நண்பர்களே.. இது ஒன்றும் பிறர் கவனத்தை ஈர்க்க செய்யும் தலைப்பு அல்ல. இன்றைய பல பதிவர்களின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, இந்த இடுகைக்கு ஓட்டிடும் முறையும், சிறந்த பதிவரை தேர்வு செய்யும் முறையும் ஒளிவு மறைவின்றி உள்ளதா என்பதே..
அண்மையில் ஒரு நண்பர் இந்த விசயம் சம்பந்தமாக ஒரு பதிவு இட்டு இருந்தார். ஆனால் அவருக்கு வந்த பின்னூட்டங்கள் அனைத்தும், பிரபல இல்லை இல்லை நான் அப்படி சொல்ல மாட்டேன் வேண்டுமானால் சிறிது முன்னரே எழுத வந்த பலரின் அநாகரிக பின்னூட்டங்களே.. நாம் சிறு வயதில் படித்த காட்டை ஏமாற்றிய வண்ண நரியின் கதையே நினைவுக்கு வருகிறது.. அந்த நண்பரின் பதிவில் கூறிய எந்த குற்றச்சாட்டையும் யரும் பட்டவர்த்தனமாக மறுத்து எழுதாமல், அவரை கிண்டல் செய்து எழுதி இருந்தர்.. ஆக அவரின் கருத்துகளை மறுக்க இயலாமல் பிறரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவே எனக்கு படுகிறது.. அந்த நண்பர் கருத்தில் உண்மையில்லையெனில் அதை நிருபித்திருக்க வேண்டும், அல்லது அதை காணாமல் இருந்திருக்க வேண்டும்.. அதை விட்டு அவரை கிண்டல் அடிக்க முயன்றிருப்பது ஏனோ!!!
ஆக ஒரு விசயம் தெளிவாக தெரிகிறது.. அனைத்து திரட்டிகளும் ஒரு சில பதிவர்களின் கைகளிலேயே உள்ளது.. அவர்கள் முடிவு செய்யும் நபர்களே, அவர்களை துதி பாடும் நபர்களே பெரும்பாலும் சிறந்த பதிவர்களாக இருக்கின்றனர்..
அதிலும் இந்த தமிழ்மணம்.. ஹூம்ம் நாற்றம் தான் அடிக்கிறது.. இதன் எதிர் ஓட்டு முறை ஒரு புதிர்..யார் ஓட்டு போடுகிறார்,என்ன குறைக்கு அந்த எதிர் ஓட்டு என்கிற எந்த விபரமும் தெரிவதில்லை.. பதிவை ஏற்றிய உடனே 3 எதிர் ஓட்டுகளுடன் தான் அது வருகிறது.. எந்த தேர்தல் முறையிலும் இந்த எதிர் ஓட்டு முறை இல்லை.. 49 0 ஓட்டு முறையில் கூட நாம் ஏன் அந்த ஓட்டை அளிக்கவில்லை என்கிற விவரத்தை அளிக்க வேண்டும்.. ஆனால் இந்த திரட்டிக்கு அது தேவையில்லை..
ஆக இந்த திரட்டிகள் ஒன்றும் பிரம்மாகள் கிடையாது.. மேலும் முன்னரே எழுத வந்த யாரும் வஷிஷ்டர் கிடையாது அவர்கள் மூலம் பட்டம் பெற.. நாம் நம் மனதில் இருப்பதை எழுத இவர்கள் தயவு எதற்கு? ஆக நான் இன்று முதல் இந்த திரட்டிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்.. இதை ஒவ்வொரு பதிவரும் முயற்சி செய்தால் கண்டீப்பாக இந்த திரட்டிகளின் கொட்டம் அடங்கி பல நல்ல பதிவர்களின் திறமை வெளியில் வர வாய்ப்பு இருக்கும்.. நாம் இந்த ஆர்குட் போல, ஃப்ஸ்புக் போல நம் நண்பர்களை இணைத்து பதிவிட்டு மற்ற பதிவர்களை ஊக்குவித்தால் என்ன?
தேன் கூடு தொலைவில் இருந்து பார்த்தால் தனியே இருப்பது போல தோன்றும் ஆனால் அதில் ஓராயிரம் தேனிக்கள் இருக்கும்.. அது போல நாம் ஒரு தேன் கூட்டை உருவாக்கினால் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
12 பதிலடிகள்...:
மறுபடி வந்துட்டீங்களா? ரொம்ப சந்தோசம். அப்படியே இதையும் ஏத்துக்குங்க.
http://www.yetho.com/2009/07/blog-post_18.html
---
நானும் எல்லா பட்டைகளையும் தூக்கிவிட்டேன்.
நல்ல யோசனை தல..,
தமிழ்மணம் கூட அப்படி உருவானதுதானா..?
take it easy.
blogging is an addiction, do not give too much importance.
வாங்க எவனோ ஒருவன் .. நன்றி..
வாங்க சுரேஷ்..ஆமாம்.. உங்களுக்கு பணமும் நேரமும் இருந்தால் நீங்கள் கூட ஒரு திரட்டியை ஆரம்பிக்கலாம்..
வாங்க குடுகுடுப்பை.. நன்றி..ஆமாம் நீங்கள்
சொல்வது மிகவும் சரி.. அதால் தான் நான் இன்னமும் அந்த அளவுக்கு அடிமையாக வில்லை !!!
உங்களுக்கு பின்னூட்டம் எழுதினா, அதுவே ஒரு இடுகையானது.
வாங்க வந்து பாருங்க.
நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று ராஜ்
//நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று ராஜ்//
வாங்க கிரி அண்ணே.. எத சாத்தியம் இல்லைண்ணு சொல்ரீங்க? திரட்டிகள் திருந்துவதா இல்லை புறக்கணிப்பா??
நான் இந்த பதிவிலிருந்து எந்த திரட்டி பக்கமும் செல்வதில்லை அண்ணே!!!
take it easy.
வாங்க இயற்கை..
its already taken easy..
We never mind about the Arrers.. after all for this !!!!
ஓ!
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!