}

Sunday, June 21, 2009

நெகடிவ் ஓட்டு பெறுவதை தடுப்பது எப்படி? தமிழ்மணத்திற்கு சில யோசனைகள்!!!

நம் பதிவர்கள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினை தத்தம் பதிவுகளுக்கு கிடைக்கும் நெகடிவ் ஓட்டுகளாகும். நானாவது பரவாயில்லை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். ஆனால் பல தொழில்முறை எழுத்தாளர்களும் , இன்னும் பல நன்கு எழுதக்கூடிய பதிவர்களும் இந்த பிரச்சினையை சந்திப்பது தான் ஏன் என புரியவில்லை!!!
இதை பார்க்கும் போது எனக்கு ஒரு விசயம் நன்கு புரிகிறது. ஒரு சிலர் இந்த நெகடிவ் ஓட்டு போடுவதையே தொழிலாக கொண்டிருக்கின்றனர்..

சரி இதை எப்படி தவிர்க்கலாம்?

1. நாம் ஒன்றும் ஐஐடி தேர்வோ அல்லது மற்ற கடினமான தேர்வுகளையோ எழுதிக்கொண்டிருக்கவில்லை. நம் மனதிற்கு தோன்றியதை எழுதுகிறோம்.மேலும் எந்த அமைப்பிலும் ஓட்டு போடும் முறை தான் உள்ளதே தவிர எதிர்மறை ஓட்டு போடும் முறை இல்லை. எனவே இந்த நெகடிவ் ஓட்டு முறையை எடுத்து விடலாம். சூடான இடுகைக்கு வேண்டுமானால் ஒருவர் பெரும் ஓட்டின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.ஏனென்றால் சூடான இடுகை என்பது வாசகர்களால் தேர்வு செய்யப்படுவது. ஆகவே ஓட்டு முறையே போதும் என நினைக்கிறேன்.

2. இல்லை கண்டீப்பாக நெகடிவ் ஓட்டு முறை தான் இருக்க வேண்டும் என நினைத்தால் , அப்படி ஓட்டு போடும் நபரின் முழு விவரமும் ,அப்படி ஓட்டு போடும் காரணத்தையும் ஒளிவு மறைவின்றி தெரியப்படுத்த வேண்டும்..ஏனென்றால் அது ஒப்புக்கொள்ளக்கூடிய காரணமென்றால் அது நம் எழுத்தை மேம்படுத்த உதவுமே?

ஆக பிடித்தவர் ஒட்டு போடட்டும் இல்லையென்றால் படித்து விட்டு மட்டும் போகட்டும்..

பதிவர்களே நான் ஆரம்பித்து இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட முடியவில்லை. இப்படி இருக்க இவன் பெரிய பருப்பு மாதிரி கருத்து சொல்ல வந்து விட்டான் என யாரும் என்னை திட்ட வேண்டாம்..

ஏதோ என் மனதிற்கு தோன்றியதை எழுதிவிட்டேன். ஒரு வேளை இதை யாரவது நடைமுறை படுத்த முயன்றால் என்னைவிட பல நல்ல பதிவர்கள் கண்டீப்பாக மகிழ்வர்...

32 பதிலடிகள்...:

Joe said...

ஹே, நீ என்ன பெரிய பருப்பா, நீ சொன்னா உடனே தமிழ்மணம் கேக்குமா, போடா டேய்!...
Just kidding...

நல்ல கருத்து, நண்பா.
நானும் கூட இதை யோசித்துப் பார்த்ததுண்டு.
நான் விரும்பி படிக்கும் மாதவராஜ் அவர்களின் பதிவுகளில் எதிர்வோட்டுகள் எக்கச்சக்கமாக விழும். "உங்களுக்கு எதிர் வோட்டு போடும் உள்ளங்கள் வாழ்க"-ன்னு நக்கலா சொல்லிருக்கேன்.

மற்ற திரட்டிகள் வோட்டு போடுவது மட்டுமே வைத்துள்ளன, அதிலும் உங்களுக்கு வோட்டு போட்டவர்களை அடையாளம் கட்டும் தமிலிஷ் எனக்கு பிடித்தது.

//
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டணை குடும்மா!!!
//

தண்டனை என்பதே சரி!

Anonymous said...

வாங்க குறை ஒன்றும் இல்லை - பேரு ரொம்ப பெருசா இருக்கு சின்னதா எதாவது வைக்கலாமே.. people soft எங்க இருக்கு?

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஜோ.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..தண்டனையாக திருத்தியாச்சு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க மயில்.. எனக்கு இந்த பேர் ரொம்ப பிடிக்கும்..
ஏங்க people soft தான் இப்போ SAP அடுத்த நல்ல ERP package .

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல விசயம் தான் எழுதிருக்கீங்க

வாழ்த்துக்க‌ள் தான் வ‌ரும்

வாங்க நம்ம வீட்டுக்கு

என் வலைப்பதிவுக்கு

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஸ்டார்ஜன்.. நன்றி.. கண்டீப்பா வர்ரேன்..

Anonymous said...

where are you in coimbatore?

குறை ஒன்றும் இல்லை !!! said...

அவினாசிங்க .. நீங்க ?

Anonymous said...

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா.....

இந்த முறை இங்க ஏனுங்க நம்ம இந்திய ஜன நாயகத்துக்கு இது மாதிரி டெக்னிக் எதாவது இருந்தா சொல்லுங்கப்பா.... நான் ஓட்டுப் போட இப்ப நேரமில்லை ஜக்கம்மாவுக்கு சொல்லுங்க தண்டிக்க வேணாமுன்னு தமிழ் பாவம்ம்ம்ம்ம்ம்ம்

ஆ.ஞானசேகரன் said...

//ஏதோ என் மனதிற்கு தோன்றியதை எழுதிவிட்டேன். ஒரு வேளை இதை யாரவது நடைமுறை படுத்த முயன்றால் என்னைவிட பல நல்ல பதிவர்கள் கண்டீப்பாக மகிழ்வர்...//

நன்றி.. நல்ல வரவு

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தமிழரசி.. தங்கள் வரவுக்கு நன்றி.. அய்யோ!! நான் ஓட்டு கேட்கலீன்ங்க..கருத்துதான் கேட்டேன்..உங்கள் கருத்துக்கு நன்றி..
தாயே ஜக்கம்மா இந்த தமிழ நம் தமிழ் மொழி போல் நீடூழி வாழ வாழ்த்தம்மா!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஞானசேகரன்.. இப்பொ தான் உங்களுக்கு வழி தெரிஞ்சுதா?

விக்னேஷ்வரி said...

உங்க எழுத்துக்களின் கலரை மாத்த முடியும்னா மாத்துங்களேன். நல்ல எழுத்துக்களைக் கண் கூசுவதால் படிக்க முடியவில்லை.

Anonymous said...

நல்லாதாம்பா சொல்லிருக்கீங்க
அட யாருப்பா இந்தப்பதிவுக்கே எதிர்வோட்டுப்போட வர்ரது???
lol

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுபாஷ்.... எதிர்வோட்டால என்ன இழப்பு? உண்மையாக கேட்குறேன்.ஏன்னா நான் இந்த பதிவுலக்கிற்கு புதுசு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க விக்னேஷ்வரி.. நம்மால தான் முடியல அட்லீஸ்ட் நம்ம எழுத்துக்களாவது தங்கம் போல ஜொலிக்கட்டுமே என நினைத்தே .....
ஆமா நல்ல எழுத்துக்கள்னு சொன்னது கண்டீப்பா FONT STYLE க்காக இருக்காதுன்னு நம்பறேன்!!

Menaga Sathia said...

நல்லா எழுதிருக்கிங்க,உங்களுக்கு தோன்றியதை வெளிப்படையா எழுதிருக்கிங்க,தப்பில்லை!!உங்க பெயரை எனக்கு மட்டும் சொல்லுங்க சகோதரரே,கூப்பிட வசதியா இருக்கும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

மேனகா க்கா என் பேரு ராஜ்குமார்...

சிநேகிதன் அக்பர் said...

இதையேதான் நானும் நினைத்தேன் ...

நல்ல பதிவு

அப்படியே நம்மளையும் கொஞ்சம் கவனிங்க ...

http://sinekithan.blogspot.com

Suresh said...

சூப்பர் தலைவா நல்ல எழுத்து நடை ;) கலக்குறீங்க நான் உங்க பாலோவர் ஆகியாச்சு .) இனி பதிவுலகில் சேர்ந்து பயணிப்போம்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர்.. நன்றி.. கண்டீப்பா..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுரேஷ். நன்றி.. நானும் கூட..

Tech Shankar said...

I am not using any vote bar. So I am not getting any negative votes.Is it pessimistic / optimistic?

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தமிழ்நெஞ்சம். அப்படியா? அப்படி ஒரு வழி இருந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்? எனக்கு ஓட்டு வேணாம்(இல்லீண்ணா மட்டும்...)
அப்புறம் தமிழ்நெஞ்சம் னு பேர வைச்சிட்டு ஆங்கில கமெண்ட்!!!1

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஏழை சொல் அம்பலம் ஏறுமா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுரேஷ்.. ஒரு முயற்சிதான்.. மோதித்தான் பார்ப்போமே!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் நண்பா கலக்குங்கள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ரமேஷ்.. தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

Jaleela Kamal said...

பிளாக் டிசைன் நல்ல இருக்கு நல்ல காம்ப்னேஷன், ஆனால் விக்னேஷவரி சொன்ன மாதிரி கண்ணு ரொம்வே கூசுது.. ஹே ஹே,

எழுத்துக்களின் கலரை கொஞ்சம் லைட் கலரில் கருப்புக்குள் பளிச்சின்னு தெரியும் வண்ணம் போடுங்கள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஜலீலா.. நீங்களே ஒரு நல்ல கலர சொல்லுங்க..
நானும் ரொம்ப முயற்சி செய்றேன்..

உண்மைத்தமிழன் said...

நல்ல அறிவுரைதான்..

ஆனா கேக்கணுமே..?

பிடிச்சிருக்குன்னு சொல்லிக் குத்துனா.. அதே சமயம் பிடிக்கலைன்னு ஒரு சாரார் சொல்லலாம் இல்லையா..?

அதுக்காகத்தான்..

வேண்டுமென்றே நெகட்டிவ் குத்து விழுவதைத் தவிர்க்க முடியாதுதான்..!

ஆனால் அதற்காக ஆதரவுக் கரங்களை இழக்கக் கூடாது..!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க உண்மைத்தமிழன் சார்.. என்ன செய்ய சார்..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!