}

Friday, September 18, 2009

A - Z -------TAG... TAG ... TAG

எல்லாருக்கும் வணக்கமுங்க.. கொஞ்ச நாளா பதிவுலகத்த விட்டு கொஞ்சம் ஒதுங்கி(நிம்மதியா !!!!) இருந்தேன்.. ஆனா நம்ம கிச்சன் கில்லாடிகளான கீதா,மேனகா, அம்மு மற்றும் கொங்கு நாட்டு தங்கம்(!!) இயற்கை அவர்கள் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்தனர். அதிலும் நம்ம இயற்கை முதலில் அழைப்பு விடுத்து பின் அது வேண்டுகோளாக மாறி அதன் பின் எச்சரிக்கையாக உருவெடுத்து கடைசியாக மிரட்டலாக வந்ததால் இந்த பதிவு...

1. A – Avatar (Blogger) Name / Original Name : / குறை ஒன்றும் இல்லை /ராஜ்குமார் /

2. B – Best friend? : நிறைய இருக்காங்க...
கவுண்டர் : அதில பசங்க எத்தனைன்னு மட்டும் கேளுங்க சார்.. கேப்மாரி சார் இவன்...

3. C – Cake or Pie? : ஃப்ரீயா கிடைச்சா ரெண்டும்

4. D – Drink of choice : சர்க்கரை, ஐஸ் இல்லாத சாத்துக்குடி ஜூஸ்..
கவுண்டர் : நான் சாப்பிடர டிரிங்க்ஸ்ஸே வேரம்மா!!!

5. E – Essential item you use every day? ஆக்ஸிஜன், தண்ணீர் முக்கியமா சாப்பாடு
கவுண்டர் : அப்போ நாங்க எல்லாம் செவ்வாய் கிரகத்திலேயா இருக்கோம்? பாருங்கையா மொக்கைய..

6. F – Favorite color ? என் மனசு மாதிறி வெள்ளை.
கவுண்டர் : டாய் டாய்... உன் மனசு என்ன கலருன்னு எனக்கு தெரியும் ராசா..

7. G – Gummy Bears Or Worms : --------------------------------------->என்னங்க இது?
கவுண்டர் : @!#@!#$@$#@$

8. H – Hometown? -கோவை..

9. I – Indulgence? - ஜனனி ஜனனி...

10. J – January or February? - ஜூலை

11. K – Kids & their name? ஏங்க அது எல்லாம்?

12. L – Life is incomplete without? இதயம், நுரையீரல், மூளை


13. M – Marriage date? ‍ செப்டம்பர் 1 ,2003

14. N – Number of siblings? = எண்ணிலடங்கா ...

15. O – Oranges or Apples?இரண்டும் தான்..

16. P – Phobias/Fears? நாய்...

17. Q – Quote for today? வாழ்க வளமுடன் ,

18. R – Reason to smile? சிரிக்க எதுக்குங்க காரணம்?

19. S – Season? எல்லாம் நல்ல காலம் தான்..

20. T – Tag 4 People?- யாரும் இல்ல....

21. U – Unknown fact about me? அதான் தெரியாதது சொல்லியாச்சு .. அப்புரம் எப்படி தெரியும்?

22. V – Vegetable you don't like? கத்திரிக்காய்

23. W – Worst habit? இருக்கு ... அது மட்டும் ரகசியம்....

24. X – X-rays you've had? இது எதுக்குங்க?

25. Y – Your favorite food? ஹி ஹி ஹி..... எல்லாமே..

26. Z – Zodiac sign? மகர ராசி ,அவிட்டம் நட்சத்திரம் ,ஏங்கக வேறு ஒரு வரன் பாக்குறீங்களா? அப்படி பாத்தா காது கேட்காத, வாய் பேசாத வரனா பாருங்க புண்ணியமா போகும்..
********************************************************************

அன்புக்குரியவர்கள்: அம்மாவும் அப்பாவும்

ஆசைக்குரியவர்:என்ன அடி வாங்க வைக்கிற முயற்சியா ?

இலவசமாய் கிடைப்பது: இலவசமாக குடுப்பதெல்லாமே!

ஈதலில் சிறந்தது: சமயத்தில் ஈவதே!

உலகத்தில் பயப்படுவது: பயப்பட வேண்டிய எல்லாத்துக்கும்

ஊமை கண்ட கனவு: அவ‌ன் பேசுவ‌து மாதிரி

எப்போதும் உடனிருப்பது: என் உயிர் தாங்க ..

ஏன் இந்த பதிவு: இயற்கையிடமிருந்து வந்த மிரட்டலால்!!

ஐஸ்வர்யத்தில் சிறந்தது:வாழத்தேவையான எல்லாமே!!!

ஒரு ரகசியம்: … .............................................

ஓசையில் பிடித்தது: மனதை சந்தோசப்படுத்தக்கூடிய எல்லா ஓசையுமே..

ஔவை மொழி ஒன்று: மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் ,

(அ)ஃறிணையில் பிடித்தது: என் லேப்டாப்..

29 பதிலடிகள்...:

Anonymous said...

//எல்லாருக்கும் வணக்கமுங்க//




வணக்கம்..வணக்கம்..வணக்கம்..




//கொஞ்ச நாளா பதிவுலகத்த விட்டு கொஞ்சம் ஒதுங்கி(நிம்மதியா !!!!) இருந்தேன்//




விடமாட்டோம்ல..

//3. C – Cake or Pie? : ஃப்ரீயா கிடைச்சா ரெண்டும்//




:)))




// கவுண்டர் : அப்போ நாங்க எல்லாம் செவ்வாய் கிரகத்திலேயா இருக்கோம்? பாருங்கையா மொக்கைய..//




நல்லா கேளுங்க கவுண்டர்..



//G – Gummy Bears Or Worms : --------------------------------------->என்னங்க இது?//



வெளிநாடுகளில் கிடைக்கும் சாக்லேட்..



////Your favorite food? ஹி ஹி ஹி..... எல்லாமே..//



kavundare enga poiteenga...



nice answers raaj...



cheers,

ammu.

Jaleela Kamal said...

ரொம்ப நாளா ஆளையே காணுமே, தமிலிழில் செய்தியா போடலாம என்று யோசித்தேன். நோன்பு நேரம் ஆதலால் சரியாக மற்றவர்கள் பதிவிற்கு வர முடியல.
சொல்லமா கொள்ளாமா ஊருக்கு போய் விட்டீர்கள் என்று நினைத்தேன்

Jaleela Kamal said...

ஹி ஹி கடைசியா பார்த்தா (அ முதல் ஃப) க்கும் டைடல் பார்க்கில் உட்கார்ந்து யோசிச்சி யோசித்து இபப் தான் பதிவுடன் வந்து சேர்ந்தீர்கள் போல.
நாளைக்கு இங்கு ஈத்
வேலை அதிகமா இருக்கு
பதிவை இன்னும் படிக்கல படித்து விட்டு மெதுவா பதில் போடுகிறென்

Jaleela Kamal said...

சபாஷ் சரியான பதில்கள்.
கவுண்டர் பதிலும் ம்ம்ம்

கிரி said...

//நம்ம இயற்கை முதலில் அழைப்பு விடுத்து பின் அது வேண்டுகோளாக மாறி அதன் பின் எச்சரிக்கையாக உருவெடுத்து கடைசியாக மிரட்டலாக வந்ததால் இந்த பதிவு.//

நெசமாவா! ;-)

*இயற்கை ராஜி* said...

கவுண்டர் பாதில எங்க போனாரு

*இயற்கை ராஜி* said...

//C – Cake or Pie? : ஃப்ரீயா கிடைச்சா ரெண்டும்// ஃப்ரீயா கெடச்சா பினாயில் கூடப் பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்

*இயற்கை ராஜி* said...

//R – Reason to smile? சிரிக்க எதுக்குங்க காரணம்?// காரணமில்லாம சிரிச்சா அதுக்கு பேரு வேற என்னவோ

Menaga Sathia said...

////C – Cake or Pie? : ஃப்ரீயா கிடைச்சா ரெண்டும்// ஃப்ரீயா கெடச்சா பினாயில் கூடப் பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்// ஹி ஹி

Menaga Sathia said...

///R – Reason to smile? சிரிக்க எதுக்குங்க காரணம்?// காரணமில்லாம சிரிச்சா அதுக்கு பேரு வேற என்னவோ// அதுக்கு பேர் பைத்தியம்ம்ம்ம்ம்ம்

குறை ஒன்றும் இல்லை !!! said...

// Ammu Madhu said...
விடமாட்டோம்ல..
கஷ்டம் போல இருக்கே!! நன்றி அம்மு!!!//

================================================
// Jaleela said...

ரொம்ப நாளா ஆளையே காணுமே, தமிலிழில் செய்தியா போடலாம என்று யோசித்தேன். நோன்பு நேரம் ஆதலால் சரியாக மற்றவர்கள் பதிவிற்கு வர முடியல.
சொல்லமா கொள்ளாமா ஊருக்கு போய் விட்டீர்கள் என்று நினைத்தேன்

ஹா ஹா ஹா.. நன்றி ஜலீலா... இல்லேங்க சும்மா கொஞ்சம் வேலையா இருந்தேன்!!

// ஹி ஹி கடைசியா பார்த்தா (அ முதல் ஃப) க்கும் டைடல் பார்க்கில் உட்கார்ந்து யோசிச்சி யோசித்து இபப் தான் பதிவுடன் வந்து சேர்ந்தீர்கள் போல.
நாளைக்கு இங்கு ஈத்
வேலை அதிகமா இருக்கு
பதிவை இன்னும் படிக்கல படித்து விட்டு மெதுவா பதில் போடுகிறென்//

பரவாலேங்க... வாழ்த்துக்கள் .. நல்லா கொண்டாடுங்க..

//
சபாஷ் சரியான பதில்கள்.
கவுண்டர் பதிலும் ம்ம்ம்//

நன்றிங்க..
================================================

கிரி said...

//நம்ம இயற்கை முதலில் அழைப்பு விடுத்து பின் அது வேண்டுகோளாக மாறி அதன் பின் எச்சரிக்கையாக உருவெடுத்து கடைசியாக மிரட்டலாக வந்ததால் இந்த பதிவு.//

நெசமாவா! ;-)

கிட்டத்தட்ட!!!!

===============================================

இய‌ற்கை said...

// கவுண்டர் பாதில எங்க போனாரு//

கொஞ்சம் வேலையா போயிட்டாருங்க..

//C – Cake or Pie? : ஃப்ரீயா கிடைச்சா ரெண்டும்// ஃப்ரீயா கெடச்சா பினாயில் கூடப் பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்//
ஆமாங்க அப்படி கிடைச்ச பினாயில எல்லாம் உங்களுக்கு தான் பாதி விலைக்கு வித்து இருக்கேன்..

//R – Reason to smile? சிரிக்க எதுக்குங்க காரணம்?// காரணமில்லாம சிரிச்சா அதுக்கு பேரு வேற என்னவோ//

ஆமாங்க நீங்க சிரிக்கிற மாதிறி :)
===================================================

குறை ஒன்றும் இல்லை !!! said...

Mrs.Menagasathia said...

////C – Cake or Pie? : ஃப்ரீயா கிடைச்சா ரெண்டும்// ஃப்ரீயா கெடச்சா பினாயில் கூடப் பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்// ஹி ஹி//

நீங்களுமா??

Menaga Sathia said...

கவுண்டரை பாதிலயே கழட்டி விட்டுட்டீங்க.ம்ம் பதில்கள் நல்லாயிருக்கு.


//K – Kids & their name? ஏங்க அது எல்லாம்?// ஏன் சொன்னா என்னவாம்?

//D – Drink of choice : சர்க்கரை, ஐஸ் இல்லாத சாத்துக்குடி ஜூஸ்..// ஏன் டயட்ல இருக்கிங்களா?

Menaga Sathia said...

//X – X-rays you've had? இது எதுக்குங்க?// ஏன் இதுவும் சொல்லமாட்டீங்களா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

Mrs.Menagasathia said...

///R – Reason to smile? சிரிக்க எதுக்குங்க காரணம்?// காரணமில்லாம சிரிச்சா அதுக்கு பேரு வேற என்னவோ// அதுக்கு பேர் பைத்தியம்ம்ம்ம்ம்ம்//

பாருங்க சார்... ஒரு பொண்ணோட மனசு எப்படி இன்னொரு பொண்ணுக்கு தெரியுது பாருங்க!!!

Menaga Sathia said...

//Z – Zodiac sign? மகர ராசி ,அவிட்டம் நட்சத்திரம் ,ஏங்கக வேறு ஒரு வரன் பாக்குறீங்களா? அப்படி பாத்தா காது கேட்காத, வாய் பேசாத வரனா பாருங்க புண்ணியமா போகும்..//

நீங்களும் நம்ம ராசியா.ரஜினியும் நம்ம ராசி+நட்சத்திரம் தான்.

உங்களுக்கு ஒரு வரன் பார்த்து வச்சிருக்கேன் ராஜ்.விபரம் சொல்லவா.

ரொம்ப ஆசை உங்களுக்கு.அம்மணிக்கிட்ட சொல்றேன்.

//அப்படி பாத்தா காது கேட்காத, வாய் பேசாத வரனா பாருங்க புண்ணியமா போகும்..// அப்பதான் உங்களுக்கு அந்த பொண்ணு எந்த செலவும் வைக்காதுன்னு சொல்றீங்களா..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//கவுண்டரை பாதிலயே கழட்டி விட்டுட்டீங்க.ம்ம் பதில்கள் நல்லாயிருக்கு.//

நன்றிங்க..ஆமாங்க இல்லேண்ணா ரொம்ப டேமேஜ் ஆயிடுமில்ல!!


//K – Kids & their name? ஏங்க அது எல்லாம்?// ஏன் சொன்னா என்னவாம்?//

சும்மா தாங்க

//D – Drink of choice : சர்க்கரை, ஐஸ் இல்லாத சாத்துக்குடி ஜூஸ்..// ஏன் டயட்ல இருக்கிங்களா?//

இல்லேங்க.. நான் வழக்கமா அப்படி தான் சாப்பிடுவேன்!!

Menaga Sathia said...

//ஆசைக்குரியவர்:என்ன அடி வாங்க வைக்கிற முயற்சியா ?// அதே தான்

குறை ஒன்றும் இல்லை !!! said...

// நீங்களும் நம்ம ராசியா.ரஜினியும் நம்ம ராசி+நட்சத்திரம் தான்.

உங்களுக்கு ஒரு வரன் பார்த்து வச்சிருக்கேன் ராஜ்.விபரம் சொல்லவா.

ரொம்ப ஆசை உங்களுக்கு.அம்மணிக்கிட்ட சொல்றேன்.//

அப்படியா? நீங்களும் நம்ம ராசியா? ஹி ஹி ஹி.. அம்மிணி அளவுக்கு எல்லாம் ஏங்க போறீங்க?

//அப்படி பாத்தா காது கேட்காத, வாய் பேசாத வரனா பாருங்க புண்ணியமா போகும்..// அப்பதான் உங்களுக்கு அந்த பொண்ணு எந்த செலவும் வைக்காதுன்னு சொல்றீங்களா..//

அது மட்டும் வாழ்க்கையில் நிறைய பிரச்சினை இருக்காது அதான்!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//Mrs.Menagasathia said...

//ஆசைக்குரியவர்:என்ன அடி வாங்க வைக்கிற முயற்சியா ?// அதே தான்//

ஹி ஹி ஹி...

Malini's Signature said...

என்னங்க இது?, எதுக்குங்க இதுன்னு பதில் கேள்வி எல்லாம் கேக்க கூடாது....பதில் மட்டும் சொல்லுங்க

Unknown said...

நான் கூட உங்க பிளாக் உங்களுக்கே மறந்துபோச்சுனு நினைச்சேன்..அம்மாடி பதில் இவ்வளவு நாள் யோசிச்சீங்களோ?

// M – Marriage date? ‍ செப்டம்பர் 1 ,2003//

கொஞ்சம் தாமதமான திருமணநாள் வாழ்த்துக்கள்...

P – Phobias/Fears? நாய்...

எனக்கும் தான்..

உங்க பதில் நல்லா கலகலப்பா இருக்கு!!

ப்ரியமுடன் வசந்த் said...

//2. B – Best friend? : நிறைய இருக்காங்க...
கவுண்டர் : அதில பசங்க எத்தனைன்னு மட்டும் கேளுங்க சார்.. கேப்மாரி சார் இவன்...//

காமெடி தாங்க முடியலிங்ணா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஹர்ஷினி அம்மா said...

என்னங்க இது?, எதுக்குங்க இதுன்னு பதில் கேள்வி எல்லாம் கேக்க கூடாது....பதில் மட்டும் சொல்லுங்க/

ஹி ஹி ஹி....பதில் தெரியாததால தான் இப்படி!!!
================================================
//Thamarai selvi said...

நான் கூட உங்க பிளாக் உங்களுக்கே மறந்துபோச்சுனு நினைச்சேன்..அம்மாடி பதில் இவ்வளவு நாள் யோசிச்சீங்களோ?//

இல்லேங்க .. சும்மா தான்... வரவேணாம்னு தான்..

// M – Marriage date? ‍ செப்டம்பர் 1 ,2003//

கொஞ்சம் தாமதமான திருமணநாள் வாழ்த்துக்கள்...//

நன்றியா இல்லே அனுதாபங்களா??

//P – Phobias/Fears? நாய்...

எனக்கும் தான்..//

ஹையா ..

//உங்க பதில் நல்லா கலகலப்பா இருக்கு!!//

நன்றிங்க..
================================================

//பிரியமுடன்...வசந்த் said...

//2. B – Best friend? : நிறைய இருக்காங்க...
கவுண்டர் : அதில பசங்க எத்தனைன்னு மட்டும் கேளுங்க சார்.. கேப்மாரி சார் இவன்...//

காமெடி தாங்க முடியலிங்ணா...//
ஹி ஹி ஹி...நன்றிங்க!!!

Beski said...

//2. B – Best friend? : நிறைய இருக்காங்க...
கவுண்டர் : அதில பசங்க எத்தனைன்னு மட்டும் கேளுங்க சார்.. கேப்மாரி சார் இவன்...//
வடிவேலு: அட ஆஆ...மா... பாரு எல்லாம் பொம்பளப் புள்ளயலா கூப்டுருக்கு.

//10. J – January or February? - ஜூலை//
வடிவேலு: நா உன்ட்ட என்ன கேட்டேன்?

//12. L – Life is incomplete without? இதயம், நுரையீரல், மூளை//
வடிவேலு: பார்ரா...

//18. R – Reason to smile? சிரிக்க எதுக்குங்க காரணம்?//
வடிவேலு: அப்போ காரணத்தோட சிரிக்கிற நாங்கள்லாம் பைத்தியக்காரங்க, காரணமே இல்லாம சிரிக்கிற நீ அறிவாளி... ரைட்டு.

//20. T – Tag 4 People?- யாரும் இல்ல....//
வடிவேலு: போன தடவ நீ கூப்டு ஏனாஓனா எழுதலங்கிறதுக்காக இப்படி சொல்லி எஸ்கேப் ஆகிக்கிறியா?

//21. U – Unknown fact about me? அதான் தெரியாதது சொல்லியாச்சு .. அப்புரம் எப்படி தெரியும்?//
வடிவேலு: ஸ்ஸ்ஸ்ப்பா...

//24. X – X-rays you've had? இது எதுக்குங்க?//
வடிவேலு: இதுவரை எக்ஸ்ரே எடுக்கவே இல்லன்னா, கேள்விகேட்டவங்க கூட்டிட்டுப் போயி எடுத்து குடுப்பாங்க. அதுக்குத்தான்.

//25. Y – Your favorite food? ஹி ஹி ஹி..... எல்லாமே..//
வடிவேலு: அதான பாத்தேன்... கிகி வீட்டுக்கு வரும்போது, கிரியும் ஏனாஓனாவும் நாட்டுக்குத் தேவையானதப் பத்தி பேசிட்டு இருக்கும்போது, ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் சாப்பாட்டப் பத்தியே பேசினவந்தான நீயி...

//26. Z – Zodiac sign? மகர ராசி ,அவிட்டம் நட்சத்திரம் ,ஏங்கக வேறு ஒரு வரன் பாக்குறீங்களா? அப்படி பாத்தா காது கேட்காத, வாய் பேசாத வரனா பாருங்க புண்ணியமா போகும்..//
வடிவேலு:உன் வீட்டம்மா சொன்னத இங்க வந்து ரிப்பீட்டுறியா?
சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு. அறிவுப்பூர்வமா கேள்வி கேட்டா இங்கயும் காமிடி பண்ணிட்டு இருக்க... அப்போ நாங்கள்லாம் எங்க போறது. ஒழுங்கா நல்ல புள்ளயா நக்கல் பண்ணாம எழுதப் பாரு. வரேன்.

:)

Admin said...

வாங்க வாங்க நலமா? அப்படி எல்லாம் கேட்கமாட்டோம். என்னடா திடீர் தலை மறைவு என்று பார்த்தேன். இத யோசிக்க இவ்வளவு நாளா?

பாசகி said...

ஜி, உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன், தொடருங்க...

http://mudhalezhuthu.blogspot.com/2009/09/blog-post.html

ராமலக்ஷ்மி said...

எல்லாப் பதில்களும் நன்றாக உள்ளன, ரகசியத்தை ரகசியமாகவே விட்டதும்:))!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி பெஸ்கி.நேரம் இல்லாத காரத்தால் விரிவான பதில் போட முடிவில்லை.. மன்னிககவும்... நன்றி..

=================================================

நன்றி சந்ரு......
===============================================

நன்றிங்க பாசகி... என் அடுத்த பதிவு உங்க பதிவு தான்.. ஆனா எப்போன்னு கேட்காதீங்க..:))))))))

===============================================

நன்றி ராமலஷ்மி அக்கா.. தங்கள் வருகைக்கு..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!