}

Thursday, June 25, 2009

நானும், கவுண்டரும், 21 கேள்விகளும்..

நண்பர்களே.. என்னையும் மதித்து ஒரு நண்பர் இந்த தொடர் பதிவை எழுத அன்புக் கட்டளை இட்டார். அதற்கு மறுப்பு தெறிவிக்க இயலாமலேயே நான் இந்த பதிவை..................1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?...
நாம தான் ஏழையா போய்ட்டோம் .. நம்ம பையனாவது ராசகுமாரனா வரட்டுமேன்னு என்ன பெத்தவங்க வச்ச பேரு..எனக்கு பிடிக்குங்க.. ஏன்னா எனக்கு சொந்தமானாலும் மத்தவங்க தானே அதிகமா உபயோகிக்கிறாங்க..

கவுண்டர் : அப்போ எனக்கு புடிக்கல மாத்திக்குவியா?

2. உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?.....
பிடித்திருந்தது.. நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 கு 90 மதிப்பெண் வாங்கினேன்..அதில் தமிழ் முதல் தாளில் 100 க்கு 98 :) அதற்க்கு காரணம் என் கையெழுத்து என நம்புகிறேன்..இப்போதெல்லாம் எழுத வாய்ப்பு கிடைப்பதில்லை..

கவுண்டர் : டேய்.. என்ன கேட்டாங்க என்ன சொல்லி இருக்கே? நீ பத்தாவதில எத்தன மார்க் எடுத்தேங்குறதெல்லாம் இப்போ அவசியமா? என்னமா விளம்பரம் செய்றான்..

3. கடைசியாக அழுதது எப்போது?...
நான் ரொம்பவும் உணர்ச்சிவசப்படக்கூடிய ஆளுங்க.. ரொம்ப சந்தோசமா இருந்தாலும் கண்ணுல தண்ணி வரும்...அதால ...

கவுண்டர் : முதலைக்கு கூட தான் அடிக்கடி கண்ணுல தண்ணி வரும்.. அப்போ முதலயாடா ஜிப் வாயா?

4. பிடித்த மதிய உணவு?...

மனுசன தவிற மத்ததெல்லாம்,,, நிறைய இருக்குங்க.. ஆனா இப்போ டயட்ல இருக்கேன் :)

கவுண்டர் : அடங்கப்பா சாமி!!!.. நீ டயட்ல இருக்கியா? அன் லிமிட்டேட் மீல்ஸ் ரெண்டு திங்கிறது உங்க ஊர்ல டயட்டா?

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?....
கண்டீப்பா...

கவுண்டர் : ஆமா நான் கூடங்க..

6. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?...

என்னங்க கேள்வி இது? பார்க்கறவங்கள தான்..

கவுண்டர் : அப்போ நான் என்ன பக்கத்து வூட்டு காரனயா பாப்பேன்? தப்பா கேட்டுட்டீங்க..அந்த ஆள் யாருன்னு சொல்லி இருக்கணும்..

7.உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?...

பிடிச்ச விஷயம் : தப்புண்ணு தெரிஞ்சா அது யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்பது

பிடிக்காத விஷயம் : தப்பில்லேன்னு தெரிஞ்சா அது யாரா இருந்தாலும் விட்டு கொடுக்காதது

கவுண்டர் : ஆமா இவரு பெரிய நக்கீரரு.. நெற்றிக்கண்ண தொறந்தாலும் ஒத்துக்க மாட்டாரு.. அந்த கட்டய கொடுங்க சார் எப்படி ஒத்துக்க வைக்குறேன்னு பாருங்க..

8. பிடித்த மணம்?.....

சந்தன மணம்..

கவுண்டர் : உங்கிட்ட என்ன மணம்டா அடிக்குது? ஸ்ஸோ சாமி, தாங்க முடியலடா..போடா.. போயி அந்த நாத்தம் புடிச்ச ஸ்பிரேவ அடிச்சிட்டு வா..

9. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?.....

நல்ல வேகமான திரைக்கதையுள்ள , நகைச்சுவை கலந்த படங்கள்( நன்றி அக்பர்)

கவுண்டர் : பாருங்க்கய்யா எத எல்லாம் திருடுறான்னு...

10. கடைசியாகப் பார்த்த படம்?...

பசங்க ...

கவுண்டர் : இவன் நிஜத்தில பசங்கள பாக்குறது இல்ல . ஆனா படம்னா பசங்கள மட்டும் தான் பாப்பானாம்!!!

12. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?.....

பிடித்த சத்தம் : மகிழ்ச்சியாக இருக்கும் போது சிரிப்பது
பிடிக்காத சத்தம் : வழியின்றி பசியாக இருக்கும் அழுவது (அதுயாராக இருந்தாலும்.)

கவுண்டர்: அட்ரா அட்ரா அட்ரா.....

13. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?....

ஆமாங்க நிறய இருக்கு ..

கவுண்டர் : எங்கே ஒண்ணு சொல்லு.. எப்படியெல்லாம் ஏமாத்துறான் பாருங்க.. உன் தனித்திறமை என்னான்னு எனக்கு தெறியும்டி...யாருகிட்ட?

14. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?.....

தாம் செய்தது தவறென்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்தும் இல்லையென வாதாடுவது..

கவுண்டர் : ஆஆ... இவரு பெரிய இவரு.. வாதாட மாட்டாராம்..


15. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?....

மூக்குமேல் வரும் கோபம்...

கவுண்டர் : டேய் டேய்...அப்புறம் எனக்கு நாக்குக்கு மேல வார்த்தை வரும் பரவாயில்லயா?

16. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?....
வழ்வு தான்

கவுண்டர் :ஃப்ர்ர்ர்ர்ர்ர்ர். காமெடியாம்.. சிரிக்சுடுங்க..

17. கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா...

இரண்டிலும் குளிக்க‌ பிடிக்கும்.

கவுண்டர் : அது எல்லாம் குளிக்கிறவன் கிட்ட கேளுங்கப்பா!!!

18. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?..

குழந்தைகளை அடிப்பது..

கவுண்டர் : அப்போ உன்ன அடிக்கிறது புடிக்குமா? என்னடா நாராயணா?

19. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?...
கவுண்டர் ..

கவுண்டர்: அட்ரா அட்ரா அட்ரா.....

20. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?.....

ஹி ஹி என்னை இந்த விளையாட்டிற்கு அழைத்தது தான்..

கவுண்டர்: ஓ .. அப்போ இதுக்கெல்லாம் காரணம் நீ மட்டும் இல்லயா?

21. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?.....

யாரையும் அழைக்கப்போவதில்லை..

கவுண்டர் : மகா ஜனங்களே.. இவன் கூப்பிட்டா யாரும் மதிக்க மாட்டங்க.. அதால் என்னமா டகால்டி உட்ரான்

38 பதிலடிகள்...:

Mrs.Menagasathia said...

சிரிப்புத் தாங்கல ராஜ்குமார்..ம்ம்ம்ம் ஏதோ எழுதிருக்கிங்க படித்தேன்,சிரித்தேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்கக்கா.. நன்றி..

பிரியமுடன்.........வசந்த் said...

சத்தியமா இன்னைக்கு ரொம்ப சிரிச்சுட்டேனுங்க

சூப்பரப்

அட்ராசக்க அட்ராசக்க

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க வசந்த்.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

வெட்டிப்பயல் said...

கலக்கல் ராஜ்...

பதிவு முழுக்க கவுண்டர் பதில் சூப்பரோ சூப்பர்... எதை சொல்றது எதை விடறதுனு தெரியல :)

சூரியன் said...

கவுண்டர் ஆட்டம் அட்டகாசம்

குடுகுடுப்பை said...

ஜெய் ஜக்கம்மா , நல்ல காலம் பொறக்குது
நல்லா நகைச்சுவைய எழிதிருக்கீங்க.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க வெட்டிபயலே..ரொம்ப நன்றிங்க..
உங்க பதிவுல இருக்குற அந்த தில்லுமுல்லு தத்துவம் எனக்கு ரொம்ப புடிக்கும்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சூரியன். உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க குடுகுடுப்பை. உங்கள் வரவுக்கும் வாழ்த்திற்கும் நன்றி..

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நன்றாக இருக்கிறது..,

அப்படியே வடிவேலு, பார்த்திபன் அட்டாக் எல்லாம் சேர்த்து ஒரு டீமாக அனுப்புங்கள் தல..,

தமிழரசி said...

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு....
சுவைப்படச் சொல்லியிருக்கீங்க... நாங்க எல்லாம் 32 கேள்விக்கு பதில் சொன்னா நீங்க மட்டும் 21னோட எஸ்கேப்பா....7வது பதில் நானும் இப்படித் தானுங்க....

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுரேஷ்.. நன்றி.. அடுத்த பதிவில் முயற்சி செய்கிறேன் ..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தமிழ்.. என்ன செய்றதுங்க? நம்ம கவுண்டர் அட்டக் ரொம்ப ஒவரா இருந்தது அதனால தான் 21 ஓட நிறுத்திட்டேன்.. அப்புறம் அந்த 7 வது பதில் என்ன மாதிறியேவா ? அப்போ உங்களுக்கும் நிறய எதிரிகள் இருப்பாங்களே?

சுவாதி said...

சிரிப்போ சிரிப்புங்க. சின்ன கவுண்டர் என்று நினைத்து வந்தால், இது வேறு "கவுன்டர்" போல.

தீப்பெட்டி said...

:)))

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுவாதி.. தங்கள் முதை வருகைக்கும் வழ்த்துக்கும் நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தீப்பெட்டி. நன்றி..

gayathri said...

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா

ippadi sonna yaru than pathil sollama povnaga ennama terara yosikiranga parupa


unga pathikal ellam nalla irunthuchi pa

மயில் said...

ராசு, இதுல நீங்க சொன்னது சும்மனச்சிக்கு,
கவுண்டரு சொன்னது தான நெசம்???

மயில் said...

ஏப்பா ராசு, மொத்தம் 32 கேள்வியில்ல?? கணக்குல பத்தாம் வகுப்புல எவ்வளவு ராசா??

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க காயத்ரி.. தங்கள் வருகைக்கு நன்றி.. ஜக்கம்மா எச்சரிக்கை மட்டும் இல்லேன்னா யாரும் பதில் போட மாட்டாங்கல்ல? அதான்.. எப்படி??

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க மயில்.. கவுண்டர் அட்டாக் ரொம்ப ஓவரா போச்சுங்க .. அதால தான் 21 .. அதான் தலைப்பிலேயே சொல்லி இருந்தேனே???
ஆமாங்க கவுண்டர் சொன்னதிலும் உண்மை இருக்கு..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எத்துண பேரு இப்படி கிளம்பிருக்கீங்க‌

அக்பர் said...

என் அழைப்பை மதித்து பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி.

காமெடி உங்களுக்கு ரொம்ப இயல்பா வருது.
கவுண்டமணிக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோசப்படுவார்.

வாழ்த்துக்கள்.

அப்புறம் மீதி 16 பதில்களும் எழுதியிருக்கேன் படித்துவிட்டு சொல்லுங்கள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஸ்டார்ஜன்...
இப்பத்திக்கு நானும் கவுண்டரும் தான்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர்.. நன்றி.. அப்புறம் கவுண்டர் உங்கள தீவிரமா தேடீட்டு இருக்கார்:)

கல்கி said...

//ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!//


நீங்க குடுகுடுப்பை அண்ணனோட சொந்தக்காரரா? :-)

32 கேள்வியில சாய்ஸ் விட்டு 21 மட்டும் எழுதினா இது நியாயமா? கவுண்டர் அட்டாக் ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொன்னா ஒத்துக்க முடியாது :-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க கல்கி.....
ஆமாங்க ... அண்ணன் மாதிரி்தான்..
சரீங்க மீதிய எழுத முயற்சி செய்றேன்...

கிரி said...

கவுண்டர் கமெண்ட் கலக்கல்

கவுண்டரின் தீவிர ரசிகன் நான் :-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரிண்ணே வாங்க..வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி..
நானும் தான்..

Barari said...

KALAM SENDRA SUJAATHA AVRKAL LAUNDRY KANAKKU ENDRU EZUTHINAALUM ATHU SUVARAASIYAMAAKA IRUKKUM.ATHAIPOL THANGALUM VAYITRAI PUNNAKI VITTEERKAL.MANAMAARA RASITHTHEN.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க பராரி. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.. ஆனால் அந்த ஒப்புமை?

Barari said...

OPPUVAMAIYIL ENNA THAPPU.ULAKIL ORE ORU SUJAATHA MATTUM THAAN PIRAPPAARAA?

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹூம்ம்ம்ம்ம். சரீங்க .. உங்க வாழ்த்துக்கு நன்றி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நல்லாயிருக்கு..!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க உண்மைத் தமிழன்.. வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

Muthukumaran Devadass said...

நல்ல பதிவு. தொடர்ந்து பதிவெழுத வாழ்த்துக்கள் :-)))))))

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!