}

Saturday, November 28, 2009

கவுண்டரும் ஈழ தமிழ் எழுத்து ஆர்வலர் சார்பாக செந்திலும்……

செந்தில் : அண்ணே .. அண்ணே

கவுண்டர் : என்னடா கவுட்டி வாயா? ஏன் இப்படி லாரில அடிபட்ட நாய்
மாதிறி கத்தற?

செந்தில் : ஒண்ணும் இல்லேண்ணே.. உங்கள பாத்து ஈழத்தமிழர் பத்தி
பேசணும்னே..

கவுண்டர் : என்னடா நீதான் உண்மையான ஈழத்த்மிழ் ஆர்வலனா?

செந்த்தில் : அண்ணே.. உண்மையானா ஆளுங்கள் எல்லாம் எதாவது உதவ
முடியுமான்னு பாக்க போய்ட்டாங்கண்ணே..

கவுண்டர் : அப்போ நீ?

செந்தில்: ஹி ஹி ஹி…. சும்மா நேரம் போகாம இருக்க அவங்கள பத்தி
எழுதீட்டு இருக்கேண்ணே

கவுண்டர் : ஓ.. நீ தான அவன்.. வாடி வா.. உன்ன தான் நான் தேடிட்டு
இருந்தேன்..

செந்தில்: அண்ணே இலங்கையில் தமிழர் ரொம்ப கஷ்டப்படுராங்கண்ணே..

கவுண்டர் : இலங்கையில மட்டும் தான் கஷ்டப்படுராங்களா? உங்க பக்கத்து
வீட்டுக்காரன பத்தி கவலைப்படுடா அணுகுண்டு தலையா..

கவுண்டர் : சரி கஷ்டப்படுராங்க என்ன செய்யலாம்?

செந்தில்: ஏதாச்சும் செய்யணுங்க..

கவுண்டர் : அந்த ஏதாச்சும் தான் என்ன?

செந்தில்: போர நிறுத்தணுங்க

கவுண்டர் : எப்படி ? ரயிலுக்கு முன்னாட சிகப்பு கொடி காட்டர மாதிறியா?

செந்தில்: உலகத்தமிழர் எல்லாம் ஒண்ணு சேர்ந்தா நிறுத்திடலாங்க..

கவுண்டர் : எப்படி உலகத்தில தமிழர் எல்லாம் ஒண்ணு சேரணுமா? முதல்ல
உள்ளூர் தமிழர்கள ஒண்ணு சேர்க்க முடியுமாண்ணு
பாருடா ..அப்புரம் உலகத்தமிழர ஒண்ணு சேர்க்கலாம் ..

செந்தில் : இல்லேண்ணா.. போராட்டம் பண்ணலாங்க..

கவுண்டர் : என்ன போராட்டம்?

செந்தில் : போர் வேணாம்னு சொல்லி..

கவுண்டர் : யார் கிட்ட சொல்லி ? எங்கே யாராச்சும் சொல்லுங்க.. யார் கிட்ட
சொன்னா கேட்பாங்க?

செந்தில்: !!?!!??!!!

செந்தில் : தனித்தமிழ் நாடு கேட்டா?

கவுண்டர் : அடி செருப்பால நாயே… இந்தியா மூலமா எல்லாம்
அனுபவிச்சிட்டு இப்போ உனக்கு தனி நாடு கேட்குதோ? கேட்படா
கேட்பே.. உனக்கு இந்தியாவில வாழ பிடிக்கலேண்ணா பக்கம் தான்
இலங்கை அப்படியே நீந்தி போயிடு இல்லே வேர எதாச்சும்
நாட்டுக்கு போயி அங்கே கேளு தனி நாடு வாயிலேயே சுடுவான்..
எல்லாம் இந்தியாவோட தலைவிதிடா..

கவுண்டர் : சரி அத விடு.. நீ என்ன பண்றே?

செந்தில் : நாங்க வலைத்தள எழுத்தாளர்கள்.. ஈழத்தமிழர் படும் பாடு பத்தி
எழுதீட்டு இருக்கோம்.. எங்கள் கண்டனங்களை எங்கள் எழுத்து
மூலமா சொல்லீட்டு இருக்கோம் ,

கவுண்டர் : எத்தன நாளா?

செந்தில் : ரொம்ப நாளா..

கவுண்டர் : எழுதுறத தவிர வேர ஏதாச்சும்?

செந்தில் : இல்லேங்க நாங்க எழுத்து மூலமா தான் போராட்டி இருக்கோம்..

கவுண்டர் : உங்க உணர்வு ரொம்ப சரிடா மண்டையா ..அத நான்
மதிக்கிறேன்.. ஆனா ஒரு சந்தேகம்.. எங்கே , எப்போ எழுதறீங்க?

செந்தில்: எங்க அலுவலகத்தில் தாண்ணே..

கவுண்டர் : அப்படி வாடா பென்சில் மண்டையா.. அப்போ அடுத்தவன் காசுல,
ஃபீரியா பிளாக் கிடைச்சதால உங்களுக்கு ஈழத்தமிழர் மேல பாசம்
வந்து இருக்கு .. அடடா என்ன பாசம்.. ஆமா இதே ஒரு பக்கம் எழுத
10 ரூபாய்னா எழுதுவியா நீ?

செந்தில் : நீங்க ஒட்டு மொத்த தமிழர்கள கொச்சைப்படுத்தறீங்க…

கவுண்டர் : டேய் நாயே நாயே… நான் கொச்சை படுத்தலேடா.. உங்கள மாதிறி
ஆளுங்க தான் .. வெறுமனே எழுதி தமிழன கொச்சைப்படுத்தறீங்க..
தமிழ் மொழி தான்..அதுக்கு உயிர் எல்லாம் இல்லேடா .. தமிழ பேச
மட்டும் பயன் படுத்துடா சண்டை போட எல்லாம் பயன்
படுத்தாதே..

செந்தில் : அப்போ என்ன பண்ண சொல்றீங்க?

கவுண்டர் : யாருக்கு கஷ்டம் வந்தாலும் , நீ கவலைப்பட்டு தான் ஆகணும்..
ஆனா கவலைப்படரது மட்டும் தீர்வு இல்லே.. உன்னால என்ன
பண்ண முடியும்னு பாரு.. முடிஞ்சா ஏதாச்சும் பண்ணு இல்லே
விடு.. அத விட்டுட்டு அத பத்தியே எழுதீட்டு இருந்தா அவனுக்கு
வலி தான் அதிகமாகுமே தவிர குறையாது…

நீங்க எல்லாம் உண்மையான ஈழத்தமிழ் ஆர்வலர்கள்ணா பக்கத்துல இருக்கிர முகாம்கு போய் ஒவ்வொரு குடும்பத்த தத்தெடு.. முடியலயா இப்படி வெட்டியா எழுதற நேரத்தில அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய ஆள் யாராச்சும் கிடைப்பாங்களான்னு பாரு..

செந்தில்: சரிண்ணே .. போய் முயற்சி பன்றேன்..( என்ன இந்த ஆளு.. ஏதோ ஹிட்ஸுக்கு எழுதீட்டு இருந்தா சீரியஸா போய் உதவி கேட்க சொல்ரான்.. இவன இப்படியே விடகூடாது… இவன தமிழ் துரோகியாக்கி எழுதிட வேண்டியது தான்.. )


மிக முக்கிய பின் குறிப்பு : இந்தியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்..முதலில் இந்தியா, பிறகு தமிழ்நாடு, என் குடும்பம், என் சுற்றமும் நட்பும் , என் சக தமிழன், சக இந்தியன் பிறகே மற்ற எல்லோரும் என வாழ பழகிய ஒரு சராசரி இந்தியன்.. ஈழம் பற்றி என்னால் செய்ய முடியாத ஏதாவது எழுதி என்னையும் , பிறரையும் ஏமாற்ற மாட்டேன்..

Saturday, November 21, 2009

தமிழ் ஆதரவாளர்களிடம் சில கேள்விகள்!!!
எல்லோருக்கும் வணக்கமுங்க!!! கடந்த சில மாதங்களாக நமது பதிவுலகில் முக்கிய இடத்தை பிடிச்சது ஈழத்தமிழர் பற்றிய செய்திகளே.. நிற்க .. நான் அதைப்பற்றி ஏதும் எழுதப்போவதில்லை.. எனக்கு சில சந்தேகங்கள்.. அதை தெளிவு படுத்திக்கொள்ளவே ...

1. ஈழத்தமிழர் பிரச்சினையில் யார் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்? காலங்காலமாக நடப்பதாக சொல்கிறீர்கள்.. எப்படியும் இறந்த காலத்தை வாங்க முடியாது.. எதிகாலத்தை நிர்ணயிக்க முடியாது.. ஏனெனில் அமெரிக்கா முதல் ஐ.நா வரை இலங்கையிடம் இதைப்பற்றி வற்புறுத்துகிறார்கள்..

2. இந்தியாவிலிருந்து ஈழத்தமிழர்கள் மேல் பரிதாபப்படும் தமிழர்களுக்கு, நீங்கள் இது வரை எவ்வளவு சக இந்திய தமிழர்களுக்கு உதவி செய்துள்ளீர்கள்?

3. ஒரு வேளை இப்படி பதிவுகளில் எழுதுவதும், சிலரை போற்றுவதும் பலரை தூற்றுவதும் மட்டுமே உங்களால் தமிழர்களுக்கு செய்ய முடிந்த உதவிகளா?

4. கடந்தசில மாதங்களாக முத்துக்குமார் என்வரின் புகைப்படத்தை தத்தம் பதிவுகளில் வைத்து அஞ்சலி செலுத்தினீர்களே இப்போதும் எவ்வளவு பேர் அப்படியே வைத்துள்ளீர்?
ஒரு சமயம் காங்கிரஸ் கட்சியின் முன்னால் அமைச்சர் இளங்கோவன் யார் இந்த முத்துக்குமார் எனக்கேட்டதற்கு பல பதிவர்களும் அவரைத்திட்டி எழுதினீர்களே? இன்னும் கொஞ்சம் காலம் போனால் உங்களில் எவ்வளவு பேருக்கு சட்டென முத்துக்குமார் பெயர் நியாபகம் வரும்?

5. வெளி நாடுகளில் வசிக்கும் சக தமிழர்கள் எவ்வளவு பேர் தமிழர்களுக்கு உதவி செய்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கை, மலேசியா மற்றும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் புதியதாக அந்தந்த நாடுகளுக்கு வரும் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளை அமைத்து தர ஏதாவது அமைப்பை ஏற்படுத்து உள்ளீர்களா? குறைந்தது தொடர்பு கொள்ளவாவது ஏதாவது வழி உண்டா?

6. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழைப் பூர்விகமாக கொண்ட மக்களால் சக தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடிகிறது?

7. இந்தியாவில் அண்டை மா நிலத்தில் வசிக்கும் தமிழர்கள் எத்தனை பேர் சக தமிழர்களுக்கு உதவும் நிலையில் இருக்கின்றீர்கள்?

8. தமிழகத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைந்து விட்டனர் என நினைக்கிறீர்களா? அது அரசாங்கத்தின் வேலை எனில், ஈழ விசயத்தில் மட்டும் எப்படி நீங்கள் எதையாவது செய்ய முடியும் என நம்புகிறீர்கள்? இந்தியாவில வசிக்கும் , சக இந்தியனுக்கு உங்களால் எதையும் பெற்று தர முடிய வில்லை என்றால் எப்படி அடுத்த நாட்டில் வசிக்கும் தமிழனின் துயர் நீக்க போகிறீர்கள்? உங்களால் ஒரு பைசா அளவுக்கேனும் சக தமிழனுக்கு உபயோகம் உண்டா?

9. ஈழத்தமிழர் மேல் அக்கரை கொள்ளும் எவ்வளவு பேர் உடல் தானம் அல்லது கண் தானம் செய்துள்ளீர்கள்?

10. போர் இல்லாத காலங்களில் அல்லது ஒரளவேனும் நல்ல நிலையில் இருக்கும் காலங்களில் ஈழத்தமிழர்களால் மற்ற தமிழர்களுக்கு என்ன உதவி கிடைத்தது.. இப்போதும் பல நாடுகளில் நல்ல நிலையில் வசிக்கும் ஈழத்தமிழர்களால் இந்திய தமிழர்களுக்கு உதவி ஏதேனும் கிடைக்கிறதா?

மேற்கூறிய கேள்விகளுக்கு பெரும்பான்மை கேள்விகளுக்கு இல்லை என பதில் வந்தால் , உங்களுக்கு எந்த தமிழர் பற்றியும் எழுத அருகதை இல்லை... ஆம் என பதில் வந்தால் கண்டீப்பாக ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரு முடிவு வந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்...ஒரு மிக முக்கிய பின் குறிப்பு :

நானும் அருகதை அற்றவனே... அதனால் தான் இன்னும் ஈழம் பற்றி எந்த இடுகையும் எழுதவில்லை !!! எதோ என்னால் முடிந்த அளவு சக தமிழனுக்கு உதவிவிட்டு பிறகு மற்றர் பற்றி கவலை கொள்கிறேன்......
Thursday, November 19, 2009

அண்டமோனியா அம்மையாரும், சில வீரமான தமிழக காங்கிரஸ் பிரபலங்களும் பிறகு நானும்.. பாகம் 1

வணக்கமுங்க... எல்லோருக்கும் வணக்கம்... கொஞ்ச நாளா பதிவுலகத்திலே இருந்து விலகி இருந்தேன் ஆனால் நான் சில பதிவுகளை படித்து வந்தேன்..கடந்த ஒரு மாத காலமாக சில பதிவுகளில் நான் இட்ட பின்னூட்டம் எனக்கு பல பட்டங்களை தந்தது.. அது வேறும் ஒன்றும் இல்லேங்க உளருவாயன், ஒன்றும் தெரியாதவன் அப்படி இன்னும் சில.. எனக்கு அது முன்பே தெரியும் என்பதாலும் மேற்கூறிய பட்டங்களை தந்தவர் பேரறிஞர்( அண்ணா இல்லேங்க ) என்பதாலும் பிரச்சினை அதுவல்ல....

எனக்கு சில சந்தேகங்கள்... உங்களின் பெருவாரியான, நியாயமான கருத்துக்களின் அடிப்படையில் நான் ஒரு வேளை உண்மையாகவே தவறு செய்து இருந்தால் திருத்திக்கொள்ளவே இந்த பதிவு!!!!

ஒரு சின்ன தெரிந்த கதை பிறகு நிறைய தெரிந்த , தெரியாத விவரங்கள்...

ஒரு காட்டில் மிருகங்களின் தொகை அதிகரிக்கவே அதை கட்டுப்படுத்த வழி தெரியாமல் சிங்க ராஜா தவித்தது.. நரி அதற்கு ஒரு யோசனை சொன்னது. அதாவது காட்டில் இருக்கும் அனைத்து மிருகங்களும் ஒரே இடத்தில் கூட வேண்டும் , ஒவ்வொரு மிருகமும் ஒரு நகைச்சுவை சொல்ல வேண்டும். அந்த நகைச்சுவைக்கு அனைத்து மிருகங்களையும் சிரிக்க வைக்க வேண்டும் . ஒரு மிருகம் சிரிக்கவில்லை என்றாலும் கூட நகைச்சுவை சொன்ன மிருகத்தை மற்ற அனைத்து மிருகங்களும் வேட்டையாடிக்கொள்ளலாம் என்பதே அந்த யோசனை.

அதன்படி ஒரு நாளில் அனைத்து மிருகங்களும் ஒன்று கூடின. முதலில் ஒரு கரடி ஒரு நகைச்சுவை கூறியது. அதைக்கேட்ட அனைத்து மிருகங்களும் சிரித்தன ஆனால் ஒரு சுண்டெலி மட்டும் சிரிக்கவில்லை. எனவே அந்த கரடி கொல்லப்பட்டது. பின்பு ஒரு ஒட்டகச்சிவிங்கி கதை சொன்னது அதற்கும் எலியைத்தவிர மற்ற அனைத்து மிருகங்களும் சிரிக்கவே அதுவும் கொல்லப்பட்டது..
இதைக்கண்டு பயந்த படியே ஒரு முள்ளம்பன்றி நகைச்சுவை சொல்ல வந்தது, அதைக்கண்டதும் எலி பயங்கரமாக சிரித்தது.. உடனே சிங்கமும், பிற மிருகங்களும் மிகுந்த கோபத்துடன் எலியைப்பார்த்து காரணம் கேட்டன . அதற்கு அந்த எலி சொல்லியதாம்

ஒன்றும் இல்லை ராஜா! எனக்கு கரடி சொன்ன நகைச்சுவை நியாபம் வந்தது அதனால் தான் சிரித்தேன் என்று..


இந்த சுண்டெலியைப்போலவே நமது தமிழக காங்கிரஸாருக்கு திடீரென ரோசம், கோபம், தன்மானம் எல்லாம் காலம் கடந்து இப்போது வந்துள்ளது.... திமுக வை மிரட்டுகிறதாம்!!!!!


சரி நாம் விசயத்துக்கு வருவோம்.. இந்த பதிவை எழுத காரணமான சம்பவங்கள்

சம்பவம் 1

கீழ்கண்ட புகைப்படங்களை பாருங்கள்..
இரண்டுக்கும் ஏதாவது வேற்றுமை உள்ளதா?
ஒருவர் ஒருவேளை உண்ணாவிரதமிருப்பவர் மற்றவர் ஒரு நாள் மட்டும் ஏழையாக இருப்பவர்... ( ஒரு சமயம் இரண்டாம் வகுப்பில் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போதும் அப்படியா எனக்கேட்டு சொல்லுங்கள்!!!)

எனக்கு வந்த சந்தேகம் என்னவெனில் இந்த பட்த்தில் வேண்டுமானால் முரண்பாடு இருக்கலாம் ஆனால் அதனால் குறைந்த பட்சம் சில ஏழைகளாவது பயன் பெறுவர் என்பதை மறுக்க முடியது, ஆனால் இந்த ஒரு நாள் ஏழையால் எத்துனை பேர் பயனடைந்தனர் ?


இந்த பதிவுக்கான எனது பின்னூட்டமும் அதற்கான பதிலும்..

கேள்வி : //ஏங்க அப்படியே.. இந்த படத்தையும் பார்த்து எவ்வளவு கஷ்டப்படுராருன்னு சொல்லுங்களேன்!!!! அந்தம்மா இரும்பு சட்டி உங்க தலைவர் புது பிளாஸ்டிக் சட்டி.. அவங்க கால்லசசெருப்பு இல்ல உங்க த்லைவர் கால்ல .... பாருங்க
http://2.bp.blogspot.com/_4oBKlv5UVEA/SOdfrlgWfUI/AAAAAAAACBE/NWN6AX12MFg/s400/Rahul+Gandhi.jpg //

// குற்றம் பார்க்கில் அரசியல் இல்லேங்க ... எல்லா கட்சியிலேயும் இப்படி நிறைய முரண்பாடு இருக்கு.. :))))))//

பதில் :// குறை ராஜ்குமார், உங்க மொக்கை லாஜிக் தாங்கலை.. ஒரு ஏழையின் மகனின் கஷ்டத்தை அறிந்துக் கொள்ள அந்த மகனின் தாயின் கணவராக மாற வேண்டும் என்பது போல் இருக்கு உங்க கொடுமையான லாஜிக். ஏன் ப்ளாஸ்டிக் சட்டி, கால் செருப்போட நிறுத்திட்டிங்க? புடவை, ரவிக்கை, பாவாடை , வளையல் எல்லாம் ஏன் எங்க தலைவர் அணிந்துக் கொள்ளவில்லை என்றும் கேட்டிருக்கலாம்.//

என் கேள்வி : ஹா ஹா ஹா.. அது லாஜிக் இல்லேங்க.. நீங்க ஒரு படத்த போட்டு கருத்த சொல்ரீங்க. நானும் அவ்ளொ தான்.. புடவை,ரவிக்கை எல்லாம் உங்க சமாளிப்பு.. நான் சொல்ல வந்த கருத்து வேர நீங்க சொல்ரது வேர,.. ஒருத்தர் கஷ்டப்பட்டு செய்ர வேலையில உங்க தலைவரும் எப்படி பங்கெடுத்துக்கிரார் ? அது தான் கேள்வி... என் புருசனும் கச்சேரிக்கு போனான் என்பது போல உங்க தலைவரும் வேலை இல்லே இல்லே கஷ்டப்பட்டு வேலை செய்ராராம்!!!
நீங்க எப்படி பல்லிளிக்கும் பகுத்தறிவுன்னு தலைப்ப நியாயப்படுத்தறீங்கலோ அதே மாதிறி பல்லிளிக்கும் பாட்டளி தோழமைன்னு எடுத்துக்கலாமில்லையா?//

பதில் : நான் ஒரு புண்ணாக்கும் சொல்லலை.. பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டே எமன் என்பதை மட்டும் எப்படி நம்பலாம் என்பது தான் இங்க கேள்வி. புருஷன் கச்சேரி என்பதெல்லம் வழக்கமான உங்கள் அதிமேதாவி அரசியல் அறிவின் அடையாளத்தை தான் காட்டுது. ஒரு தலைவர் சாமானியனின் இடத்திற்கே வந்தால் தான் அவர்கள் கஷ்டம் புரியும் என்று ஒரு பக்கம் கத்திக் கொண்டே, அப்படி யாராவது வந்து அவர்கள் கஷ்டத்தை நேரடியாக உணர்ந்தால் அய்யோ விளம்பரம் , புருஷன் கச்சேரிக்குப் போறான் என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறோம். மேனுஃபேக்சரிங் டிஃபெக்ட்.

எனது கேள்வி : இப்படிதான் ஒருதடவ கலாவதின்னு ஒரு அம்மா வீட்டுக்கு போய் கஷ்ட்டப்பட்டு வந்து பாராளுமன்றதில் எல்லாம் பேசினாரு.. இப்போ அந்தம்மா எவ்வளவு வசதியா இருக்காங்கன்னு உங்க தலைவர்தான் சொல்லணும்..

ரெண்டவது இந்த கலைஞர் காப்பீட்டுதிட்டம் விளம்பரம், அணுகுமுறை வேணும்னா தப்பா இருக்கலாம் ஆனா அதனால பல ஏழைகள்(அவங்க திமுகவாகவே இருந்தாலும்) பயனடையராங்க.. ஆனா உங்க தலைவரோட ஏழ்மை உணர் திட்டத்தால எத்தன பேர் பயனடைஞசு இருக்காங்கன்னு சொல்ல முடியுமாங்க?

முக்கியமான ஒரு விசயம்... கருணாநிதி பேசரதெல்லாம் மத்தவங்களுக்கு மட்டும் தான்னு ஊருக்கே தெரியும்.. அப்படி இருந்தும் நீங்க படம் போட்டு விளக்கம் சொல்றீங்க அதே சமயம் உங்க தலைவர் படத்த பத்தி சொன்னா கோவம் வருது :)))))))

பதில் : இந்த சப்பை கேள்விக்கெல்லாம் எங்க தலைவர் பதில் சொல்லனுமா? நானே சொல்றேன். அந்த கலாவதி மஹாரஷ்ட்ரா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வசதியா இருக்காங்க.. கடைசி நேரத்துல விலகிட்டாங்க. கொஞ்சம் செய்தியும் படிங்க.

கருணாநிதியின் திட்டத்தை யாரும் குறை சொல்லலை. அந்த விளம்பரத்தை மட்டும் தான். ஒரு முதல்வருடன் ஒரு எம்பியை ஒப்பிடும் உங்கள் மேதாவித்தனம் மீண்டும் மீண்டும் என்னை சோர்வடைய வைக்கிறது. முதல்வரால் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த முடியும். ஒரு எம்பியால் அவ்வாறு செய்ய முடியாது. மேலும் 100 நாள் கட்டாய வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்த அவரும் காரணம். சில கயவாளிகளால் அது சில இடங்களில் கேவலமாக செயல் படுத்தப் படுகிறது.

என்ன சொன்னாலும் நீங்கள் திருப்தி அடைய போவதில்லை. இனி உங்களுக்கு பதில் சொல்லப் போவதும் இல்லை.


எனது கேள்வி : செய்திய முழுசா படிங்க .. அவங்க ஏன் அந்த முடிவு எடுத்தாங்கன்னு... அவர் ஒரு நாள் எழையா இருந்தும் எந்த பிரியோஜனமும் இல்லாம தான்..


அப்புரம் அந்த ஒப்புமைக்கு நீங்க குடுத்த விளக்கத்திலேயே உங்க மேதாவித்தனமும் நல்லா தெரிய்துங்க.. அவர் வெரும் எம்பியா மட்டும் இருந்தா நான் ஏன் கேட்கபோறேன்..? ஊருக்கே தெரியும் அவருடைய பவர் என்னன்னு..:)))))) உங்கள நினைச்சா சிரிப்பா இருக்கு..விட்டா அவரை தொண்டர் மட்டும் தான்னு சொல்வீங்க போல!!!

அப்புரம் வெரும் எம்பி எப்படி அந்த 100 நாள் திட்டத்திலே பங்கேத்தாருன்னு நீங்க தான் விளக்கணும்..

//இனி உங்களுக்கு பதில் சொல்லப் போவதும் இல்லை//

எதிர் பாத்தேன்.. நன்றி//


நண்பர்களே எனது சந்தேகம் ஒன்று தான் கலைஞரின் பகுத்தறிவு (!!!) ஊரறிந்த உண்மை.ஆனால் ராகுலின் ஒரு நாள் ஏழை நாடகம் ?

கடந்த ஐந்தாண்டுகளாக திமுக என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டது காங்கிரஸின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் தானே? திமுக செய்த அனைத்து ஊழல் காரியங்களும் காங்கிரஸுக்கு தெரியாமல் நடந்திருக்காது ஆகவே அதுவும் ஊழலின் ஒரு பங்காளி,..உண்மையாகவே அவர்கள் கூவுவது போல் இந்தியாவின் மேல் அக்கரை இருந்தால் எந்த ஊழலும் நடக்காமல் தடுத்திருக்க வேண்டும். கெட்டது செய்வது விட அதற்கு துணை போவது பெருங்குற்றமல்லவா? இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் காங்கிரஸ் செய்தது விளக்கு பிடிக்கும் செயலுக்கு ஒப்பானதே !!!!! பாவம் இப்போது தான் விளக்கின் சூடு தெரிகிறது போல உள்ளது !!!!


மிக முக்கிய பின் குறிப்பு : நான் திமுக அபிமானி என நினைப்பவர்களுக்கு நேரமிருந்தால் எனது முந்தைய படைப்புகளை பார்க்கவும் !!!!