}

Sunday, June 21, 2009

இலங்கை பிரச்சினையில் இந்தியா துரோகம் செய்யவில்லை????

இது வரை பல பதிவுகள் இலங்கை பிரச்சினை பற்றியும் ,யார் நண்பன்?, யார் சந்தர்ப்பவாதி?, யார் எதிரி? மற்றும் யார் துரோகி? என்று பல தலைவர்களையும் வம்புக்கு அழைத்து பதிவுலக நண்பர்கள் அவர்களுக்குள்ளேயே எதிரிகளாகவும் ஆயினர். இது மற்றும் அன்றி பத்திரிக்கைகளும் இதே பிரச்சினைகளை வைத்து நன்றாக கல்லா கட்டியது .. இதோ இந்த பதிவும் அப்படி போன்றது தான் ஆனால் கல்லா கட்ட அல்ல(அது முடியாது).... இந்த பதிவின் நோக்கம் எந்த தமிழரின் மனதையும் புண்படுத்த அல்ல. ஆகவே பதிவை படித்து விட்டு நீயெல்லாம் தமிழனா? துரோகி என்றெல்லாம் திட்ட வேண்டாம். ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதி இருக்கிறேன்.தவறென்றால் மன்னிக்கவும்...

நமக்கு சில நேரங்கள் கோபத்தையும், பரிதாபத்தையும்,பரிதவிப்பையும் , பதபதப்பையும் பல நேரங்களில் இயலாமையையும் தந்ததும் ,தந்து கொண்டு இருப்பதும் ஈழத்தமிழர் பிரச்சினையே.. இதன் வரலாறு நமக்கு தெரியும் தவிர தற்போது அது பற்றி விரிவாக தேவையும் இல்லை..

சரி விசயத்திற்கு வருவோம். இது வரை நடந்த ஈழ விடுதலைப்போரில் புலிகள் கையே ஓங்கி இருந்தது ஆனால் சமீபத்திய போரில் புலிகள் பலத்த பின்னடைவை அடைய காரணம் இந்திய அரசாங்கத்தின் தவிர்க்க இயலாத உதவியே காரணம் என்பது உண்மை..ஈழத்தமிழர் பிரச்சினையில் உலகத்தமிழர் அனைவரும் நமது இந்திய அரசையே குற்றம் சாட்டுகின்றனர்.எனக்கும் அதே வருத்தம் தான். ஆனால் உலகத்தமிழர் அனைவரின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு செய்கிறது என்றால் கண்டீப்பாக ஒரு புறக்கணிக்க இயலாத காரணம் இருக்கும்.
அந்த காரணம் நமது அண்ணிய நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இலங்கை அரசுக்கு உதவ முன் வந்ததே .. அப்படி அந்த நாடுகளின் உதவி பெற்றால் அவை சுலபமாக இந்திய எல்லையில் வேறூன்றி விடும். பிறகு காஷ்மீர் எல்லையில் போர் மற்றும் பதட்டம் நிகழ்வது போல் நமது தமிழக எல்லையிலும் நிகழ வாய்ப்புள்ளது. அதிலும் நமது அரசியல் வாதிகள் கண்டீப்பாக அப்படி நிகழ காரணமாயிருப்பர். இது போன்ற ஒன்றை தடுக்க நினைக்கும் காரணமாக இருக்கக்கூடும்.


ஆகவே தான் நாட்டின் நலன் கருதி இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம்.. நீங்கள் கேட்கலாம் பிறகு தமிழர் கதி?

அதன் காரணம் உலகறிந்தது..

நாம் ஒன்றும் மற்ற மாநிலத்தவரைப்போல இனமானம் உள்ளவர்கள் அல்லவே...ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒருவரை அதுவும் ஒரே ஒருவரைக் கொன்றதற்காக மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைக்க.. அதனால் தான் நாட்டின் நலன் காக்க நம் தமிழர் இனத்தை அடகு (அடங்க)வைத்தது....

நாமும் இப்படி பதிவுகளை எழுதி ........................................................

12 பதிலடிகள்...:

கண்டும் காணான் said...

சரியாக சொன்னீர்கள் , ஆயிரம் மீனவனை சுட்டு வீழ்த்தினாலும் மௌனம் நாம் எங்கே , ஒருவனைத் தாக்கினாலே பொங்கி எழும் மற்ற மாநிலத்தவர் எங்கே. சீக்கியர்கள் தமக்குள்ள ஜாதிகலவரம் நடத்தியதற்கு , பிரதமர் விரைந்து செயற்படுகிறார். ஆனால் ஆயிரக்கணக்கான் மீனவர் சுடப்பட்டு வேலை இழந்து தவிர்க்க மௌனமே பதிலாக கிடைக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஈழத் தமிழ் மக்களை பலியிட்டனர் என்று வாதிட்டாலும் நடந்தது என்ன இலங்கையில் சீனா துறைமுகமும் கச்சதீவில் இலங்கை கடற்படை முகாமும் தான்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க கண்டும் காணாதவரே..
ஹும்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்ய ?
நம்மால் பதிவிட்டே ஆறுதல் அடைய முடியும்..

சப்ராஸ் அபூ பக்கர் said...

சொல்லிட்டேன்.........(என்ன தெரியுமா?? எங்க ஏரியாவுக்குள்ளும் வாங்க.... ஹி....ஹி.... )

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சப்ராஸ் ... நன்றி..
இதோ வர்ரோம்ல....

தீப்பெட்டி said...

வருத்தம் வேண்டாம் ராசகுமாரன்..

கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியான தமிழ்குடி இதுநாள் வரை எத்தனையோ ஆக்கிரமிப்புகளையும் ஆதிக்கத்தையும் முறியடித்து இன்று வரை முன்னேறிக்கொண்டே இருக்கிறது..

மீண்டு வருவோம்.. நாம் முன்னேறத்தெரிந்தவர்கள்..
எவரின் தயவும் தேவையில்லை.. எவரையும் சபிக்க அவசியமும் இல்லை..

தயாராகுவோம் அதோ..
நாளை நமக்குமுன் பிரகாசமாக..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தீப்பெட்டி..
ஏதோ உங்களைப் போன்றவர் தரும் நம்பிக்கை வார்த்தைகளில் தான் நாம் வாழ்ந்து கொண்டிறிக்கின்றோம்..

ஆ.ஞானசேகரன் said...

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கின்றது. அதேபோல் இந்தியாவின் மீதி இலங்கை தமிழர்கள் வருத்தபடவில்லை போல தெரிகின்றது.... ஏனனில் இந்தியாவின் நிர்பந்தம் என்று அவர்களுக்கு புரிகின்றது. மேலும் இனி நடக்கும் முறையில்தான் நம் நிலையை உணர்த்த முடியும்....

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஞானசேகரன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நானும் உங்கள் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்..

siruthai said...

//இந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்கள் போராட்டம் -ஒர் பார்வை//


http://siruthai.wordpress.com/2009/06/21/இந்திய-அரசியல்-தமிழக-இந்/

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சிறுத்தை.. தகவலுக்கு நன்றி..

சிநேகிதன் அக்பர் said...

நீங்க சொல்றது சரி தான். ஆனால் தமிழகத்தில் மக்கள் ஒன்று பட்டாலும் அவர்களை போர் நிறுத்த போராட்ட களத்தில் வழிகாட்ட உண்மையான தலைவர் ஒருவரும் இல்லை எல்லோரும் சுயநலவாதிகள்.

இதில் ஒரு தலைவரும் விதிவிளக்கு இல்லை.

சாத்தான் குளம் டாடா தொழிற்சாலையை வராமல் கெடுக்க போட்டி போட்டு அந்த இடத்திற்கு வந்த அரசியல்வதிகளில் ஒரு சிலர் சேர்ந்து இராமேஸ்வரம் மீனவர்களுக்காக போராட்டம் நடத்த்ட்டும் கண்டிப்பாக மக்கள் அவர்கள் பின்னால் நிற்பார்கள். ஆனால் தலைவர்களுக்கு அது தேவை இல்லை அவர்களுக்கு தேவை பணமும் , ஓட்டும் , பதவியும் தான்.

சில பேர் சொல்லலாம் அர‌சிய‌ல்வ‌திக‌ளை ஏன் எதிர்ப‌ர்க்கிறீர்க‌ள் என்று
ஒரு போராட்ட‌த்தை வ‌ழி ந‌ட‌த்த‌ த‌ல‌மை மிக‌வும் அவ‌சிய‌ம்.

புதிய‌ த‌லைவ‌ர்க‌ளை உருவ‌க்குவோம் என்று சொல்ப‌வ‌ர்க‌ள் எப்ப‌டி என்றும் கூறி விடுங்க‌ள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர்.உங்கள் கருத்துக்கு நன்றி...அதனால் தான் நான் சொல்லி இருக்கேன்.. நம்மால் வெரும் பதிவிட்டே..............

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!