}

Saturday, November 28, 2009

கவுண்டரும் ஈழ தமிழ் எழுத்து ஆர்வலர் சார்பாக செந்திலும்……

செந்தில் : அண்ணே .. அண்ணே

கவுண்டர் : என்னடா கவுட்டி வாயா? ஏன் இப்படி லாரில அடிபட்ட நாய்
மாதிறி கத்தற?

செந்தில் : ஒண்ணும் இல்லேண்ணே.. உங்கள பாத்து ஈழத்தமிழர் பத்தி
பேசணும்னே..

கவுண்டர் : என்னடா நீதான் உண்மையான ஈழத்த்மிழ் ஆர்வலனா?

செந்த்தில் : அண்ணே.. உண்மையானா ஆளுங்கள் எல்லாம் எதாவது உதவ
முடியுமான்னு பாக்க போய்ட்டாங்கண்ணே..

கவுண்டர் : அப்போ நீ?

செந்தில்: ஹி ஹி ஹி…. சும்மா நேரம் போகாம இருக்க அவங்கள பத்தி
எழுதீட்டு இருக்கேண்ணே

கவுண்டர் : ஓ.. நீ தான அவன்.. வாடி வா.. உன்ன தான் நான் தேடிட்டு
இருந்தேன்..

செந்தில்: அண்ணே இலங்கையில் தமிழர் ரொம்ப கஷ்டப்படுராங்கண்ணே..

கவுண்டர் : இலங்கையில மட்டும் தான் கஷ்டப்படுராங்களா? உங்க பக்கத்து
வீட்டுக்காரன பத்தி கவலைப்படுடா அணுகுண்டு தலையா..

கவுண்டர் : சரி கஷ்டப்படுராங்க என்ன செய்யலாம்?

செந்தில்: ஏதாச்சும் செய்யணுங்க..

கவுண்டர் : அந்த ஏதாச்சும் தான் என்ன?

செந்தில்: போர நிறுத்தணுங்க

கவுண்டர் : எப்படி ? ரயிலுக்கு முன்னாட சிகப்பு கொடி காட்டர மாதிறியா?

செந்தில்: உலகத்தமிழர் எல்லாம் ஒண்ணு சேர்ந்தா நிறுத்திடலாங்க..

கவுண்டர் : எப்படி உலகத்தில தமிழர் எல்லாம் ஒண்ணு சேரணுமா? முதல்ல
உள்ளூர் தமிழர்கள ஒண்ணு சேர்க்க முடியுமாண்ணு
பாருடா ..அப்புரம் உலகத்தமிழர ஒண்ணு சேர்க்கலாம் ..

செந்தில் : இல்லேண்ணா.. போராட்டம் பண்ணலாங்க..

கவுண்டர் : என்ன போராட்டம்?

செந்தில் : போர் வேணாம்னு சொல்லி..

கவுண்டர் : யார் கிட்ட சொல்லி ? எங்கே யாராச்சும் சொல்லுங்க.. யார் கிட்ட
சொன்னா கேட்பாங்க?

செந்தில்: !!?!!??!!!

செந்தில் : தனித்தமிழ் நாடு கேட்டா?

கவுண்டர் : அடி செருப்பால நாயே… இந்தியா மூலமா எல்லாம்
அனுபவிச்சிட்டு இப்போ உனக்கு தனி நாடு கேட்குதோ? கேட்படா
கேட்பே.. உனக்கு இந்தியாவில வாழ பிடிக்கலேண்ணா பக்கம் தான்
இலங்கை அப்படியே நீந்தி போயிடு இல்லே வேர எதாச்சும்
நாட்டுக்கு போயி அங்கே கேளு தனி நாடு வாயிலேயே சுடுவான்..
எல்லாம் இந்தியாவோட தலைவிதிடா..

கவுண்டர் : சரி அத விடு.. நீ என்ன பண்றே?

செந்தில் : நாங்க வலைத்தள எழுத்தாளர்கள்.. ஈழத்தமிழர் படும் பாடு பத்தி
எழுதீட்டு இருக்கோம்.. எங்கள் கண்டனங்களை எங்கள் எழுத்து
மூலமா சொல்லீட்டு இருக்கோம் ,

கவுண்டர் : எத்தன நாளா?

செந்தில் : ரொம்ப நாளா..

கவுண்டர் : எழுதுறத தவிர வேர ஏதாச்சும்?

செந்தில் : இல்லேங்க நாங்க எழுத்து மூலமா தான் போராட்டி இருக்கோம்..

கவுண்டர் : உங்க உணர்வு ரொம்ப சரிடா மண்டையா ..அத நான்
மதிக்கிறேன்.. ஆனா ஒரு சந்தேகம்.. எங்கே , எப்போ எழுதறீங்க?

செந்தில்: எங்க அலுவலகத்தில் தாண்ணே..

கவுண்டர் : அப்படி வாடா பென்சில் மண்டையா.. அப்போ அடுத்தவன் காசுல,
ஃபீரியா பிளாக் கிடைச்சதால உங்களுக்கு ஈழத்தமிழர் மேல பாசம்
வந்து இருக்கு .. அடடா என்ன பாசம்.. ஆமா இதே ஒரு பக்கம் எழுத
10 ரூபாய்னா எழுதுவியா நீ?

செந்தில் : நீங்க ஒட்டு மொத்த தமிழர்கள கொச்சைப்படுத்தறீங்க…

கவுண்டர் : டேய் நாயே நாயே… நான் கொச்சை படுத்தலேடா.. உங்கள மாதிறி
ஆளுங்க தான் .. வெறுமனே எழுதி தமிழன கொச்சைப்படுத்தறீங்க..
தமிழ் மொழி தான்..அதுக்கு உயிர் எல்லாம் இல்லேடா .. தமிழ பேச
மட்டும் பயன் படுத்துடா சண்டை போட எல்லாம் பயன்
படுத்தாதே..

செந்தில் : அப்போ என்ன பண்ண சொல்றீங்க?

கவுண்டர் : யாருக்கு கஷ்டம் வந்தாலும் , நீ கவலைப்பட்டு தான் ஆகணும்..
ஆனா கவலைப்படரது மட்டும் தீர்வு இல்லே.. உன்னால என்ன
பண்ண முடியும்னு பாரு.. முடிஞ்சா ஏதாச்சும் பண்ணு இல்லே
விடு.. அத விட்டுட்டு அத பத்தியே எழுதீட்டு இருந்தா அவனுக்கு
வலி தான் அதிகமாகுமே தவிர குறையாது…

நீங்க எல்லாம் உண்மையான ஈழத்தமிழ் ஆர்வலர்கள்ணா பக்கத்துல இருக்கிர முகாம்கு போய் ஒவ்வொரு குடும்பத்த தத்தெடு.. முடியலயா இப்படி வெட்டியா எழுதற நேரத்தில அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய ஆள் யாராச்சும் கிடைப்பாங்களான்னு பாரு..

செந்தில்: சரிண்ணே .. போய் முயற்சி பன்றேன்..( என்ன இந்த ஆளு.. ஏதோ ஹிட்ஸுக்கு எழுதீட்டு இருந்தா சீரியஸா போய் உதவி கேட்க சொல்ரான்.. இவன இப்படியே விடகூடாது… இவன தமிழ் துரோகியாக்கி எழுதிட வேண்டியது தான்.. )


மிக முக்கிய பின் குறிப்பு : இந்தியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்..முதலில் இந்தியா, பிறகு தமிழ்நாடு, என் குடும்பம், என் சுற்றமும் நட்பும் , என் சக தமிழன், சக இந்தியன் பிறகே மற்ற எல்லோரும் என வாழ பழகிய ஒரு சராசரி இந்தியன்.. ஈழம் பற்றி என்னால் செய்ய முடியாத ஏதாவது எழுதி என்னையும் , பிறரையும் ஏமாற்ற மாட்டேன்..

18 பதிலடிகள்...:

ஞானப்பழம் said...

அடேங்கப்பா!! நல்ல பதிவு அண்ணே...
// மிக முக்கிய பின் குறிப்பு : இந்தியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்..முதலில் இந்தியா, பிறகு தமிழ்நாடு, என் குடும்பம், என் சுற்றமும் நட்பும் , என் சக தமிழன், சக இந்தியன் பிறகே மற்ற எல்லோரும் என வாழ பழகிய ஒரு சராசரி இந்தியன்.. ஈழம் பற்றி என்னால் செய்ய முடியாத ஏதாவது எழுதி என்னையும் , பிறரையும் ஏமாற்ற மாட்டேன்..//
மிகவும் சரி... சில மடையனுங்க இதுக்காக தமிழ் நட்ட இந்தியாவிலிருந்து பிச்செடுத்தடலாம்னு அலயரானுங்க!! அதுக்கும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்னுதான் தெரியல!!
in that line u were genuine!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க cshmech தங்கள் முதல் வருகைக்கு நன்றி.. நீங்க வேற இத சொன்னதுக்கே என்ன துரோகின்னு சொல்ல போறாங்க :)))))))))))))

புலவன் புலிகேசி said...

சரியா சொன்னீங்க தல..கையாளாகாத தமிழனாய் ஈழம் பற்றி எழுதுவதில் எனக்கும் விருப்பமிருந்ததில்லை. இந்த பதிவு தோன்ற காரணம் என்ன என்பதும் எனக்குத் தெரியும்.

இப்படித்தான் ஈழம் பற்றி எழுதி பேர் வாங்க பலர் திரிகின்றனர்...எல்லோருக்கும் வருத்தமிருக்கத்தான் செய்யும் அதை விமர்சிப்பதால் நிச்சயம் அதிகமாகுமே தவிர குறையாது. நல்ல பதிவு தல..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க புலிகேசி,
நன்றி .. பக்கத்தில இருக்கவனுக்கு சோத்தகுடுக்க முடியாதவன் .... பக்கத்து நாட்டில போற நிறுத்த போறானாம் !!! இத கேட்ட நாம் தமிழ் துரோகிகள் .. ஹீம்ம் ஹிட்சுக்காக ஈழபிரச்சினைய எழுதரவனுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன வித்தியாசம் ?

Anonymous said...

யோசிக்க வேண்டிய பதிவு ராஜ்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அம்மு.. நன்றி உங்க கருத்துக்கு...

சிநேகிதன் அக்பர் said...

ஜெய் ஜக்கம்மா!!

சிநேகிதன் அக்பர் said...

s

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க அக்பர் ? மைக் டெஸ்டிங் மாதிறி கமெண்ட் டெஸ்டிங்கா?

சிநேகிதன் அக்பர் said...

ராஜ்குமார், உங்க பின்னூட்டபெட்டியில் காப்பி பேஸ்ட் சரியா பண்ணமுடியலை அதான்.

சிநேகிதன் அக்பர் said...

அட இப்ப சரியா பேஸ்ட் ஆவுதே.

அப்புறம் உங்க பதிவில் உங்க வருத்தம் தெரியுது.

ஆனா இது பக்கத்து வீட்டுக்காரன் கஷ்டப்படுறான் ஏதாவது கொடுத்து உதவுவோம் ங்கிறமாதிரி இல்ல. இதில் பெரிய அரசியலே அடங்கி இருக்கிறது.
அதனால் இந்த விஷயத்தை விட்டு விடுங்கள். நம்மால் இயன்ற உதவியை நாம் செய்வோம்.

Jaleela Kamal said...

உங்களுக்கே உண்டான நகைசுவையில் கவுண்டமணியும், செந்திலும் ஈழம் பற்றி பேசி கொண்டது ரொம்ப அருமை. கரி வண்டு தலையா , தீவிட்டி தடியா இத போட மறந்துட்டீங்கலே...... ஹி ஹி


இப்ப தோசை கதைக்கு வருவோம், எப்படி எப்படி

//ஆனா நான் தோசை போட்டா மட்டும் அது தோசக்கல்ல அப்படியே ஜெராக்ஸ் எடுத்துட்டு வருது ஏன் ??? //



உங்களுக்குமட்டும் எப்டிங்கண்ணா இப்படி ஒரு நக்கல் நயாண்டி பதில் சொல்ல வருது.... உஙக்ள் நல்ல உள்ளம் தோசையில தெரியுதுங்கண்ணா

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர்.. ஆமாங்க இதுல அரசியல் இருக்குங்க..

வாங்க ஜலீலா நன்றிங்க

கண்ணகி said...

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உற்வு கலவாமை வேண்டும்... நல்லநகைச்சுவையோடு உண்மையான வருத்த்தை சொல்லி இருக்கிங்க..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க கண்ணகி... உங்கள் வருகைக்கு நன்றி..

ஜோதிஜி said...

என்னங்க அக்பர் ? மைக் டெஸ்டிங் மாதிறி கமெண்ட் டெஸ்டிங்கா

ஈழத்தைப் பற்றி தொடர் இடுகையாக எழுதிக்கொண்டு இருக்கின்றேன். என்னுடைய முதல் பின் ஊட்டமும் கூட. ஆனால் இங்கு பெருமாநல்லூர் அருகே இருக்கும் முகாம் சென்று பார்த்து வந்தேன். முழுமையாக என்றாவது ஒரு நாள் எழுதுவேன். காரணம் அதிகார வர்க்கத்தின் மொத்த கோரத்தையும் அப்போது தான் முழுமையாக உணர்ந்தேன்.

படித்த செய்திகள் என்னையும் ஏதோ கேள்வி கேட்பது போல் இருந்தாலும், சற்று உறுத்தலாக இருந்தாலும் மேலே கட் பண்ணி ஒட்டிய அந்த வாசகத்தை படித்து மனம் விட்டு சிரித்தேன்.

நன்றி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஜோதிஜி.. உங்கள் முதல் வருகைக்கு நன்றி...உங்கள் பக்கம் வந்தேன்.. அருமையாக எழுதி உள்ளீர்கள்...

Shakthi said...

this is the one for a log time i thot to post.... good work dude...

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!