}

Sunday, July 19, 2009

இந்தாங்க பிடிங்க அவார்ட..ஏதோ நம்மால முடிஞ்சுது..

இன்றைக்கு , எனக்கு வந்த ஒரு பின்னூட்டத்தில நண்பர் எவனோ ஒருவன் ஏதோ டாட்காமிலிருந்து,, அய்யய்யோ .. உண்மையத்தான் சொன்னேங்க.. அவர் பேரே எவனோ ஒருவன் தான்.. அவரின் வலைத்தளப் பெயர் ஏதோ டாட்காம் :)

அவர் எனக்கு ஒரு விருதை அளித்திருந்தார்.. அந்த விருதை எனக்கு பிடித்திருந்த மற்ற பதிவர்களுக்கும் அளிக்க விளைத்திருந்தார்.. ஆகவே நான் இந்த விருதை தர விரும்பும் நபர்கள் :

1. கிரி அண்ணன் : நான் முதலில் இந்த பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட ஆரம்பித்தது நம் கிரி அண்ணன் அவர்தம் பதிவுகளில் தான்.. இன்னொரு விசயம் என் அலுவலக கண்ணியில் இவர் தளம் மட்டும்(மற்ற எல்லா தளங்களும் வடிகட்டப்பட்டுள்ளது ) செயல்படும் மந்திரம் எனக்கு இன்னமும் விளங்காத ரகசியம்,ஆச்சர்யம்!!!இவர் பதிவுகளைப் பற்றி நான் சொல்லுவதை விட நீங்கள் ஒருமுறை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.. இன்னமும் ஒரு முக்கிய விசயம் , நெடுங்காலமாக எழுதிக்கொண்டிருந்தாலும், எந்த பதிவுலக அரசியலிலும் சிக்காதவர்!!!

2. மேனகா அக்கா : இவரின் சமையல் குறிப்புகள் என் அம்மிணிக்கு மிகவும் பிடிக்கும், தவிற என்னை வைத்து அடிக்கடி சோதனை வேறு நடக்கும்..

3. தீப்பெட்டி: இவர் நல்ல நண்பர்... அனைவரின் தளங்களுக்கும் சென்று பின்னூட்டம் இடுபவர்..நல்ல எழுத்து நடை கொண்டவர்..

4.ஞானசேகரன் : தற்போதைய வலைச்சர ஆசிரியர்.. பழக மிகவும் எளிமையானவர்.. பல நல்ல படைப்புகளைத் தருபவர்.

5. சுபா : ஒரு நல்ல தோழி , மலேசியாவிலிருந்து .. பல நல்ல விசயங்களை எழுதுகிறார்.. மலேசியாவின் சாலமன் பாப்பம்மா.. தமிழ் மேல் மிகுந்த பற்று கொண்டவர் .

6. இன்னமும் நிறைய பேருக்கு தர விருப்பம்.. ஆனால் அவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம். மேற்கூறிய அனைவரையும் நான் அன்பால் சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை.. மேலும் நான் யாரையும் இதை தொடர வேண்டும் என கேட்கப்போவதில்லை.. அவர்களின் நேரமும் மன நிலையும் எனக்கு சரியாக தெரியாத போது..


ஆகவே இந்த விருதை பிடியுங்கள்..






முடிந்தால், உங்கள் நேரம் ஒத்துழைத்தால், உங்களுக்கு தொடர் பதிவு பிடிக்கும் என்றால் நீங்களும் தொடரலாம்..

12 பதிலடிகள்...:

ஆ.ஞானசேகரன் said...

நன்றி நண்பா

குறை ஒன்றும் இல்லை !!! said...

வங்க ஞானசேகரன்.. இந்த விருதுக்கு உரியவர் தான் நீங்கள்.. ஆகவே நன்றி வேண்டாம்..

Menaga Sathia said...

விருதுக்கு நன்றி தம்பி!!
//தவிற என்னை வைத்து அடிக்கடி சோதனை வேறு நடக்கும்..//
ரொம்ப நேரம் வாய்விட்டு சிரித்தேன்,ஆனா என்ன செய்றது வேற வழியில்லை..
அடிக்கடி டெம்ப்ளேட் மாத்தி கலக்குறீங்க போங்க,அழகாயிருக்கு

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர்.. நன்றி..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள் தல..,

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுரேஷ்.. நன்றி..

Menaga Sathia said...

விருது பெற்ற உங்களுக்கும்,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிக்கா..

கிரி said...

//என் அலுவலக கண்ணியில் இவர் தளம் மட்டும்(மற்ற எல்லா தளங்களும் வடிகட்டப்பட்டுள்ளது ) செயல்படும் மந்திரம் எனக்கு இன்னமும் விளங்காத ரகசியம்,ஆச்சர்யம்!//

ஆஹா! ஆஹா! நீங்க கொடுத்த விருத விட இந்த விஷயம் ரொம்ப சந்தோசமா இருக்கு.

ஆனா உங்க தளம் எங்க அலுவலகத்தில் பிரச்சனை பண்ணுது..பின்னூட்ட பெட்டி திறப்பதே இல்லை..என் வீட்டு லேப்டாப் பிரச்சனை என்பதால் உங்களுக்கு பின்னூட்டம் இட முடியலை..இன்று தான் சரி ஆகியது. முதல் வேலையா உங்களுக்கு பின்னூட்டம் ஓகே வா

//நெடுங்காலமாக எழுதிக்கொண்டிருந்தாலும்//

நெடுங்காலம் எல்லாம் இல்லைங்க..விட்டா என்ன வயசான பதிவர் ஆக்கிடுவீங்க போல :-))

//எந்த பதிவுலக அரசியலிலும் சிக்காதவர்//

அதற்க்கு காரணம் நான் என் வேலையை மட்டும் பார்த்துட்டு இருக்கேன் :-)

//மேலும் நான் யாரையும் இதை தொடர வேண்டும் என கேட்கப்போவதில்லை.//

அப்பாடா! ;-)

ராஜ் தாமத பின்னோட்டத்திற்கு மன்னிக்கவும்..கோவிச்சுக்காதீங்க..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க கிரி அண்ணே நன்றி...

தீப்பெட்டி said...

நன்றி நண்பா,

கடந்த 15 நாட்களாக சிறிய விபத்தினால் மருத்துவமனையில் இருந்ததால் வலைப்பூக்களுக்கு வர முடியவில்லை. இன்று வீடு வந்தவுடன் தான் தங்கள் விருது அறிவிப்பை பார்த்தேன். நன்றி ராஜ்குமார்..

தாமதத்திற்கு வருந்துகிறேன்..

நேரம் கிடைக்கையில் தொடருகிறேன்..

vicky89 said...

வாழ்த்துக்கள்.
சொல்லிட்டேன் ஜக்கம்மா மனிசிடுவ :-)

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!