நான் இந்த பதிவுலகத்திற்கு புதியவன். அதனால் தான் பல பதிவர்களைப் பற்றிய கிசு கிசு க்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறேன்.நான் கடந்த ஆறு மாத காலமாக பதிவுகளை படித்து மட்டுமே வந்தேன்.அதிலும் எனது அலுவலகத்தில் பதிவுகளை படிக்க மட்டுமே இயலும் ஆனால் பதிலிட அனுமதி இல்லை. அதனால் தான் என்னால் பல நல்ல பதிவுகளை படித்தும் பதிலிட முடியாமல் போனது. மிக அண்மையில் நான் மடிக்கண்ணி வாங்கி இணைய வசதியையும் பெற்றேன்.. இருந்தும் நான் பதிவு எதுவும் எழுதாமல் வழக்கம் போல பதிவுகளை படித்து ,முதன் முறையாக பதிலிட்டும் வந்தேன்.(என்னுடய முதல் பதிலே கிரி அவர்கள் எழுதிய ரஜினி பற்றிய பதிவிற்கு,அதற்கு அவரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டது வேறு விசயம்!!!). பின்னொரு நாள் ஒரு நண்பர் கருணாநிதியைப் பற்றி ஆதரவாக எழுதி இருக்க நான் அவருக்கு எதிர் ஓட்டு போட்டு (அந்த நண்பரிடம் கூறிய பின்னரே) பின்னர் நானும் என் பதிவுலக கடலில் குதித்தேன்..
நிற்க.. இந்த பதிவு கண்டீப்பாக எந்த பதிவரையும் வம்புக்கிழுக்கவோ அல்லது எனது பதிவுலக வரலாறு பற்றியதோ அல்ல..
நான் சில பதிவுகளை காணும் போது சில பதிவர்கள் அவர்தம் பதிவுகளில் மற்ற பதிவர்களுடன் ஒப்பிட்டு தம்மை மிக தாழ்த்தியும் சில பதிவர்களை மிக உயர்த்தியும் எழுதக் கண்டேன். பிற பதிவர்களை எப்படி வேண்டுமானாலும் இல்பொருள் உவமையணியுடனோ அல்லது தற்குறிப்பேற்ற அணியுடனோ வாழ்த்தலாம். அது தவறில்லை. எனது சந்தேகம் ஏன் நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டும்?
ஒரு பதிவர் மிகச்சிறந்தவர் என்றால் அவரை கட்டி முடித்த கோபுரம் என்றும் தம்மை கொட்டிக்கிடக்கும் செங்கல் என்றும் ஏன் ஒப்புமைப் படுத்த வேண்டும்? அவர் வேண்டுமானால் கட்டி முடித்த கோபுரமாக இருக்கட்டும் நீங்கள் உங்களை (கோபுரம்)கட்ட கிடக்கும் செங்கல் எனக் கூறலாமே?
நீங்கள் கேட்கலாம் உனக்கு என்ன வந்தது? அது அவரவர் விருப்பம். உனக்கு பிடிக்க வில்லை என்றால் படித்து விட்டு போகவேண்டியது தானே? என்று.. நியாயமான கேள்வி. நானும் சக பதிவர் எனும் முறையில் எனது உள்ளக் குமுறலைக் கொட்டலாமல்லவா?
என்னைப் பொறுத்த வரை எந்த எழுத்தாளனுக்கும் கர்வம் வேண்டும். நாம் படைப்பது நல்ல படைப்பு என நம்ப வேண்டும். நம் படைப்பை நாமே நம்பாமல் மொக்கை என்றோ அல்லது கிறுக்கல் என்றோ கூறுவது எந்த வகையில் நியாயம்? இது கெட்டுப்போன உணவை விருந்துக்கு படைப்பது போலாகாதா? நல்ல பதிவா இல்லையா என்பதை படிப்பவர் முடிவு செய்யட்டுமே ?
அதே சமயம் நம் பதிவில் ஏதேனும் குறை கண்டறியப்பட்டால் அதை எதிர்த்து வாதம் செய்யாமல் தவறை திருத்திக்கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏன் எனில் நாம் இங்கு வந்திருப்பது பதிவிட தானே தவிற சண்டையிட அல்ல..
எனக்கு வரும் பின்னூட்டங்களை விட நான் பிறருக்கு இடும் பின்னூட்டங்களின் பதிலைக் காண மிகவும் ஆவலாக இருப்பேன். என் பின்னூட்டத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் நான் சம்பந்தபட்ட பதிவரின் பக்கமே செல்ல மாட்டென். அவருக்கு அந்த அளவிற்கு வேலைப்பளு இருந்தால் ,எனக்கு சிறிதளவேணும் இருக்காதா? எனது பதிவிற்கு வந்து படிப்பதும் , பிடித்தால் பதிலிடுவதும் அவரவர் உரிமை. ஆனால் தம்மை மதித்து ஒருவர் இடும் பின்னூட்டத்திற்கு பதிலலிப்பதும் சம்பந்தப்பட்ட பதிவரின் கடமையே.. இல்லை தம்மால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரும் பின்னூட்டங்களுக்கு பதிலலிக்க நேரம் போதவில்லை என்றால் அதை முதலிலேயே கூறலாமே? என்னால் 50 பின்னூட்டங்களுக்கு மேல் வரும் பின்னூட்டங்களுக்கு பதிலிட முடியாது என்று? ஆக பின்னூட்டங்களும் வேண்டும் ஆனால் பதிலிடமுடியாது என்றால்???...................................
என்னடா இவன் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை ஆனால் அதற்குள் இப்படி எழுதுகிறானே என யாரும் என்னை தயவு செய்து திட்ட வேண்டாம். அதை நம்ம கவுண்டர் பார்த்துக் கொள்வார். நான் எழுதியதில் ஏதேனும் தவறிருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.. அது என் எழுத்தை மேம்படுத்த உதவும்..
A MAN IS WHO,TREATS A MAN AS A MAN IS A MAN
கவுண்டர் அட்டாக் : என்னமா பேசறாண்டா இந்த பேரிக்கா மண்டயன். எங்கேயோ போய் நல்ல பல்பு வாங்கிட்டு வந்து இங்கே வெடிக்கிறான் .. ஆனா உன் எழுத்த படிக்க அதிகமா யாரும் வர்ரதில்லேனாலும் நீ எழுதற பின்னூட்டத்துக்கு பதில் கெடைக்குதுள்ள? அப்புறம் என்ன உனக்கு? எதுக்கு இந்த விளம்பரம் ?ஆமா அது என்னடா ஆ வூண்ணா நானும் படைப்பாளிங்கறே? நீ படைப்பாளின்னா அப்போ மத்தவங்க?
Subscribe to:
Post Comments (Atom)
55 பதிலடிகள்...:
எப்படியோ ஒரு பதிவ போட்டாச்சு அதானே...
ஓட்டும் போட்டாச்சு..
//என்னைப் பொறுத்த வரை எந்த எழுத்தாலனுக்கும் கர்வம் வேண்டும்//
அது சரி! கர்வமெல்லாம் எழுத்துப் பிழை இல்லாம எழுதும்போது வரணும்!
எழுத்தாளனுக்குக் கர்வம் வரலாம்! எழுத்தாலனுக்கு அல்ல!
(சும்மா லுலூங்காட்டி) கூல்!
:)))))
//அவருக்கு அந்த அளவிற்கு வேலைப்பளு இருந்தால் ,எனக்கு சிறிதலவேணும் இருக்காதா? எனது பதிவிற்கு வந்து படிப்பதும் , பிடித்தால் பதிலிடுவதும் அவரவர் உரிமை.//
கண்டிப்பா உங்களுக்கும் சிறிதளவேனும் வேலைப்பளு இருக்கும்! சிறிதலவு அல்ல!
(இதுவும் லுலூங்காட்டிதான்)
:)0
//என்னால் 50 பின்னூட்டங்களுக்கு மேல் வரும் பின்னூட்டங்களுக்கு பதிலிட முடியாது என்று? ஆக பின்னூட்டங்களும் வேண்டும் ஆனால் பதிலிடமுடியாது என்றால்???...//
மே ஐ நோ வாட் ஈஸ் யுவர் லிமிட்?
(இது லுலூங்காட்டி அல்ல, ஒரு சீரியஸ் பின்னூட்டம் ஹேய் ஹேய் ஷிரிக்காதீங்க ப்ளீஷ்)
//நான் எழுதியதில் ஏதேனும் தவறிருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.. அது என் எழுத்தை மேம்படுத்த உதவும்..//
நான் ரெண்டு தவறு சுட்டிக்காட்டி இருக்கேன்!
க்மிஷன் வந்துடணும்!
//கவுண்டர் அட்டாக் // :)
கவுண்டர் மட்டும்தான் அட்டாக் பண்ணனுமா?
வாங்க சூரியன்.. நன்றி.. ஆமா இந்த ஒட்டு கேட்கும் வசதிய நீக்க முடியுமா?
வாங்க நாமக்கல் சிபி.உங்கள் உதவிக்கு நன்றி.. சரியான நேரத்தில் வந்து திருத்தினீர்...
வாங்க செட்டியார். ஆகா அடுத்த பிரச்சினையை ஆரம்பிச்சிட்டாங்கய்யா..
நாமககல் சிபி எப்பொ கமிசன் வரனும்? ஏன்னா எனக்கு அப்பொ நெஞ்சு வலி வர வைக்கணும்!!!
ஏங்க சிபி, நிறைய பதிவுகளுக்கு சொந்தக்காரரா இருக்கீங்க.. எந்த பதிவ நான் தொடர?
ஏங்க .. நான் இப்போதானே ஆரம்பிச்சிருக்கேன்.அதால NO LIMITS!!!
பாஸ், வந்து ஒரு மாசம் தான் ஆகுதுன்னா சிறியவர், ௧ வருஷமா எழுதிட்டு இருக்காங்கனா பெரிய பதிவர்-னு யாரு இந்த கருத்தை புகுத்தினாங்கனு தெரியல.. சிறந்த கருத்தை, சிறப்பான முறைல எழுதுற எல்லோரும் படிக்கப்படவேண்டியவுங்கதான், Main Stream Media-வான பத்திரிகை, வானொலி, பண்பொலி, தொலைக்காட்சி-ல தான் இந்த தொல்லை, இணையத்துக்கும் அதற்கும் இதுதான் வித்தியாசம்னு நெனச்ச.. இங்கயுமா :-(
வாங்க யாத்ரீகன்!!! நான் ஒரு மாதம் தான் ஆகுதுன்னு சொன்னதுக்கு அர்த்தம் ஒரு வேளை நான் இந்த பதிவுலகத்த சரியா புரிஞ்சிக்காம இருக்கலாமில்லயா?
அப்புறம் உங்க பேரு, ரொம்ப பிரபலமான (ஒரு காலத்தில) பயணக்கட்டுரை எழுதியவர் பெயர். அவர் பாக்யா வார இதழ் ல எழுதீட்டு இருந்தார்!!!
***எனக்கு வரும் பின்னூட்டங்களை விட நான் பிறருக்கு இடும் பின்னூட்டங்களின் பதிலைக் காண மிகவும் ஆவலாக இருப்பேன். என் பின்னூட்டத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் நான் சம்பந்தபட்ட பதிவரின் பக்கமே செல்ல மாட்டென். அவருக்கு அந்த அளவிற்கு வேலைப்பளு இருந்தால் ,எனக்கு சிறிதளவேணும் இருக்காதா? எனது பதிவிற்கு வந்து படிப்பதும் , பிடித்தால் பதிலிடுவதும் அவரவர் உரிமை. ஆனால் தம்மை மதித்து ஒருவர் இடும் பின்னூட்டத்திற்கு பதிலலிப்பதும் சம்பந்தப்பட்ட பதிவரின் கடமையே..***
வித்தியாசமான மிரட்டல்!!
ஆனால் "குறை ஒன்றும் இல்லை" ஐயா! :)))
எல்லா வயசுலும் மிளகாய் காரமாய்தான் தல இருக்கிறது..,
//என்னுடய முதல் பதிலே கிரி அவர்கள் எழுதிய ரஜினி பற்றிய பதிவிற்கு,அதற்கு அவரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டது வேறு விசயம்!!//
ஹலோ! இது அண்ட புளுகு! :-)) நான் உங்களை எதுவும் திட்டவில்லை
சரி இதை எல்லாம் எழுதி விட்டு என் பேரை வேற மேல போட்டுட்டீங்க எல்லோரும் என்னை தான் சொல்றாங்கன்னு நினைத்துக்க போறாங்க ;-)
நான் அவன் இல்ல அவன் இல்ல
//என் பின்னூட்டத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் நான் சம்பந்தபட்ட பதிவரின் பக்கமே செல்ல மாட்டென்.//
அப்பாடா! அப்ப நான் இல்ல அது :-)
//எங்கேயோ போய் நல்ல பல்பு வாங்கிட்டு வந்து இங்கே வெடிக்கிறான் .//
யாருப்பா அது!
எனக்கென்னவோ நாமக்கல் சிபி மேல சந்தேகமா இருக்கு :-))))
//அவர் வேண்டுமானால் கட்டி முடித்த கோபுரமாக இருக்கட்டும் நீங்கள் உங்களை (கோபுரம்)கட்ட கிடக்கும் செங்கல் எனக் கூறலாமே? //
நல்லாதான் இருக்கு
சக பதிவரே,
ஏன் இப்புடி?
இதுக்கு பதில் பதிவு போடலாமா?!!!
//ஆனால் தம்மை மதித்து ஒருவர் இடும் பின்னூட்டத்திற்கு பதிலலிப்பதும் சம்பந்தப்பட்ட பதிவரின் கடமையே..
நானும் உங்க கட்சிதானுங்க.
உங்க பதிவின் background color ஐ(கருப்பு) கொஞ்சம் மாற்றினால் ரெம்ப நல்லாயிருக்கும். கண்ணை மிரட்டுகிறது + தொடர்ந்து படிக்கவும் கஷ்டமாகயிருக்கிறது.
வாங்க வருண்.. தங்களின் முதல் வருகைக்கு நன்றி!!!அது மிரட்டல் அல்ல ஒரு விதமான எதிர்பார்ப்பு.. நாம் பின்னூட்டங்களைக் கூட ரசித்தே இடுவோம். ஆனால் அதற்குத்தகுந்த மரியதை கிடைக்க வேண்டும் அல்லவா?
வாங்க சுரேஷ்.. ஆமாம் நீங்கள் கூறுவது சரி. மிளகாய் எப்பொதும் காரம் தான் கடிக்கப்படும் வரை!!
கிரிண்ணே!! வாங்க !! நான் முதன் முதலா பின்னூட்டம் போட்டது உங்கள் பதிவுக்கு தான். எனக்கு உங்கள் எழுத்துக்கள் பிடிக்கும்..ஆமாம் நீங்க கொஞ்சம் கடுப்பாயி தான் எனக்கு பதில் சொன்னீன்ங்க.. அய்யோ சத்தியமா அது நாமக்கல் சிபி இல்ல.. நீங்க வேற அடுத்த பிரச்சினைக்கு பாலக்கால நட்டாதீங்க :)
வாங்க ஞானசேகரன்!! உங்கள் பாராட்டுக்கு நன்றி!!
வாங்க எவனோ ஒருவரே!! தாரளமா.. இதுக்கு எல்லாம் போய் அனுமதி கேட்கணுமா? உங்க பக்க நியாயத்தையும் சொல்லுங்க..
வாங்க குந்தவை.. தங்கள் முதல் வருகைக்கு நன்றி.. ஆஹா இது தாய்குலத்திடம் இருந்து வரும் இரண்டாவது வேண்டுகோள்.. கண்டீப்பா முயற்சி செய்கிறேன்.. என்ன பிரச்சினை என்றால் அது எப்படி என தெரியாது ஹி ஹி ஹி....
உங்கள் மன நிலையை அப்படியே பதிவிட்டு இருக்கீங்க...ஆனால் இங்கு மிகப் பெரும்பாலோர் அவசியம் நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்களே... நட்பு பாராட்டும் போது நன்மையும் பயக்கும்...சொல்றேன் தப்பா நினைக்காதீங்க...குறைகளை விட்டுட்டு இங்கு இருக்கும் நிறைகளை காண வாருங்கள் இதோ நாங்கள் இருக்கிறோம்....
தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்
வந்து தொடரவும்.
குடுகுடுப்பை சத்தம் இல்லாம ஜக்கம்மா சொல்றது நடக்காதுங்கராங்களே.." குடு குடுப்பை இன்னமும் வாங்கலையா?
தங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_24.html
வாங்க க்ரிஷ்( நான் உங்களை அப்படி அழைக்கலாம் தானே?) நான் விரும்பி படிக்கும் பதிவர்களில் குடுகுடுப்பையும் ஒன்று.. ஆக அடுத்த பிரச்சினைக்கு பாலக்கால் நட்டும் பணி??
வாங்க அக்பர்& பழனி சுரேஷ்,என்னையும் மதிச்சு கூப்புட்டு இருக்கீங்க. கண்டீப்பா தொடருகின்றேன்..
என்னது இது செட்டியார், கவுண்டர்னு புதுசா ??
ஆட்டோ வரணுமா??
குறையொன்றுமில்லைன்னு பேர் வைச்சுட்டு இப்படிக் குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்களே குறையொன்றுமில்லை!!!????
வாங்க மயில்..என்னா வில்லத்தனம்.. நான் என்னோட மெடிக்கல் இன்ஸூரன்ஸ இன்னும் ரெனியூல் பண்ணல...
வாங்க தமிழரசி மற்றும் அருணா.. வருகைக்கு நன்றி.. எனது பதிவு உங்கள் பார்வைக்கு ஒரு குறை சொல்லும் பதிவாக அமைந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்..இந்த தவறு மறுபடியும் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்கிறேன்..
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க பாஸ்..
//தமிழரசி said...
இங்கு மிகப் பெரும்பாலோர் அவசியம் நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள//
நானும் அதையே தான் சொல்லுறேன்..
please change the background black colour, its really disturbing the eyes. nalla rasanai...manjalu karuppu een sivappum serththurukkalame...
வாங்க தீப்பெட்டி.. தங்கள் வரவுக்கு நன்றி.. நானும் நட்பு வேண்டியே ....
வாங்க மயில்.. அய்யோ .. யாராச்சும் எனக்கு உதவுங்களேன். எப்படி இந்த கலர எல்லாம் மாத்துறது?
//அய்யோ சத்தியமா அது நாமக்கல் சிபி இல்ல.//
ஆமாம் அது சிபி அல்ல!
//ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!//
அகராதி பிடிச்ச பயலா இருக்கியே! பேசிகிட்டிருக்கும்போதே ஏண்டா வையுறே?
வாங்க ஐ விட்னஸ்.. இத பாத்தா என்ன வம்புல மாட்டி விடுற மாதிறி இருக்கே?
வாங்க வடிவேலு...என்ன கவுண்டர் அட்டாக் வேணுமா??:)
//வாங்க க்ரிஷ்( நான் உங்களை அப்படி அழைக்கலாம் தானே?) நான் விரும்பி படிக்கும் பதிவர்களில் குடுகுடுப்பையும் ஒன்று.. ஆக அடுத்த பிரச்சினைக்கு பாலக்கால் நட்டும் பணி??//
கிருஷ் என்று அழைப்பதிலோ, அல்லது வேறு எப்படி சுருக்கிக் கூப்பிடப் படுவதிலோ, எனக்குத் தனிப்பட்ட கருத்து கிடையாது. ஆனால் எதற்கும் ஒரு பொருள், புரிதல் வேண்டுமே?
உதாரணத்திற்கு, "குறை ஒன்றுமில்லை" என்ற புனைபெயரில் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். குறை ஒன்றுமில்லாத நிலையை வேண்டுகிற விருப்பம் அங்கே உட்கிடக்கையாக இருப்பது தெரிகிறது. இதை சுருக்குகிறேன் என்ற பெயரில் உங்களை "குறை" என்றழைக்க ஆரம்பித்தால், அது அனர்த்தமாகவும், பெருங்குறையாகவும் அல்லவா ஆகிவிடும்?
அப்புறம், நான் கிருஷ்ணமூர்த்தி, நாரதர் இல்லை! பாலக்கால் நடுகிற தொழில் எல்லாம் தெரியாது:-))
//வாங்க க்ரிஷ்( நான் உங்களை அப்படி அழைக்கலாம் தானே?) நான் விரும்பி படிக்கும் பதிவர்களில் குடுகுடுப்பையும் ஒன்று.. ஆக அடுத்த பிரச்சினைக்கு பாலக்கால் நட்டும் பணி??//
கிருஷ் என்றோ வேறு எப்படியோ சுருக்கிக் கூப்பிடப் படுவதிலோ, எனக்குத் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது! ஆனால், எதற்கும் ஒரு பொருள், புரிதல் இருக்க வேண்டுமே?
உதாரணமாக, 'குறை ஒன்றும் இல்லை' என்ற புனை பெயரில் பதிவெழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். குறை ஒன்றுமில்லாத நிலையை உள்ளூர வேண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாமா!
இப்போது சுருக்கிக் கூப்பிடுகிறேன் என்ற சந்தடியில், எல்லோரும் உங்களை "குறை' என்றே கூப்பிட ஆரம்பித்தால், என்ன ஆகும், அனர்த்தமாகவும், வேறுமாதிரியாகவும் ஆகி விடாதா?!
அப்புறம், நான் கிருஷ்ணமூர்த்தி, நாரதர் இல்லை, பாலக்கால் நடுகிற தொழில் எனக்கு தெரியாது:-))
உயர் திரு . கிருஷ்ணமூர்த்தி அவர்களே .. தாங்கள் அடைந்த மன வேதனைக்கு என் எழுத்து காரணமாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த கருத்தை எழுதும் போது தங்களை என் வயதொத்து இருப்பீர்கள் என நினைத்தே அதுவும் என் கருத்து நகைச்சுவையாக இருக்கும் என நினைத்து எழுதி இருந்தேன் .. மீண்டும் மன்னிக்கவும்.
ராஜ்குமார் உங்கள் பதிவு அனைத்தும் ரொம்ப நல்லாயிருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்.என் பக்கமும் அடிக்கடி வந்து பின்னூட்டம் இடுவதில் ரொம்ப மகிழ்ச்சியாகயிருக்கு.ஆக எனக்கு ஒரு தம்பி கிடைத்தாச்சு[நீங்க தான் என்னை அக்கா கூப்பிட்டுட்டிங்களே]அப்படி கூப்பிடுவதும் நல்லாயிருக்கு ஏன்னா இதுவரை என்னை யாரும் அப்படி கூப்பிட்டதில்லை..
வாங்க மீனாட்சிக்கா.. நன்றி.. எனக்கு சாப்பிட பிடிக்கும்.. அதனால தான் உங்கள் பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
அய்யோய்யோ இப்படி எங்கப்பா,அம்மா வைத்த பெயரை மாத்திட்டிங்களே,என் பெயர் மேனகா,நீங்க எனக்கு வைச்ச பெயரும் நல்லாயிருக்கு!!அந்த மீனாட்சி மதுரையை ஆண்ட மாதிரி நானும் ஒரு நாட்டை ஆளனும்னு வேண்டிக்குங்க தம்பி..
வாங்க தமிழ்... கூடிய விரைவில் உங்கள் குறை தீர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மென்மேலும் பதிவுகள் எழுத வாழ்த்துகள்
/தாங்கள் அடைந்த மன வேதனைக்கு என் எழுத்து காரணமாக இருந்தால்../
ஒரு வேதனையும் இல்லை. மன்னிப்பு, என்பதெல்லாம் பெரிய வார்த்தை. நான் சொல்லவந்தது இது மட்டும் தான்:
கிருஷ் என்றோ வேறு எப்படியோ சுருக்கிக் கூப்பிடப் படுவதிலோ, எனக்குத் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது! ஆனால், எதற்கும் ஒரு பொருள், புரிதல் இருக்க வேண்டுமே?
இதைத் தெளிவாகவே சொல்லியிருந்தேனே....?
வாங்க திரு.கிருஷ்ணமூர்த்தி.. நன்றி.. இருந்தாலும் உங்களை சங்கடப்படுத்தியதற்கு மன்னிக்கவும்...
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!