால் உபயோகப்படுத்த பயம்.. ஏனென்றால் ஸ்தாவாக்கு பதிலாக ஒஸ்தாவா என்றால் அவ்வளவு தான் முடிந்தது கதை.. ஆக தெலுங்கும் பயன் படுத்த பயம், தமிழ் பேசினால் அது வேற்று கிரக வாசியை போல.. ஆங்கிலத்தில் பேசினால் அடுத்த மாநிலத்தை(நம்ம ஊருதான்) சேர்ந்தவன் என நாமே காட்டி கொடுத்தது போல் ஆகி விடும். நான் தான் புத்தி சாலி ஆயிற்றே அரை குறையாய் படித்ததை வைத்தே வேலையில் இருக்கும் போது அரை குறை ஹிந்தியை வைத்து சமாளிக்க முடியாதா என மனப்பால்( !!!) குடித்து பேரத்தில் இறங்குவேன்.. நான் பொருள் கேட்கும் அழகே தனி(!!) என்னமோ ஹிந்தி பண்டிட் போல கித்னா ரூப்யா எனக்கேட்பேன்.. அதற்கு அந்த நபர் 10 வரை கூறினால் பிரச்சினை இல்லை.. ஏனென்றால் நமக்கு தெரியும்.. ஆனா அவர் பத்துக்கு மேல் 11, 20, 30 என சென்றால் அவ்வளவு தான்.. இரு கைகளையும் மேலே தூக்காத குறையாக சரணாகதி அடைந்து விடுவேன்.. பிறகு ஆங்கிலம் தான்.. ஆங்கிலத்தில் கேட்டால் முதலில் அவர் ஹிந்தியில் எவ்வளவு சொன்னாரோ அதை விட ஒரு சில ரூபாய்கள் கூட தான் கேட்பார்கள்!!! இப்படி இழந்தது பல!!!

ஆக, அடுத்த மாநிலத்தில் பிச்சை எடுக்க கூட தேசிய மொழியோ , இல்லை அந்த மாநிலத்தின் தாய் மொழியோ அவசியம்.. பிற மாநிலங்களில் வேறு மொழி பேசினால் மரியாதை இருக்காது.. ஆனால் நம் மாநிலத்தில் தமிழ் தவிர மற்ற மொழிகள் அது புரியாத மொழியாக இருந்தாலும் அதற்கு தரப்படும் மரியாதையே வேறு!!! அதற்கு காரணம்.. தமிழ் மொழி மேல் உள்ள வெறுப்பு அல்ல.. பிற மொழிகள் மேல் உள்ள காதல்.. ஒரு குழந்தையிடம் ஒரு பொருளை தொட வேணாம் என சொன்னாலோ இல்லை பார்க்க வேணாம் என சொன்னாலோ அது தன் கையில் வைரமே இருந்தாலும் மறைத்து வைக்கப்பட்ட பொருளைத் தேடித்தான் போகும்.. அது போலவே நாமும்.. காலங்காலமாக மற்ற மொழிகளை கற்க விடாமல் அதன் மேல் ஒருவித ஈர்ப்பு !!! நம் தமிழக சினிமாக்களில்
படபடவென ஆங்கிலம் பேசும் கதா நாயகனை( பெரிய இடத்து பெண் சரோஜா தேவி முதல் சிவப்பதிகாரம் மம்தா வரை) கேட்ட (இங்கு பார்த்த வராது!!) உடனே காதலிக்கும் கதா நாயகிள் ஏராளம். இன்று ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள விவசாயியை கேட்டால் அவர் சொல்லுவார் தம் பிள்ளை நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேணும் என!!! அதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.. ஏனெனில் அந்நிய மொழி எனில் அது ஆதாம் ஆப்பிளை போல ஆசை வருவது ஒன்றும் தவறில்லை எனவே தோணுகிறது..

200 ஆண்டுகள் அந்நிய தேசத்திடம் அடிமைப்பட்டும் அழியாத தமிழ் மொழியா மற்ற மொழிகளை கற்பதால் அழிந்து விடப்போகிறது? ஆகவே என்னைப்பொறுத்தவரை தமிழ் தமிழனோடு பேச மட்டுமே போதும்.. பிற மொழிகளை கற்றால் தான் தமிழன் முன்னேர முடியும்.. தமிழன் முன்னேறினால் கூடவே தமிழும் முன்னேறும்.. என் குழந்தைகளை முடிந்தால் தமிழ் மொழியின்றியே படிக்க வைக்க முயற்சி செய்வேன்.. அவர்கள் வீட்டில் பேசும் போது தமிழ் தானாக வந்து விட்டு போகட்டும் ..ஆனால் தமிழ் மொழியை எழுதி படித்தால் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவாது.... இதைக்கண்டதும் பல பேருக்கு கோபம் வரலாம்.. நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்.. நீங்கள் தமிழால் முன்னேறிய ஒருவரை(நிச்சயமாக அரசியல் வாதியை அல்ல) காட்டுங்கள், நான் அதே தமிழை மட்டும் கற்றதால் வீணாண அல்லது தமிழை கற்காமல் வேறு மொழி கற்றதால் முன்னேறிய 100 பேரை அடையாளம் காட்டுகிறேன்..இன்றும் ஏராளமாக கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டிக்கிடந்த BPO போன்ற வேலைகளுக்கு தாய்மொழி பாதிப்பால் வேலை கிடைக்காதோர் ஏராளம்...

மொழி கருத்துகளை பரிமாறவே தவிர உணர்ச்சி பூர்வமாக அணுகக்கூடியது அல்ல... நீங்கள் நினைக்கலாம் இப்படியே விட்டால் தமிழ் அழிந்து போய் விடும் என்று.. அப்படியெனில் எழுத்தே இல்லாத படுகு போன்ற மொழிகள் இன்னமும் பேசப்பட்டு வருவது எப்படி? நம்மில் கூட பலர் சிறு வயது முதலே தமிழ் மொழியை அறவே தவிர்த்து பிற மொழிகளால் மட்டும் பாடங்களை கற்று உயர்ந்தாலும் இன்னமும் அவர்கள் தமிழிலேயே உரையாடிக்கொண்டுள்ளார்களே!!!மொழி காலப்போக்கில் மாறலாம் ஆனால் அழியாது,.,எங்கு வாழ்ந்தாலும் வலித்தால் அம்மா என்றே அழத்தோணும்..

ஆக தொண்மையான தமிழ் மொழி யாராலும் அழிக்க முடியாதது,,அதை யாரும் பாதுகாக்கவும் வேணாம் காப்பாற்றவும் வேணாம்.. வேண்டுமானால் தமிழனை காப்பாற்றுங்கள்.. தமிழ் தானாக வளரும்...



ஒரு உண்மை : முன்பு ஹிந்தி எதிர்ப்பு நடந்த சமயம்.. அப்போது பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டம் உச்சக்கட்டமாக நடந்தது.. அப்போது ஒருவரை ஏணியில் ஏற்றி பலகையில் உள்ள ஹிந்தியை அழிக்க சொன்னார்களாம். அவரும் தாரும், பிரஷுமாக ஏறி கீழே இருந்தவர்களை பார்த்து கேட்டாராம்

" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"

Sunday, August 23, 2009

ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது!!!


என்ன நண்பர்களே!!! என்னடா இவன் திடீர்னு விவேக் காமெடி வசனத்த சொல்ரானேன்னு பாக்குறீங்களா? இந்த இடுகை விவேக் பத்தி தாங்க... நம்ம தமிழ் திரையுலகில் விவேக்கிற்கு என ஒரு தனி இடம் உண்டு,,அவருக்கு அவராகவே சூட்டிக்கொண்ட பட்டம் சின்னக்கலைவாணர்.. ஏனென்றால் அவர் பல சமூக நல கருத்துக்களை தான் நடிக்கும் படத்தின் வாயிலாக சொல்கிறாராம்.. ஜாதி, மொழி, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இவர் பேசும் வசனங்கள் ஏராளம்.. நிற்க, இது ஒன்றும் அவர் புகழ் பாடும் இடுகை அல்ல!!!! கீழே உள்ள படங்களை பாருங்கள்., பிறகு நீங்களும் சொல்லுவீர்கள் தலைப்பை!!!










மிக முக்கிய பின் குறிப்பு : பன்றிக்காய்ச்சல்,நமீதா, கந்தசாமி,ஸ்ரேயா,விக்ரம், விஜய்,ரஜினி, ஜெயலலிதா.... வேற ஒண்ணும் இல்லீங்கோ.. இது எல்லாம் சூடான வார்த்தைகளாம்.. இத தேடியும் நம்ம பக்கத்துக்கு வருவாங்களாம். அதான்..

Friday, August 21, 2009

விருது வாங்கலியோ விருது!!!!!

வணக்கம் நண்பர்களே.. இன்று எனக்கு ஒரு விருதை வழங்கி கவுரவித்து(அதாங்க நம்மையும் ஒரு ஆளா மதிச்சு) உள்ள டயட் ஸ்பெசல்திருமதி . கீதா அவர்களுக்கு நன்றி.. இந்த விருதை நான் இன்னும் 10 பேருக்கு தரனுமாம்.. அதனால , கீழ்கண்ட அனைவரும் தயவு செஞ்சு விருத வாங்கிக்கோங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........................




*சிவனேசு

* சுபா

* ஸ்டார்ஜன்

* சுரேஷ் பழனியிலிருந்து

* பெஸ்கி & கிறுக்கல் கிறுக்கன்

* சந்ரு

* பிரியங்கா

* ஞானசேகரன்

* இயற்கை மகள்

* குட்டி பிரபு

* சப்ராஸ் அபூ பக்கர்

* சம்பத்

* சுரேஷ்குமார்


மிக முக்கிய பின் குறிப்பு : இந்த விருது எதுக்குண்ணா? உங்களை யார் அதிகமாக ஊக்கப்படுத்துகிறார்களோ அதிகமாக பார்வையிடுபவர்கள்,உங்களுக்கு பிடித்த மற்றவர்களின் சமையல் குறிப்புகள் இப்படி பல காரணங்கள் இருக்கு.அதுதான் இந்த அவார்ட்டின் அர்த்தம்( நன்றி மேனகா!!!)

Tuesday, August 18, 2009

ஆயிரம் ரூபா குடுத்தாலும் வாங்காதீங்க...

.




என்ன நண்பர்களே? என்னடா இவன் நாட்டு நிலைமை புரியாம பேசரான்னு பாக்கிறீங்களா? நான் சொல்லலங்க.. நம்ம அரசு அதிகாரி சொல்லி இருக்கிறத பாருங்க...



இனிமேல் 1000 ரூபா நோட்டு யார் குடுத்தாலும் மேற்கண்ட ஆணை படி கவனித்து வாங்குங்க..

Friday, August 14, 2009

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்...

.











இந்தியராக பிறப்பது இயற்கை

இந்தியராக வாழ்வது கடமை!!

இந்தியராக இறப்பதே பெருமை!!!!

Thursday, August 13, 2009

பிரபல பதிவர்களுடன் டைடல் பார்க்கில் கவுண்டர் பாகம் 2

நம்ம கவுண்டர் முதலாவது பாகத்தில் சில நடிகர்களுடன் பட்டது உங்களுக்குதெரியும்,. தெரியாதவர்கள் இங்கு செல்லவும்.. இதோ நீங்கள் ஆவலுடன்இல்லாவிட்டாலும் எதிர்பார்த்த இரண்டாம் பாகம்..

கவுண்டர் : அய்யோ.. இவனுக தொல்லை தாங்கல.. இவனுகள ஒருத்தன்புரஜக்ட அடுத்தவன பாக்க சொல்லி கொல்லணும்...

செந்தில் : மிஸ்டர். பெல்.. அடுத்த ஆள கூப்புடலாமா?

கவுண்டர் : நடிகர்கள் வேணாம். வேற யாராச்சும் இருந்தா கூப்பிடு

செந்தில் : அப்போ பதிவர்கள கூப்புடலாம்.. வாங்க ஞானசேகரன்..

ஞானசேகரன் : வணக்கம்..

கவுண்டர் : வணக்கம். பாக்க நல்ல ஆள் மாதிறி இருக்கீங்க.. வாங்க.. ஆமா உங்கபுராஜக்ட் என்ன?

ஞானசேகரன்: இந்த தண்ணி பத்தி

கவுண்டர் : என்னது தண்ணியா? இப்ப தானே உங்கள ரொம்ப நல்லவர்னுசொன்னேன் அதுக்குள்ள?

ஞானசேகரன் : அது இல்லேங்க,.. இந்த நிலத்தடி தண்ணீர்

கவுண்டர் : என்னது நிலத்தடி நீரா? ஏங்க சாராயமே தப்பு. அதில பூமிக்குள்ள வச்சுஊரல் போடுற கள்ள சாராயம் பத்தி வேற விளக்கம் சொல்றீங்களா? என்னங்கஇது?

ஞானசேகரன் : அய்யோ .. நண்பரே.. அது இல்லேங்க.. ஒரு ஜென் கதைசொல்ரேனே?

கவுண்டர் : என்னது ஜின்னா? டேய் பீர்பாட்டில் வாயா .. இவர அனுப்புடா.. காலையிலேயே போதையேத்துரார்!!!

ஞானசேகரன் : தங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி நண்பா..

கவுண்டர் : .. இது வேரயா? ம்ம்ம் ரொம்ப நன்றிங்க..

செந்தில் : அடுத்து வாங்க கிரி..

கிரி : வணக்கமுங்க.. நமக்கு சத்தியமங்கலத்துக்கு பக்கம், கோபிச்செட்டிபாளையமுங்க ஊர்..

கவுண்டர் : ( அய்யோ நம்ம ஊரா.. இவர் என்ன பண்ண போராரோ!!) அப்படியா.. வாங்க .. சொல்லுங்க ..

கிரி : அவர் இந்த கம்பனிக்கு CEO ஆனா , இந்த கம்பனிய ஆண்டவனாலேயேகாப்பாத்த முடியாது.. அவர் ஒரு நல்ல கணிப்பொறி வல்லுநர்!! இனிமே தான்அவர் ஜாக்கிரதியா இருக்கணும்.. ஏன்னா இந்த கம்ப்யூட்டர் வைரஸ் பத்தி எனக்குதான் முழுசா தெரியும்..

கவுண்டர் : என்னடா இது? சம்பந்தம் இல்லாம பேசராரு.. ஏங்க கிரி.. உங்கள பத்திசொல்லுங்க

கிரி : நான் இந்த கம்பனிக்கு CEO ஆகனும்னு விதி இருந்தா ஆண்டவனாலேயும்அத தடுக்க முடியாது.. ஆனா ஆண்டவனே சொன்னாலும் நான் நினைச்சா தான்ஆவேன்

கவுண்டர் : ராசா. நான் நினைச்சா தான் எல்லாமே ஆக முடியும்.. ஏன்னா நான்தான் இந்த கம்பனிக்கு சேர்மன்..

கிரி : இறைவா.. பைரைட் சாப்ட்வேர்ல இருந்து இவர காப்பாத்து.. வைரஸ்ஸநானே பாத்துக்கிறேன்..

கவுண்டர் : அய்யோ !!! நான் என்னடா பாவம் பண்ணினேன்...ஒண்ணுமே புரியமாட்டேங்குதே இவர் சொல்ரது

கிரி : ஆஃபீஸ்ஸுக்கு எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது .. ஆனாவர வேண்டிய நேரத்துக்கு கண்டீப்பா வருவேன்

கவுண்டர் : வர வேண்டிய நேரம்னா? சம்பள நாளுக்கா?

செந்தில் : சரி சரி .. வாங்க கிரி.. அடுத்தவர கூப்புடலாம்.. வாங்க பெஸ்கி

பெஸ்கி : வணக்கங்க

கவுண்டர் : வணக்கம்.. சொல்லுங்க

பெஸ்கி : மவுண்ட் ரோடு பக்கத்தில ஒரு ஆயா முட்ட போண்டா போடுராங்க.. நான் நேத்து தான் சாப்பிட்டேன்... அருமையா இருந்துச்சு.. இத பாருங்க( போட்டோ காட்டுகிறார்)

கவுண்டர் : .....................................

பெஸ்கி : நான் போன தடவ , கோயம்புத்தூர் போயிருந்தப்போ , ஒரு முக்கு சந்திலபெக்கு சாப்பிட்டிட்டே பக்கத்து கடையில இருந்து ஒரு கை முருக்கு சாப்பிட்டேன்அருமையா இருந்துச்சுங்க.. அந்த கடை அட்ரஸ். 111. மூணாவது முக்கு சந்து, கோவை( வேறு எங்கும் கிளைகள் இல்லை!!!)

கவுண்டர் : மேல.....

பெஸ்கி : நட்புங்கறது வெத்திலைக்கு தடவர சுண்ணாம்பு மாதிறி இல்ல
அது
தம்மு பத்த வைக்க தர்ர பாதி சிகரெட் மாதிறி!!!!

கவுண்டர் : என்ன இது?

பெஸ்கி : எனக்கு வந்த குதசே ங்க... இப்படி தான் நான் மூணாவது படிக்கும் போது


கவுண்டர் : சார்.. நான் ரொம்ப டென்சனா இருக்கேன்.. தயவு செஞ்சு


செந்தில்: (அடுத்து யார கூப்பிடலாம்?) மிஸ்டர் பெல்.. உங்க செக்ரட்டரிபோஸ்ட்டுக்கு ஒரு பொண்ணு வந்திருக்கு.. கூப்பிடவா?

கவுண்டர் : பொண்ணா ? எப்படிடா இருப்பாங்க?

செந்தில் : சும்மா கும்முன்னு தொட்டா ரத்தம் தெரிக்குங்க ..

கவுண்டர்: டேய்.. தொட்டா ரத்தம் தெரிச்சா அது தோல் வியாதிடா? ஏண்டா என்னபழிவாங்க எவளோ ஒரு பிச்சக்காரிய கூப்பிட்டு வந்திட்டியா?

செந்தில் : இல்லேங்க.. வாங்க நமீதா..

நமீதா : ஹாய் மச்சான்.........உம்மா..

கவுண்டர் : ....................................%$$%$#%$#%$@#

நமீதா : மச்சான் நான் .........


கவுண்டர்: ஸ்டாப்.. நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.ஹா ஹா ஹா. யூ ஆர்அப்பாயிண்டெட்..


செந்தில் : டேய் .. பல்பு மண்டையா. நான் என் செக்ரட்டரி கூட கொஞ்சம் பேசவேண்டி இருக்கு.. மீதிய நாளைக்கு கண்டினியூ பண்ணலாம்னு சொல்லிடு.....



இத்துடன் இரண்டாம் பாகம் முற்றும்.. எனக்கு இன்னும் அக்பர், சுரேஷ், ஸ்டார்ஜன், மேனகா, கீதா, சிவனேசு, ஹர்சினி அம்மா, ஜலீலா , பிரியமுடன்வசந்த், பிரியங்கா, சுபான்னு எல்லாத்தையும் வச்சு கலாய்கலாம்னு ஆசை தான்.. ஆனா அவங்க தப்பா எடுத்துக்குவாங்கலோன்னு பயமா இருக்கு.. அவங்க பதிலவச்சி அடுத்த பாகத்த தொடரலாம்னு இருக்கேன்..
,.. ,......

Wednesday, August 12, 2009

ஈழத்தமிழர்களுக்கு அமர்ப்பணம்...

இறைவா எரித்து விடு எங்களையும்..!!
நீ ,வால் கொண்டு வைத்த தீ ஆறினாலும்,
போர் கொண்டு வைத்த தீ தொடர்கிறது...!!
உணர்ந்தாலும்,உணராமல்,
நினை
ந்தாலும் எளிதில்,

உண்கையில்,உறங்கையில் மறக்கிறோம் அதை..!!

அவர்க்கு உண்மையில் எதிரிகள், அவர்களா..??
உணர மறுக்கும் நம்மை விட..??
உடல் நொந்தாலே உளரிடும் ஓர் வார்த்தை அம்மா,
மண் கூட தாய் தானே..!!
தாய்காக போராடும் உறவினர்கள்,
நோய்க்காக என்ன செய்ய..??

இறப்பது எதிரியானால்,சிரிப்பதில் அர்த்தமில்லை,
உயிர் போகும் வலி ஒன்றாய் இருப்பதால்..
இறைவா நிறுத்திடு போரை,
இல்லை எரித்திடு எங்களையும்,
உணர்ந்தாலும்,உணர மறுத்திடும் எங்களையும்..!!

இறுதியாய் ஒன்று,
இணையுங்கள் இந்தியராய்,
சிறு நகரம் தாண்டி செல்ல அனுமதி வாங்கும் நிலையை,
அனுமதியோம் ஒரு நாளும்..!!

************************************************************************************


கண்ணீர் அஞ்சலி..!!

~~~~~~~~~~~~~~~~

மனிதா என்று இறந்தாய்..??
யாருக்கும் தெரியாமல்..
நீ பிறந்ததற்கு சாட்சியம் உள்ளது..
அச்சிலும் சிலர் அகத்திலும்..

கடவுளே..??..!!..
இல்லை உன்னிடமும் சொல்ல முடியாது..
வாள் கொண்டு ,வேல் கொண்டு , நூல் கொண்டு,
நீயும் வண்ணமாய் நிற்பதனால்..

எப்படி இறக்க ஆரம்பித்தோம் நாங்களும்..??
எட்டிப் பார்த்தால் கட்டிக் கொள்ளும் ஓர் தொற்று ,
சாதியாய், மதமாய், இனமாய்
இன்னும் எப்படியெல்லாம் இயலுமோ அப்படியே...
அனைத்தும் தொற்றிக் கொண்டதால்...

சிந்தைக்குள் நுழைந்துவிட்டால்..
அதன் வேலை அது பார்க்கும்..

கண்ணா பார்த்தாயா..??
கீதை மிக பத்திரமாய் எங்களிடம்...
நீ உரைத்த அனைத்தையும் உதறிவிட்டு,
ஓர் வரியை மட்டும் எடுத்துக் கொண்டோம் அதுவும் உனக்காக...

"எங்களிடம்"..எனும் போதே அதன் வேலை அது துவங்கி இருந்தால்,
மாற்றிக் கொள்ளுங்கள் "மக்களிடம்"...

ஓர் வரிக்கு பூங்கொத்தும் ,
"எங்களுக்கு.?" மலர்வளையமும்..!!
கண்ணீருடன்..!!

________________________________________


மிக முக்கிய பின் குறிப்பு:
இது சத்தியமா நான் எழுதலேங்க.. ஆனா இத சொந்தம் கொண்டாட எனக்கு உரிமை இருக்கு.. ஏன்னா இந்த கவிதை எழுதினதே என் தம்பி தான்..

Tuesday, August 11, 2009

உங்க அலைபேசி எங்கே தயாரிக்கப்பட்டது? அது நல்ல நிலையில் உள்ளதா?

தமிழக மக்கள் மொத்தம் 4 கோடியோ பேர் அலைபேசி உபயோகப்படுத்துவதாக இன்று ஒரு செய்தி படிக்க நேர்ந்தது.. நாமும் அதை தொடர்பு படுத்தி ஏதேனும் செய்தி போடலாமென எண்ணியே இந்த இடுகை..

நண்பர்களே உங்கள் அலைபேசி எங்கே தயாரிக்கப்பட்டது , அதன் உண்மையான நிலை என்ன என்பதை கீழ்காணும் சோதனை மூலம் எளிதில் அறியலாம்..

* உங்கள் அலைபேசியில் *#06# என அழுத்தவும்...இது உங்களுக்கு உங்கள் அலைபேசியின் IMEI(International Mobile Equipment Identity Number) எனப்படும் 15 இலக்க எண்ணை உங்களுக்கு தரும்..

* உங்களுக்கு கிடைத்த எண்ணில் 7 மற்றும் 8 இலக்க எண்களை, அதாவது உங்கள் IMEI எண் 1 2 3 4 5 6 X Y 9 10 11 12 13 14 15 எனில் X மற்றும் Y எடுத்துக்கொள்ளுங்கள்..

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 02 அல்லது 20 என இருந்தால் உங்கள் அலைபேசி அமீரகத்தில் தயாரிக்கப்பட்டதுடன் நல்ல நிலையிலும் இல்லை

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 08 அல்லது 80 என இருந்தால் உங்கள் அலைபேசி ஜெர்மனில் தயாரிக்கப்பட்டது, பரவாயில்லை ரகம்.

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 01 அல்லது 10 என இருந்தால் உங்கள் அலைபேசி ஃபின்லாந்தில் தயாரிக்கப்பட்டது.. மிகவும் நல்ல ரகம்.

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 00 அல்லது 00 என இருந்தால் உங்கள் அலைபேசி அதன் சொந்த நிருவனத்தில் தயாரிக்கப்பட்டது. மிக மிக நல்ல ரகம்.

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 13 அல்லது 13 என இருந்தால் உங்கள் அலைபேசி Azerbaijan நாட்டில் தயாரிக்கப்பட்டது. மிகமிக மோசமான வகை. மேலும் உங்கள் செவிக்கும் ஆபத்து..

இன்னும் என்ன தாமதம்.. அழுத்துங்க, கண்டுபிடிங்க அப்புறம் ஜக்கம்மாவ மதிச்சு உங்க அலைபேசி பத்தி அப்படியே சொல்லீட்டும் போங்க !!!



கொசுறு : உங்களுக்கு ஏதேனும் ஆபத்து எனில் உங்கள் அலைபேசியிலிருந்து அழுத்துங்கள் 112. இது உலக அளவிலான அவசர அழைப்பு எண். உங்கள் அலைபேசி அதன் எல்லைக்கு(அதாங்க டவர்) வெளியில் இருந்தாலும் இது வேலை செய்யும். இந்த வசதி அருகில் உள்ள ஏதெனும் அலைபேசி அலைவரிசையை கண்டு செயல்படும்( பேட்டரி இல்லாவிட்டாலுமா என கவுண்டர் பாணியில் கேட்க கூடாது!!)

கொசுறு 2 : உங்கள் கார் ரிமோட்டில் இயங்க கூடியதா? உங்கள் கார் சாவியை உள்ளே வைத்து மறதியாக பூட்டி விட்டீர்களா?உங்கள் ரிமோட் சாவி வீட்டில் உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் யாரவது ஒருவரை உங்கள் அலைபேசி மூலம் அழையுங்கள், உங்கள் அலைபேசியை காரின் கதவுக்கு ஒரு அடி அருகில் வைத்து வீட்டில் உள்ளவரை அவர் அலைபேசியின் அருகில் உங்கள் ரிமோட் சாவியை திறக்கச் செய்யுங்கள்.. என்ன தூரம் என்றாலும் கவலை இல்லை , உங்கள் கதவு திறக்கும்!!

கொசுறு 3: என்னுடைய சோனி w830i, என் அம்மிணியின் ஐ மேட் ஜமா இரண்டும் ஃபின்லாந்து தயாரிப்பு :) ஆனால் என் பழைய நோக்கியா அமீரக தயாரிப்பு : (

Sunday, August 9, 2009

பதிவர்களுக்கு கூகுள் சொல்லும் நீதி..

அண்மையில் பல பதிவர்களால் தங்களது பதிவை காண இயலவில்லை.. எனக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை(!!!??).. அந்த பிழைச்செய்தி கீழ்கண்டவாறு கிடைப்பதாக அறிந்தேன்....

We're sorry...

... but your computer or network may be sending automated queries. To protect our users, we can't process your request right now.
See Google Help for more information.



ஆக, கூகுள் தனது சேவையை நிறுத்தினாலோ, அல்லது கட்டண சேவையாக மாற்றினாலோ(கண்டீப்பாக அப்படி நடக்காது!!!) என்ன நடக்கும்?

* பதிவுலக பிரம்மாக்கள் அதாங்க பிரபல பதிவர்கள் என கூறிக்கொள்பவர்களை அவர்களின் வீட்டை(கணிணியை) விட்டு வெளியில் வந்தாலே அடையாளம் தெரியாமல் போகும்..

* பல வஷிஷ்டர்கள் (நினைப்பு தாங்க !!) பிறருக்கு பிரம்மரிஷி பட்டமும் அளிக்க இயலாமல் போகும்!!

* தமிழ்மணம், தமிழிஷ் போன்றவைகளை நடத்தும் சில பதிவர்கள்( ஐடியா விளம்பரம் போல) ஈ ஓட்ட ஆரம்பித்து விடுவர்..

* இந்த ஓட்டு, எதிர் ஓட்டு , கள்ள ஓட்டு பிரச்சினை எதுவும் இருக்காது

* வலியவர் , எளியவர்களை கூட்டமாக சேர்ந்து கும்மியடிக்க இயலாமல் போகும்!!!

* கண்டீப்பாக என் போன்றோர் வேலை செய்யும் அலுவலகத்தில் பழைய நிலையை விட அதிக உற்பத்தியை ஈட்ட வாய்ப்பு ஏற்படும்

* மிகப்பெரும் தலைவர்களை விட பெரிய ஆளாக தம்மை நினைத்து ( அதாங்க முதல்வர், முன்னால் முதல்வர், எதிர்கட்சி தலைவர்கள், பல பிரபல நட்சத்திரங்கள்) தம்மை பற்றி ஏதேனும் சொன்னால் தமது அடி பொடிகளுடன் சேர்ந்து கும்மி அடிக்க இயலாமல் போகும்!!!

* குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரம் செலவளிக்க வாய்ப்பு கிடைக்கும்..

* ஓட்டையும், பின்னூட்டத்தையும் தனித்தனியாக வாங்கிக்கொண்டு அவைகளுக்கான பதிலை மட்டும் ஒரே வரியில் எழுத வாய்ப்பு கிடைக்காமல் போகும்..




பின் குறிப்பு : இது நகைச்சுவைக்காகவே ,யார் மனதையும் புண்படுத்த அல்ல என்றெல்லாம் கூறப்போவதில்லை.. ஏனெனில் இது நடந்தவை, நடந்து கொண்டிருப்பவையே.. இதை சொல்ல எனக்கு எந்த பயமோ, வருத்தமோ இல்லை..அதே சமயம் இந்த பதிவுலகம் எனக்கு பல நண்பர்களை தந்திருக்கிறது. அதை மறுக்கவோ, மறக்கவோ இல்லை !!!

Thursday, August 6, 2009

உங்கள் காலணி முடுச்சு எப்படி ??

நம்மில் பல பேர் காலணி அணிவோம்,.. அதிலும் கணிணித்துறையில் உள்ளவர்கள் பிரதி வாரம் வெள்ளியன்று ஸ்போர்ட்ஸ் காலணி எனப்படும் வகையை அணிவது வழக்கம்.. அப்படி அணியும் காலணியை கட்டும் முறைகள் பல உள்ளன.. அவை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம். கட்டும் முறைகள் பற்றிய விளக்கம் ஆங்கிலத்தில் இருக்கும்(அதை மொழி பெயர்த்தால் கண்டீப்பாக நீங்கள் என்னை தேடி வந்து உதைக்க தோணும்) ஆகவே சந்ரு பொருத்தருள வேண்டும்..
டிப்ஸ்

A. Ladder



1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The laces then go straight up and are fed into the next set of eyelets up the shoe
3. The ends are crossed over and are fed under the vertical lace section on the opposite sides of the shoe before going straight up and into the next set of eyelets up the shoe
4. At the top set of eyelets, the laces can once again cross over and pass under the straight section as shown. This not only looks consistent with the rest of the lacing but also forms a High Lace Lock, which tightens the lacing even more firmly.

B. Zipper




1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The ends are looped back under the lace where it feeds under the side of the shoe
3. The ends are then crossed over each other, then they go under and out through the next set of eyelets up the shoe
4. Steps 2 and 3 are repeated until both ends reach the top eyelets.

C. Double



1. The lace runs straight across the second set of eyelets from the top of the shoe
2. Cross the ends over and feed into the fourth set of eyelets, skipping the third set
3. Continue down the shoe, two sets of eyelets at a time
4. At the bottom, run the laces vertically between the bottom and second from bottom eyelets
5. Double back and work your way back up the shoe through the vacant sets of eyelets.

D. Loop Back



1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The left (red) end is spiralled up the left side of the shoe, with the end fed under and emerging from each eyelet
3. The right (orange) lace is spiralled up the right side of the shoe, at each eyelet looping through the left (blue) lace in the middle of the shoe before feeding under and emerging from the next eyelet.

E.Sawtooth


1. The lace runs straight across the bottom and the ends are fed into both bottom eyelets
2. One end of the lace (orange end) runs straight up the right side, emerges from and runs straight across the second set of eyelets
3. The other end (red end) runs diagonally underneath and, skipping the 2nd set of eyelets, emerges from and runs straight across the 3rd set of eyelets
4. Continue running each lace diagonally across and up 2 sets of eyelets until one end (orange in my example) reaches the top right eyelet
5. The other end (red in my example) then runs straight up the left side to emerge from the top left eyelet.

G. Display



1. The lace is run straight across the bottom and is fed into rather than emerging from both bottom eyelets
2. The ends are crossed over, then inserted into the next set of eyelets up the shoe
3. This process is repeated until both ends reach the top eyelets and end up inside.

I. Twistie



1. The lace is run straight across the bottom and emerges through both bottom eyelets
2. The ends are twisted together with one complete twist in the middle of the shoe
3. The ends then continue across to the opposite sides, where they go under and out through the next set of eyelets up the shoe
4. This process is repeated until both ends reach the top eyelets.

K. Checkerboard



1. Start with two pairs of different colour laces, preferably the wide, flat variety (I was lucky to receive two such pairs with my last runners!)
2. With one colour (orange in my example), lace the shoe using either Straight (Fashion) or Straight (Lazy) Lacing
3. With the other colour (red in my example), start at the bottom of the shoe and weave the lace in and out of the other lace until you reach the top
4. Fold around the top lace and head back down, weaving out and in until you reach the bottom
5. Continue across the shoe until you’re out of room or out of lace, whichever comes first
6. Tuck all the loose ends of the laces into the shoe.

Wednesday, August 5, 2009

டைடல் பார்க்கில் நம்ம கவுண்டர் ... பாகம் 1

கவுண்டர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று பின் அங்கே கணிபொறி வல்லுனராக வேலை செய்து பின் பல கோடிகளை சம்பாத்திது இந்தியா வருகிறார்.. இல்லை,இல்லை இது சிவாஜி ரீமேக் இல்லை.. அந்த அளவிற்கு கேவலமாக இல்லாவிட்டாலும் சிறிதளவேணும் மாறுபட்டது..

நம்ம கவுண்டர் இந்தியா வந்ததும், செந்திலின் உதவியுடன் ஒரு மிகப் பெரிய கணிப்பொறி சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிவு செய்கிறார்.. நிறுவனத்திற்கு பெயரும் வைத்தாயிற்று.. தங்கள் நிறுவனத்திற்கு ஆள் எடுக்க செய்தித்தாளில் விளம்பரமும் செய்து , தற்போது ஆள் எடுக்க நேர்காணல் நடக்கிறது.... இனி நாம் நேர்காணல் நிகழ்ச்சிக்கு போவோம்..

செந்தில் : பாஸ், பாஸ்....

கவுண்டர் : டேய்.. கீ போர்ட் வாயா.. நாம என்ன கொள்ள கூட்டமா நடத்துறோம்? இது சாப்ட்வேர் கம்பனி டா..பாஸ் பாஸ்னு கூப்பிட்டு வேர ஏதோ தொழில் பண்றோம்னு நினைக்க போறாங்க.. அதுவும் உன்ன பாத்தா புள்ள புடிக்கிறவன் மாதிறியே இருக்கு..

செந்தில் : வேற எப்படிணே கூப்புடரது?

கவுண்டர் : ஹ்ம்ம்.. அமெரிககவில கூப்புடற மாதிறி மிஸ்டர் பெல்ன்னு கூப்புடு..

செந்தில் : ஓகே.. மிஸ்டர் பெல்.. இண்டர்வியூக்கு வந்திருக்கரவங்கள கூப்புடவா?

கவுண்டர் : ம்ம்ம்ம்... கூப்புடு

டி ஆர் : சார் வணக்கம்.. என் பேரு டி ஆரு.. ஊருக்குள்ள எனக்கு நல்ல பேரு..

கவுண்டர் : அய்யோ அம்மா... என்னடா இது புதர் பேசுது?

செந்தில் : அண்ணே அது புதர் இல்ல.. நல்லா பாருங்க..

கவுண்டர் : நல்லா பாக்குறதுக்கு இவன் என்ன நமிதா படமாடா? நல்ல பேண்ட் சர்ட் போட்ட கரடி மாதிறி இருக்கான்..
ஆமா என்ன என்ன புராஜக்ட் எல்லாம் பண்ணி இருக்கே?

டிஆர் : சார்.. என் லேட்டஸ்ட் ப்ரொஜக்ட் வீராசாமி.. இது ராணுவ சம்பந்தமான் புராஜக்ட் .. சமீபத்தில அமெரிக்கா வாங்கீட்டு போயிருக்காங்க..

கவுண்டர் : என்னது அமெரிக்காவா? எதுக்கு?

டிஆர் : இல்லே சார். அந்த பின்லேடன் தொல்ல தாங்கலயாம்.. அதான் அவன் நடமாடுர ஏரியாவில நம்ம புராஜக்ட் பத்தி எடுத்து சொல்லி அவனை வளைச்சி பிடிக்க போறாங்களாம்..

கவுண்டர்: ஆமா.. இவன வண்டலூர்லயே தேடுவாங்க போல இருக்கு.. இதுல இவன் வேற.. எந்திரிச்சு போக சொல்லு.. அடுத்தவ வரச்சொல்லு..

விஜய் : ந்ண்ண்ணா வணக்கங்கண்ணா!!

கவுண்டர் : வணக்கம் எல்லாம் இருக்கட்டும் யாரு நீ?

விஜய் : யாரு புரோக்ராம் எழுதினா பக் வந்து கம்ப்யூட்டரெல்லாம் நாசமா போகுமோ .. அவன் தான் தமிழ்..

கவுண்டர் : ஓ.. அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா நீ? என்ன பண்ணுவ வேலைக்கு எடுத்தா?

விஜய்: ஒரு முறை நான் எழுதின புரொகிராம நானே டெஸ்ட் பண்ண மாட்டேன்,,,

கவுண்டர் : அப்போ பிரியமுடன் வசந்த்தா வந்து சரி பண்ணுவாரு? கேள்வி கேட்டா பதில் சொல்லுடா.. பன்ச் டயலாக்குன்ற பேரில என்னனமோ சொல்லிட்டு.. நீ என்னன்ன புராஜக்ட் எல்லாம் பண்ணி இருக்கே?

விஜய் : நிறைய பண்ணி இருக்கேங்க..அதுல முக்கியமா இந்த வில்லு . பத்தி சொல்லனும், அது மாதிறி உலகத்திலேயே.......

செந்தில்( இடைமறித்து) மிஸ்டர் பெல்......ஒரு நிமிஷம்....

விஜய் : சைலன்ஸ்.. பேசிட்டு இருக்கோமில்ல?????

கவுண்டர் : அடேங்கப்பா.. செஞ்சது குப்பை புராஜக்ட், இதில உனக்கு இத்தன லவுட்டு ? ஒழுங்கா ஓடிப்போயிடு...அடுத்தவ வரச்சொல்லு..

அஜித் : வணக்கம்..

கவுண்டர் : வணக்கம்.. உன்ன பத்தி சொல்லு..

அஜித் : நான் தனியாள் இல்ல..எனக்கு பின்னால ஒரு கூட்டமே இருக்கு

கவுண்டர் : எங்கே காணொம்? இப்படிதாண்டா ரொம்ப நாளா சொல்லி ஏமாத்துறீங்க.. திருந்துங்கடா

அஜித் : நான் கோட் பண்ணி வந்த பக் இல்ல.. தான வந்த பக்... அது..

கவுண்டர் : எதுடா?.

அஜித் : அது தான் ..

கவுண்டர் : அய்யோ ராமா..தாங்க முடியலியே.. முதல்ல இவன அனுப்புடா வெளிய .. டேய் கரிச்சட்டி மண்டையா.. முடியலடா. மீதிய கொஞ்ச நேரம் கழிச்சு வச்சுக்கலாம்

செந்தில் மனதில் ( இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் விசுவநாதன்,விஜய காந்த், நமிதா, ஸ்டார்ஜன், அக்பர், சுரேஷ், பெஸ்கின்னு பல பேர எப்படி சமாளிக்க போறாரோ!!!!)

Tuesday, August 4, 2009

சென்ற வார உலகம்......

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என் தாய்(Base Company) அலுவலகத்திற்கு பேருந்தில் செல்ல நேர்ந்தது(ஆமா பெரிய பில்கேட்ஸ் பேரன் பஸ்ல எல்லாம் போக மாட்டாராம் என தயவு செய்து திட்ட வேண்டாம் என்றாலும் கேட்கவா போறீங்க?? திட்டுங்க திட்டுங்க .....) இது வரை சுமார் 2 ஆண்டுகள் என் க்ளைண்ட் அலுவலகத்தில் பணி புரிந்து வந்தேன்.. பிறகு அந்த வேலை முடிந்தவுடன் மீண்டும் என் பழைய அலுவலகம் செல்ல நேரிட்டது.. என் அலுவலகம் இருப்பது தி.நகரில், நான் வசிப்பது திருவாண்மியூரில்.. ஆக அலுவலகம் செல்ல பேருந்து தான்.. எனக்கு இன்னும் இருசக்கர வாகன ஓட்டும் அனுமதி கிடைக்கவில்லை(ஏனெனில் நான் இன்னும் சின்ன பையனாம்!!!)


இங்கே பேருந்தில் வலது புறம் ஆண்களும் இடது புறம் பெண்களுமாக அமர்ந்திட வேண்டும்.. ஆனால் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாமாம்... என்ன நியாயமோ? எனக்கு எனது ஊர், கோவை பேருந்து நினைவுக்கு வந்தது, அங்கே பெண்கள் முன்பும், ஆண்கள் பின்பும் அமர வேண்டு...நான் ஊருக்கு சென்ற போது இதே நினைப்பில் முன்னர் உள்ள இருக்கையில் அமர்ந்து திட்டு வாங்கியது வேறு விசயம் !!!!
அதுவும் கோவையிலிருந்து திருப்பூர் வரை செல்லும் தனியார் பேருந்துகளில் ஓட்டுனர் அருகில் உள்ள பேனட்டில் இளம் பெண்கள் அமர தனியாக ஒரு இருக்கை வேறு போடப்பட்டிருக்கும்.. அங்கே பெண்கள் அமர்ந்ததும் அந்த ஓட்டுனர்கள் அடிக்கும் லூட்டி இருக்கிறதே!!! பார்க்க படு பொறாமையாக இருக்கும்.. அதனால் தான் பல விபத்துகள் கோவை, திருப்பூர் சாலையில் நடைபெறுகிறதென நினைக்கிறேன்..

ஒருமுறை தி நகரில் இருந்து வீட்டிற்கு பேருந்தில் வந்தேன்.. நல்ல மழை வெளியில்.. குடைக்குள் மட்டுமல்ல என் பேருந்துக்குள்ளும் மழை !!! சைதாப்பேட்டையில் சில பள்ளி மாணவர்கள் ஏறினர்.. படியில் நின்ற படி சில பள்ளி மாணவர்கள், அவர்கள் பிறரின் கவனத்தை ஈர்க்க செய்த செயல்கள் அனைத்தும் கோபத்தையே வரவழைத்தது... அதில் ஒரு மாணவன் தனது உதட்டின் கீழே ஏதோ ஒன்றை குத்தி இருந்தான்.. அந்த மாதிரி ஒரு குண்டூசி போன்ற ஒன்றை இதற்கு முன் ஏதோ ஒரு நடிகையின் மத்திய பிரதேசத்தில் பார்த்த நியாபகம்.. இந்த மாதிரி ஒரு குண்டூசி போன்ற அமைப்பை அவன் உதட்டின் கீழ் மாட்டிய மருத்துவர் யாரோ!!!!

அவன் பேருந்து நிற்கும் ஒவ்வொரு நிறுத்தமும் இறங்கி , பேருந்து நகர்ந்ததும் பின் ஓடி வந்து ஏறியபடியே பயணத்தை தொடர்ந்தான்.. நடத்துனர் சொல்லியும் கேட்கவில்லை.. நமக்கேன் வம்பு என அவரும் விட்டு விட்டார்.. அடையார் வந்தது அந்த குண்டூசி மாணவன் வெகு ஸ்டைலாக பேருந்தில் குதித்து இறங்கி, பின் வழக்கம் போல ஓடி வந்து ஏற முற்பட்டான்.. மழை காரணமாக அவன் வழுக்கி விழ நல்ல அடி அவன் முகத்தில்.. ஆனால் யாரும் கவலைப்பட வில்லை.. எனக்குள் இருந்த மிருகம் மிகவும் சந்தோசப்பட்டது.. இப்படித்தான் வேணும் என என் மனம் சந்தோசக் கூச்சலிட்டது( !!!!????)...

இப்படி பேருந்தில் படியில் பயணம் செய்து கீழே விழுந்து தத்தம் கை, கால்களை, பின் வாழ்க்கையை இழந்த பலர் பற்றி கேட்டதுண்டு..அப்படி அடிபட்ட சிலரின் புகைப்படங்களை அவர்கள் முகம் மறைத்து படியின் மேலுள்ள இடத்தில் ஒட்டி வைத்தால் கொஞ்சம் பலன் கிடைக்கும் அல்லவா? பல பேருந்துகள் தற்போது கதவுடன் வருவதால் இந்த பிரச்சினை ஒரளவு சரிகட்டப்படுகிறது..
##########################################################################################################################################################################################
கடந்த வாரம் என் அக்கா, மாமா குடும்பத்துடன் சென்னை வந்திருந்தார்.. அவர்களுடன் விஜிபி போவதென முடிவாயிற்று,, இப்படி பட்ட இடங்களுக்கு செல்லும் போது நான் கண்டீப்பாக குளிர் கண்ணாடி அணிவேன்.. அதன் காரணம் முடிவில்..... அங்கே சென்றதும், இலவச விளையாட்டுகளை தேடினோம்.. முதலில் அகப்பட்டது ஆகாயக் கப்பல். அதாங்க கப்பல் மாதிறி அமைப்பில் இருக்கும் ஒன்றில் அமர வைத்து தொட்டில் போல பக்க வாட்டில் ஆட்டுவார்களே.. . நான் ஊட்டியில் இருந்து கீழே பேருந்தில வரும் போதே வயிற்றில் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன்.. தெரியாமல் இதில் ஏறி,,,, அப்பப்பா .. எப்போ இறங்க முடியும் என் ஆயிற்று.. முடிந்தத்து போதுமடா சாமி என குதித்து வெளியில் ஓடி வந்தேன்.. அந்த கப்பலை இயக்கும் ஊழியர் இனி மேல் இலவச விலையாட்டு தேடி அலைவியா, அலைவியா எனக்கேட்டு என்னை அடித்தது போல இருந்தது... பின் எந்த விளையாட்டிலும் பங்கு கொள்ளாமல் வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்தேன்..

வேடிக்கை என்றதும் அங்கே வரும் பெண்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. அட அட அட.. எங்கே இருந்து தான் உடைகளை தேர்வு செய்கிறார்களோ!!! பெரும்பாலும் ஜீன்ஸ், மூச்சு முட்டும் (அவர்களுக்கும் முட்டுகிறதோ இல்லையோ என் போல ஆட்களுக்கு நிச்சயம் முட்டும்) ஒரு பனியன், இல்லையெனில் சுரிதார்... அதுவும் பல பேர் துப்பட்டவை உபயோகிக்கவில்லை, அப்படியே உபயோகித்தாலும் அது உபயோகப்படவில்லை!!!
நிற்க,,,, நீ என்ன பெரிய கலாச்சார காவலனா என யாரும் கேட்க வேண்டாம்,... நான் அப்படி பட்ட ஆள் இல்லை. மேலும் நான் பார்த்த பெண்கள் யாரும் தனியே வரவில்லை.. ஒரு துணையுடனே!!! கண்டீப்பாக அவர்களில் யாரவது ஒருவருக்கு தெரிந்திருக்கும் நம் உடை கண்டீப்பாக பிறர் கவனம் ஈர்க்கும் என.. ஆக தெரிந்தே, ஒரு வேண்டுதலுடன் வரும் பெண்களை ரசிப்பதில் தவறேதும் இல்லை ...



கடைசியக கண்ணாடி எதற்கு எனக்கேட்டவர்களுக்கு...

* அந்த ஆகாய கப்பல் விளையாட்டில் என் முகம் சிரித்தாலும் என் கண்கள் பீதியில் கலங்கி விட்டது.. கண்ணாடி இருந்ததால் தப்பித்தேன்..

* கண்ணாடி இருந்ததால் தான் பல விசயங்களை ரசிக்க முடிந்தது (அம்மிணிக்கு தெரியாமல்!!!!)