}

Friday, September 4, 2009

கோவையில் நடந்த பிரபல பதிவர் சந்திப்பு..............


என்னடா இது எங்கே பார்த்தாலும் இந்த பிரபல சந்திப்பு பற்றி பதிவா போட்டு கலக்குறாங்க..ஆனா நம்மால அப்படி எழுத வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதேன்னு நினச்சப்போ அதற்கு ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது..நமது சிங்கை நாட்டு ரஜினி ரசிகர் மன்ற தலைவர், நமது மூத்த பதிவர்(எப்புடி..) கிரி சென்ற மாதம் தன் மகனுக்கு முடியெடுக்க இந்தியா வந்திருந்தார்..அப்போது எவனோ ஒருவன் பெஸ்கியிடமிருந்து என் மொபைல் நம்பர் பெற்று என்னை அழைத்து ஆச்சர்யப்படுத்தினார் ..விடுவோமா நாம ஏண்டா போன் செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு பேசினேன்!!!

அப்போது ஒரு வேலையாக அவர் கோவை வரவேண்டி இருந்ததால் சந்திக்க முடிவு செய்தோம்.. அப்போது நமது
பெஸ்கியும் அங்கே வர, கிறுக்கல் கிறுக்கன் தனது வீட்டில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் எங்கள் அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்தார்.. ஆஹா சாமி சோறு போடுது என நினைத்து உடனே நான் சம்மதம் தெரிவித்தேன்.. கிரி அண்ணனை தெரிவிக்க வைத்தேன்... ஆகவே அனைவரும் கிறுக்கல் கிறுக்கன் வீட்டில் கூடி சந்திப்பதாக நான்கு மனதாக முடிவு செய்யப்பட்டது...

அண்ணன் கிரி கோபியிலிருந்து வரும் போது சிறிது நேரமாகிற்று.. காரணம் கேட்டதற்கு அவர் வரும் போது ஒன் வேயில் வந்ததாகவும், அதை தடுத்து பிடித்து கேட்ட டிராபிக் கான்ஸ்டபிலிடம் என் வழி தனி வழி என தலைவர் டையலாக்கை சொல்லி தப்பித்து வந்ததாக கூறினார்..ஆனால் தப்பித்து வந்ததாக கூறியது நம்பும் படி இல்லை.. ஒரு வழியாக சிறுவர் மலர் புதிர் போட்டி போல கிறுக்கன் கிறுக்கன் வீட்டை அடைந்தோம்.. இனி இந்த வரலற்று சிறப்பு மிக்க சந்திப்பை தவற விட்ட மக்களுக்காக நடந்ததை நடந்த படி ஒளிபரப்பு..

கிகி : வாங்க வாங்க!!

குஒஇ : வந்திட்டேன்.. நான் தாங்க குறை ஒன்றும் இல்லாத ராஜ்!! இவர் கிரியண்ணன்..

கிகி : (ஆஹா இவன் அன் லிமிடெட் மீல்ஸ் ரெண்டு சாப்பிடுவான் போல இருக்கே!! நாம வேர அளவா செஞ்சு இருக்கோம்..இவனுக்கே பத்தாது போல இருக்கே..) ஓ !! வாங்க வாங்க.. வாங்க கிரி..

கிரி : (அதான் வந்தாச்சு இல்ல.. எத்தன தடவ கூப்பிடுவாங்க) ஹி ஹி ஹி...நல்லா இருக்கீங்களா?

ஏஒ: அடடே வாங்க....இப்போ தான் உங்கள பத்தி பேசிட்டு இருந்தோம்.. எப்படி வழி கண்டு புடிச்சீங்க?

குஒஇ:( அடங்கப்பா ஓசி சோறு கிடைக்கும்னு வந்தா.. எத்தனை சுத்து..) அதெல்லாம் புடிச்சிட்டோங்க..

கிகி : இந்தாங்க ஜூஸ் .. சாப்பிடுங்க..

குஒ இ: ( என்ன இது ஜூஸ் குடுத்து வயித்த நப்ப பாக்கிறாரா?) இல்லேங்க வேண்டாங்க ,.. வர்ரப்ப தான் குடிச்சேன்

கிரி : (எப்ப குடிச்சான்? எனக்கு தெரியாம?) அட ஜூஸ் தானே ராஜ் குடிங்க...

கிகி : ( எப்படியாச்சும் ஜூஸ் குடுத்து கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா...) குடிங்க..

ஏஓ: அப்புரங்க கிரி பயணமெல்லாம் எப்படி இருந்தது? எப்போ கிளம்பரீங்க?

குஒஇ : (என்ன இது இப்ப தான் வந்தோம் .. எப்ப கிளம்பரீங்கன்னு கேட்குறார்.. அப்போ சாப்பாடு இல்லையா..ஜூஸ் வேர வேணாம்னு சொல்லீட்டோம்.. இப்பவே எனக்கு பசிக்குதே..) எங்க் கிளம்பச்சொல்றீங்க?

கிரி : அடுத்த மாசம் 20 தேதி கிளம்பரேங்க..

குஒஇ :(ஓ அப்போ இங்கே இருந்து இல்லையா.. இந்தியாவிலிருந்தா..அப்பாட) ஹி ஹி ஹி..

கிகி : எப்படி போகுதுங்க வேலை எல்லாம்? உங்க ஊர்ல மழைங்களா?

கிரி : நல்லா போகுதுங்க.. ஆமாங்க ரெண்டு நாளா மழை...

குஒஇ : ஏங்க சாப்பிடுலாமா...

கிகி : (ஆஹா.. விட மாட்டான் போல இருக்கே..) அப்புறம் ராஜ்.. உங்க வேலை எப்படி போகுது? நீங்க கோவைதானா?

குஒஇ;( நாம என்ன கேட்டோம் இவர் என்ன சொல்ரார்) எந்த குறையும் இல்லேங்க.. ஆமா சாபிட...

கிரி : நீங்க எந்த ஊர்? என்ன வேலை செய்றீங்க?

கிகி : நான் நாகர் கோவிலுங்க,,. இங்கே வேலைக்காக இருக்கேண்..

ஏஓ: ஏங்க கிரி .. சமீபத்தில நம்ம பதிவுகள் எல்லாம்....

கிரி : (அய்யோ நாம எத பத்தி பேச கூடாதுண்னு நினைக்கிறோமா அத பத்தியே பேசராரே..) சொல்லுங்க

ஏஓ: தனி நபர் தாக்குதலா இருக்கே..என்ன செய்ய?

குஒஇ :( ம்ம்ம்ம்...கூட்டமா போய் கலவரம் பண்ண வேண்டியது தானே) ஏங்க சாப்ப்,,,,,

கிரி : அது நமக்கு எதுக்குங்க.. நாம பாட்டுக்கு நாம எழுத வேண்டியது.. அடுத்தவன் என்ன பண்ணா நமக்கெண்ணாங்க.. எவன் எவன் தாக்குனா நமக்கெண்ணா? நாம யாரையும் தாக்காம இருந்தா சரி..

குஒஇ: (இவ்வளவு விளக்கி சொல்லியும் இன்னும் ஏதோ கேட்பாங்க போல இருக்கே) ஏங்க சாப்ப்...

கிகி : ஆமாங்க கிரி ... இந்த பதிவுலகம் நமக்கு பல நட்புகளை குடுத்து இருக்கு..அதே சமயம் நிறைய எதிரிகளையும் தர வாய்ப்பு இருக்கு.. அதனால நாம கொஞ்சம் கவனமா தான் இருக்கனும்..

குஒஇ: (அய்யோ.. இப்பத்திக்கு விட மாட்டாங்க போல இருக்கே...கவனமா இருக்கனும்னா குலாம் நபி ஆசாத் சொல்ரத கேளுங்க...விக்ரமன் பட டையலாக் மாதிறி பேசுராங்களே..)ஏங்க சாப்ப்ப்...

கிரி : ஆமாங்க அது தான் சரி.. அதனால தான் நான் எந்த சந்திப்பிலேயும் பதிவுகள பத்தி பேசறதில்லை.. ( இனியாச்சும் விடுங்கடா சாமி)

ஏஓ : நாம இப்ப தான் சந்திச்சு இருக்கோம்.. சந்தோசமா இருக்குது.. இது தான் எனக்கு முதல் பதிவர் சந்திப்பு.. இப்படி ஒரு சந்திப்பு சென்னையில நடந்தப்ப என்ன அனுமதிக்கல. அதான் நான் எனக்குன்னு ஒரு பதிவு ஆரம்பிச்சேன்...

கிகி : நான் கூட ரெண்டு வருசத்துக்கு முன்னால எழுதீட்டு இருந்தேங்க..ஆனா சூழ் நிலை காரணமா தொடர முடியல..

குஒஇ: ( கொசு வத்தி சுத்தர நேரமா இது.. இங்கே சாப்படு போடராங்கண்ணு காலையில வேர எதுவும் சாப்பிடாம வந்திருக்கேன்.. இப்போ போயி...) ஏங்க சாப்ப்...

கிரி : அப்படீங்களா? அப்புரம் நான் கொஞ்சம் சீக்கிரமா போகணும் .. ஏண்னா பையன் அழுவான் வீட்டில..( இனியாச்சு விடுங்கடா..)

கிகி : ஓ அப்படிங்களா.. நல்ல குடும்பஸ்தர் ஆயிட்டிங்க,..பையன் எப்படிங்க .. ரொம்ப குறும்போ!!

குஒஇ: (ஆஹா ..அடுத்த டாபிக்கா..) ஏங்க சாப்ப்...

கிரி : ஆமாங்க ... ரொம்ப.. இப்ப தான் என் செல்லமாயிட்டு வரான்.. அப்புரம் நான் பண்றதில்ல பாதியாவது இப்போ பண்ணுவான் இல்ல...ரொம்ப சந்தோசமா இருக்குங்க குடும்ப வாழ்க்கை

ஏஓ : நீங்க சென்னையில எத்தன வருசம் இருந்தீங்க ? எங்கே இருந்தீங்க,,.

கிரி : நான் கிண்டியில இருந்தேங்க.. சுமார் 7 வருசம் இருந்தேன்.. நல்லா சென்னைய ரசிச்சேன்.. இப்பவும் என்னோட பல, பழைய நண்பர்கள் சென்னையில தான் இருக்காங்க..

குஒஇ:( சரி.. இனி ஒண்ணும் பண்ண முடியாது..) ஏங்க,,, ( வேணாம்.. வேணும்னே நான் சொல்ரத கேட்காத மாதிறி இருக்காங்க..)

ஏஓ : ஓ அப்போ உங்களுக்கு சென்னை அத்துப்படி ...

கிரி : அப்படி சொல்ல முடியாது.. தெரியும்...

கிகி : சரி சாப்பிட போலாமாங்க..

குஒஇ: (அப்பாட இப்ப தான் புத்தி வந்திருக்கு போல் இருக்கு..)

அனைவரும் சாபிட அமர்ந்தோம்.. கிகி அவர்கள் தன் கையாலேயே சிக்கன். மீன் என அமர்கள படுத்தி இருந்தார். சாப்பிட போகும் முன்னரே முடிவு பண்ணி விட்டேன்.. கிரி அண்ணனை பார்த்தேன் .. அவர் பாவம் கோழி கொத்துவது போல தான் சாப்பிக்கூடும் என அப்பட்டமாக தெரிந்தது....ஆக அவரிடம் அவர்ந்து அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் , ஆனால் நம்ம ஏஓ பல ஊர்களுக்கு சென்று புரோட்டா படமெல்லாம் எடுத்து இருப்பதால அவரே நமக்கு சரியான ஜோடியென அமர்ந்தேன்.. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டோம்.. சாப்பிடும் போது எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியே இருந்ததே தவிற எந்த பொறாமையும் இருக்கவில்லை..கிகி இன் முகத்துடன் அனைவருக்கும் பரிமாறினார்.. என்னை தவிர அனைவரிடமும் இன்னும் வேண்டுமா இன்னும் வேண்டுமா என கேட்டு பரிமாறினார். ஆனால் என்னிடம் மட்டும் போதுமா போதுமா என மிக மிக எச்சரிக்கையுடனே கேட்டு பறிமாறினார்... ஆனாலும் நாம் தான் சாப்பிட அமர்ந்த உடன் எந்த ஃபார்மாலிட்டியும் பார்ப்பதில்லையே.. கிகி மனதை புண்படுத்தாமல் ஆமாம் இன்னும் வேணும் எனக்கேட்டே வாங்கி சாப்பிட்டேன்..

ஒரு வழியாக விருந்தை முடித்துக்கொண்டு , விருந்துக்கு ஏற்பாடு செய்த கிகி, ஏஓ ஆகியவர்களிடன் நன்றி கூறி நானும் கிரியண்ணனும் விடை பெற்றோம்..






மிக முக்கிய குறிப்பு : பதிவர் சந்திப்பு படங்கள் பற்றி கேட்பவர்களுக்கு.. ஹி ஹி ஹி.. இது முழுக்க முழுக்க கற்பனையான சந்திப்பு.. நடந்திருக்க வேண்டிய சந்திப்பு ஆனால் நேரமின்மையால் முடியவில்லை.. என்வே இந்த கற்பனை சந்திப்பு!!!!

27 பதிலடிகள்...:

Malini's Signature said...

ஜெய் ஜக்கம்மா.... இது எல்லாம் எந்த ஊரு நியம்????... நாங்களும் கோவைதான்... எனக்கு அழைப்பே வரல்லையே.!!!! அதான் கனவா போயிடுச்சு :-)

ப்ரியமுடன் வசந்த் said...

ஹி ஹி ஹி

சாப்பாட்டு சந்திப்பு......

Jaleela Kamal said...

குஒஇ: ( கொசு வத்தி சுத்தர நேரமா இது.. இங்கே சாப்படு போடராங்கண்ணு காலையில வேர எதுவும் சாப்பிடாம வந்திருக்கேன்.. இப்போ போயி...) ஏங்க சாப்ப்

/(அய்யோ.. இப்பத்திக்கு விட மாட்டாங்க போல இருக்கே...கவனமா இருக்கனும்னா குலாம் நபி ஆசாத் சொல்ரத கேளுங்க...விக்ரமன் பட டையலாக் மாதிறி பேசுராங்களே/

ஆஹா சரியான தொகுப்பு, + ரியல் காமடி. அந்த கவுண்டரையே மிஞ்சிட்டீங்க‌



//நாம் தான் சாப்இட அமர்ந்த உடன் எந்த ஃபார்மாலிட்டியும் பார்ப்பதில்லையே.. //

ஃபார்மாலிட்டி பார்த்தா வயிறு ரொம்பாது..சரிதான் ஒரு வெட்டு போல இருக்கு

Beski said...

அட நான் கூட மொதல்ல பயந்துட்டேன், என்னடா நம்மள விட்டுட்டு தனியா மீட்டிங்கப் போட்டுட்டாங்களேன்னு... ஹி ஹி ஹி...

உண்மையிலேயே செம கலக்கல், பல இடங்களில் வாய் விட்டு சிரித்துவிட்டேன். கற்பனையா இருந்தாலும் ஒவ்வோருத்தரோட பேச்சு எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது, எல்லோருடைய தகவல்களிலும் நல்ல கவனிப்பு.

கலக்கல்.
---
அடுத்த தடவ மழை வருது, வெயில் அடிக்கிதுன்னு வராம இருந்துறாதீங்க, சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கு.

GEETHA ACHAL said...

நானும் கூட நினைச்சேன்...என்னடா ராஜினை ஆளையே காணும்...ஊருக்கு விடுமுறைக்காக போயி இருக்கின்றிங்க போல..அதான் இந்த மீட்டிங் என்று பார்த்தால்..

கடைசியில் கற்பனை...என்றாலும் கலக்கல்...அருமையாக எழுதி இருக்கின்றிங்க...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பதிவர் சந்திப்பு படங்கள் பற்றி கேட்பவர்களுக்கு.. ஹி ஹி ஹி.. //

இந்த வண்ணம் தெரியலயே தலைவரே..

Menaga Sathia said...

என்னடா இது நம்மளவிட்டுட்டு ராஜ் மட்டும் பதிவர் சந்திப்புக்கு போய் விருந்து சாப்பிட்டு இருக்காரேன்னு நினைச்சேன்.இது கற்பனைன்னு கடைசில படித்ததும் மனசு நிம்மதி அடைந்துச்சு பாருங்க.ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு...

*இயற்கை ராஜி* said...

இதுலருந்து எல்லார்க்கும் என்ன தெரியுதுன்னா.....ராஜ் வர்ற மீட்டிங்க ஸ்பான்சர் பண்ண ரொம்ப தைரியம் வேணும்:-)

Menaga Sathia said...

see this link
http://sashiga.blogspot.com/2009/09/blog-post_7864.html

நட்புடன் ஜமால் said...

கற்பனையே கலை கட்டுதே ...

Sathik Ali said...

//நடந்திருக்க வேண்டிய சந்திப்பு ஆனால் நேரமின்மையால் முடியவில்லை.. //
அது தான் காரணமா? இல்ல உங்களை பத்தி ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்து போனதலா?
சிரித்து வயிறு வலிக்கிறது..கலக்கல் காமடி.

கிரி said...

கோவை ல இத்தனை பேரு இருக்காங்களா! அடுத்த முறை கண்டிப்பாக சந்திப்ப போட்டுட வேண்டியது தான்.

கடைசி வரைக்கும் ராஜ் க்கு விருந்த கண்ணுல காட்டாமையே போயடுவாங்களோ என்று இருந்தேன்.. ராஜ் சாபத்துல இருந்து தப்பித்தாங்க..

அடுத்த வாட்டி நிஜமாவே போடலைனா எப்படி டென்ஷன் ஆவாருன்னு இப்பவே சிம்பாலிக்கா சொல்லிட்டாரு..

அதுனால பிகேர்புள்! ..நான் என்ன சொல்லலை :-)

ஆ.ஞானசேகரன் said...

///மிக முக்கிய குறிப்பு : பதிவர் சந்திப்பு படங்கள் பற்றி கேட்பவர்களுக்கு.. ஹி ஹி ஹி.. இது முழுக்க முழுக்க கற்பனையான சந்திப்பு.. நடந்திருக்க வேண்டிய சந்திப்பு ஆனால் நேரமின்மையால் முடியவில்லை.. என்வே இந்த கற்பனை சந்திப்பு!!!!//

ஹிஹிஹி.... இருந்தாலும் கலக்கலா இருக்கு

குறை ஒன்றும் இல்லை !!! said...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
// ஹர்ஷினி அம்மா said...

ஜெய் ஜக்கம்மா.... இது எல்லாம் எந்த ஊரு நியம்????... நாங்களும் கோவைதான்... எனக்கு அழைப்பே வரல்லையே.!!!! அதான் கனவா போயிடுச்சு :-)//

வாங்க ஹர்ஷினி அம்மா.. நன்றிங்க.. அடுத்த முறை சாப்பாடு உங்கள் வீட்டில் தான்...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

//பிரியமுடன்...வசந்த் said...

ஹி ஹி ஹி

சாப்பாட்டு சந்திப்பு......//

ஹா ஹா ஹா.. நன்றிங்க..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

//Jaleela said...

ஆஹா சரியான தொகுப்பு, + ரியல் காமடி. அந்த கவுண்டரையே மிஞ்சிட்டீங்க‌//

நன்றி ஜலீலா..

// ஃபார்மாலிட்டி பார்த்தா வயிறு ரொம்பாது..சரிதான் ஒரு வெட்டு போல இருக்கு//

நீங்க முழுவதுமா படிக்கலேண்ணு நினைக்கிறேன்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

// எவனோ ஒருவன் said...

அட நான் கூட மொதல்ல பயந்துட்டேன், என்னடா நம்மள விட்டுட்டு தனியா மீட்டிங்கப் போட்டுட்டாங்களேன்னு... ஹி ஹி ஹி...//

அது எப்படிங்க.. நீங்க தானே ஸ்பான்சர்!!

// உண்மையிலேயே செம கலக்கல், பல இடங்களில் வாய் விட்டு சிரித்துவிட்டேன். கற்பனையா இருந்தாலும் ஒவ்வோருத்தரோட பேச்சு எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது, எல்லோருடைய தகவல்களிலும் நல்ல கவனிப்பு.

கலக்கல்.//

நன்றி..
---
// அடுத்த தடவ மழை வருது, வெயில் அடிக்கிதுன்னு வராம இருந்துறாதீங்க, சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கு.//''

கண்டீப்பா முயற்சி பண்றேன்..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

குறை ஒன்றும் இல்லை !!! said...

// Geetha Achal said...

நானும் கூட நினைச்சேன்...என்னடா ராஜினை ஆளையே காணும்...ஊருக்கு விடுமுறைக்காக போயி இருக்கின்றிங்க போல..அதான் இந்த மீட்டிங் என்று பார்த்தால்..

கடைசியில் கற்பனை...என்றாலும் கலக்கல்...அருமையாக எழுதி இருக்கின்றிங்க...//

நன்றிங்க,.,

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
//
SUREஷ் (பழனியிலிருந்து) said...

இந்த வண்ணம் தெரியலயே தலைவரே..//

டாக்டர் உங்களுக்கேவா!!!

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
// Mrs.Menagasathia said...

என்னடா இது நம்மளவிட்டுட்டு ராஜ் மட்டும் பதிவர் சந்திப்புக்கு போய் விருந்து சாப்பிட்டு இருக்காரேன்னு நினைச்சேன்.இது கற்பனைன்னு கடைசில படித்ததும் மனசு நிம்மதி அடைந்துச்சு பாருங்க.ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு...//

அஹா என்ன ஒரு நல்ல எண்ணம்.. நல்லா இருங்க..உங்க தொடர் அழைப்பை ஏற்றேன்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
// இய‌ற்கை said...
இதுலருந்து எல்லார்க்கும் என்ன தெரியுதுன்னா.....ராஜ் வர்ற மீட்டிங்க ஸ்பான்சர் பண்ண ரொம்ப தைரியம் வேணும்:-)

ஆமாங்க.. அடுத்து அங்க தான்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
// நட்புடன் ஜமால் said...

கற்பனையே கலை கட்டுதே ...//

நன்றிங்க ஜமால்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

/ சாதிக் அலி said...
சிரித்து வயிறு வலிக்கிறது..கலக்கல் காமடி.//

வாங்க சாதிக்.. நன்றி..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

குறை ஒன்றும் இல்லை !!! said...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
// கிரி said...

கோவை ல இத்தனை பேரு இருக்காங்களா! அடுத்த முறை கண்டிப்பாக சந்திப்ப போட்டுட வேண்டியது தான்.

கடைசி வரைக்கும் ராஜ் க்கு விருந்த கண்ணுல காட்டாமையே போயடுவாங்களோ என்று இருந்தேன்.. ராஜ் சாபத்துல இருந்து தப்பித்தாங்க..

அடுத்த வாட்டி நிஜமாவே போடலைனா எப்படி டென்ஷன் ஆவாருன்னு இப்பவே சிம்பாலிக்கா சொல்லிட்டாரு..

அதுனால பிகேர்புள்! ..நான் என்ன சொல்லலை :-)//

வாங்கண்ணே... ஆமா இது அவங்களுக்கு ஒரு எச்சரிக்கை தான்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
// ஆ.ஞானசேகரன் சொன்னது
ஹிஹிஹி.... இருந்தாலும் கலக்கலா இருக்கு //

நன்றிங்க ஞானசேகரன்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

☀நான் ஆதவன்☀ said...

ஆகா....நல்ல சந்திப்பா இருக்கும்னு நினைச்சு படிச்சுட்டே வந்தா எல்லாம் கற்பனையா?அவ்வ்வ்வ்

ஆனாலும் நல்லாயிருக்கு :). கூடிய சீக்கிரம் பதிவர் சந்திப்பு நடைபெற வாழ்த்துகள்

Sanjai Gandhi said...

அடப் பாவிகளா.. எங்களுக்குத் தெரியாம கோவைல சந்திப்பா? அதும் சோறு எல்லாம் போட்டிருக்காங்க.. கோவை பதிவர்கள் பேரவை உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்.

Sanjai Gandhi said...

//மிக முக்கிய குறிப்பு : பதிவர் சந்திப்பு படங்கள் பற்றி கேட்பவர்களுக்கு.. ஹி ஹி ஹி.. இது முழுக்க முழுக்க கற்பனையான சந்திப்பு.. நடந்திருக்க வேண்டிய சந்திப்பு ஆனால் நேரமின்மையால் முடியவில்லை.. என்வே இந்த கற்பனை சந்திப்பு//

இதை முதலில் போடுங்க சார். நாங்கல்லாம் 4 வரி படிச்சிட்டு கமெண்ட் போடறவங்க. :)

Suresh Kumar said...

சந்திப்பை சுவராஸ்யமாக கொண்டு போயிட்டு கடைசில கவுத்துட்டிஎளே பாஸ்

sivanes said...

சூப்பர்! :-))))

Jaleela Kamal said...

ஆமாம் ராஜ் கீழே கலரில் இருந்தது (கிட்ட பார்வை கோளாறு ) ஹி ஹி அதனால் படிகக்ல‌


கலக்கலான கற்பனை பதிவர் சந்திப்பு தான் இப்படியும் யோசித்து சூப்பரா எழுதி இருக்கீங்க ரொம்ப நல்ல இருந்தது.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஹா ஹா ஹா முடிய்ய்ய்ய்யல.

இந்த கற்பனையை நிஜமாக்கினால் ரொம்ப சந்தோஷப்படுவாள் என் சக தர்மிணி.

நானும்தான்

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நான் ஏனா ஓனா வின் ஊருக்கு சென்றிருந்தபோது ந்மது பதிவர்கள் மூவரை சந்தித்தோம். போட்டோக்களுடன் பதிவுகளை போடுகிறோம்

பாசகி said...

செம காமடியா இருந்துச்சு-ஜி :)))

கொலை வெறியோட படிச்சேன், எனக்கு ஒரு போன் மட்டும் போட்டு escape ஆயிட்டு கிரி-ஜி அங்க போயி விருந்து சாப்பிட்டாரா-னு நினைச்சு. நல்ல வேளை கற்பனை :)

தலைவர் பட ரீலிஸூக்கு வந்தாருனா மனுசனை மடக்கிடவேண்டியதுதான்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
☀நான் ஆதவன்☀ said...
// ஆகா....நல்ல சந்திப்பா இருக்கும்னு நினைச்சு படிச்சுட்டே வந்தா எல்லாம் கற்பனையா?அவ்வ்வ்வ்

ஆனாலும் நல்லாயிருக்கு :). கூடிய சீக்கிரம் பதிவர் சந்திப்பு நடைபெற வாழ்த்துகள்//
நன்றி ஆதவன்...
================================================
// SanjaiGandhi said...

இதை முதலில் போடுங்க சார். நாங்கல்லாம் 4 வரி படிச்சிட்டு கமெண்ட் போடறவங்க. :)//

வாங்க சஞ்சய்,,, ஹி ஹி ஹி என்ன செய்ய??
================================================
// Suresh Kumar said...

சந்திப்பை சுவராஸ்யமாக கொண்டு போயிட்டு கடைசில கவுத்துட்டிஎளே பாஸ்//

நன்றி சுரேஸ்... ஹி ஹி ஹி
================================================
// சிவனேசு said...

சூப்பர்! :-))))//

டாங்க்ஸ்பா..
================================================
//Jaleela said...

ஆமாம் ராஜ் கீழே கலரில் இருந்தது (கிட்ட பார்வை கோளாறு ) ஹி ஹி அதனால் படிகக்ல‌
கலக்கலான கற்பனை பதிவர் சந்திப்பு தான் இப்படியும் யோசித்து சூப்பரா எழுதி இருக்கீங்க ரொம்ப நல்ல இருந்தது.//

நன்றிங்க ....
================================================
// சந்ரு said...

உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்//

நன்றி சந்ரு கண்டீப்பாக ஏற்றுக்கொள்கிறேன்...
================================================
// கிறுக்கல் கிறுக்கன் said...

ஹா ஹா ஹா முடிய்ய்ய்ய்யல.

இந்த கற்பனையை நிஜமாக்கினால் ரொம்ப சந்தோஷப்படுவாள் என் சக தர்மிணி.

நானும்தான்//

நன்றி கி கி..
================================================
// கிறுக்கல் கிறுக்கன் said...

நான் ஏனா ஓனா வின் ஊருக்கு சென்றிருந்தபோது ந்மது பதிவர்கள் மூவரை சந்தித்தோம். போட்டோக்களுடன் பதிவுகளை போடுகிறோம்//
நல்லது ..
================================================
// பாசகி said...

செம காமடியா இருந்துச்சு-ஜி :)))

கொலை வெறியோட படிச்சேன், எனக்கு ஒரு போன் மட்டும் போட்டு escape ஆயிட்டு கிரி-ஜி அங்க போயி விருந்து சாப்பிட்டாரா-னு நினைச்சு. நல்ல வேளை கற்பனை :)

தலைவர் பட ரீலிஸூக்கு வந்தாருனா மனுசனை மடக்கிடவேண்டியதுதான்.//
நன்றிங்க...ஆமாங்க விடக்கூடாது.. முதல் வருகைக்கு..
================================================

ராமலக்ஷ்மி said...

நல்ல கற்பனை:))!

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!