மக்களே வணக்கம் !!!! நீண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு என் பதிவு ... முதலாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் ஸ்பெக்ட்ரம், ஊழல் , இலவசம், அடுத்த தேர்தலுக்கான கூட்டணி என பரபரப்பு தலைப்பு செய்திகள்.. நாமும் அதில் ஒரு சிறு துளியாக.....
முதலில் திமுக பற்றி , சந்தேகமே இல்லை , 1996 ஆம் ஆண்டின் அதிமுக வை நியாகபகபடுத்துகிறது... கண்டீப்பாக தோல்வி(!!??) தான் என தெரிந்தும் இன்னமும் நம்பிக்கையோடு . கடந்த வருட இலவசங்களையும் , வரப்போகும் தேர்தலுக்கான இலவசங்களையும் சாதனையென கூறியே ஓட்டு கேட்க திட்டமிடும்.. இங்கே தான் எதிர் கட்சிகள் திமுகவின் சாதனைகளை சோதனைகளாகவும், இலவசங்களை இழப்புகளாகவும் மக்களிடம் சென்று சேர்ப்பிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டின் சோதனைகளில் முக்கியமானது இலவச தொலைக்காட்சி. ஒரு ரூபாய் அரிசி மட்டும் அரசு காப்பீட்டு அட்டை... இதன் மூலம் ஒரு குடிமகன் அதிக பட்சமாக எவ்வளவு பயனடைந்து இருக்க கூடும்? அதிக பட்சம் 5000 ? நான் சராசரியாக சொல்கிறேன்.....
இனி நம் கணக்கு, கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில் ஏற்பட்ட விலை உயர்வு , பெட்ரோல், மளிகை பொருட்கள், இதர அடிப்படை தேவைக்கான பொருட்கள், பிழைப்புக்கான ஆதார பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வுகளை வருச வாரியாக பட்டியலிட்டு ஒவ்வொரு ஆண்டின் விலை உயர்வு மற்றும் அதானால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை கணக்கிட்டு கூறினாலே போதும்...
இலவசங்களை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டதால் மக்களுக்கு கிடைத்த பயன்களை விட இழப்பு மிக மிக அதிகமாக இருக்கும். இதை முறையாக மக்களுக்கு கொண்டு சென்றாலே போதும் கருணாநிதியை அவருடைய சொந்த பிரச்சினைகளுக்கு பஞ்சாயது பண்ண அனுப்பி விடலாம்!!!!
சந்தேகம் 1:-
அம்மிணி நீரா ராடியாவின் பேச்சுகளுக்கு ஏன் இன்னமும் தமிழ் பத்திரிக்கைகளும், எதிர் கட்சிகளும் முக்கியத்துவம் தரவில்லை என்பது ...... இதே அதிமுக சம்பந்தப்பட்டிருந்தால் இப்படியா விட்டிருப்பார்கள்?
சந்தேகம் 2:-
அதிமுக ஆட்சியை பற்றி திமுக குறை கூறும் போதெல்லாம் தருமபுரி தீ எரிப்பு சம்பவதை கூற தவறுவதில்லை.. சந்தேகமே இல்லாமல் இது கடுமையான குற்றம் தான்.. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து தூக்கு தண்டணை கூட கொடுத்தாயிற்று. ஆனால் தினகரன் பத்திரிக்கை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு ஏன் இன்னமும் யாரும் கைது செய்யப்பட வில்லை? ஆகவே தருமபுரி எரிப்பை , தினகரன் சம்பவத்தோடு ஒப்புமை படுத்துவத்து நியாயமில்லை எனவே தோன்றுகிறது...
சந்தேகம் 3:-
காங்கிரஸின் பெரிய மாப்பிள்ளை அப்சல் குரு மற்றும் காஸ்ட்லி சின்ன மாப்பிள்ளை கசாப்பை ஏன் இன்னமும் இன்னமும் விருந்தாளியாக வைத்திருக்கின்றனர் என்பதே? இவர்களை விடுதலை செய்து பாகிஸ்தான் அனுப்பினால் அவர்களே சந்தேகப்பட்டு இவர்களை கொன்று விடக்கூடும்...