1. ஈழத்தமிழர் பிரச்சினையில் யார் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்? காலங்காலமாக நடப்பதாக சொல்கிறீர்கள்.. எப்படியும் இறந்த காலத்தை வாங்க முடியாது.. எதிகாலத்தை நிர்ணயிக்க முடியாது.. ஏனெனில் அமெரிக்கா முதல் ஐ.நா வரை இலங்கையிடம் இதைப்பற்றி வற்புறுத்துகிறார்கள்..
2. இந்தியாவிலிருந்து ஈழத்தமிழர்கள் மேல் பரிதாபப்படும் தமிழர்களுக்கு, நீங்கள் இது வரை எவ்வளவு சக இந்திய தமிழர்களுக்கு உதவி செய்துள்ளீர்கள்?
3. ஒரு வேளை இப்படி பதிவுகளில் எழுதுவதும், சிலரை போற்றுவதும் பலரை தூற்றுவதும் மட்டுமே உங்களால் தமிழர்களுக்கு செய்ய முடிந்த உதவிகளா?
4. கடந்தசில மாதங்களாக முத்துக்குமார் என்வரின் புகைப்படத்தை தத்தம் பதிவுகளில் வைத்து அஞ்சலி செலுத்தினீர்களே இப்போதும் எவ்வளவு பேர் அப்படியே வைத்துள்ளீர்?
ஒரு சமயம் காங்கிரஸ் கட்சியின் முன்னால் அமைச்சர் இளங்கோவன் யார் இந்த முத்துக்குமார் எனக்கேட்டதற்கு பல பதிவர்களும் அவரைத்திட்டி எழுதினீர்களே? இன்னும் கொஞ்சம் காலம் போனால் உங்களில் எவ்வளவு பேருக்கு சட்டென முத்துக்குமார் பெயர் நியாபகம் வரும்?
5. வெளி நாடுகளில் வசிக்கும் சக தமிழர்கள் எவ்வளவு பேர் தமிழர்களுக்கு உதவி செய்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கை, மலேசியா மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் புதியதாக அந்தந்த நாடுகளுக்கு வரும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளை அமைத்து தர ஏதாவது அமைப்பை ஏற்படுத்து உள்ளீர்களா? குறைந்தது தொடர்பு கொள்ளவாவது ஏதாவது வழி உண்டா?
6. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழைப் பூர்விகமாக கொண்ட மக்களால் சக தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடிகிறது?
7. இந்தியாவில் அண்டை மா நிலத்தில் வசிக்கும் தமிழர்கள் எத்தனை பேர் சக தமிழர்களுக்கு உதவும் நிலையில் இருக்கின்றீர்கள்?
8. தமிழகத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைந்து விட்டனர் என நினைக்கிறீர்களா? அது அரசாங்கத்தின் வேலை எனில், ஈழ விசயத்தில் மட்டும் எப்படி நீங்கள் எதையாவது செய்ய முடியும் என நம்புகிறீர்கள்? இந்தியாவில வசிக்கும் , சக இந்தியனுக்கு உங்களால் எதையும் பெற்று தர முடிய வில்லை என்றால் எப்படி அடுத்த நாட்டில் வசிக்கும் தமிழனின் துயர் நீக்க போகிறீர்கள்? உங்களால் ஒரு பைசா அளவுக்கேனும் சக தமிழனுக்கு உபயோகம் உண்டா?
9. ஈழத்தமிழர் மேல் அக்கரை கொள்ளும் எவ்வளவு பேர் உடல் தானம் அல்லது கண் தானம் செய்துள்ளீர்கள்?
10. போர் இல்லாத காலங்களில் அல்லது ஒரளவேனும் நல்ல நிலையில் இருக்கும் காலங்களில் ஈழத்தமிழர்களால் மற்ற தமிழர்களுக்கு என்ன உதவி கிடைத்தது.. இப்போதும் பல நாடுகளில் நல்ல நிலையில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் இந்திய தமிழர்களுக்கு உதவி ஏதேனும் கிடைக்கிறதா?
மேற்கூறிய கேள்விகளுக்கு பெரும்பான்மை கேள்விகளுக்கு இல்லை என பதில் வந்தால் , உங்களுக்கு எந்த தமிழர் பற்றியும் எழுத அருகதை இல்லை... ஆம் என பதில் வந்தால் கண்டீப்பாக ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரு முடிவு வந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்...
ஒரு மிக முக்கிய பின் குறிப்பு :
நானும் அருகதை அற்றவனே... அதனால் தான் இன்னும் ஈழம் பற்றி எந்த இடுகையும் எழுதவில்லை !!! எதோ என்னால் முடிந்த அளவு சக தமிழனுக்கு உதவிவிட்டு பிறகு மற்றர் பற்றி கவலை கொள்கிறேன்......
27 பதிலடிகள்...:
பிரபலத்துக்காக பிதற்றும் நம் மக்களை என்ன சொலவது.
பதிவுலகம் எனப்படுவது ஒரு சுதந்திரமான ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. எனவே யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம். மேலே நீங்கள் எழுதியிருப்பது உங்களது எண்ணம். இங்கு பதில் அளிப்பது என் எண்ணம். இதனால் உங்களாலோ அல்லது என்னாலோ என்ன செய்துவிட முடியும். உங்களால் எவ்வளவு, என்ன எழுத முடியுமோ எழுதிக் கொண்டே இருங்கள். என்னைப் போன்றவர்களும் ஏதாவது பதில் எழுதிக் கொண்டே இருக்கிறோம். இதனால் உலகம் மாறிவிடும் என்ற எண்ணத்தை மட்டும் நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி!
வாங்க திருமதி.ஜெயசீலன்.. அது தான் உண்மைங்க!!!\
==================================================
வாங்க வான்முகிலன்.. என் கேள்வி என்னன்னா இப்படி வெறுமனே எழுதீட்டு மட்டும் இருக்க போறமாங்கறது தான்?
வழியில் அடிபடு சாககிடந்தாலும் திரும்பி பார்க்கமாட்டார்கள் நம் சக தமிழர்கள், இவர்களெல்லாம் கடல் கடந்து வாழும் தமிழனுக்காக என்ன செய்வார்கள்.
அதிரடியான கேள்விகள். என்னிடம் பதில் இல்லை. ஒரு சிலரின் தவறான முடிவால் ஒரு இனமே பாதிக்கப்படுவது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சில நேரங்களில் உண்மையை உரக்க சொல்லமுடியாமல் போய் விடுகிறது.
உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.
வாங்க கிகி.. என்ன பண்ண? அது தான் நாம!!!
வாங்க அக்பர்... கேள்விகள் மட்டும் என்னால் கேட்க முடியும்....
நல்ல சாட்டையடி கேள்விகள்
தன்னுடைய சுய லாபத்துக்காக எதை வேணுன்னாலும் சொல்வாங்க : ஆனா செய்ய மாட்டாங்க ....
வாங்க ஸ்டார்ஜன்.. என்ன பண்ண உண்மை கசக்கும் இல்லியா?
25 வருசமா இங்க இலங்கை அகதிகள் இருக்காங்களே , எந்த தமிழ் வெறியன் போய் அவங்களுக்கு என்ன உதவி செய்தான் ?
வாங்க மதி.. இந்த கேள்வி கூட நல்ல கேள்வி தான்... என் கிட்டே பதில் இல்லே :(
எனக்கும் அவங்களுக்காக பிரார்த்தனைதான் பண்ண முடியுதே தவிர அதனால எதுவும் நடக்க போறதில்லைன்னாலும் நம் எண்ணங்களை செயல்படுத்த முடியல. என்ன காரணம்? "குறை ஒன்றும் இல்லை" நமக்கு. அதனாலதான் அவங்க கஷ்டம் தெரியறதில்ல. அவங்களோட வேதனை நமக்கு தெரிஞ்சாலும் நாம அனுபவிச்சு உணரலை. நமக்குன்னு ஒரு பிரச்சனை வந்தா எப்பாடுபட்டாவது தீர்த்திடுவோமில்ல. என்ன எல்லாமே சுயநலம்தான் காரணம்.
நியாயமான வேள்விகள்...நல்ல வேளை நான் எதுவும் இப்படி ஒரு பதிவு எல்லாம் போடவில்லை..
நீங்கள் சொல்லுவது சரி தான் ராஜ்...முதலில் தமிழருக்கு என்பதை விட கூட பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என்பவர்களுக்கே கூட இப்பொழுது இருக்கும் உலகத்தில் யாரும் சட்டென்று உதவி செய்ய வருவதில்லை.
இப்பொழுது இருப்பது Material உலகம். இதில் அன்பு, பாசம் என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விட்டது.
எல்லோருக்கும் பணத்தாசை தான் அதிகம் இருக்கின்றது...என்னததை சொல்ல...
அது....... வந்து..........நா.....ஒரு
அவசரவேளை இருக்கு வீட்ல சொத்து பிரிகிறார்கள் முடிந்தால் பிரகு வர்ரேன்
வாங்க ராஜி.. உங்க கருத்துக்கும் வரவுக்கும் நன்றி..
வாங்க கீதா.. சரியா சொன்னீங்க..
வாங்க ராஜவம்சம்... ஹா ஹா ஹா... ஹி ஹி ஹி
எல்லா கேள்விகளுக்கும் தலை குனிவதை தவிர வேறு வழி தெரியல அண்ணே :(
வாங்க ஆதவன் நீங்க மட்டும் இல்லே .. வாய் சொல் வீரர்கள் எல்லோருமே தான் !!!
ராஜ் உங்கள் கேள்விகள் சரி தான் ஆனால் நீங்கள் கூறுவது போல யாரும் எதுவும் செய்ய முடியாது என்று எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்றால் மற்றவர்களுக்கு அதே சாதமாகி விடும், நம் தமிழ்நாட்டு மக்களால் எந்த உதவியும் பெரிதாக செய்யப்படவில்லை என்றாலும் குறைந்த பட்சம் காட்டிய எதிர்ப்புக்கு அவர்கள் யோசித்தது உண்மை, எதோ அந்த அளவிற்காகவது பயன்பட்டதே என்று திருப்தி படவேண்டியது தான்.
எதிர்ப்பு காட்டுகிறவர்கள் எல்லோருமே அப்படி உதவி செய்தால் தான் சரி என்றால் யாரும் எந்த உதவியும் ஆதரவும் கொடுக்க முடியாது..
//கடந்தசில மாதங்களாக முத்துக்குமார் என்வரின் புகைப்படத்தை தத்தம் பதிவுகளில் வைத்து அஞ்சலி செலுத்தினீர்களே இப்போதும் எவ்வளவு பேர் அப்படியே வைத்துள்ளீர்?//
என்னங்க இது! அன்று அவ்வளோ பேசினீர்களே இன்றும் எவ்வளோ பேர் நினைவு வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டால் ஒரு நியாயம் உண்டு, படம் அப்போது வைத்துக்கொள்ளலாம் அதற்காக காலம் முழுவதும் வைக்க முடியுமா! (நான் அப்போதும் வைக்கவில்லை இப்போதும் வைக்கவில்லை)
// ஈழத்தமிழர் மேல் அக்கரை கொள்ளும் எவ்வளவு பேர் உடல் தானம் அல்லது கண் தானம் செய்துள்ளீர்கள்?//
இதற்கும் ஈழத்தமிழர் மேல் கொள்ளும் அக்கறைக்கும் என்ன சம்பந்தம்?
நான் சுருக்கமாக கூற நினைப்பது.... எதுவும் நடக்காது என்று யாரும் எதுவும் எதிர்ப்பு காட்டவில்லை என்றால் அதனால் தவறு செய்பவர்களுக்கு தான் சாதகம், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போல இந்த சிறு எதிர்ப்பு கூட (நீங்கள் நினைக்கும் ஒன்றுக்கும் பயனில்லாத எதிர்ப்பு கூட)ஏதாவது ஒரு வழியில் அவர்கள் போராட்டத்திற்கு சிறு அளவிலாவது உதவி இருக்கும்.
கிரி அண்ணே !!! நான் கேட்கறது இன்னும் எத்த்தன நாளுக்கு தான் இப்படி ஒரு பிரயோசனும் இல்லாம எழுதிட்டு , கவனிக்க எழுதிட்டு மட்டும் இருக்க போறோம்னு தான் .. பிளாக்கும், நேரமும் சும்மா கிடைச்சா எந்த உதவியும் பண்ணாம வெறுமனே எழுதி என்ன பண்ண போறோம் ? ஒரு தடவ எழுதலாம் , ரெண்டு தடவ எழுதலாம் சும்மா அத பத்தியே எந்த பிரியோஜமும் இல்லாம முடிஞ்ச எந்த உதவியும் பண்ணாம எழுதி என்ன பயன் ?
உண்மையாவே உதவி பண்ண நினைச்சா அதுக்கான வழிய பாக்கணும், வெறுமனே எழுதி காரணத்த தேடக்கூடாது இல்லையா ?
ரெண்டாவது நாம செத்தப்பறம் கூட நம்மால அடுத்தவனுக்கு உபயோகப்பட முடியலே அப்புறம் எப்படி செத்துட்டு இருக்கறவனுக்கு ? அதுக்கு தான் அந்த தான மேட்டர் !!!
சிறு துரும்பும் பல் குத்த உதவும் ஆனா வெறும் துரும்பு மட்டும் வச்சு என்ன பண்ண?
நீங்கள் சொன்னது ஏற்கனவே சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துதான். நம் மக்கள் உணர்ச்சிவசத்தில் பேசுவார்களே தவிர, அது செயலில் இருக்காது என ஜெ.மோ. சமீபத்தில் சொல்லியிருக்கிறார்.
http://jeyamohan.in/?p=5247
நீங்க இங்க சொன்னதுக்குகூட ஒரு ப்ரயோஜனமும் கிடையாது.
வாங்க பெஸ்கி .. சரிதான் .. தீப்பெட்டி கூட அப்படி சொல்லித்தான் அந்த லிங்க் குடுத்தார் ..
//பிளாக்கும், நேரமும் சும்மா கிடைச்சா எந்த உதவியும் பண்ணாம வெறுமனே எழுதி என்ன பண்ண போறோம் ? ஒரு தடவ எழுதலாம் , ரெண்டு தடவ எழுதலாம் சும்மா அத பத்தியே எந்த பிரியோஜமும் இல்லாம முடிஞ்ச எந்த உதவியும் பண்ணாம எழுதி என்ன பயன் ?//
இதை ஏற்றுக்கொள்கிறேன், இதே வேலையா எழுதிட்டு இருப்பதில் பயனில்லை, ஆனால் எதிர்ப்பையே தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
//உண்மையாவே உதவி பண்ண நினைச்சா அதுக்கான வழிய பாக்கணும், வெறுமனே எழுதி காரணத்த தேடக்கூடாது இல்லையா ?//
எழுதிய அனைத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என்றால் இதை போல் எழுதவே முடியாது. அவரவர் நிலைக்கே ஏற்ப உதவி கொண்டு தான் இருக்கிறார்கள். பதிவுலகத்தில் எத்தனையோ பேருக்கு எத்தனையோ உதவிகள் செய்துள்ளார்கள். இவை அவர்களால் முடிந்ததால் அவர்கள் நிலை எது வரையோ அதாவது உதவக்கூடிய நிலை எது வரையோ அது வரை செய்கிறார்கள், ஒரு சில விசயங்களை இப்படி பேசலாமே தவிர பெரியளவில் உதவ முடியாது.
//நாம செத்தப்பறம் கூட நம்மால அடுத்தவனுக்கு உபயோகப்பட முடியலே அப்புறம் எப்படி செத்துட்டு இருக்கறவனுக்கு ? //
அப்படி நான் நினைக்கல ..நான் என்னால முடிந்த அளவுல சிலருக்கு உதவிட்டு தான் இருக்கேன்..இதே போல பலர் இருக்கலாம்..எல்லோருமே சுயநலவாதிகள் இல்லை.
இந்த இடுகை ஒரு நல்ல விவாதத்தை கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் பலர் டெம்ப்ளேட் பின்னூட்டமாக சுருக்கமாக முடித்து இருப்பது, பலர் இது பற்றி விவாதிக்காமல் இருப்பது அயர்ச்சியை தருகிறது.
தற்போது பின்னூட்டங்கள் வெறும் பாராட்டிற்கு மட்டுமே அதிகளவில் பயன்படுவது ஏமாற்றமளிக்கிறது.
//மேற்கூறிய கேள்விகளுக்கு பெரும்பான்மை கேள்விகளுக்கு இல்லை என பதில் வந்தால் , உங்களுக்கு எந்த தமிழர் பற்றியும் எழுத அருகதை இல்லை... ஆம் என பதில் வந்தால் கண்டீப்பாக ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரு முடிவு வந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்...//
அண்ணே !!! கேள்விக்கு அப்புறம் பாருங்க !!! இப்படி எதுவும் செய்யாம இருக்கறவங்கள தான் வெறுமனே எழுத வேணாம்னு சொல்லி இருக்கேன் !! இதுல எதாச்சுக்கும் ஆமான்னு சொன்னா அவங்களுக்கு மத்தவங்கள உதவி செய்ய சொல்லி எழுத உரிமை இருக்கு !! ஆனா உண்மை என்னானா உண்மையா உதவி செய்றவங்க எழுத மாட்டாங்க( நீங்க கூட எழுதலே இல்ல ) !!!!
//உண்மை என்னானா உண்மையா உதவி செய்றவங்க எழுத மாட்டாங்க( நீங்க கூட எழுதலே இல்ல ) !!!!//
இல்ல நானும் எழுதி இருக்கிறேன் ..ஆனா வேற மாதிரி
அடப்போங்கய்யா! நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும்
ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியலும், பொது மக்களும் - விமர்சனம்
தமிழக தமிழர்கள் தமிழுணர்வு இல்லாதவர்களா!
ராஜ்..என்ன செய்தீர்கள் என்று கேட்பதை விட என்ன செய்யணும்னு ஒரு பதிவு போடுங்கள்..அனைவருக்கும் பயன்படும்..ரொம்ப நல்ல பதிவு..
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!