}

Tuesday, June 9, 2009

பிரபல பதிவர்களுக்கு .. ஒரு கேள்வி...

அனைத்துலக பதிவர்களே... வணக்கம்... நான் தற்போது தான் என் முதல் ஒற்றை பதிவுலகில் பதிக்க ஆரம்பித்துள்ளேன்... நான் கடந்த மூன்று மாதங்களாக பதிவுகளை படித்து மட்டும் வந்தேன்..

திரை உலக மன்னர்(!!) திரு. கேபிள் சங்கர் அவர்கள் பதிவு தான் நான் படித்த முதல் பதிவு..
அதன் பின் இட்லி வடை, கிரி,பரிசல்காரன்,சென்சி,குசும்பு மற்றும் இன்னும் பலரின் பதிவுகளை என்னுடய அலுவலக கணிணியில் பேவரட்ஸ் ஆக பதித்தும் வைத்துள்ளேன்.

எனனுடய சந்தேகம் ஒன்று தான்.. நான் பார்த்தவரையில் பல பதிவர்கள் ஒருவருக்கு ஒருவர் பதிலிட்டு ஆதரவாக இருப்பது தெரிகிறது.. ஆனால் வெகு சிலர் சில குறிப்பிட்ட பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் பற்றி தங்களது பதிவில் திட்டியும் , விமர்சித்தும் எழுதுவது தான் புரியவில்லை...

ஒரு குறிப்பிட்ட பதிவர் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் பதிவு பக்கமே போகாமல் இருக்கலாமே? ஏன் அவரின் குப்பையை கிளற வேண்டும் பிறகு அதை விமர்சிக்க வேண்டும்? அப்படி அவர் பதிவை பற்றி நாம் விமர்சித்தால் அது அவருக்கு ஒரு மறைமுக விளம்பரமாக ஆகிவிடாதா? அல்லது அது தான் அந்த சில பதிவர்களின் நோக்கமா?

எனக்கு எந்த பயமும் இல்லை.. நான் தைரியமாக சொல்வேன் .. எனக்கு லக்கி லுக் மற்றும் அபி அப்பாவின் கருணா நிதி ஆதரவு பிடிக்காது.. ஆகவே நான் அவர்களின் வலைப்பக்கமே செல்ல மாட்டேன்..அது பொதுவான பதிவாக இருந்தால் கூட.. 

நான் படித்த வரையில் ராஜேஷ்குமார்,சுபா,பிகேபி,இந்திரா சௌந்தர்ராஜன் அளவே எனது எல்லை.. எனவே சாரு என்பவரை எனக்கு சத்தியமாக தெரியாது அவரை பற்றி நமது பதிவுலக நண்ப்ர்கள் எழுதும் வ்ரை... பிறகு நான் அவர் வலை பக்கம் ஒரு முறை சென்றேன்.. அவர் எழுத்தில் இருந்த கர்வம் எனக்கு பிடிக்க வில்லை.. பிறகு அவர் வலை பக்கமோ அல்லது அவரை பற்றியோ படிப்பதில்லை...


இந்த பதிவே , லக்கி,அபி அப்பா மற்றும் சாரு பற்றி எழுதும் கடைசி பதிவாகும்.. நான் எந்த காரணம் முன்னிட்டும் அவர்களை பற்றி சரியோ தவறோ எழுத மாட்டென்..

யாருடைய பதிவிலும் சென்று பெயரிலாமல் பதிலிட மாட்டேன்..

சரி தலைப்புக்கு வருவோம்..
அனைத்துலக பதிவர் நணபர்களே..
நலல பதிவு எழுதுவது எப்படி? தயவு செய்து சொல்லுங்களேன்.....

18 பதிலடிகள்...:

டக்ளஸ்....... said...

நலல பதிவு எழுதுவது எப்படி?
இப்பிடித்தான்....!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//டக்ளஸ்....... said...
நலல பதிவு எழுதுவது எப்படி?
இப்பிடித்தான்....!//

டக்ளஸ் அண்ணே!!!
வணக்கம்.... தங்கள் வருகைக்கு நன்றி!!!
என்ன வெச்சு காமெடி பண்ணலயே?

கிரி said...

//அதன் பின் இட்லி வடை, கிரி,பரிசல்காரன்,சென்சி,குசும்பு மற்றும் இன்னும் பலரின் பதிவுகளை என்னுடய அலுவலக கணிணியில் பேவரட்ஸ் ஆக பதித்தும் வைத்துள்ளேன்//

நன்றி

//ஒரு குறிப்பிட்ட பதிவர் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் பதிவு பக்கமே போகாமல் இருக்கலாமே? ஏன் அவரின் குப்பையை கிளற வேண்டும் பிறகு அதை விமர்சிக்க வேண்டும்//

அப்ப தான் பிரபலம்!! ஆக முடியும்

முரளிகண்ணன் said...

\\ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டணை குடும்மா!!!\\

சூப்பர்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரிண்ணே..
உண்மை தான். அதுவும் உங்க தளத்தை நான் அடிக்கடி பார்வையிட முக்கிய காரணம் உங்க எழுத்து மட்டும் இல்லாம நீங்க வெச்சிருந்த தமிழ் மொழி பெயர்ப்பு கருவியும் தான்...அது இப்போ எங்கேண்ணே?

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க முரளிக்ண்ணன்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம்..ஆரம்பமே கலக்கலா இருக்கே!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அருணா..
நன்றி!!!

கிரி said...

//அதுவும் உங்க தளத்தை நான் அடிக்கடி பார்வையிட முக்கிய காரணம் உங்க எழுத்து மட்டும் இல்லாம நீங்க வெச்சிருந்த தமிழ் மொழி பெயர்ப்பு கருவியும் தான்...அது இப்போ எங்கேண்ணே?//

அதை யாரும் பயன்படுத்துறது இல்லைன்னு நினைத்தேன் ..

சரி அப்ப இதுக்கு தான் வந்தீங்களா.. நான் கூட நான் நல்லா எழுதுறேன்னு நினைத்துட்டேன் :-)))))))

மறுபடியும் இணைத்து விடுகிறேன்

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரிண்ணே..
நான் தான் சொல்லி இருக்கேனே..
உங்க எழுத்து மட்டும் இல்லாம
என்னண்ணே???

சென்ஷி said...

//ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டணை குடும்மா!!!//

இதுக்கு பயந்துக்கிட்டே ஒவ்வொரு தடவையும் இதை சொல்ல வேண்டியிருக்குது :(

பதில்

குறை ஒன்றும் இல்லை !!! said...

சென்சிண்ணே..
வாங்க .. இல்லேன்னா உங்க பின்னூட்டம் வாங்க முடியாதே!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அடக் கொடுமையே..!

ஆரம்பமே இப்படியா..?

முருகா.. ஜக்கம்மா தண்டனைல இருந்து நீதான் என்னைக் காப்பாத்தணும்..!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அடக் கொடுமையே..!ஆரம்பமே இப்படியா..?//
வாங்க உண்மைத்தமிழன்..
என்ன சாபமா? பாராட்டா? புரியலீங்க..

தாயே ஜக்கம்மா .. இவரு உண்மைத்தமிழர்னா அப்போ நாங்க ????

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[குறை ஒன்றும் இல்லை !!! said...

//அடக் கொடுமையே..!ஆரம்பமே இப்படியா..?//
வாங்க உண்மைத்தமிழன்..
என்ன சாபமா? பாராட்டா? புரியலீங்க..

தாயே ஜக்கம்மா .. இவரு உண்மைத்தமிழர்னா அப்போ நாங்க ????]]]

உண்மைக்கு எதிர்ப்பதம்தான்..!

இதிலென்ன சந்தேகம் நண்பரே..?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//உண்மைக்கு எதிர்ப்பதம்தான்..!இதிலென்ன சந்தேகம் நண்பரே..?//

நற நற நற...

☀நான் ஆதவன்☀ said...

ஜெக்கம்மா காப்பாத்து!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஜெக்கம்மா காப்பாத்து!!

வாங்க ஆதவன்..வருகைக்கு நன்றி..
யாருகிட்டே இருந்து யாரா காப்பாத்தனும்?

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!