இது வரை ஆயிர கணக்கான பதிவுகள் .. இலங்கை தமிழர்களையும் அவர் தம் இன்னல்களையும் பற்றி !! அதுவும் நமது முதல்வர் கருணாநிதியை பற்றி நல்லதும் பல பொல்லாததுமான பதிவுகள் .. என் பதிவும், அதுவும் முதல்(மீள்) பதிவும் அவரை பற்றியதே(பற்று கொண்டு அல்ல !!!!)
எல்லோரும் இது வரை கருணாநிதி பற்றி எழுதும் போது அவர் இதை செய்திருக்கலாம் அல்லது அதை செய்யாதிருக்கலாம் என்றே எழுதி வந்தனர் ..
ஆனால் எனக்கு ஒரு சின்ன கற்பனை ..
ஒரு வேலை இந்த அனைத்து துன்பங்களும் நிகழும் போது ஜெயா , காங்கிரஸின் உதவியோடு முதல்வராகவும் ஏனைய தலைவர்களும் கருணாநிதியும் ஒரே அணியிலும் இருந்து இருந்தால் எப்படி கருணாநிதி அதை எதிர் கொண்டு இருந்திருப்பார் ?
*அய்யகோ உடன்பிறப்பே என்று நாளும் பத்து மொக்கை கடுதாசி எழுதி இருப்பார் !!!
*கருணாநிதி செய்த அனைத்து கோமாளித்தனங்களையும்( அதாங்க தந்தி அடிப்பது, பேருக்கு ராஜினாமா கடிதம் வாங்குவது, தமிழர் சங்கிலி அமைப்பது, நன்கு மணி நேர உண்ணா விரதம் ) ஜெயா செய்திருந்தால் சன் தொலைக்காட்சியும் ,கருணாநிதி தொலைக்காட்சியும் அதை உலகுக்கே எதிர் மறையாக கொண்டு சேர்த்திருக்கும் !!!
* தினமும் ஈழக் கொடுமைகள் சன் மற்றும் கலைஞர் கருணாநிதி காட்டப்பட்டிருக்கும்.
* நக்கீரன் போன்ற வார முரசொலி பத்திரிக்கைகள் பல்வேறு ஜிகினா வேலைகலை அட்டைப்படங்களில் வைத்து காசு பார்த்திருக்கும்..
* முத்துகுமரன் ஒரு லட்சிய் மாவீரனாக அவர் தம் குடும்ப தொலை காட்சியில் கொண்டு சேர்க்கப்பட்டு இருப்பார் !!
* நண்பன் பிறகு இல்லவே இல்லை அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று பல்டி அடிக்க பயன் பட்ட திரு.பிரபாகரனை எனது மூத்த மகன் என்று சொல்லி இருப்பார் !!!
* சொக்க தங்கம் சோனியா பிய்ந்து போன தகரம் ஆக ஆக்கப்பட்டு இருப்பார்..
* காங்கிரஸ் மற்றும் அதிமுக ஒரு தமிழ் துரோக கட்சிகளாக சித்தரிக்கப்பட்டு அதை ஒரு தீண்டத்தகாத கட்சிகளாக தமது ஊடங்களின் மூலம் திணித்து இருப்பார் !!!
* இன்னும் என்ன வெல்லமோ செய்திருப்பார் தன்னை ஒரு தமிழின தலைவராக காட்ட .. ...
நல்ல வேலை அப்படி எதுவும் நடந்து எனது சந்ததியர் இவரை ஒரு தலை சிறந்த தலைவராக அடையாளம் காட்டப்படவில்லை !!!
கவுண்டர் அட்டாக் : டேய் தேங்கா மண்டயா.. ஆட்டோ வரும்டா. உன்னோட மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ ரெனியூல் பண்ணீட்டியாடா கேப்சூல் வாயா?
Monday, June 29, 2009
Sunday, June 28, 2009
நானும் சத்துணவும் பின் என் பள்ளி வாழ்க்கையும்...
நண்பர்களே.. நமது நண்பர் திரு.பழனி சுரேஷ் அவர்களின்
அன்புக்கட்டளையை ஏற்று எழுதும் தொடர் பதிவாகும். முதலில் எனக்கு
இந்த தொடர் விளையாட்டில் பங்குபெற தயக்கம் இருந்தது.. ஆனால் இந்த
பதிவை எனது பெற்றோருக்கு சமர்ப்பணம் செய்யவே எழுதுகிறேன்..
மிகவும் ஏழ்மையில் இருந்த போதும் என்னையும் எனது தம்பியையும்
வேறு எந்த வேலைக்கும் அனுப்பாமல் நன்கு படிக்க வைத்ததற்கான ஒரு
....................(என்னால் எதையும் நிரப்ப இயலவில்லை) பதிவாகும்..
எனது பெற்றோர் மிகவும் ஏழ்மையில் இருந்த காலம்,நாங்கள் ஒரு ஊரில் கூலி வேலை செய்து எங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தோம். அப்போது பால்வாடி எனப்படும் சத்துணவுக் கூடங்களை அமைத்து அனைத்து ஏழைக்குழந்தைகளுக்கும் மதிய உணவு தரப்பட்டு வந்தது.. ஆகவே நானும் சத்துணவு(சத்தா இல்லையா என்பது வேறு விசயம்,, பசி வந்தால் பத்தும் பறந்து போகும் சத்தாவது ஒன்றாவது..)வேண்டியே முதன் முதலாக பள்ளிக்கு சென்றேன்.. ஆனால் நான்,எனது தம்பி மற்றும் எனது தந்தை வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர் மகனும் விளையாடிக் கொண்டிருந்த போது, நாங்கள் அவனை விளையாட்டில் ஜெயிக்க அது பொறுக்காமல் அந்த பையன் என்னை காலால் எட்டி உதைததான். நான் அப்போது மணல் மேட்டிலிருந்து உருண்டு விழுந்த காட்சி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது..இதை கண்ட எனது தாய் அந்த பையனை முதலாளி மகன் என்றும் பாராமல் அடித்து விட்டார்.. ஆகவே எனது சத்துணவு பள்ளியும்,எனது தந்தையின் வேலையும் போக நாங்கள் பிழைப்பை வேண்டி வேறு ஊர் நகர்ந்தோம்..
எனது தந்தைக்கு மற்றொரு ஊரில் வேலை கிடைக்க, நாங்கள் ரயில்வே புறம்போக்கு இடத்தில் ஒரு குடிசையை கட்டி அடுத்த கட்ட சோதனையை சந்திக்க தயாரானோம். அது சமயம் எனக்கும் 5 வயதாகவே என்னை பள்ளியில் சேர்க்க முடிவு செய்து அருகில் இருந்த பள்ளிக்கு சென்றோம்.. அது கிறித்துவ தொடக்க பள்ளி, மூன்றாம் வகுப்பு வரை இருந்தது.. எனது வலது கையை தலையின் மேல் சுற்றி இடது காதை தொட வைத்து பள்ளியில் சேர்த்தனர்.. ஆக எனது பள்ளி வாழ்க்கை தொடங்கியது.. எனது முதல் வகுப்பு ஆசிரியை பெயர் எல்லாம் சொல்ல மாட்டோம் ஒண்ணாம் வகுப்பு டீச்சர் என்றே கூறுவோம். அவ்வளவாக எனது முதலாம் வகுப்பு பற்றிய பள்ளி நினைவுகள் , நினைவில் இல்லை .ஆனால் முதல் வகுப்பில் கிடைத்த நணபர்கள் சிலர் இன்னமும் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி தான்..
எங்களை லட்சுமி பாராமல் இருந்தாலும்,சரஸ்வதியின் அருள் நன்றாகவே இருந்தது. நான் எனது முதல் வகுப்பு முதல் 10 ஆவது வகுப்பு வரை தொடர்ந்து முதல் இடம் பெற்றேன்.இரண்டாம் வகுப்பில் நான் சேர்ந்த போது நான் வகுப்பு தலைவனாகவும் ஆக்க பட்டேன். ஒரு சமயம் எனது ஆசிரியை என்னை ஒரு வேளையாக வீடு வரை சென்று வர சொன்னார். நானும் சென்று அவர் கூறிய வேலையை முடித்து பள்ளிக்கு திரும்பினேன். அது மதிய உணவு வேலையாதலால் எனது ஆசிரியரும் என்னை சாப்பிட்டாயா என கேட்க நானும் ஆமாம் வீட்டில் பழைய சாப்பாடு சாப்பிட்டு வந்தேன்(ஏனெனில் நான் எனது சத்துணவை தவற விட்டு விட்டேன்) என பதில் சொன்னேன்.. அவர் என்னை திட்டி ,ஒரு தட்டு கொண்டு வர செய்து அவருடய சாப்பாட்டை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..நான் மிகவும் கூச்சத்துடன் தலை கவிழ்ந்து உண்டது இன்னமும் நியாபகம் உள்ளது.
மூன்றாம் வகுப்பு , எங்களுக்கு ஆங்கிலம் தொடங்கியது. எங்கள் வகுப்பு ஆசிரியை பெயர் தெரியாது ஆனால் அவரை அனைவரும் குண்டு டீச்சர் என கூப்பிடுவோம். அவர் தான் எனக்கு எனது பெயரை ஆங்கிலத்தில் எழுத கற்றுக்கொடுத்தார்.. அது முதல் அனைத்து ஆங்கில ஆசிரியர்களும் நன்கு கற்பிக்க எனக்கு ஆங்கிலம் நிறைய பிடித்து விட்டது.. எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதி எனது பெற்றோரிடம் காட்ட அவர்களும் அதை ஒரு பெரிய சாதனையாக கருதி அண்டை வீட்டாரிடம் சென்று புகழ்பரப்பினர்..
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் எந்த சுவாரசியமான நிகழ்ச்சியும் அவ்வளவாக நினைவில் இல்லை. ஆனால் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வாரம் திங்களன்று அனைத்து மாணவர்களும் ஒன்று கூடி சில உறுதி மொழிகளை எடுப்பது வழக்கம்.. அப்போது அனைத்து வகுப்பு தலைவர்களும் மற்ற தம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சில அடி இடைவெளியில் நின்று அவரவர் வகுப்பு ஆஜர் என சொல்ல வேண்டும், நானும் வகுப்பு தலைவன் என்பதால் எனது தந்தையை அழைத்து என் ஆஜரை பார்க்க வைத்தேன்..அவர் முகத்தில் தெரிந்த மகிழ்சி இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது..
நண்பர்களே.. இத்துடன் எனது ஆரம்ப பள்ளி வாழ்க்கை முடிந்தது.. எனது உயர் நிலை பற்றி பிறகு முடிந்தால் பார்ப்போம்...அதில் சில சோகங்களும், பல சந்தோசங்களும் ,சில காதல்களும் இருக்கும்..

Thursday, June 25, 2009
நானும், கவுண்டரும், 21 கேள்விகளும்..
நண்பர்களே.. என்னையும் மதித்து ஒரு நண்பர் இந்த தொடர் பதிவை எழுத அன்புக் கட்டளை இட்டார். அதற்கு மறுப்பு தெறிவிக்க இயலாமலேயே நான் இந்த பதிவை..................
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?...
நாம தான் ஏழையா போய்ட்டோம் .. நம்ம பையனாவது ராசகுமாரனா வரட்டுமேன்னு என்ன பெத்தவங்க வச்ச பேரு..எனக்கு பிடிக்குங்க.. ஏன்னா எனக்கு சொந்தமானாலும் மத்தவங்க தானே அதிகமா உபயோகிக்கிறாங்க..
கவுண்டர் : அப்போ எனக்கு புடிக்கல மாத்திக்குவியா?
2. உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?.....
பிடித்திருந்தது.. நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 கு 90 மதிப்பெண் வாங்கினேன்..அதில் தமிழ் முதல் தாளில் 100 க்கு 98 :) அதற்க்கு காரணம் என் கையெழுத்து என நம்புகிறேன்..இப்போதெல்லாம் எழுத வாய்ப்பு கிடைப்பதில்லை..
கவுண்டர் : டேய்.. என்ன கேட்டாங்க என்ன சொல்லி இருக்கே? நீ பத்தாவதில எத்தன மார்க் எடுத்தேங்குறதெல்லாம் இப்போ அவசியமா? என்னமா விளம்பரம் செய்றான்..
3. கடைசியாக அழுதது எப்போது?...
நான் ரொம்பவும் உணர்ச்சிவசப்படக்கூடிய ஆளுங்க.. ரொம்ப சந்தோசமா இருந்தாலும் கண்ணுல தண்ணி வரும்...அதால ...
கவுண்டர் : முதலைக்கு கூட தான் அடிக்கடி கண்ணுல தண்ணி வரும்.. அப்போ முதலயாடா ஜிப் வாயா?
4. பிடித்த மதிய உணவு?...
மனுசன தவிற மத்ததெல்லாம்,,, நிறைய இருக்குங்க.. ஆனா இப்போ டயட்ல இருக்கேன் :)
கவுண்டர் : அடங்கப்பா சாமி!!!.. நீ டயட்ல இருக்கியா? அன் லிமிட்டேட் மீல்ஸ் ரெண்டு திங்கிறது உங்க ஊர்ல டயட்டா?
5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?....
கண்டீப்பா...
கவுண்டர் : ஆமா நான் கூடங்க..
6. ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?...
என்னங்க கேள்வி இது? பார்க்கறவங்கள தான்..
கவுண்டர் : அப்போ நான் என்ன பக்கத்து வூட்டு காரனயா பாப்பேன்? தப்பா கேட்டுட்டீங்க..அந்த ஆள் யாருன்னு சொல்லி இருக்கணும்..
7.உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?...
பிடிச்ச விஷயம் : தப்புண்ணு தெரிஞ்சா அது யாரா இருந்தாலும் மன்னிப்பு கேட்பது
பிடிக்காத விஷயம் : தப்பில்லேன்னு தெரிஞ்சா அது யாரா இருந்தாலும் விட்டு கொடுக்காதது
கவுண்டர் : ஆமா இவரு பெரிய நக்கீரரு.. நெற்றிக்கண்ண தொறந்தாலும் ஒத்துக்க மாட்டாரு.. அந்த கட்டய கொடுங்க சார் எப்படி ஒத்துக்க வைக்குறேன்னு பாருங்க..
8. பிடித்த மணம்?.....
சந்தன மணம்..
கவுண்டர் : உங்கிட்ட என்ன மணம்டா அடிக்குது? ஸ்ஸோ சாமி, தாங்க முடியலடா..போடா.. போயி அந்த நாத்தம் புடிச்ச ஸ்பிரேவ அடிச்சிட்டு வா..
9. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?.....
நல்ல வேகமான திரைக்கதையுள்ள , நகைச்சுவை கலந்த படங்கள்( நன்றி அக்பர்)
கவுண்டர் : பாருங்க்கய்யா எத எல்லாம் திருடுறான்னு...
10. கடைசியாகப் பார்த்த படம்?...
பசங்க ...
கவுண்டர் : இவன் நிஜத்தில பசங்கள பாக்குறது இல்ல . ஆனா படம்னா பசங்கள மட்டும் தான் பாப்பானாம்!!!
12. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?.....
பிடித்த சத்தம் : மகிழ்ச்சியாக இருக்கும் போது சிரிப்பது
பிடிக்காத சத்தம் : வழியின்றி பசியாக இருக்கும் அழுவது (அதுயாராக இருந்தாலும்.)
கவுண்டர்: அட்ரா அட்ரா அட்ரா.....
13. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?....
ஆமாங்க நிறய இருக்கு ..
கவுண்டர் : எங்கே ஒண்ணு சொல்லு.. எப்படியெல்லாம் ஏமாத்துறான் பாருங்க.. உன் தனித்திறமை என்னான்னு எனக்கு தெறியும்டி...யாருகிட்ட?
14. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?.....
தாம் செய்தது தவறென்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்தும் இல்லையென வாதாடுவது..
கவுண்டர் : ஆஆ... இவரு பெரிய இவரு.. வாதாட மாட்டாராம்..
15. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?....
மூக்குமேல் வரும் கோபம்...
கவுண்டர் : டேய் டேய்...அப்புறம் எனக்கு நாக்குக்கு மேல வார்த்தை வரும் பரவாயில்லயா?
16. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?....
வழ்வு தான்
கவுண்டர் :ஃப்ர்ர்ர்ர்ர்ர்ர். காமெடியாம்.. சிரிக்சுடுங்க..
17. கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா...
இரண்டிலும் குளிக்க பிடிக்கும்.
கவுண்டர் : அது எல்லாம் குளிக்கிறவன் கிட்ட கேளுங்கப்பா!!!
18. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?..
குழந்தைகளை அடிப்பது..
கவுண்டர் : அப்போ உன்ன அடிக்கிறது புடிக்குமா? என்னடா நாராயணா?
19. இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?...
கவுண்டர் ..
கவுண்டர்: அட்ரா அட்ரா அட்ரா.....
20. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?.....
ஹி ஹி என்னை இந்த விளையாட்டிற்கு அழைத்தது தான்..
கவுண்டர்: ஓ .. அப்போ இதுக்கெல்லாம் காரணம் நீ மட்டும் இல்லயா?
21. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?.....
யாரையும் அழைக்கப்போவதில்லை..
கவுண்டர் : மகா ஜனங்களே.. இவன் கூப்பிட்டா யாரும் மதிக்க மாட்டங்க.. அதால் என்னமா டகால்டி உட்ரான்

Wednesday, June 24, 2009
ஆகவே கர்வமாய் இருப்போம் பதிவர்களே..
நான் இந்த பதிவுலகத்திற்கு புதியவன். அதனால் தான் பல பதிவர்களைப் பற்றிய கிசு கிசு க்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறேன்.நான் கடந்த ஆறு மாத காலமாக பதிவுகளை படித்து மட்டுமே வந்தேன்.அதிலும் எனது அலுவலகத்தில் பதிவுகளை படிக்க மட்டுமே இயலும் ஆனால் பதிலிட அனுமதி இல்லை. அதனால் தான் என்னால் பல நல்ல பதிவுகளை படித்தும் பதிலிட முடியாமல் போனது. மிக அண்மையில் நான் மடிக்கண்ணி வாங்கி இணைய வசதியையும் பெற்றேன்.. இருந்தும் நான் பதிவு எதுவும் எழுதாமல் வழக்கம் போல பதிவுகளை படித்து ,முதன் முறையாக பதிலிட்டும் வந்தேன்.(என்னுடய முதல் பதிலே கிரி அவர்கள் எழுதிய ரஜினி பற்றிய பதிவிற்கு,அதற்கு அவரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டது வேறு விசயம்!!!). பின்னொரு நாள் ஒரு நண்பர் கருணாநிதியைப் பற்றி ஆதரவாக எழுதி இருக்க நான் அவருக்கு எதிர் ஓட்டு போட்டு (அந்த நண்பரிடம் கூறிய பின்னரே) பின்னர் நானும் என் பதிவுலக கடலில் குதித்தேன்..
நிற்க.. இந்த பதிவு கண்டீப்பாக எந்த பதிவரையும் வம்புக்கிழுக்கவோ அல்லது எனது பதிவுலக வரலாறு பற்றியதோ அல்ல..
நான் சில பதிவுகளை காணும் போது சில பதிவர்கள் அவர்தம் பதிவுகளில் மற்ற பதிவர்களுடன் ஒப்பிட்டு தம்மை மிக தாழ்த்தியும் சில பதிவர்களை மிக உயர்த்தியும் எழுதக் கண்டேன். பிற பதிவர்களை எப்படி வேண்டுமானாலும் இல்பொருள் உவமையணியுடனோ அல்லது தற்குறிப்பேற்ற அணியுடனோ வாழ்த்தலாம். அது தவறில்லை. எனது சந்தேகம் ஏன் நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டும்?
ஒரு பதிவர் மிகச்சிறந்தவர் என்றால் அவரை கட்டி முடித்த கோபுரம் என்றும் தம்மை கொட்டிக்கிடக்கும் செங்கல் என்றும் ஏன் ஒப்புமைப் படுத்த வேண்டும்? அவர் வேண்டுமானால் கட்டி முடித்த கோபுரமாக இருக்கட்டும் நீங்கள் உங்களை (கோபுரம்)கட்ட கிடக்கும் செங்கல் எனக் கூறலாமே?
நீங்கள் கேட்கலாம் உனக்கு என்ன வந்தது? அது அவரவர் விருப்பம். உனக்கு பிடிக்க வில்லை என்றால் படித்து விட்டு போகவேண்டியது தானே? என்று.. நியாயமான கேள்வி. நானும் சக பதிவர் எனும் முறையில் எனது உள்ளக் குமுறலைக் கொட்டலாமல்லவா?
என்னைப் பொறுத்த வரை எந்த எழுத்தாளனுக்கும் கர்வம் வேண்டும். நாம் படைப்பது நல்ல படைப்பு என நம்ப வேண்டும். நம் படைப்பை நாமே நம்பாமல் மொக்கை என்றோ அல்லது கிறுக்கல் என்றோ கூறுவது எந்த வகையில் நியாயம்? இது கெட்டுப்போன உணவை விருந்துக்கு படைப்பது போலாகாதா? நல்ல பதிவா இல்லையா என்பதை படிப்பவர் முடிவு செய்யட்டுமே ?
அதே சமயம் நம் பதிவில் ஏதேனும் குறை கண்டறியப்பட்டால் அதை எதிர்த்து வாதம் செய்யாமல் தவறை திருத்திக்கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏன் எனில் நாம் இங்கு வந்திருப்பது பதிவிட தானே தவிற சண்டையிட அல்ல..
எனக்கு வரும் பின்னூட்டங்களை விட நான் பிறருக்கு இடும் பின்னூட்டங்களின் பதிலைக் காண மிகவும் ஆவலாக இருப்பேன். என் பின்னூட்டத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் நான் சம்பந்தபட்ட பதிவரின் பக்கமே செல்ல மாட்டென். அவருக்கு அந்த அளவிற்கு வேலைப்பளு இருந்தால் ,எனக்கு சிறிதளவேணும் இருக்காதா? எனது பதிவிற்கு வந்து படிப்பதும் , பிடித்தால் பதிலிடுவதும் அவரவர் உரிமை. ஆனால் தம்மை மதித்து ஒருவர் இடும் பின்னூட்டத்திற்கு பதிலலிப்பதும் சம்பந்தப்பட்ட பதிவரின் கடமையே.. இல்லை தம்மால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வரும் பின்னூட்டங்களுக்கு பதிலலிக்க நேரம் போதவில்லை என்றால் அதை முதலிலேயே கூறலாமே? என்னால் 50 பின்னூட்டங்களுக்கு மேல் வரும் பின்னூட்டங்களுக்கு பதிலிட முடியாது என்று? ஆக பின்னூட்டங்களும் வேண்டும் ஆனால் பதிலிடமுடியாது என்றால்???...................................
என்னடா இவன் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை ஆனால் அதற்குள் இப்படி எழுதுகிறானே என யாரும் என்னை தயவு செய்து திட்ட வேண்டாம். அதை நம்ம கவுண்டர் பார்த்துக் கொள்வார். நான் எழுதியதில் ஏதேனும் தவறிருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள்.. அது என் எழுத்தை மேம்படுத்த உதவும்..
A MAN IS WHO,TREATS A MAN AS A MAN IS A MAN
கவுண்டர் அட்டாக் : என்னமா பேசறாண்டா இந்த பேரிக்கா மண்டயன். எங்கேயோ போய் நல்ல பல்பு வாங்கிட்டு வந்து இங்கே வெடிக்கிறான் .. ஆனா உன் எழுத்த படிக்க அதிகமா யாரும் வர்ரதில்லேனாலும் நீ எழுதற பின்னூட்டத்துக்கு பதில் கெடைக்குதுள்ள? அப்புறம் என்ன உனக்கு? எதுக்கு இந்த விளம்பரம் ?ஆமா அது என்னடா ஆ வூண்ணா நானும் படைப்பாளிங்கறே? நீ படைப்பாளின்னா அப்போ மத்தவங்க?

Sunday, June 21, 2009
நெகடிவ் ஓட்டு பெறுவதை தடுப்பது எப்படி? தமிழ்மணத்திற்கு சில யோசனைகள்!!!
நம் பதிவர்கள் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினை தத்தம் பதிவுகளுக்கு கிடைக்கும் நெகடிவ் ஓட்டுகளாகும். நானாவது பரவாயில்லை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். ஆனால் பல தொழில்முறை எழுத்தாளர்களும் , இன்னும் பல நன்கு எழுதக்கூடிய பதிவர்களும் இந்த பிரச்சினையை சந்திப்பது தான் ஏன் என புரியவில்லை!!!
இதை பார்க்கும் போது எனக்கு ஒரு விசயம் நன்கு புரிகிறது. ஒரு சிலர் இந்த நெகடிவ் ஓட்டு போடுவதையே தொழிலாக கொண்டிருக்கின்றனர்..
சரி இதை எப்படி தவிர்க்கலாம்?
1. நாம் ஒன்றும் ஐஐடி தேர்வோ அல்லது மற்ற கடினமான தேர்வுகளையோ எழுதிக்கொண்டிருக்கவில்லை. நம் மனதிற்கு தோன்றியதை எழுதுகிறோம்.மேலும் எந்த அமைப்பிலும் ஓட்டு போடும் முறை தான் உள்ளதே தவிர எதிர்மறை ஓட்டு போடும் முறை இல்லை. எனவே இந்த நெகடிவ் ஓட்டு முறையை எடுத்து விடலாம். சூடான இடுகைக்கு வேண்டுமானால் ஒருவர் பெரும் ஓட்டின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.ஏனென்றால் சூடான இடுகை என்பது வாசகர்களால் தேர்வு செய்யப்படுவது. ஆகவே ஓட்டு முறையே போதும் என நினைக்கிறேன்.
2. இல்லை கண்டீப்பாக நெகடிவ் ஓட்டு முறை தான் இருக்க வேண்டும் என நினைத்தால் , அப்படி ஓட்டு போடும் நபரின் முழு விவரமும் ,அப்படி ஓட்டு போடும் காரணத்தையும் ஒளிவு மறைவின்றி தெரியப்படுத்த வேண்டும்..ஏனென்றால் அது ஒப்புக்கொள்ளக்கூடிய காரணமென்றால் அது நம் எழுத்தை மேம்படுத்த உதவுமே?
ஆக பிடித்தவர் ஒட்டு போடட்டும் இல்லையென்றால் படித்து விட்டு மட்டும் போகட்டும்..
பதிவர்களே நான் ஆரம்பித்து இன்னும் முழுதாக ஒரு மாதம் கூட முடியவில்லை. இப்படி இருக்க இவன் பெரிய பருப்பு மாதிரி கருத்து சொல்ல வந்து விட்டான் என யாரும் என்னை திட்ட வேண்டாம்..
ஏதோ என் மனதிற்கு தோன்றியதை எழுதிவிட்டேன். ஒரு வேளை இதை யாரவது நடைமுறை படுத்த முயன்றால் என்னைவிட பல நல்ல பதிவர்கள் கண்டீப்பாக மகிழ்வர்...

இலங்கை பிரச்சினையில் இந்தியா துரோகம் செய்யவில்லை????
இது வரை பல பதிவுகள் இலங்கை பிரச்சினை பற்றியும் ,யார் நண்பன்?, யார் சந்தர்ப்பவாதி?, யார் எதிரி? மற்றும் யார் துரோகி? என்று பல தலைவர்களையும் வம்புக்கு அழைத்து பதிவுலக நண்பர்கள் அவர்களுக்குள்ளேயே எதிரிகளாகவும் ஆயினர். இது மற்றும் அன்றி பத்திரிக்கைகளும் இதே பிரச்சினைகளை வைத்து நன்றாக கல்லா கட்டியது .. இதோ இந்த பதிவும் அப்படி போன்றது தான் ஆனால் கல்லா கட்ட அல்ல(அது முடியாது).... இந்த பதிவின் நோக்கம் எந்த தமிழரின் மனதையும் புண்படுத்த அல்ல. ஆகவே பதிவை படித்து விட்டு நீயெல்லாம் தமிழனா? துரோகி என்றெல்லாம் திட்ட வேண்டாம். ஏதோ என் மனதிற்கு பட்டதை எழுதி இருக்கிறேன்.தவறென்றால் மன்னிக்கவும்...
நமக்கு சில நேரங்கள் கோபத்தையும், பரிதாபத்தையும்,பரிதவிப்பையும் , பதபதப்பையும் பல நேரங்களில் இயலாமையையும் தந்ததும் ,தந்து கொண்டு இருப்பதும் ஈழத்தமிழர் பிரச்சினையே.. இதன் வரலாறு நமக்கு தெரியும் தவிர தற்போது அது பற்றி விரிவாக தேவையும் இல்லை..
சரி விசயத்திற்கு வருவோம். இது வரை நடந்த ஈழ விடுதலைப்போரில் புலிகள் கையே ஓங்கி இருந்தது ஆனால் சமீபத்திய போரில் புலிகள் பலத்த பின்னடைவை அடைய காரணம் இந்திய அரசாங்கத்தின் தவிர்க்க இயலாத உதவியே காரணம் என்பது உண்மை..ஈழத்தமிழர் பிரச்சினையில் உலகத்தமிழர் அனைவரும் நமது இந்திய அரசையே குற்றம் சாட்டுகின்றனர்.எனக்கும் அதே வருத்தம் தான். ஆனால் உலகத்தமிழர் அனைவரின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசாங்கம் அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு செய்கிறது என்றால் கண்டீப்பாக ஒரு புறக்கணிக்க இயலாத காரணம் இருக்கும்.
அந்த காரணம் நமது அண்ணிய நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இலங்கை அரசுக்கு உதவ முன் வந்ததே .. அப்படி அந்த நாடுகளின் உதவி பெற்றால் அவை சுலபமாக இந்திய எல்லையில் வேறூன்றி விடும். பிறகு காஷ்மீர் எல்லையில் போர் மற்றும் பதட்டம் நிகழ்வது போல் நமது தமிழக எல்லையிலும் நிகழ வாய்ப்புள்ளது. அதிலும் நமது அரசியல் வாதிகள் கண்டீப்பாக அப்படி நிகழ காரணமாயிருப்பர். இது போன்ற ஒன்றை தடுக்க நினைக்கும் காரணமாக இருக்கக்கூடும்.
ஆகவே தான் நாட்டின் நலன் கருதி இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம்.. நீங்கள் கேட்கலாம் பிறகு தமிழர் கதி?
அதன் காரணம் உலகறிந்தது..
நாம் ஒன்றும் மற்ற மாநிலத்தவரைப்போல இனமானம் உள்ளவர்கள் அல்லவே...ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒருவரை அதுவும் ஒரே ஒருவரைக் கொன்றதற்காக மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைக்க.. அதனால் தான் நாட்டின் நலன் காக்க நம் தமிழர் இனத்தை அடகு (அடங்க)வைத்தது....
நாமும் இப்படி பதிவுகளை எழுதி ........................................................

Saturday, June 20, 2009
குஷ்பூவும் அன்புமணிராமதாசும் இன்னும் பலரும்...
என்னடா இவன் ஹிட்ஸுக்காக இப்படி தலைப்பு வச்சு இருக்கானே அப்படீன்னு நெனைக்கலாம். ஆனா அது தான் உண்மையும் கூட .. நம்முடய இந்த பரந்த தமிழ் பதிவுலக கடலில் பல திமிங்கலங்கள் இருக்க நான் இப்போ தான் என்னுடய கன்னன் (கன்னி X கன்னன் சரிதானே?)முயற்சியை ஆரம்பித்துள்ளேன். எனெவே, தனித்தீவில் தவிக்கும் ஒருவன் பிறரின் கவனத்தை ஈர்க்க செய்யும் முயற்சியைப் போலவே, விடலை பையன் பெண்களை கவர செய்யும் கிறுக்குத்தனம் போல இதுவும் மற்றவர்களை கவரும் முயற்சியாகும்...
ஆனால் கண்டீப்பாக தலைப்புக்கேற்ற செய்தி உண்டு...
சரி விசயதிற்கு வருவோம்.கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த கூத்தை நம்மில் பலர் மறந்திருக்க மாட்டோம். அதாங்க நம்ம கூடையில் என்ன பூ குஷ்பூ இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் நம் தமிழ் பெண்கள் திருமணத்திற்கு முன் மேற்படி வைத்துக்கொள்வது தவறில்லை என்றும் ஆனால் அப்படி மேற்படி வைக்கும் போது கவனமாக இருக்கும் படியும் ஒரு புரட்சிகர கருத்தை சொல்லிவிட்டு அந்தமான் சென்று விட்டார்..
ஆனால் நமது கலாச்சார காவலர்கள் ,சரவணாபவன் பொங்கலை போல பொங்கி தமிழ் நாடு முழுவதும் அதகளப்படுத்தி விட்டனர். அதிலும் பாமக கட்சியினர் ஒரு படி மேலே சென்று பல போராட்டங்களை நடத்தினர்..
இங்கே,எப்படி அன்புமணி வந்தார் என்று தானே கேற்கிறீர்கள்? அந்த சமயம் அன்புமணி தான் சுகாதாரதுறை அமைச்சர். அவர் பல கோடி செலவு செய்து விளம்பரப்படுத்தும் விசயம் என்ன? பாதுகாப்பான மேற்படிக்கு அந்த பாதுகாப்பை உபயோகப்படுத்துங்கள் என்று தானே??...
நமது பழைய திரைப்படங்களில் கூறுவதைப்போல ஒரு உறையில் ஒரு கத்தி என்று இருந்தால் பிறகு எதற்கு இந்த ரப்பர் உறை?ஆக கூடி அன்புமணி அமைச்சராக இருந்து சொன்னதை தான் நம்ம குஷ்புவும் சொல்லி இருந்தாங்க.. ஆனா ஒருவருக்கு பாராட்டு அடுத்தவருக்கு ஆர்பாட்டமா? என்ன கொடுமை சார் இது?
இப்போ சொல்ல்லுங்க தலைப்புக்கேத்த செய்தி உண்டு தானே?
எனக்கு சில கேள்விகள்...
1. கற்பை பற்றி கருத்து சொல்லும் அளவிற்க்கு குஷ்பூ அவ்வளவு ............... வரா?
2. இல்லை குஷ்பூ கருத்தையெல்லாம் மதித்து போராட்டம் நடத்த பாமகா அவ்வளவு ...............ஆன கட்சியா?
3. குஷ்பூ சொல்லை வேதவாக்காக மதிக்க நம் ஊரில் பெண்கள் உள்ளனரா?

தமிழ் எதிரியுடன் மோதும் இந்திய எதிரி
Friday, June 19, 2009
கலாட்டா பதிவர்கள் யாரிடமும் ஏமாறமல் இருப்பது எப்படி?
எனக்கு தெரியல அதனால தான் சென்சி மற்றும் பலரோட கலாட்டா பதிவுகளில் சென்று ஏமாந்து இருக்கேன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க எப்படி ஏமாறாம இருக்கறது?
Thursday, June 18, 2009
பொறுப்புள்ள கருணாநிதி குடும்பம்!!!
அன்பார்ந்த பதிவர்களே!!! உங்களுக்கு ஒரு சிக்கலான(!!!) போட்டி.. மேற்கண்ட படத்தில் உள்ளவர்களில் யாருக்கு எந்தவித பொருப்பும் கட்சியிலோ அல்லது அவர்களுடைய ஏனைய நிருவனங்களிலோ இல்லை என நிருபிக்க வேண்டும்.. அப்படி நிருபித்தால் உங்களுக்கு பரிசு ........என்ன பரிசு என்பது சஸ்பென்ஸ்!!!!
பொறுப்பு பொறுப்பு ன்னு சொல்ராங்களே இது தான் அந்த பொருப்போ!!!!
என் நினைவலைகள்......
என்னவளே....
நன்றாக உன் இரு கைகளையும் காற்றில் வீசிப்பார்...
உன்னை சுற்றும் என் நினைவலைகள்
கண்டீப்பாக உனக்கு கிடைக்கும்!!!

Tuesday, June 16, 2009
தோணியால் தோற்றோம்?
நம் இந்திய நாட்டில் முட்டு சந்தில் க்ரிக்கெட் விளையாடப்பட்டாலும் கூட அது நமது வீரர்கள்(அப்போ ராணுவம் மற்றும் உயிர் காப்பவர்கள்?)என்றால் நாம் அனைவரும் கண்டீப்பாக நமது நேரத்தை அங்கே செலவிடுவோம்...
மிக அண்மையில் நடைபெற்ற 20-20 உலக கோப்பை போட்டியில் நமது நடப்பு சாம்பியன் மண்ணை கவ்வியது அனைவரும் அறிந்ததே!! அதன் காரணம் பலராலும் பல விதத்திலும் அலசப்பட்டது,படுகிறது, படும்...
இது நம்முடைய காரணங்கள்...
நமது தோல்விக்கு முழு காரணமும் தோணியே.. ஏன் என்றால் ......
* விளம்பரத்தில் அதிகம் வருமானம் இருப்பதால் மைதானத்தை விட வெளியில் தான் அதிகம் ஆடுகிறார்.
* கடந்த பல ஆட்டங்களில் தோணியால் வென்ற ஆட்டங்களை விட தோற்ற ஆட்டங்களே அதிகம்.. இவரின் கடந்த கால ஆட்டங்களின் விபரங்கள்-
எதிரணி விளையாடிய வரிசை ரன் பந்து 4 6 முடிவு
இங்கி 6 வது ஆட்டக்காரர் 30 20 2 - தோல்வி
மே இ 5 வது ஆட்டக்காரர் 11 23 - - தோல்வி
அயர்லாந்து 3 வது ஆட்டக்காரர் 14 13 1 - வெற்றி
பங்ளாதேஷ் 3 வது ஆட்டக்காரர் 26 21 - 1 வெற்றி
நியூசி 5 வது ஆட்டக்காரர் 28(NO) 30 2 - தோல்வி
நியூசி 6 வது ஆட்டக்காரர் 2 6 - - தோல்வி
இலங்கை 5 வது ஆட்டக்காரர் 13 17 1 - வெற்றி
ஆஸ்தி 5 வது ஆட்டக்காரர் 9 27 1 - தோல்வி
ஆஸ்தி 5 வது ஆட்டக்காரர் 9(NO) 5 - 1 வெற்றி
பாகிஸ் 5 வது ஆட்டக்காரர் 6 10 - - வெற்றி
ஆக மேற்கூறிய புள்ளி விபரங்களின் கணக்கு படி தோணியால் ஒரு ஆட்டம் கூட இன்னும் சொல்ல போனால் எந்த ஒரு 20-20 ஆட்டமும் தோணியால் தனிப்பட்ட முறையில் வெல்லப்படவில்லை என்பதே உண்மை...
* உங்களில் யாரேனும் கிரிக்கெட் விளையாடுபவராக இருந்தால் அல்லது விளையாடப்படுவதை நேசிப்பவராய் இருந்தால் தோணியின் பேட்டிங் ஸ்டைலையும் அவர் விளையாடும் விதத்தையும் கண்டீப்பாக ரசித்திருக்க மாட்டீர்கள்..
* நீங்கள் கேட்கலாம் ஏன் தோணி மட்டும் , மற்றவர்கள் என்ன மிக சிறந்த ஆட்டக்காரர்களா என்று? கண்டீப்பாக ஒவ்வொரு ஆட்டக்காரருமே அவரவது பங்களிப்பை தங்களால் இயன்ற அளவிற்கு அளித்திருப்பர் தோணியை தவிர..
ஏனெனில் தோணியின் இடம் உறுதி செய்யப்பட்டு விட்டது.. இது தவறு. எந்த ஆட்டக்காரருக்கும் அவர் தம் இடம் நன்கு விளையாடினால் மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும்..
* இது மட்டும் இன்றி நல்ல அணித்தலைவராகவும் செயல்பட முடியவில்லை. மூன்றாம் நிலையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த ரைனாவை மாற்றி இறக்கி, சாப்பல் இர்ஃபான் பதானை நாசம் செய்ததை போல ரைனாவின் ஆட்டத்தையும் கெடுத்தார்.
* பகுதி நேர பந்து வீச்சாளர்களை சரியாக உபயோகப்படுத்தாமல் சொதப்பினார்.
* இது வரை மற்ற வீரர்களினால் வென்று அதன் மூலம் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். இனி என்ன செய்வார் பார்ப்போம்...
ஹும்... என்ன புலம்பி என்ன பயன்.. அவன் பொலப்ப அவன் பாக்குறான்.. நம்ம பொலப்ப?????

Subscribe to:
Posts (Atom)