}

Thursday, January 27, 2011

சோனியா ...இத்தாலி மாஃபியா

சோனியாவை 'சொக்கத் தங்கம்’ என்ற அடைமொழியுடன்தான் அழைப்பார் முதல்வர் கருணாநிதி. ஆனால், 'ஊழல் உலோகம்’ என்று சோனியாவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் டெல்லிப் பத்திரிகையாளர்கள்.

125 ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி, இன்று நித்தமும் ஊழல், முறைகேடுகளுக்கு விளக்கம் சொல்வதை மட்டுமே தனது வேலையாக வைத்திருக்கிறது. வெள்ளையர் களை விரட்டியதே இவர்கள் பங்கு பிரிக்கத் தானோ என்று அச்சம்கொள்ளும் அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்து இருக்கின்றன. ஊழலே நடக்காமல் தடுக்க, சோனியாவால் முடியாது. ஆனால், அது வெளிச்சத்துக்கு வந்த பிறகேனும், உறுதியான நடவடிக்கை களை எடுத்திருக்க வேண்டும். நடவ டிக்கை எடுக்காதது மட்டுமல்ல; அதை மறைக்கும் காரியங்களும் சோனியா ஆசீர்வாதங்களுடன் நடப்பதுதான் இந்திரா காங்கிரஸுக்கு 'கரப்ஷன் காங்கிரஸ்’ என்று பட்டம் சூட்டக் காரணமாகிறது!

'ஊழலைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஊழல் மற்றும் தவறான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி அதைப் பொறுத்துக் கொள்ளாது. அதிகப்படியான எளிமை யும் கட்டுப்பாடும் நம்முடைய வழி களாக இருக்க வேண்டும். அதிகப்படியான சொத்துக்கள் மற்றும் வசதி வாய்ப்பைவெளிப் படுத்தும் வகையில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளக் கூடாது. அதன் மூலம் மற்றவர்கள் கண்களை உறுத்துவதையோ, மற்றவர்க்குப் பொறாமை ஏற்படுத்துவதையோ அனுமதிக்கக் கூடாது. பொது வாழ்வில் ஈடுபடுவோர், அரசியல் வாதிகள் மீதான அனைத்து ஊழல் வழக்கு களும் குறிப்பிட்ட காலத்துக்குள்விசாரிக்கப் பட வேண்டும்!’ - சொன்னவர் மகாத்மா காந்தி அல்ல; சோனியா காந்தியேதான்!

30 நாட்களுக்கு முன் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில்தான் இப்படி முழங்கி னார் சோனியா. ஆனால், இந்த ஒரு மாதத்துக் குள் காங்கிரஸுக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் முடிந்த அளவுக்கு ஆறப் போட்டுவைக்கவும் காரணம், இதே சோனியாவே!

நம்பர் 10, ஜன்பத் வீட்டு ஊறுகாய்ப் பானைக்குள் ஊறப்போடப்பட்டுவிட்ட வழக்குகளின் கதையைவைத்து ஊழல் பாரதம் படைக்கலாம். ஸ்பெக்ட்ரம் முதல் போஃபர்ஸ் வரை அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தேய்பிறை ஆகிக்கொண்டே இருக்கின்றன!

புஸ் ஆகும் ஸ்பெக்ட்ரம்!

இந்திய தேசம் இதுவரை சந்திக்காத மிகப் பெரிய அவமானம்... ஸ்பெக்ட்ரம் 2ஜி அலை வரிசை ஒதுக்கீட்டு ஊழல். அரசாங்கக் கணக்குக்கு வந்தாக வேண்டிய பணத்தைச் சில தனி மனிதர்கள் தங்களது சொந்த சுக போகங் களுக்குத் திருப்பிக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டை மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தன்னுடைய தாக்கீ தாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தந்தது.

'சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளது!’ என்று அவர்கள் குற்றம்சாட்ட... அதில் முகாந்திரம் இருப்பதாகச் சந்தேகப்பட்ட பிரதமர், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்குக் கட்டளை இட்டார். ஓர் ஆண்டு காலம் அவர்கள் 'அமைதியாக’ விசாரித்து வந்தார்கள். அதற்குள் மத்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தன்னுடைய அறிக்கையை வெளியிட்டது. 'முறைப்படி, விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றி இந்த அலைக்கற்றைகளைக் கொடுத்து இருந்தால், 1.76 லட்சம் கோடி வரை அரசாங்கத்துக்கு லாபம் கிடைத்திருக்கும்!’ என்று சி.ஏ.ஜி. கூறியது. எதிர்க் கட்சிகள் இதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டன.

நாடாளுமன்றத்தை நடத்த முடியாத அளவுக்கு ஸ்பெக்ட்ரம் நாறியது. அந்தத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யவைத்தார்கள். எதிர்க் கட்சிகளையும் உச்ச நீதிமன்றத்தையும் இதன் மூலம் அமைதியாக்கிவிட காங்கிரஸ் நினைத்தது. ஆ.ராசா முதல் அவரது பினாமிகள் வீடுகள் வரை சி.பி.ஐ. ரெய்டு போனது. அவரே கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவை எல்லாமே டிசம்பர் சீஸனாக முடிந்து போனது.

''அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசாங்கத் துக்கு ஒரு பைசாகூட இழப்பு இல்லை!'' என்று பேச ஆரம்பித்தார், ராசாவுக்குப் பிறகு அந்தத் துறைக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கபில்சிபல். ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் உரிமம் ரத்தாகும், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று நவம்பர் மாதம் மீடியாக்களிடம் கர்ஜித்த கபில்சிபலின் வார்த்தைகள் ஜனவரியில் தேய்ந்தன. இந்த நிறுவனங்களுக்கு ரகசிய சுற்றறிக்கை அனுப்பி ஃபைன் போடப்பட்டதாகவும், அதை அவர் கள் உடனே செலுத்தியதாகவும் கணக்குக் காட்டினார் கபில்சிபல். 'ஃபைன் கட்டியதால் பிரச்னை முடிந்தது’ என்றார்.

இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமை யில் விசாரணைக் கமிஷனை அமைத்தார் பிரதமர். நீதிபதிக்குத் தரப்பட்ட கால எல்லை முடிந்த பிறகும் அறிக்கை வரவில்லை. இந்த லைசென்ஸை வாங்கித் தரும் புரோக்கராகச் செயல்பட்ட நீரா ராடியாவின் பேச்சுகள் அடங்கிய டேப்புகள்பற்றி, அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரிடம், அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் உத்தரவிட்டார். அந்த அறிக்கையும் வந்ததாகத் தெரியவில்லை. ரெய்டு அடித்த களைப்பில் இருந்து இன்னமும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீளவில்லை. அவர்கள் மத்தியிலும் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது.

தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி முடிவானதால், இந்த வழக்கு முடக்கப்பட்டதா அல்லது சுப்பிரமணியன் சாமி சொல்வதைப்போல, சோனியாவின் சகோதரிகளுக்கும் இதில் பங்கு உள்ளதா என்ற கேள்வியில் புஸ் ஆகிக்கொண்டு இருக்கிறது ஸ்பெக்ட்ரம்!

காணாமல் போகும் காமன்வெல்த்!

உலகம் முழுக்க நம் புகழ் பரப்ப நடத்தப் பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி யால், இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் எந்த அளவுக்குத் தலை விரித்து ஆடுகின்றன என்பதை வெளிச்சப்படுத்திக்கொண்டோம். டெல்லியை அழகுபடுத்துவதில் ஆரம்பித்து, விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தின் கழிவறைகள் வரை எல்லாவற்றிலும் கரன்சியை அமுக்கினார்கள்.

இந்தப் போட்டிகளின் பொறுப்பாளராக இருந்த சுரேஷ்கல்மாடி முதல், டெல்லி மாநில முதல் அமைச்சர் ஷீலா தீட்சித் வரை அனைத்துமே காங்கிரஸ் தலைகள் பெயரே அடிபட்டது. ஒரு பாலம் கட்டுவதற்கு சுமார் 300 கோடி ஆகும் என்றால், இவர்கள் கணக்குப்படி ஒரு பாலத்தைச் சீரமைக்கவே 500 கோடி வரை செலவானது. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் அத்தனை பொருட் களையும், அடக்க விலையைக் காட்டிலும், 60 முதல் 100 மடங்கு வரை அதிக வாடகைக்கு எடுத்தார்கள். எல்லாமே கமிஷன்... எங்கு திரும்பினாலும் பினாமிகள்... என்ற குற்றச் சாட்டுகள் காமன்வெல்த் போட்டி தொடங்கும் முன்பே வெளியில் வந்தன. அமைதி காத்த சோனியா, போட்டிகள் முடிந்த பிறகு சுரேஷ் கல்மாடி மீது நடவடிக்கை எடுத்தார். சிலர் கைதாகினர். ஆனால், கல்மாடி கைதாகவில்லை. அனைத்துக்கும் காரணமான அவர் காப்பாற்றப்பட்டார். இன்று வரை காங்கிரஸ் எம்.பி-யாகவே அவர் தொடர்கிறார். இத்தனைக்குப் பிறகும், 'நான் நிரபராதி’ என்று பேட்டிகள் தந்துகொண்டு இருக்கிறார்.

அவரை மட்டுமல்ல; அந்த வழக்கையே ஒன்றும் இல்லாமல் ஆக்குவதற்காகத் திரை மறைவுக் காரியங்கள் நடக்கின்றன. அதில் முக்கியமானது, காமன்வெல்த் தொடர்பான ஆவணங்களையே காணாமல் அடித்துவிட்டது!

ஊழல் நடந்ததை நிரூபிக்கத் தேவையான டெண்டர் கோருதல், பட்ஜெட் ஒதுக்கீடு, ஒப்பந்த விவரம் ஆகிய மூன்று ஆவணங்களையும் காணவில்லை. பிறகு, எதைவைத்து குற்றச்சாட்டை நிரூபிப்பார்கள்? 'அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு இந்த ஆவணங்களை கல்மாடி அனுப்பிவைத்துவிட்டார்’ என்று பெயர், முகவரியுடன் டெல்லி பத்திரிகைகள் எழுதிய பிறகும் காங்கிரஸ் அமைதி காக்கிறது!

'தாமஸ் நல்லவர்!’

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு ஆணையம் எனப்படும் விஜிலென்ஸ் கமிஷனர்தான் இந்தியாவின் எந்தப் பாகத்திலும் எந்த முறைகேடும் நடக்காமல் கண்காணிக்க வேண்டிய பெரும் பொறுப்புகொண்டவர். அந்தத் துறை ஒழுங்காகச் செயல்பட்டு இருந்தால், நாட்டில் இந்த அளவுக்கு முறை கேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை. அந்த ஆணையத்தின் கமிஷனராக தாமஸ் என்பவரை நியமித்தபோது, நண்டைச் சுட்டு நரியைக் காவல்வைத்த கதைதான் நினைவுக்கு வந்தது. கேரள மாநிலத்தின் சிவில் சப்ளைஸ் கமிஷனராக இருந்தபோது, பாமாயில் இறக்குமதி தொடர்பாக இவர் மீது குற்றச் சாட்டு வந்தது. சிங்கப்பூரில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய கேரள அமைச்சரவை ஒப்புதல் தருவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்ன தாகவே வெளிநாட்டு கம்பெனியில் இருந்து இவர் வாங்கிவிட்டதாக சந்தேக ரேகை படிந்தது. அது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டது. அப்படிப்பட்டவரை விஜிலென்ஸ் கமிஷனராக எப்படி நியமிக்கலாம் என்பதுதான் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்வி.

இந்தப் பதவிக்கு வரக்கூடியவரை பிரதமர், உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஆகிய மூவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதிர்க் கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், தாமஸின் நியமனத்தை எதிர்த்தார். ஆனாலும், மீறி நியமிக்கப்பட்டார் தாமஸ். உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்ட பிறகாவது, அவரை நீக்கி வேறு ஒருவரை நியமித்து இருக்கலாம். ஆனால், சோனியாவின் பாதுகாவலரான ஜார்ஜ் மூலமாகப் பதவியைப் பிடித்தவர் தாமஸ் என்பதால், அது நடக்காமல் போனது. 'தாமஸ் சிறந்த நிர்வாகி. இம்மாதிரியான பதவியில் நியமிக்கப்படுபவரின் தகுதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்விகள் கேட்க முடியாது!’ என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஓர் அரசாங்கத்தின் நியாய தர்மங்கள் எந்த அளவுக் குத் தரம் தாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்பதற்கு தாமஸ் நியமனம் ஒரு சாட்சி!

வீட்டை இடித்தால் மட்டும் போதுமா?

நாட்டைக் காக்க உயிரைக் கொடுத்த தியாகி களின் வயிற்றில் அடித்த விவகாரம்தான் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்!

கார்கில் போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு மும்பை கொலபா கடற்கரையில் வீடுகள் கட்ட அனுமதி தரப்பட்டது. 31 வீடுகள் ராணுவ வீரர்களுக்கும், ஒன்பது வீடுகள் பொதுமக்களுக்கும் கட்ட அனுமதி தரப்பட்டது. ஆறு மாடிகளுக்கு மேல் கட்டக் கூடாது என்பது விதி. அதை மீறி, வீட்டு எண்ணிக்கையை 71 ஆக்கினார்கள். அதன் பிறகு 91 ஆகக் கூட்டினார்கள். 6 மாடிகளை 31 மாடி களாக உயர்த்தினார்கள். மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு இந்தக் காரியங்களைத் தடையில்லாமல் செய்துகொடுத்தது. அரசியல்வாதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவத் தளபதிகளின் உறவினர்கள், காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானின் சொந்தங்கள் என்று உள்ளே புகுந்து வீடுகளைக் கைப்பற்றி னார்கள். கடற்கரை மேலாண்மை விதிகள் மீறப்பட்டதைவிட... தார்மீக நெறிமுறைகள் காற்றில் பறந்தன. பத்திரிகைகள் தொடர்ச்சியாக எழுதியதற்குப் பிறகு, அசோக் சவான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். விதிமுறைகளை மீறியது உண்மைதான் என்பதை உணர்ந்து, 31 மாடிக் கட்ட டத்தை முழுமையாக இடிக்க மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உத்தரவிட்டு இருக்கிறார்.

'விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்த பிறகு, அவ்வளவுதானே... இந்த விசாரணைகளை நிறுத்தி விட வேண்டியதுதானே?’ என்று காங்கிரஸ் தலைவர்கள் மெதுவாக முணு முணுக்கத் துவங்கி இருக்கிறார்கள்!

காப்பாற்றப்படும் கறுப்பு மனிதர்கள்!

நேர்மையாளர் என்ற மன்மோகன் சிங்கின் முகத்திரை கறுப்புப் பணக் குவிப்பு விஷயத்தில் கிழிந்தது. மேற்கு ஐரோப்பிய நாடான வீக்டென்ஸ்டைன், வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று சொல்லப்படும். அங்கு இருக்கும் சுவிஸ், ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் யாரும் எவ்வளவு முதலீடும் செய்யலாம். அதற்கு கணக்குக் கேட்க மாட்டார்கள். அங்கு உள்ள எல்.டி.ஜி. வங்கியில் பணம் போட்டு உள்ளவர்களின் விவரங்களை ஜெர்மன் நாடு வாங்கி உள்ளது. அவர்களிடம் இருந்து நம்முடைய மத்திய அரசு பெற்றுள்ளது. அந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி வழக்குப் போட்டார். 'நாட்டின் வளத்தைச் சூறை யாடிப் பதுக்கியவர்களின் பெயர்களை எப்படி மறைக்கலாம்?’ என்று கேட்கிறது நீதிமன்றம். 'பெயரை வெளியிட மாட்டோம் என்ற உத்தர வாதத்தின் அடிப்படையில்தான் வாங்கி இருக் கிறோம்!’ என்று மழுப்புகிறது மத்திய அரசு.

'வரி வசூல் செய்வதற்காகத்தான் இந்தப் பெயர்கள் வாங்கப்பட்டுள்ளன!’ என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களை வெளியில் சொல்ல இவர்களால் முடியாது. ஏனென்றால், அந்த மனிதர் களின் தயவில்தான் காங்கிரஸ் கட்சியே இயங்கி வருகிறது என்று ராம் ஜெத்மலானி போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

போஃபர்ஸ் பீரங்கியும் இத்தாலி மாஃபியாவும்!

ராஜீவ் படத்தை வரைந்து 'பீரங்கித் திருடன்’ என்று தி.மு.க. பிரசாரம் செய்த இந்த வழக்குக்கு வயது 20. ஆனால், வழக்கு இன்னும் முதல் படியைக்கூடத் தாண்டவில்லை. போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் கமிஷன் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் குவாத்ரோச்சி. இவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சொல்லி, வழக்கை கடந்த மாதம் திரும்பப் பெற்றுக்கொண்டது சி.பி.ஐ.

இதைக் கேட்டதும் நீதிபதி வினோத் யாதவ் ஆடிப்போய்விட்டார். 'சி.பி.ஐ. இப்படிச் செய்வதற்குத் தவறான உள்நோக்கம் இருக்க வேண்டும்!’ என்றார். எந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல் ராஜீவ் காந்தி இந்தியா முழுவதும் தேர்தலில் தோற்றாரோ... அந்த வழக்கு இன்று அநாதையாக நின்றுகொண்டு இருக்கிறது. அஜய் அகர்வால் என்ற ஒரு தனி மனிதர் மட்டுமே இதைப் பேசிக்கொண்டு இருக்கிறார்.



இந்த வழக்கை மறைக்கக் காரணம், ராஜீவ் மீதான குற்றச்சாட்டு மட்டும் அல்ல. சோனியாவுக்கு நெருக்கமானவர் குவாத்ரோச்சி என்பதும் ஓர் அடிப்படைக் காரணம். 'ஆதாரம் இல்லை’ என்று சி.பி.ஐ. சொல்வதும் இதனால்தான்.



ஒரு காலத்தில் இத்தாலிதான் மாஃபியாக்களின் தலைமையிடம் என்பார்கள். சமீப கால இந்திய நிகழ்வுகள் அதை உண்மை என்று நம்பத் தூண்டுகிறது!



நன்றி ஆனந்த விகடன்

Sunday, January 23, 2011

ஒரு ரூபாய் அரிசியும் 1.76 லட்சம் கோடி ஊழலும் பின் புரோட்டா பார்சலும்!!!.....


நம்ம திமுக ஜால்ராக்கள் கி.வீர(!!!!!)மணி, போலி பாதிறி கஸ்பர், பேரன் பேத்தி எடுத்த பிறகும் இளைஞர் அணித்தலைவராக தொடரும் ஸ்டாலின் மற்றும் இன்ன பிறரும் மெகா மகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலை நியாயப்படுத்தி ஒரு விளக்கம் கொடுத்து வருகிறார்கள் பாருங்கள் !!!!
அட அட அட!!!! அந்த விளக்கம் என்னவென்றால்....................................
1. மத்திய அரசிடம் 15.5 ரூபாய்க்கு அரிசி வாங்கி அதை ஒரு ரூபாய்க்கு தமிழக மக்களுக்கு விற்றால் இழப்பு 14.5 ரூபாயா? 
பதில் : அரிசியை வாங்குவது மத்திய அரசிடம், வாங்குவது தமிழக அரசு விற்பது தமிழக மக்களுக்கு( மட்டும் இல்லை என்பது வேறு விசயம்!!!) ஆகவே முழுவதுமாக இல்லையெனிலும் முடிந்த அளவு பயனடைவது பொது மக்கள்.. இழப்பு 14.5 ரூபாயாக இருப்பினும்... ஆனால் ஸ்பெக்ட்ரமில் நடந்தது என்ன? கொடுத்தது மத்திய அரசு, வாங்கியது சிறிதளவும் பொருத்தமில்லாத/தகுதி இல்லாத தனியார் நிறுவனங்கள்,வாங்கிய மறுதினமே பலனடைந்தது தனியார் நிறுவனங்களும் வாங்கும் முன் பலனடைந்தது சோனியா,கனிமொழி,ராஜா மற்றும் சிலர்.. ஆக இது ஸ்பெக்ட்ரம் எப்படி ஒரு ரூபாய் அரிசி விசயத்தில் சரியாகும்? 
2. முறைப்படி ஏலம் விட்டிருந்தால் அது தனியார் ஏகாதிபத்திய கம்பனிகள் ஏலம் எடுத்து அதனால் மக்களுக்கு தொலைபேசி அலைப்புகளுக்கு அதிக செலவை வைத்திருக்கும்.... 
பதில் : முறைகேடாக வாங்கிய கம்பனிகள் ஒன்றும் சுதேசி கம்பனிகள் அல்ல. வாங்கிய உடனேயே அடுத்தவருக்கு விற்று பலகோடி கொள்ளை அடித்தவை.... 


இனி புரோட்டா கதை மூலம் ஸ்பெக்ட்ரம் விளக்கம்..................................
ஒரு ஊரில் மிக பிரபலமான மிலிட்டரி ஹோட்டல் இருந்ததாம். ஒரு முறை புரொட்டா பார்சல் வாங்க நாம் சென்றிருந்தோம்.. அங்கே பார்த்தால் மேனேஜர்,பில்லிங் கிளர்க்,சர்வர் நமக்கு வேண்டியவர்கள்..
 மொத்தமுள்ள 100 புரோட்டாவையும் பார்சல் வாங்குகிறோம். ஒரு புரொட்டாவின் விலை ரூபாய் 10. ஆனால் நமக்கு தான் எல்லோரும் வேண்டிவர்கள ஆயிற்றே... மேனேஜர் கண்காணிப்பில், சர்வரின் பரிந்துறையில் பில் 250 ரூபாயாக போடப்படுகிறது. நாம் சர்வருக்கு 600 ரூபாய் தருகிறோம். நமக்கு லாபம் ரூபாய் 400. சர்வருக்கு ரூபாய் 50, பில் போடுபவருக்கு 100 , மேனேஜருக்கு ரூ 200 லாபம் ஆனால் ஹோட்டலுக்கு இழப்பு என்கின்ற நஷ்டம் ரூ 750. இங்கே சர்வர் ஆ.ராசா, பில்லிங் கிளார்க் கனிமொழி, மேனேஜர் சோனியா !!!! நாம் தான் அனைத்து புரோட்டவையும் வாங்கியாயிற்றே வெளியில் ஒரு திருட்டு கூட்டத்திற்கு புரோட்டா ஒன்று ரூ 20 என 40 புரோட்டாக்களை விற்று நாம் அடைந்த லாபம் ரூ.800.ஆக நாம் செலுத்திய தொகை போக மீதி ரூ.200 மற்றும் கையிருப்பு 60 புரோட்டாகள்.. இந்த 60 புரோட்டாக்களை ரூ 9 ( குறைநத விலையில் சேவையாம்) அளவிற்கே விற்றால் கூட நமக்கு லாபம் 540  .. ஆக நாம் அடையும் லாபம் ரூபாய் 740!!!!! கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் உத்தியே நாட்டின் சொத்தை சகாய விலைக்கு கொள்ளை அடித்து , பாதியை மிகப்பெரிய லாபத்திற்கு விற்று மீதியை வேறு வழியில்லாமல்( ட்ராய் விதிப்படி )  சகாய விலையில் கொடுப்பது சேவையாம்!!!! 


கவுண்டர் அட்டாக் : அடேய் !! அடி... அடேடி !!!! உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? விட்டா ஸ்பெக்ட்ரம்னா ரங்கநாதன் ஸ்ட்ரீட்ல 10 ரூபாய்க்கு கிடைக்கிறதுன்னு சொன்னாலும் சொல்லுவீங்க போல !!

Thursday, January 20, 2011

அய்யோ கொல்றாங்களே !!!! அன்றும் இன்றும்!!!!...


அன்று ...



காரணம்

இன்று நாம்..




காரணம்...




இதுக்கு பேர் தான் பழிக்கு பழியா? 

Wednesday, January 19, 2011

வரலாறு தெரியாத மானங்கெட்ட கவிஞர்களே.......சென்னை சங்கமம்....


 கனிமொழி ராஜினாமாவாம் !!!! 

 


 மே 22, தமிழர்பகுதியில் குண்டு வெடித்தது..


அதே மே 22,23 ஆம் தேதிகளில் கனிமொழி தனக்கு எந்த மந்திரி பதவி, தன் மனம் கவர்ந்த ராசாவுக்கு எந்த மந்திரி பதவி என நீரா ராடியாவிடம் பேரம் பேசியது...







கனிமொழி - நீரா ராடியா உரையாடல்
22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்
கனிமொழி: ஹலோ
நீரா: கனிநேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...
கனி: ம்ம்
நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோமாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...
கனி: ஆம்ஆனால் யாரும்... யார் சொன்னது?
நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...
கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.
அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?
நீரா: வந்தவர்களா இல்லையாசொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.
கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார்அவ்வளவுதான். இதோ பாருங்கள்பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.
நீரா: ம்ம்..
...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
கனி: ஓகேநான் இங்கேதான் இருப்பேன்.
நீரா: ஓகே.
கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.
22.5.2009
மதியம் மணி 46 நிமிடம்
15 விநாடிகள்
கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?
நீரா: இல்லைகாங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.
கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக,எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)
நீரா: ஆம்ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?
கனி: அதுதான்அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.
நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன?நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?
கனி: இல்லைஅப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.
நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான்அல்லவா?
கனி: ஆம்ஆம்.
நீரா: இதுதான் அரசியல்மை டியர்.
22.5.2009
இரவு மணி 04 நிமிடம்
19 விநாடிகள்
நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...
நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனிராசாபாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறுஅறிவித்திருக்கிறார்.
கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப்பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால்,மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவைஅரசியலில் இதெல்லாம் நமக்குத்தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம்பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான்கேள்விப்பட்டேன்அவர்கள்...
நீரா: ஓ.கே.ஆமாம்நான் ராசாவுடன் பேசினேன்.
23.5.2009
காலை மணி 59 நிமிடம்
விநாடிகள்
நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள்புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும்எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.
கனி: அது சரி.
நீரா: ஆம்இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.
கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
நீரா: ஆம்சரிதான்.
கனி: ஆனால் ஒரு விஷயம்நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போலஅவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும்அவர் பதில் சொல்வார்.
நீரா: ரொம்ப சரி. ஆம்பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.
கனி: இல்லையில்லைஅதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு(மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை

தற்போது, சென்னை சங்கமம் என்ற பெயரில் ஊரார் சொத்தை கொள்ளை அடித்து தன் சுயநலத்திற்காக விளம்பரம் தேடும் முயற்சி. 


இது எல்லாம் நன்கு தெரிந்தும் , நற்றமிழை மட்டும் கற்றறிந்த(!!!) கவிஞர்கள் , தவறுக்கு துணை போன வரலாற்று பிழை...தமிழ் கவிதை சங்கமமாம் ... 



ஒருவருக்கு புகழ் வேண்டி எது வேண்டுமானாலும் செய்யலாம் எனில் , பிணக்குவியலுக்கு மேல் கூட விருந்துண்ன முடியுமெனில் , அதற்கு பேசாமல்....... 



ஒரு முக்கிய குறிப்பு: இப்பதிவை எழுத காரணமாக இருந்த அண்ணன் சவுக்கு அவர்களுக்கு நன்றி... 

Wednesday, January 12, 2011

வடக்குபட்டி ராமசாமியும் ஆந்திரா காங்கிரஸும்!!!!!

மறைந்த முன்னால் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன் மோகன் புதிய கட்சி துவங்கபோகிறாராம். இனி ஆந்திர காங்கிரஸ் நிலமை? நம்ம கவுண்டர் கிட்டே கேட்டால் !!!!


cropped with SnipSnip


இனிமேல் இந்தியா முழுவதும் காங்கிரஸின் நிலமை?


cropped with SnipSnip


Thursday, January 6, 2011

படம் பார்த்து கதை சொல்லு !!!2010 ஆம் ஆண்டின் திரைப்படம் & அரசியல் ஒரே பார்வை !!!!














  மிக முக்கிய பின் குறிப்பு : இவை யாவும் எனக்கு மின்னஞ்சலில் வந்தவையே !!! ஹி ஹி ஹி...