}

Saturday, June 20, 2009

குஷ்பூவும் அன்புமணிராமதாசும் இன்னும் பலரும்...

என்னடா இவன் ஹிட்ஸுக்காக இப்படி தலைப்பு வச்சு இருக்கானே அப்படீன்னு நெனைக்கலாம். ஆனா அது தான் உண்மையும் கூட .. நம்முடய இந்த பரந்த தமிழ் பதிவுலக கடலில் பல திமிங்கலங்கள் இருக்க நான் இப்போ தான் என்னுடய கன்னன் (கன்னி X கன்னன் சரிதானே?)முயற்சியை ஆரம்பித்துள்ளேன். எனெவே, தனித்தீவில் தவிக்கும் ஒருவன் பிறரின் கவனத்தை ஈர்க்க செய்யும் முயற்சியைப் போலவே, விடலை பையன் பெண்களை கவர செய்யும் கிறுக்குத்தனம் போல இதுவும் மற்றவர்களை கவரும் முயற்சியாகும்...

ஆனால் கண்டீப்பாக தலைப்புக்கேற்ற செய்தி உண்டு...
சரி விசயதிற்கு வருவோம்.கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த கூத்தை நம்மில் பலர் மறந்திருக்க மாட்டோம். அதாங்க நம்ம கூடையில் என்ன பூ குஷ்பூ இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் நம் தமிழ் பெண்கள் திருமணத்திற்கு முன் மேற்படி வைத்துக்கொள்வது தவறில்லை என்றும் ஆனால் அப்படி மேற்படி வைக்கும் போது கவனமாக இருக்கும் படியும் ஒரு புரட்சிகர கருத்தை சொல்லிவிட்டு அந்தமான் சென்று விட்டார்..
ஆனால் நமது கலாச்சார காவலர்கள் ,சரவணாபவன் பொங்கலை போல பொங்கி தமிழ் நாடு முழுவதும் அதகளப்படுத்தி விட்டனர். அதிலும் பாமக கட்சியினர் ஒரு படி மேலே சென்று பல போராட்டங்களை நடத்தினர்..

இங்கே,எப்படி அன்புமணி வந்தார் என்று தானே கேற்கிறீர்கள்? அந்த சமயம் அன்புமணி தான் சுகாதாரதுறை அமைச்சர். அவர் பல கோடி செலவு செய்து விளம்பரப்படுத்தும் விசயம் என்ன? பாதுகாப்பான மேற்படிக்கு அந்த பாதுகாப்பை உபயோகப்படுத்துங்கள் என்று தானே??...
நமது பழைய திரைப்படங்களில் கூறுவதைப்போல ஒரு உறையில் ஒரு கத்தி என்று இருந்தால் பிறகு எதற்கு இந்த ரப்பர் உறை?ஆக கூடி அன்புமணி அமைச்சராக இருந்து சொன்னதை தான் நம்ம குஷ்புவும் சொல்லி இருந்தாங்க.. ஆனா ஒருவருக்கு பாராட்டு அடுத்தவருக்கு ஆர்பாட்டமா? என்ன கொடுமை சார் இது?

இப்போ சொல்ல்லுங்க தலைப்புக்கேத்த செய்தி உண்டு தானே?












எனக்கு சில கேள்விகள்...
1. கற்பை பற்றி கருத்து சொல்லும் அளவிற்க்கு குஷ்பூ அவ்வளவு ............... வரா?
2. இல்லை குஷ்பூ கருத்தையெல்லாம் மதித்து போராட்டம் நடத்த பாமகா அவ்வளவு ...............ஆன கட்சியா?
3. குஷ்பூ சொல்லை வேதவாக்காக மதிக்க நம் ஊரில் பெண்கள் உள்ளனரா?

18 பதிலடிகள்...:

சிநேகிதன் அக்பர் said...

அட இது நல்லா இருக்கே

இதுவரைக்கும் யாரும் இப்படி ஒரு கோணத்தில் யோசித்து பார்க்கவில்லை.

நல்ல எளிமையான எழுத்து நடை , கலக்குங்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர்..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

Mothiyoci said...

visayam eruku pa ungal ta...

Mothiyoci said...

nalla erukua pa

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சும்மா..
தங்கள் கருத்துக்கு நன்றி..
ஆமா அந்த வாழ்த்த உண்மையாதானே சொன்னீன்ங்க? சும்மா ஒண்ணும் இல்லேயே?

Mothiyoci said...

chumma yaravathu valthuvangala pa ..... chumma sonen

குறை ஒன்றும் இல்லை !!! said...

எப்படியோ கருத்துக்கு நன்றி(நற நற நற)

Beski said...

//கற்பை பற்றி கருத்து சொல்லும் அளவிற்க்கு குஷ்பூ அவ்வளவு ............... வரா?//

இருக்குறவங்கதான் அத பத்தி பேசனுமா? அப்படித்தான் எல்லாரும் பேசுறாங்களா?
---
/இல்லை குஷ்பூ கருத்தையெல்லாம் மதித்து போராட்டம் நடத்த பாமகா அவ்வளவு ...............ஆன கட்சியா?//

ஹி ஹி ஹி... இந்த கோட்டுல எந்த வார்த்த்ய போட்டாலும் சிப்புதான் வர்து...
---
//குஷ்பூ சொல்லை வேதவாக்காக மதிக்க நம் ஊரில் பெண்கள் உள்ளனரா?//

நீங்க வேற, யார் இப்படி சொன்னாலும் மதிப்பாங்க.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க எவனோ ஒருவன்..
தங்கள் வருகைக்கு நன்றி..
அதனால தான் கோடு.. நீங்க என்ன வேணாலும் நிறப்பிக்கலாம்.. நமக்கெதுக்கு ஊர் வம்பு..

தீப்பெட்டி said...

என்னவோ போங்க.. இப்படியெல்லாம் பதிவு போட நமக்கு உதவி பண்ணுறாங்களே.. அதுக்காகத்தான் அவுங்க பேச்ச கேட்குறது..

நம்ம குலதெய்வம் ஜக்கம்மா பேரச்சொல்லி இப்படி பயமுறுத்துறீங்களே.. பாஸ்,

நாமக்கல் சிபி said...

//கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த கூத்தை நம்மில் பலர் மறந்திருக்க மாட்டோம்//

ஐயா! அது சில மாதங்களுக்கு முன் அல்ல! சில வருடங்களுக்கு முன்! சரியா!

(இந்த மேட்டரைப் பத்தி எழுத வந்தாலே டோண்டு மாதிரியே ஆகிடுறாங்க போல)

ஆ.ஞானசேகரன் said...

//3. குஷ்பூ சொல்லை வேதவாக்காக மதிக்க நம் ஊரில் பெண்கள் உள்ளனரா?//

தெரிலப்பா

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சிந்தனை

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தீப்பெட்டி.. ஹா ஹா ஹா.. என்ன செய்ய இல்லேண்ணா யாரும் பதிவு போட மாட்டீங்களே..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி நாமக்கல் சிபி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி ஞானசேகரன்...

Joe said...

ஏண்ணே, இது உங்களுக்கே ரொம்ப அதிகமா தெரியலையா?
அந்த விஷயம் நடந்து முடிஞ்சு பல வருஷம் ஆகிப் போச்சே, இப்போ போயி அதைப் பத்தி ஒரு இடுகையைப் போட்டு?

குஷ்புவுக்கு கோவில் கட்ட முயன்ற தமிழர்கள் மத்தியில், அந்த காட்டெருமையை, மன்னிக்கவும், அந்த கடவுளை அவமதிக்கும் உங்களை எதிர்த்து பெரும் பேரணி நடத்தப்படும். ;-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹா ஹா வாங்க ஜோ.. என்ன பண்றது? எனக்கு இப்போ தானே பதிவெழுத தெரியும்..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!