}

Thursday, July 30, 2009

நீங்க நல்லவரா கெட்டவரா? ஒரு எளிய சோதனை

நண்பர்களே.. நம்மில் பல பேருக்கு நாம் நல்லவரா இல்லை கெட்டவரா என்கிற குழப்பம் இருக்கும்.. அதிலும் நாம் கெட்டவர் என்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள்.. ஆகவே நாம் நல்லவரா இல்லையா என்பதை எளிதில் அதுவும் மற்றவர்கள் அறியாமல் தெரிந்து கொள்ள இதோ இங்கே ஒரு சின்ன சோதனை..
































































வாங்க நண்பர்களே.. நம்ம பக்கத்திற்கு வர்றவங்க எல்லாருமே நல்லவங்க தான்.. அதானால நீங்களும் நல்லவங்களே !!!



கவுண்டர் : நான் நல்லவனுங்க.. சத்தியமா நான் நல்லவனுங்க.. அய்யோ நான் நல்லவனுங்க...

Wednesday, July 29, 2009

நானும், ஆந்திரா மெஸ்ஸும் , ஒரு ஃபுல் மீல்ஸும்...

நேற்று காலை அம்மிணியுடன் ஒரு சின்ன தகறாரு( ஆமா பெரிய வாய்க்கா தகறாரு என கேட்பது காதில் விழுகிறது) .. வாய்கா தகறாரெல்லாம் இல்லீங்க , வாய் தான் தகறாரு.. அதனால கோவத்தோடு காலையில சாப்பிடாம , மதியமும் சாப்பாடு கொண்டு போகாம ஆஃபீஸ் போயிட்டேன்..

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்னு சொல்லுவாங்க, எனக்கு பசின்னு நெனச்சாலே எல்லாம் போயிடும்.. அதனால காலையில கோவத்துடன் தி.நகர் உடுப்பி ஓட்டலில் ஒரு பொங்கல், வடை, கேசரி என அளவாக சாப்பிட்டு ஆஃபீஸ் போனேன்.. மதியம் சுமார் மூணு மணிக்கு சாப்பாடு சாப்பிடலாம்னு பக்கத்திலிருந்த ஒரு ஆந்திரா மெஸ் போனேன்..

ஆந்திரா மெஸ் போனதும் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள்.. என்னை இந்த அளவுக்கு வளர்த்தி விட்ட ஹைதராபாத் சாப்பாடு நினைவுக்கு வந்தது... ஆந்திரா சாப்பாடு என்றால் சில ஐட்டங்கள் கண்டீப்பாக இருக்கும், அவை பருப்பு பொடி எண்ணை, ஏதாவது ஒரு காய் பொறியல், ஒரு கூட்டு, காரமான ஒரு துவையல், கெட்டியான பருப்பு, தயிர், ஒரு ஊறுகாய் இருக்கும்..

அதுவும் நான் ஹைதியில் சாப்பிடும் மெஸ்ஸில் எல்லாம் அன் லிமிட்டெட் தான்.. எல்லாம் என்றால் எல்லாமே.. பருப்பு பொடி, எண்ணை, பொறியல், கூட்டு, என அனைத்தும் ஒவ்வொரு மேசைக்கும் தனித்தனியாக வைக்கப்படிருக்கும், நமக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.. அதுவும் அங்கு தரப்படும் தயிர் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. அங்கே தயிர் கிண்ணத்தில் தர மாட்டார்கள், ஒரு பெரிய சட்டியில் எடுத்து வந்து வெட்டி போடுவார்கள்(எப்படி தான் கட்டுபடியாகிறதோ!!!)..அதுவும் இன்னும் வேணுமா, வேணுமா எனக் கேட்டு.. முழு சாப்பாட்டின் விலையும் அவ்வளவு ஒன்றும் அதிகம் இல்லை.. 32 ரூபாய் தான்,,

ஆக, இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு , ஓரளவுக்கு பெரிய ஆளாயி என் வீட்டிற்கு வந்தேன்.. வழக்கம் போல என் அம்மா என்னப்பா எளச்சு போயிட்டே எனக்கேட்டார் !!! ஹி ஹி ஹி என சமாளித்தபடி வீட்டில் எல்லோரையும் பயப்படுத்தி விட்டு , ஒரு சின்ன வேலையாக டைலர் கடைக்கு சென்றேன்...அங்கே அவரிடம் என்னண்ணே துணி தைச்சு இருக்கீங்க? பாருங்க உயரம் பத்தல என சொன்னேன்... அவரும் அப்படியா , இருக்காதே என சொல்லி அளந்தார்.. பேண்டின் உயரம், சரியாக தான் இருந்தது.. பிறகு தனது நோட்டை புரட்டி அளவை சரி பார்த்து சொன்னார்.. தம்பி உயரம் குறையல உங்க இடுப்பு அதிகமாயிடுச்சு அதனால தான்.. நீங்க உங்க இடுப்பை குறைக்கறீங்களா இல்ல பேண்டின் உயரத்தை அதிகரிக்கவா எனக்கேட்டார்.. அவர் கேட்டது எனக்கு கோபத்தை வர வைத்து.. ஆனால் அவருடைய அந்த டீல் ரொம்ப பிடித்து...எனவே பேண்டின் உயரத்தை அதிகரிக்க சொல்லி வந்தேன்..

இப்படி பெருமை மிக்க ஆந்திரா மெஸ்ஸை நினைத்து சாப்பிட அமர்ந்தேன்.. இங்கேயும் அதே மெனு ஆனால் சற்று சுவை குறைவாக, தயிரும் அளவாக.. தயிர் என்றதும் எனக்கு நியாபகம் வருபது.. அந்த தயிருடன் சர்க்கரை கலக்கி சாப்பிடும் பழக்கம்.. அதை இந்த ஆந்திரா மெஸ்ஸில் இருந்து தான் கற்றேன்.. ஆக நன்றாக சாப்பிட்டு விட்டு அலுவலகம் திரும்பி பின் வீட்டிற்கும் சென்றேன்...

வீட்டில் சாப்பாடு ரெடியாக இருந்தது.. ஆனால் பசி இல்லாததால்(கோவமாம்) எதுவும் சாப்பிடாமல் தூங்கி விட்டேன்

கவுண்டர் : மகா ஜனங்களே.. பாருங்கய்யா இந்த அநியாயத்த.. ஒருத்தன் அன் லிமிட்டெட் மீல்ஸ மூணு மணிக்கு சாப்பிட்டு நைட் வரைக்கும் பசி எடுக்கலேண்ணா எந்த அளவுக்கு சாப்பிட்டு இருப்பான்? இவன மாதிறி ரெண்டு பேர் போதும் அந்த கடைய காலி பண்ணீட்டு அவங்கள அப்படியே திருப்பதி அனுப்பிடுவான்.. பாருங்க , தெரிஞ்ச பையன் ஊரு பக்கம் வந்தா சாப்பாடு போடுலாம்னு மட்டும் தப்பி தவறி கூப்புராதீங்க.. அப்புரம் உங்க கதி அதோ கதி தான் ...

Tuesday, July 28, 2009

இவர்கள் என் நண்பர்கள் என்பதில் எனக்கு பெருமை...

சிங்கத்தை யாரும் கொஞ்ச முடியாது
எங்கள் நட்பை யாரும் மிஞ்ச முடியாது...


உன் நண்பர்கள் யாரென சொல் பிறகு
நீ யாரென சொல்கிறேன்


அப்புறம்...... நண்பன் ......

சரி சரி போதும்.. எதுக்கு இந்த பில்டப் என்றால் . இன்றைக்கு , நமது பதிவுலக புகழ்( எப்படியோ விருது குடுத்ததற்கு ஐஸ் வச்சாச்சு) இயற்கை மகள் மற்றும் நம்ம சமையல் உலக ராணி அக்கா மேனகாவும் (அப்பாடா அடுத்த தடவ இந்தியா வர்ரப்போ சாப்பாடு நிச்சயம்) எனக்கு ஒரு விருதை அளித்து கவுரவித்துள்ளார்கள்.. அதை நான் இன்னும் பத்து பேருக்கு தர வேண்டுமாம்.. அதான்...... மக்களே தயவு செய்து இந்த விருதை வாங்கிக்கொள்ளுங்கள்...








தாயே ஜக்கம்மா.. இந்த விருதை வாங்காதவங்க பக்கம் யாரும் போகக்கூடாது, அப்படி உன் வாக்க மீறி போறவங்கள நீயே பாத்துக்கம்மா....


1. பெஸ்கி - எவனோ ஒருவன்

2. கீதா ஆச்சல் - என் சமையல் அறையில்

3. ஜோ -- வாழ்க்கை போகிறது (மொழியாக்கம் சரி தானே)

4. சந்ரு - சந்ருவின் பக்கங்கள்..

5. சப்ராஸ் அபூ பக்கர்

6. சிவனேசு - தமிழ்ப்பூங்கா

7.ஜலீலா - ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸ்கள்

8. பிரியங்கா - என் கிறுக்கல்கள்

9. அம்மு - அம்முவின் சமையல் குறிப்புகள்

10.சூரியன் -- சூரியன்

10. சம்பத்

10. நாணல்

10. இரசிகை

10. நான் ஆதவன் - குப்பைத்தொட்டி(ஆனால் உள்ளிருப்பதோ வைரங்கள்)

10. சிந்து

10. ஜோதி

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

10. சுபா - என் உலகம்




வாழ்க்கையில நிறைய விசயம் நமக்கு பிடிக்காம இருக்கும்,

படிக்கிறப்போ பாடமும். பரிட்சையும் பிடித்திருக்காது,
படிச்சு முடிச்சப்போ வேலை தேடவும், கேள்விக்கு பதில் சொல்லவும் புடிச்சிருக்காது,
காதலிக்கிறப்போ அவங்க அண்ணனையும், நம்ம அப்பாவையும் புடிச்சிருக்காது,
வேலை செய்ரப்போ நம்ம மேனேஜரையும், குடுக்கிற வேலையையும் புடிக்காது
கல்யாணத்துக்கு அப்புறம் எதையுமே புடிக்காது

ஆனா இதெல்லாம் புடிக்கலேண்ணாலும் அனுபவிச்ச மாதிறி

இதையும் வாங்கிக்கீங்க ஸ்சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்





அப்புறம் விருது கொடுத்ததோட நிருத்த போரதில்லை.. இவர்களின் நல்ல பதிவுகளை பற்றி வரும் பதிவுகளில் காண்போம்...

கவுண்டர் : மக்களே.. இவன் கிட்ட இப்போ எழுதறதக்கு சரக்கு எதுவும் இல்லை.. அதான் இப்படி டகால்டி விடுரான்.. நம்ம்பீராதிங்க...

Monday, July 27, 2009

கவுண்டர் செந்திலுக்கு சொல்லும் வாழ்க்கை தத்துவம்...

கவுண்டர் மனைவி: ஏங்க ,, ஏங்க.. யோவ்.. எந்திரி யா.. மணி பத்தாக போகுது .. இன்னும் தூக்கம்.. ஹீம்ம்ம்.,என்ன கல்யாணம் பண்ணிக்க ஏவனோ ஒருவன்பெஸ்கி கேட்டாக, கணவுகளே சுரேஷ் கேட்டாக இன்னும் யாராரோ பொண்ணு கேட்டு வந்தாங்க.. என் நேரம், கெரகம் உன் கிட்ட மாட்டிக்கிட்டேன்.. எந்திரிங்க, இந்தாங்க , இந்த ஐநூறு ரூபாய மளிகை கடக்காரன்னுக்கு கொடுத்திடுங்க.. நேத்திலிருந்து நாலைஞ்சு தடவ ஆள் அனுப்பீட்டாங்க..

கவுண்டர் : ஓங்கி மூஞ்சி மேல அப்பிருவேன்,. என்னடி காலங்காத்தால கலர் கலரா ரீல் சுத்துர? விட்டா அரேபியாவிலிருந்து வசந்த் கேட்டாக, மலேசியாவிலாவிலிருந்து சிவசேனு கேட்டாகன்னு சொல்லுவே போல இருக்கு? உங்கப்பன் என்ன துபாய் ஷேக்கா? நீ என்ன பெரிய கிளியோ பாட்ராவா? தூக்க நாயக்கம் பாளையத்தில சாணி மிதிச்சிட்டு இருந்தவள உங்கப்பன் ஸ்கூல் டீச்சர்னு ஏமாத்தி தலையில கட்டீட்டான்.... நான் எங்கே எப்படி இருக்க வேண்டிய ஆளு..

புலம்பிய படியே வாய் கொப்பளித்த நீரை திடீரென வந்த செந்திலின் மீது துப்பி விடுகிறார்..

செந்தில் : என்னணே.. என் மேல துப்பீட்டீங்க?
கவுண்டர் : ஆமா .. தினமும் காலையில உன் மூஞ்சியில துப்பணும்னு வேண்டுதல்.. குப்பத்தொட்டி மாதிறி மூஞ்சி வச்சிருந்தா உன் மூஞ்சில தாண்டா துப்ப தோணும்..

செந்தில் : போங்கண்ணே.. வழ்க்கையே புடிக்கல..

கவுண்டர் : என்னது வாழ்க்கையே புடிக்கலையா? ஆமா இவரு பெரிய கப்பல் அதிபர்.. சேது கால்வாயில கப்பல் விட முடியலன்னு கவலப்படுறார்.. டேய் நீ ஒரு ஆளு, நீ வாழ்ரது ஒரு வாழ்க்கை .. அது உனக்கு புடிக்கலியா?

செந்தில் : அண்ணே... கிண்டல் பண்ணாம .. ஒரு வழி சொல்லுங்க..

கவுண்டர் : ஹா ஹா ஹா. இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணுங்கறது.. உனக்கு சொன்னா புரியாது.. வா உன்ன வச்சே உனக்கு வாழ்கைத்தத்துவத்தை புரிய வைக்கிறேன்....(ஒரு சிரு குப்பை தாளை எடுத்து ) இந்தாடா மண்டையா.. இந்த பேப்பர கொஞ்சம் தூக்கி புடி...

செந்தில் : சரிண்ணே( கண்ணகி சிலம்பை பிடிப்பது போல தன் கையால் அந்த குப்பை காகித்தை தூக்கிப்பிடிக்கிறார் )..
கவுண்டர் : ஏண்டா மண்டையா.. இந்த பேப்பர அப்படியே ஓரு நிமிசம் தூக்கி புடிச்சிட்டு இருந்தா என்ன ஆகும்?
செந்தில் : ஒண்ணும் ஆகாதுண்ணே..
கவுண்டர் : ஒரு மணி நேரம் தூக்கி புடிச்சிருந்தா?

செந்தில் : கை வலிக்கும்ணே..

கவுண்டர் : அப்படியே ஒரு நாள் ஃபுல்லா தூக்கி புடிச்சிருந்தா?

செந்தில் : என் கையே போயிடும்ணே..

கவுண்டர் : அப்போ அத எப்படி தடுப்பே?

செந்தில்: இந்த பேப்பர, அப்படியே வாயில போட்டு முழுங்கிடுவேண்ணே..

கவுண்டர்: அட வருமைக்கு பொறந்தவனே..அந்த பேப்பர இப்படி சுக்கு நூறா கிழிச்சு தூக்கி போடணும்டா..
மண்டையா சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. நம்ம வாழ்க்கையில தினமும் 100 பிரச்சினைகளை பாக்குறோம்.. அதில 99 இந்த, குப்பை மாதிறி ஒண்ணுக்கும் ஆகாத பிரச்சினைகள்.. அந்த பிரச்சினைகளை இப்படி தூக்கி வீசிட்டா எந்த பிரச்சினையும் இல்லை, ஆனா தேவையில்லாம தூக்கி வெச்சிருந்தா உன் கை போக இருந்த மாதிறி வாழ்க்கையும் போயிடும்.. அதனால தேவையில்லாத பிரச்சினைகளை இப்படி தூக்கி எறிஞ்சிட்டு சந்தோசமா இரு போ...

செந்தில் : ஹி ஹி ஹி.. இப்போ புரிஞ்சுது..

கவுண்டர் மனைவி : என்னங்க இன்னும் கெளம்பலியா?

கவுண்டர் : க்ஹூம் .. டேய் ஓடிடு உன்னவிட பெரிய தொல்லை வருது.. டேய் இங்கிருந்த 500 ரூபாய் எங்கேடா?

செந்தில் : போங்கண்ணே.. நீங்க தானே குப்பைய கிழிச்சு வீசச்சொன்னீங்க .. அதான் அதையும்.........

Saturday, July 25, 2009

புள்ள குட்டிய படிக்க வைக்கப் போறீங்களா?

நண்பர்களே.. உங்கள் குழந்தைள் உயர் நிலைப்பள்ளி முடித்ததும் மேற்கொண்டு என்ன படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என குழப்பமாக உள்ளதா? இதோ இந்த படம் உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்...




படம் பெரியதாக தெரிய அதன் மேல் ஒரு அமுக்கு (மௌசால தாங்க ) அமுக்க வேணுங்கறது உங்களுக்கு தெரியும் தானே???

Friday, July 24, 2009

நானும் உலகத்திரைப்படத்திற்கு விமர்சனம் செய்கிறேன்(கண்டீப்பாக வயதானவர்களுக்கு மட்டும் அனுமதி )!!!

நண்பர்களே.. நானும் முதல் முறையாக ஒரு உலகத்திரைப்படத்தை பார்த்து அதை விமர்சனம் செய்யலாம் என முடிவெடுத்து , பர்மா பஜாரில் சென்று பத்து ரூபாய்க்கு ஒரு படத்தை வாங்கி வந்து இன்று பார்த்தேன்,.. படம் சுமார் 100 நிமிடங்கள் ஓடியது.. ஒரே மூச்சில் பார்த்து விட்டு அதை விமர்சனம் செய்யலாம் அந்த படத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இந்த இடுகை..

எட்கர்ட் ஆலன் போ என்ற அயல் நாட்டவர் திரைப்படம் பற்றி கூறும் போது , திரைப்படமானது ஒரு குதிரைப்பந்தயம் போல துவங்கி அதே வேகம் மற்றும் விருவிருப்புடன் முடிய வேண்டும் என்கிறார்...அவர் கூற்றுப்படியே இந்த படமானது மிக விருவிருப்புடன் துவங்கி அதே விருவிருப்புடன் முடிந்தது...

சரி விமர்சனத்திற்கு வருவோம்...


































கவுண்டர் : நாங்க பாத்த படம் உலக சினிமா தானுங்க.. இந்த மாதிறி உலக சினிமாவுல கதா நாயகன், கதா நாயகி மட்டும் தான் வேறங்க.. ஆனா கதை ஒண்ணு தாங்க...அதனால விமர்சனம் எதுவும் இல்லேங்க...

Wednesday, July 22, 2009

பிரபல பதிவர் .............................................. அவர்களுக்கு சமர்ப்பணம்....

மிக முக்கிய முன் குறிப்பு:
இது ஒரு நகைச்சுவை பதிவு... யார் மனதையும் புண்படுத்த அல்ல. அப்படி யாரேனும் நினைத்தால் தயவு செய்து என்னை மன்னியுங்கள்.




நம்முடய
பிரபல பதிவர், எங்கள் அண்ணன், வாழும் வள்ளல், எட்டாவது அதிசயம்,
ராஜாதி ராஜ ,ராஜ குலோத்துங்க ,ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம, ராஜ குல திலக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ............. அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்...



டாக்டர் தொழில் ஒண்ணும் சுலபம் இல்லீங்க .....












அவரைப் பற்றி ஒரு கிசுகிசு:
தம்மிடம் ஊசி போட வரும் நோயாளிகளிடம் தமது பதிவுகளை படிப்பதுண்டா எனக் கேட்டு, அவர்கள் படிக்கவில்லை எனச் சொன்னால் இரண்டு இன்ச் சேர்த்து குத்துவதாக ஒரு வதந்தி..

Tuesday, July 21, 2009

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து கொள்ள அல்லது கொல்ல வேண்டுமா?

மாடு பிடிச்சு இருப்பீங்க இல்ல அத பாத்தாவது இருபீங்க..இப்போ உலகம் எவ்வளவோ முன்னேரியாச்சு.. எத்தன நாளைக்குத்தான் மாட்டையும் ஆட்டையும் புடிக்கிறது? அதான் இப்போ நான் சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்சு பிடிக்க போறத பத்தி சொல்லித்தர போறேன்...

நியூட்டன் முறை...

முதலில் சிங்கம் உங்களை பிடிக்க விட வேண்டும்....
நியூட்டன் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினை உண்டு..
ஆக சிங்கத்தை நாம் பிடித்து விட்டோம்..

கணிப்பொறியாளர் முறை..

ஒரு பூனையைப் பிடிக்க வேண்டும்.
அதை சிங்கம் எனக்கூறி அனைத்து சோதனைகளையும் செய்து.. பிறகு அத ஒரு சிங்கம் எனக்கூறி சோதனை முடிவை தரலாம்.
எவரேனும் பிரச்சினை என வந்தால் , அவர்களிடம் அதை சிங்கமாக மேம்படுத்துவதாக வாக்களிக்க வேண்டும்....

இந்திய போலீஸ் முறை

ஏதாவது ஒரு மிருகத்தைப் பிடித்து அதை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தி அதை தான் ஒரு சிங்கம் என ஒப்புக்கொள்ள வைக்கலாம்....

ரஜினி முறை (கிரி அண்ணன் மன்னிக்கவும்)

சிங்கத்தை அதன் குகையில் வந்து பிடிக்கப் போவதாக அதற்கு எச்சரிக்கை விடலாம்.
ஆனால் அந்த பக்கமே போகக்கூடாது.. சிங்கம் தானாக வயதாகி இறந்து விடும்..

கமல் முறை

சிங்கத்தை வைத்து தசாவதாரம் படம் எடுக்க போவதாக சொல்லலாம்.. அதை புலி,கரடி, யானை, மான் என அனைத்து வேசங்களையும் போட வைத்து கொன்று விடலாம்..


அஜித் முறை

சிங்கத்திற்கு தமிழ் கற்றுக் கொடுக்க வைக்கலாம். அஜித்தின் தமிழ் கொலையைத்தாங்க முடியாமல் சிங்கம் தானாக இறந்து போகும்..

விஜய் முறை

விஜய் நடித்த படங்களின் டிரெய்லரை காண்பிக்கலாம்.. சிங்கம் பக்கத்தில் இருக்கும் சுவற்றில் மோதி தற்கொலை செய்து கொள்ளும்..


டி ராஜேந்தர் முறை..

வீராச்சாமி பட கெட்டப்பில் கலர் கலராக ஆடை அணிந்து சிங்கத்தின் முன் குளோசப்பில் ஆட வைக்கலாம்.. சிங்கம் நெஞ்சு வெடித்து இறந்து விடும்..


டைரக்டர் மணிரத்னம் முறை..

அந்த சிங்கத்திற்கு சூரிய ஒளியே கிடைக்காத படி ஒரு இருண்ட குகையில் தள்ளுங்கள்.
அந்த குகையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றி வைத்து, சிங்கத்தின் காதருகே ஏதாவது புரியாத படி முணுமுணுங்கள்..
சிங்கம் அதிகபட்ச குழப்பத்திலும்,ஆற்றாமையாலும் தற்கொலை செய்து கொள்ளும்..

ஜார்ஜ் புஷ் முறை

சிங்கத்தை ஒசாமா பிலேடனுடன் தொடர்பு படுத்தலாம்.. பிறகு அமெரிக்க ராணுவத்தை விட்டு அதை கொன்று விடலாம்..


தோணி முறை.

கிரிக்கெட் போட்டியில் தோணிக்கு பந்து வீச வைக்கலாம்.

200 பந்துகளைப் பிடித்து 2 ரன் கள் எடுக்க வேண்டும்..

சிங்கம் களைத்து நம்மிடம் சரணடைந்து விடும்..


கீன்(Kean Softwares)முறை..

சிங்கத்தை வேலைக்கு எடுங்கள்..
அதை ஒரு வருடம் பென்ச்சில் சும்மா உட்கார வைக்க வேண்டும்..
ஒரு வருடம் கழித்து அதன் டெக்னாலஜியை மாற்றச்சொல்ல வேண்டும்..
தான் ஒரு சிங்கமா இல்லை எலியா என்ற குழப்பத்தில் இறந்து விடும்..


விப்ரோ முறை

சிங்கத்தை வேலைக்கு எடுத்த உடன் அதற்கு உடனடியாக ஒரு மெயில் ஐடி தர வேண்டும்..
தினமும் வரும் உபயோகமற்ற பல மெயில்களைப் பார்த்தே அது இறந்து விடும்..


ஐபிஎம் முறை..

சிங்கத்தை வேலைக்கு எடுங்கள்..
அடுத்த ஒரு மணி நேரத்தில் சிவப்பு அட்டையை கொடுங்கள்..
வேலை இழந்த சோகத்தில் தானாக இறந்து விடும்..



மேனகா காந்தி முறை

சிங்கத்தை மேற்கூறிய பயங்கரத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.. பிறகு அதை மிகுந்த கவனத்துடன் காய் கறிகளை மட்டும் கொடுத்து கொன்று விடலாம்..



நண்பர்களே.. இது எனக்கு ஒரு முறை வந்த மின் அஞ்சல்.. என்ன நம் திரை உலகம் போல அதை தமிழ் படுத்தி தந்துள்ளேன்.. யார் மனதையும் புண்படுத்த அல்ல..

Monday, July 20, 2009

கவுண்டரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்....

நம்ம கவுண்டருக்கு கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்க , அவர் கெட்ட நேரம் நம்ம ஊர் தொலைக்காட்சிகளை பார்க்க ஆரம்பித்தார். அவர் கையிலிருந்து ரிமோட்டால் ஒவ்வொரு சேனலாக மாற்ற ஆரம்பிக்க, நம் கவுண்டர் அட்டாக் ஆரம்பமாகிறது..

முதலில் மக்கள் தொலைக்காட்சி. அதில் தாங்கள் ஒரு காலத்தில் வெட்டிய மரங்களுக்காக இன்று ஆரம்பித்துள்ள பசுமை தாயகம் நிகழ்ச்சியும், சினிமாவில் புகை பிடிக்க கூடாது , மது அருந்தக்கூடாது என்கிற விவாதமும் நடை பெறுகிறது..

கவுண்டர் : என்னடா அநியாயம் இது, நல்லா வளர்ந்த மரத்த வெட்டி ரோட்டுல போட்ருவாங்களாம் அப்புறம் அதுக்கு பதிலா செடிய நட்டுவாங்களாம். இது எப்படி இருக்கு தெரியுமா? பத்து பேர கொலை பண்ணிட்டு அதுக்கு பதிலா புள்ளய பெத்து போடுர மாதிறி இருக்கு..அப்புறம் படத்தில என்ன பண்ணனும்னு டைரக்டர் தான் முடிவு செய்யனும்டா.. அத பண்ணாதீங்க,இத பண்ணாதீங்கண்னு நீங்க சொல்லக்கூடாது.. அப்புறம் நீங்க எதை செய்யனும் அப்படின்னு நான் சொல்ல வேண்டி இருக்கும்..

அடுத்து சேனலை மாற்ற , அதில் ஒரு நடனப்போட்டி, அந்த போட்டி நடுவர்கள் நடனமாடியவர்களிடம் அவர்கள் செய்த குறைகளை சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தனர்..

கவுண்டர் : என்னது கெமிஸ்ட்ரி பத்தலையா? அப்போ ஒரு ரூம் போட்டு குடுத்திடுங்கடா. நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி குழந்தய குடுப்பாங்க.. அது என்னடா தப்பு சொல்றீங்க? நாலாவது ஸ்டெப்ல நாக்கு வெளிய வந்திடுச்சு,மூணாவது ஸ்டெப்ல முடி நட்டுக்கிச்சுண்னு? வந்துட்டானுக பெரிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மாதிறி.. ஆளுகளையும் மண்டைகளையும் பாரு..

அடுத்து ஜெயா டிவி. அதில் பழைய எம்ஜியார் திரைப்படம், நினைத்ததை முடிப்பவன். கிளைமேக்ஸ் காட்சியில், எம்ஜியார், தனது தந்தை ஒரு முறை வைர வியாபாரிகளால் ஏமாற்றப்பட்டு இறக்க அதனால் தான் ஒரு வைரக் கொள்ளையனாக மாறி அனைத்து வைர வியாபாரிகளையும் பழிவாங்குவதாக கூறுகிறார்..

கவுண்டர் : தலைவரே.. ஃப்ளாஸ்பேக் நல்லாத்தான் இருக்குங்க.. ஆனா போலீஸ் ஒத்துக்கணும் இல்ல..அங்கே பாருங்க இந்த ஒண்றையணா ஃப்ளாஸ்பேக்கா அவனுக எப்படி அதிர்ச்சியா பாக்கறானுகண்ணு..

அடுத்து ஸ்டார் கிரிக்கெட், அதில் நடந்து முடிந்த ஒரு கிரிக்கெட் போட்டி பற்றி விவாதம் நடந்தது கொண்டிருக்கிறது..

கவுண்டர் : இந்த ரிடையர் ஆன ஆளுங்க தொல்ல தாங்க முடியலப்பா.. ஆடுர காலத்தில சரியா ஆடாம, உதைச்சி வெளியேத்துவனுக எல்லாம் இப்ப வந்து கருத்து சொல்றானுக.. அட இவனுக சொல்ர கருத்த எவனாவது கேட்பானா? பாரு அவள பாரு அவளுக்கு என்ன தெரியும்னு பக்கத்தில உக்கார வச்சு பேசிட்டு இருக்கீங்கடா? உங்கள எல்லாம் திருத்தவே முடியாதுடா..

அடுத்து கலைஞர் டிவியில் மானாட மயிலாட. நம்ம நமிதா தன் தமிழால் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கவுண்டர் : என்னடா இது தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை.. அவனவன் சங்கம் வெச்சு தமிழ வளர்த்தா இங்க நமிதாவ வச்சு தமிழ வளர்க்குறாங்க.. ஒரு காலத்தில தார ஊத்தி தமிழ வளர்த்தது இதுக்கு தானா? அரசியல்ல இது எல்லாம் சாதாரணம் அப்பா..

அப்படியே சன் டிவி, அதில் தங்களின் குப்பைகள் எல்லாம் தரமான குப்பைகள் என்று டாப் டென்னில் ஒருவர் கூறிக்கொண்டிருந்தார்..

கவுண்டர் : டேய்.. உங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே இல்லையாடா? அடேய்.. கோட்டு சூட்டு போட்ட கோமுட்டி தலையா. நீ சொல்ர படத்த ஒரு தடவ பார்ரா. அப்புறம் நீ போட்டிருக்கிற துணிய நீயே கிழிச்சிட்டு பைத்தியமா திரிவே..

கடைசியாக ஒரு சேனலை திருக அதில் லயித்து சத்தமே இல்லாமல் கண் கொட்டாமல் பார்க்க ஆரம்ம்பிக்கிறார். சரி விடுங்க.. பாத்திட்டு போகட்டும்..





என்னது அது என்ன சேனலா? அதாங்க.. அட அதாங்க .. அதே தாங்க..

Sunday, July 19, 2009

இந்தாங்க பிடிங்க அவார்ட..ஏதோ நம்மால முடிஞ்சுது..

இன்றைக்கு , எனக்கு வந்த ஒரு பின்னூட்டத்தில நண்பர் எவனோ ஒருவன் ஏதோ டாட்காமிலிருந்து,, அய்யய்யோ .. உண்மையத்தான் சொன்னேங்க.. அவர் பேரே எவனோ ஒருவன் தான்.. அவரின் வலைத்தளப் பெயர் ஏதோ டாட்காம் :)

அவர் எனக்கு ஒரு விருதை அளித்திருந்தார்.. அந்த விருதை எனக்கு பிடித்திருந்த மற்ற பதிவர்களுக்கும் அளிக்க விளைத்திருந்தார்.. ஆகவே நான் இந்த விருதை தர விரும்பும் நபர்கள் :

1. கிரி அண்ணன் : நான் முதலில் இந்த பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட ஆரம்பித்தது நம் கிரி அண்ணன் அவர்தம் பதிவுகளில் தான்.. இன்னொரு விசயம் என் அலுவலக கண்ணியில் இவர் தளம் மட்டும்(மற்ற எல்லா தளங்களும் வடிகட்டப்பட்டுள்ளது ) செயல்படும் மந்திரம் எனக்கு இன்னமும் விளங்காத ரகசியம்,ஆச்சர்யம்!!!இவர் பதிவுகளைப் பற்றி நான் சொல்லுவதை விட நீங்கள் ஒருமுறை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.. இன்னமும் ஒரு முக்கிய விசயம் , நெடுங்காலமாக எழுதிக்கொண்டிருந்தாலும், எந்த பதிவுலக அரசியலிலும் சிக்காதவர்!!!

2. மேனகா அக்கா : இவரின் சமையல் குறிப்புகள் என் அம்மிணிக்கு மிகவும் பிடிக்கும், தவிற என்னை வைத்து அடிக்கடி சோதனை வேறு நடக்கும்..

3. தீப்பெட்டி: இவர் நல்ல நண்பர்... அனைவரின் தளங்களுக்கும் சென்று பின்னூட்டம் இடுபவர்..நல்ல எழுத்து நடை கொண்டவர்..

4.ஞானசேகரன் : தற்போதைய வலைச்சர ஆசிரியர்.. பழக மிகவும் எளிமையானவர்.. பல நல்ல படைப்புகளைத் தருபவர்.

5. சுபா : ஒரு நல்ல தோழி , மலேசியாவிலிருந்து .. பல நல்ல விசயங்களை எழுதுகிறார்.. மலேசியாவின் சாலமன் பாப்பம்மா.. தமிழ் மேல் மிகுந்த பற்று கொண்டவர் .

6. இன்னமும் நிறைய பேருக்கு தர விருப்பம்.. ஆனால் அவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம். மேற்கூறிய அனைவரையும் நான் அன்பால் சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை.. மேலும் நான் யாரையும் இதை தொடர வேண்டும் என கேட்கப்போவதில்லை.. அவர்களின் நேரமும் மன நிலையும் எனக்கு சரியாக தெரியாத போது..


ஆகவே இந்த விருதை பிடியுங்கள்..






முடிந்தால், உங்கள் நேரம் ஒத்துழைத்தால், உங்களுக்கு தொடர் பதிவு பிடிக்கும் என்றால் நீங்களும் தொடரலாம்..

Saturday, July 18, 2009

தமிழ் திரட்டிகளை புறக்கணிப்போம்..

நண்பர்களே.. இது ஒன்றும் பிறர் கவனத்தை ஈர்க்க செய்யும் தலைப்பு அல்ல. இன்றைய பல பதிவர்களின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, இந்த இடுகைக்கு ஓட்டிடும் முறையும், சிறந்த பதிவரை தேர்வு செய்யும் முறையும் ஒளிவு மறைவின்றி உள்ளதா என்பதே..

அண்மையில் ஒரு நண்பர் இந்த விசயம் சம்பந்தமாக ஒரு பதிவு இட்டு இருந்தார். ஆனால் அவருக்கு வந்த பின்னூட்டங்கள் அனைத்தும், பிரபல இல்லை இல்லை நான் அப்படி சொல்ல மாட்டேன் வேண்டுமானால் சிறிது முன்னரே எழுத வந்த பலரின் அநாகரிக பின்னூட்டங்களே.. நாம் சிறு வயதில் படித்த காட்டை ஏமாற்றிய வண்ண நரியின் கதையே நினைவுக்கு வருகிறது.. அந்த நண்பரின் பதிவில் கூறிய எந்த குற்றச்சாட்டையும் யரும் பட்டவர்த்தனமாக மறுத்து எழுதாமல், அவரை கிண்டல் செய்து எழுதி இருந்தர்.. ஆக அவரின் கருத்துகளை மறுக்க இயலாமல் பிறரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவே எனக்கு படுகிறது.. அந்த நண்பர் கருத்தில் உண்மையில்லையெனில் அதை நிருபித்திருக்க வேண்டும், அல்லது அதை காணாமல் இருந்திருக்க வேண்டும்.. அதை விட்டு அவரை கிண்டல் அடிக்க முயன்றிருப்பது ஏனோ!!!

ஆக ஒரு விசயம் தெளிவாக தெரிகிறது.. அனைத்து திரட்டிகளும் ஒரு சில பதிவர்களின் கைகளிலேயே உள்ளது.. அவர்கள் முடிவு செய்யும் நபர்களே, அவர்களை துதி பாடும் நபர்களே பெரும்பாலும் சிறந்த பதிவர்களாக இருக்கின்றனர்..


அதிலும் இந்த தமிழ்மணம்.. ஹூம்ம் நாற்றம் தான் அடிக்கிறது.. இதன் எதிர் ஓட்டு முறை ஒரு புதிர்..யார் ஓட்டு போடுகிறார்,என்ன குறைக்கு அந்த எதிர் ஓட்டு என்கிற எந்த விபரமும் தெரிவதில்லை.. பதிவை ஏற்றிய உடனே 3 எதிர் ஓட்டுகளுடன் தான் அது வருகிறது.. எந்த தேர்தல் முறையிலும் இந்த எதிர் ஓட்டு முறை இல்லை.. 49 0 ஓட்டு முறையில் கூட நாம் ஏன் அந்த ஓட்டை அளிக்கவில்லை என்கிற விவரத்தை அளிக்க வேண்டும்.. ஆனால் இந்த திரட்டிக்கு அது தேவையில்லை..



ஆக இந்த திரட்டிகள் ஒன்றும் பிரம்மாகள் கிடையாது.. மேலும் முன்னரே எழுத வந்த யாரும் வஷிஷ்டர் கிடையாது அவர்கள் மூலம் பட்டம் பெற.. நாம் நம் மனதில் இருப்பதை எழுத இவர்கள் தயவு எதற்கு? ஆக நான் இன்று முதல் இந்த திரட்டிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்.. இதை ஒவ்வொரு பதிவரும் முயற்சி செய்தால் கண்டீப்பாக இந்த திரட்டிகளின் கொட்டம் அடங்கி பல நல்ல பதிவர்களின் திறமை வெளியில் வர வாய்ப்பு இருக்கும்..
நாம் இந்த ஆர்குட் போல, ஃப்ஸ்புக் போல நம் நண்பர்களை இணைத்து பதிவிட்டு மற்ற பதிவர்களை ஊக்குவித்தால் என்ன?





தேன் கூடு தொலைவில் இருந்து பார்த்தால் தனியே இருப்பது போல தோன்றும் ஆனால் அதில் ஓராயிரம் தேனிக்கள் இருக்கும்.. அது போல நாம் ஒரு தேன் கூட்டை உருவாக்கினால் என்ன?

Wednesday, July 15, 2009

கவுண்டரும்,செந்திலும் என் கடைசி இடுகையும்.....

என் புருசனும் கச்சேரிக்கு போனான் என்ற கதையாய் நானும் பதிவெழுதுகிறேன் என்றாகி விடுமோ என்கிற கவலை எனக்கு.. அதால் தான் செந்தில் அண்ணன் உதவியுடன் கவுண்டமணி அண்ணனிடம் ஐடியா கேட்கப்போகலாம் என்று வந்தேன்.. பிறகு நீங்களே பாருங்கள்..

செந்தில் : அண்ணே .. அண்ணே ... என்னண்ணே பண்றீங்க?

கவுண்டர் : வாடா பேரிக்கா தலையா...அது வேற ஒண்ணும் இல்லடா கோமுட்டி தலையா, வீட்ட ரெண்டு இன்ச் தள்ளி வைக்கலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.. வந்துட்டான் என்ன பண்றீங்கனு ஏது பண்றீங்கன்னு கேட்டுது..

செந்தில் : அதில்லேண்ணே.. உங்கள பாக்கறதுக்கு ஒருத்தர் வந்து இருக்கார்.. உங்க கிட்ட ஏதோ ஐடியா கேட்கணுமாம்..

கவுண்டர் : யார்ரா அது? அவன் என்ன பெரிய அமேரிக்கா ஜனாதிபதியா ..வரச்சொல்லுடா..

செந்தில் : வாங்க குறை ஒன்றும் இல்லை ..

கவுண்டர் : : என்னது குறை ஒண்ணும் இல்லையா? யார்ரா அவன் குறையில்லாம இருக்கிறவன்.. வரச்சொல்லு அவன..

குஒஇ : வணக்கமுங்க .. நான் தானுங்க அது..

கவுண்டர் : ஓ நீ தானா அது.. என்ன வேணும்? நீ என்ன பண்ற?

செந்தில் : அவர் பதிவருங்க..

கவுண்டர் : பதிவரா? ஓ சார் ரெஜிஸ்டரர் ஆபீஸ்ல வேலை பாக்குறாரா?இல்லே ஏதாவது யுனிவர்சிட்டியில் வேலை பாக்கிறாரா?

செந்தில் : அண்ணே அந்த பதிவர் இல்லேண்ணே.. இது ப்லாக் ..

கவுண்டர் : ஓ.. அந்த பதிவரா? நாட்டுல இந்த பதிவருங்க தொல்லை தாங்க முடியலப்பா.. புண்ணாக்கு விக்கிறவன்,குண்டூசி விக்கிறவன் எல்லாம் பதிவராம்.. அட அப்படியே இருந்தாலும் ஒழுங்கா எழுதி ஒண்ணாவ இருக்கீங்க? ஏதோ ஒண்ணங்கிளாஸ் பசங்க மாதிறி அவன் என் பென்சிலை திருடீட்டான் , இவன் என்ன கிள்ளி வச்சுட்டான்னு ஒரே சண்டை.. நீங்க எல்லாம் படிச்சவங்களா?


குஒஇ : அது வேற ஒண்ணும் இல்லீங்க.. நீங்க செந்தில் அண்ணனை உதச்சி பிரபலமாயிட்டீங்க.. நானும் இந்த பதிவு எழுதி......

கவுண்டர் : பதிவு எழுதி?????????? பிரபலமாகலாம்னு பாத்தியாக்கும்? நீ பிரபலமாகுறியோ இல்லியோ மத்தவங்களுக்கு ப்ராப்லமாகாம இரு அது போதும்..

குஒ இ: இல்லேண்ணே ஏதாவது ஐடியா இருந்தா..

செந்தில் : அண்ணே வேணும்னா உலகத்திரைப் படம் பத்தி விமர்சனம் எழுதச்சொல்லலாமா?

கவுண்டர் : க்கும்ம்ம். உள்ளூர் திரைப்படத்துக்கே இங்க வக்கு இல்லை. இதுல உலகத்திரைப்படம்.. அது எல்லாம் வேணாம் ராஜா.. அதுல அப்படி என்ன எழுவே? பாக்க வேண்டியத நல்லா பாத்துட்டு அப்புறம் அந்த டைரக்டர் அப்படி சொல்லி இருக்காரு, இப்படி சொல்லி இருக்காருணு நாமலே ஒரு கதை சொல்ல வேண்டியது ஏன்னா யார் அத போய் பாக்க போராங்க .. அட அனகொண்டாவ பாத்துட்டு பெண் பாம்பு பழிவாங்குதுண்ணு சொன்னாலும் சொல்லுவீங்க..

செந்தில் : இல்லேண்ணா யாராவது பிரபலமான பதிவர வம்பு சண்டைக்கு கூப்பிட்டு..

கவுண்டர் : யார்ரா பிரபலம்? இங்கே யாரும் பிரபலம் இல்லே.. இதுல எல்லாம் சமம் தான்.. நீ வேணா போய் பாரு நீ சொல்ர பிரபலத்தோட பழைய பதிவுகல.. யாரும் எட்டி பாத்திருக்க மாட்டாங்க..அப்படியே இருந்தாலும் அந்த பொலப்பு உனக்கு தேவையா?

செந்தில் : போங்கண்ணே... அப்புறம் தமிழ்மணத்தில எப்படி ஓட்டு வாங்குறது? சூடான இடுகையா எப்படி இருக்கிறது?

கவுண்டர் : தமிழ்மணமா? அது உன்ன விட நாத்தம் புடிச்ச இடம்டா.. அங்கே எல்லாம் ஓட்டு வாங்க நல்ல எழுத்து தேவையில்ல... வேற ஒண்ணு வேணும்.. ஆமா தமிழ்மணம் என்ன ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியா? அது பட்டம் குடுத்தா தான் நீ வாங்குவியா?

குஒ இ : அப்போ வேற என்ன பண்ண?

கவுண்டர் : உம்ம்ம்ம். வேணா கலைக்டர் ஆஃபிஸ்ல போய் ஃப்ல்ல கையெழுத்து போடு.. கேட்குறான் பாரு.. போ போய் உருப்படுர வழி இருந்தா பாரு.. வந்துட்டான். பெருசா.. ஆளையும் மண்டையையும் பாரு..

கு ஒ இ : சரிண்ணே..


ஆம்.. நண்பர்களே. இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி..

Friday, July 10, 2009

வண்ணத்துப் பூச்சி(தகுதியாக இருந்தால் ஏதாவது போட்டிக்கு ஏற்றுக்கொள்ளவும்..)

அது வாயிலிருந்து வெள்ளையாய் கக்கியது. கக்கும் பொழுது மிக சிரமப்பட்டு முகத்தை சுழித்தது. உடம்பை வளைக்க முயன்று முடியாமல் மெலிதாய் அசைந்தது. அதன் இயலாமை அவளை வெகுவாக பாதித்தது.

அதைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். என்ன செய்தும் அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. அப்படியே சலீமின் தோளில் விழுந்து அழுதாள். "என்னாலதானே இதெல்லாம்..?"

கிட்டதட்ட அவனும் அழுது விடும் நிலையில்தான் இருந்தான்.இருந்தும் காட்டிக் கொள்ளாமல் அவளைத் தேற்றினான்.

"அதான் ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டா§ர.. அப்புறமும் ஏன் அழற..?"

அவனுடைய பேச்சு சற்று ஆறுதலாய் இருந்தாலும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அங்கு படுத்திருப்பது அவளுடைய இரண்டாவது குழந்தை. நேற்று வரை சிரித்து, அழகாய், சின்னதாய் கொட்டாவி விட்டு உறங்கிய குழந்தை.. இன்று இப்படி, இந்த இருப்பை அவளால் ஜீரணம் செய்யவே முடியவில்லை.

திடீரென வாந்தியும் பேதியுமாய் போகவும், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மாலை வரை பார்த்துவிட்டு, இங்கு கொண்டு வந்தாள்.

"அட்மிட் பண்ணிதாம்மா பார்க்கணும்.. இப்போதைக்கு ஒன்னும் சொல்ல முடியாது."

அவளால் விலை மதிக்க முடியாத ஒன்று, சிறு கருணை கூட அற்று மிக சாதாரணமாக அலட்சியப் படுத்தப்படவும் அவளுக்கு உள்ளே என்னவோ செய்தது. புரியாமல் ஏதேதோ உளறினாள்.

"நேத்து வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு டாக்டர், இப்போ திடீர்னு என்னவோ ஆய்டுச்சு.. கொஞ்சம் என்னன்னு பாருங்க.." அவள் கையெடுத்து கும்பிடவும்,

"மொதல்ல பதட்டப்படாதீங்க. நான் என்னன்னு பார்க்கிறேன்.."

அவள் கூப்பிய கையை கீழே இறக்காமல் இருந்தாள். தடுப்பாரற்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. டாக்டர் மெல்ல ஸ்டெதஸ்கோப்பை குழந்தையின் மார்பு, வயிறு, முதுகில் வைத்துப் பார்த்துக்கொண்டே,

"குழந்தைக்கு இது எத்தனாவது மாசம்..? தாய்ப்பால்தானே குடுக்கறீங்க..?"

"பத்தாவது மாசம் டாக்டர்.. தூங்கும் போது மட்டும் புட்டி பால் குடுக்குறோம்.."

"ஓ, ஏதாவது மண்ல படுக்க வெச்சிருந்தீங்களா..?"

"இல்ல, எப்பவுமே என் கையிலதான் இருக்கும், அல்லாஹ் தந்த பரிசு..!" அவள் சொல்லும் போது வற்றி இருந்த அவள் கன்னம் மீண்டும் வெள்ளமானது..

"ம்ம், பாட்டில் நிப்பிள் அடிக்கடி மாத்திடறீங்களா..?" டாக்டர் கேள்வி புரியாமல் அவரைப் பார்க்கவும்.. அவர் மீண்டும் கேட்டார். அவளுக்கு சுளீரென்று அடித்தது,

"அல்லாஹ் என்னால, என் கவனக்குறைவாலதானே இந்த குழந்தைக்கு இவ்வளவும் நடந்தது..??"

"என்னம்மா உங்களத்தான்.. அடிக்கடி மாத்தறீங்களா என்ன..?.."அவள் தயங்கி, மெல்லிய விசும்பலுடன், "இல்ல, அது மாத்த மறந்திட்டேன்.." சொல்லிவிட்டு சேலைத் தலைப்பில் முகம் பொத்தி அழ ஆரம்பித்தாள்.

"ஒன்னும் பிரச்சினை இல்ல, அழாதீங்க.. உடனே குழந்தைய அட்மிட் பண்ணிருங்க.."அவர் சொல்லிவிட்டு வேகமாய் குழந்தைக்குத் தர வேண்டிய மருந்துகளை எழுதவும், அவள் குழந்தையை நெஞ்சில் புதைத்து, அதன் தலை மேல் தன் தலையை வைத்து அழுதாள்.

"அந்த டெஃப்லான கொஞ்சம் எடுத்துட்டு வாங்க.." அந்த நர்ஸ் யாரிடமோ கூறிவிட்டு, தன் கையில் வைத்திருந்த காட்டன் துணியை ஒன்றின் மேல் ஒன்று சுற்றி, பிளாஸ்த்திரியால் ஒரு பேஃட் போல் செய்து குழந்தையின் கையில் கட்டினாள். கிட்டத்தட்ட கை உடைந்து கட்டு போட்டாற்போல் ஆயிற்று. குழந்தையின் கையில் ஒரு நரம்பை தேர்வு செய்தாள்.

நர்ஸ் குளுக்கோஸ் ஏற்ற மிக நீண்ட ஊசியை எடுத்து குழந்தையின் கைகளை அழுத்தும் போது, தலை கவிழ்ந்து கொண்டாள்.

"அல்லாஹ் என் குழந்தைய காப்பாத்து.."

அவள் இடைவிடாமல் பிரார்த்திக்கவும், குழந்தை வீறிட்டு அழுதது.

"இது கடைசிக்கு வந்ததும் என்னைக் கூப்பிடுங்க" அந்த பாட்டிலின் அளவைக் காட்டி விட்டு அவள் நகரவும்..

"அத கரெக்ட்டா பார்த்துகுங்க, தீந்து போச்சுன்னா கையில இருக்கிற ரத்தமெல்லாம் அதுல போய்டும்".. கேட்காமலே புது பயத்தை தந்தாள் அருகில் இருந்த ஒருத்தி. பயத்தைப் பரிமாறிக் கொள்வதும் மனித இயல்புதான் போலும்!

அவளுடைய குழந்தையும் கிட்டதட்ட அதே போல் படுத்திருந்தது. என்னவென்று விசாரித்தாள். ஏனோ சற்று ஆறுதலாய் இருந்தது. வருத்தத்தை இன்னோர் வருத்தம் சமப்படுத்துவது எப்படி என்றே புரியவில்லை. ஒரு வேளை தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்று ஒரு பிரமை தோன்றி, அருகில் இருப்போர்க்கும் பார்த்து, பொது என்று உணரும்போது அமைதி கொள்ளுதோ..?..இல்லை பிறர் வருத்தம் அடைகையில் தேற்ற வேண்டிய பொறுப்பை மனம் உணர்வதால், சுய வருத்தம் மறைந்து கொள்கிறதோ..??

சலீமைப் பார்த்த உடனே அவள் அழுதாள். இரவு முழுக்க அவள் உறங்க வில்லை.நிமிடத்திற்கு ஒரு முறை அது தீர்ந்து விட்டதா என பார்த்தாள். அறிவு அது தீர வாய்ப்பில்லை என்று சொன்னாலும் மனம் அதைக் கேட்க மறுத்தது. ஏற்கெனவே தன் பிள்ளைக்குத் தன்னால்தான் இப்படி ஆனது என்ற குற்ற உணர்வு அவளை பாடாய் படுத்தியது.

"வாப்பா எனக்கு பசிக்குது", அதிகாலை தொழுகை முடித்து விரைவாக உனவருந்த பழக்கப்படுத்தி இருந்ததாலும், இன்னும் உள்ளிருந்து தோன்றும் உணர்வுகளை மறைத்து இடத்திற்கு தகுந்தாற்போல் பேசும் வயது வராததாலும், அவன் மறைக்காமல் கேட்டான். சலீம் தலையசைத்து இருவருக்கும் உணவு வாங்கி வரச் சென்றான்.

அவன் நடந்தானே தவிர, சிந்தை எல்லாம் வேறு எங்கோ இருந்தது.

"நேத்து அவசரப்பட்டு கையில் இருந்த எல்லா காசுக்கும் சரக்கு வாங்கிட்டமோ..?..இப்படி ஆகும்னு யாருக்குத் தெரியும்.. இப்போ கையில இருக்கிற காசு நிச்சயம் பத்தாது.. சரக்க திருப்பிக் குடுத்திட்டு காச குடுன்னா குடுப்பானா..? கேட்டுப் பார்க்கணும்.."

சலீம் இருக்கும் தெரு வண்ணத்துப் பூச்சியின் உடலைப் போன்றது. அதன் இரு பக்க இறக்கைகள் போல் சுற்றிலும் வீடுகள் அமைந்து இருக்கும். அதன் இரு முனைகளிலும் இரு கடைகள் அமைந்திருக்கும். நடுவில் இருப்பது அவனுடையது. பெரும்பாலும் இரு முனைகளிலும் உள்ள கடைகளில்தான் கூட்டம் ஆக்கிரமிக்கும். இடைபட்ட மக்கள்தான் இவன் கடையை நாடுவர்... "இந்த லட்சணத்துல இருந்த காசுக்கெல்லாம் சரக்கு வாங்கிப் போட்டாச்சு.." சலீம் நொந்து கொண்டே இருவருக்கும் சாப்பிட வாங்கி வந்தான்.

"சரி.. நான் கடை வரைக்கும் போய்ட்டு வரேன்.." சலீம் சொல்லவும், இப்போது அவனைத் தடுப்பது உசிதமற்றது என்பதை உணர்ந்ததால் அமைதியாக இருந்தாள். அவன் குழந்தையை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

கிட்டதட்ட அந்த ஊரே நிரம்பி வழிந்தது, அவன் தெருவிற்கு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா.

"நிச்சயம் பஸ்ல கூட்டம் நிரம்பி வழியும், பேசாம நடந்தே போயிடலாம்.." அவனுக்குக் கொஞ்சம் நடக்க வேண்டும் போல் இருந்தது.

"சரக்க வாங்கிட்டு காசு தரமாட்டேன்னா, யார் கிட்டயாவது கேட்டு பார்க்கனும், யார்கிட்ட..? அல்லாஹ் நீதான் ஒரு வழியக் காட்டனும்.."அவன் யோசித்துக்கொண்டே நடக்க..

அவன் கடை எதிரே யாருக்கோ காத்திருந்தது போல் ஒரு கூட்டம் நின்றது..

"என்ன பாய்,, எவ்ளவு நேரமா உங்களுக்காகக் காத்திருக்கிறது, இன்னிக்கு அம்மன் விஷேசம், உங்க கடையத் தவிர மத்ததெல்லாம் மூடிடுவாங்கன்னு தெரியாதா..? சீக்கிரம் கடையத் தொறங்க. அம்மனுக்கு பொங்க சாமான் வாங்கணும்.." வாடிக்கையாய் கடைக்கு வருபவன் சொல்லவும்தான் சென்ற முறையும் இப்படி ஆனது நினைவுக்கு வந்தது.

அவசர அவசரமாக கடையைத் திறந்தான். "பாய் எனக்கு மொதல்ல சாமானெல்லாம் கட்டுங்க.." வாடிக்கையாய் வருபவன் மற்றவர்கள் முன்னிலையில் தனக்கும் அந்த கடைக்கும் உள்ள உறவை பறைசாற்றவும்.. சலீம் தலை அசைத்தா‎ன்.

ஒவ்வொரு முறை கையில் பணம் வரும்போதும் நெஞ்சு "அல்லாஹ்..அல்லாஹ்.." என்றது. "பாய் பிரசிடெண்ட் வாங்கியார சொன்னாரு.." ஒரு பெரிய தாளை நீட்டவும், தேவைக்கு சரியான நேரத்தில் பெறும் உதவி அனைத்தையும் கரைய வைத்துவிடும். நன்றிப் பெருக்கில் சலீமின் கண்களில் நீர் நிறைந்தது. பொருள் எடுப்பதாய்த் திரும்பி அதைத் துடைத்துக் கொண்டா‎ன்.

கிட்டதட்ட அரை மணி நேரத்திற்குள் தேவைக்கு அதிகமாகவே சலீமின் கையில் பணம் சேர்ந்தது. இனி போதும்.. என்றெண்ணி கடையை மூடிய போது மாரியம்மன் அந்த வழியே ஊர்வலமாய் வந்துகொண்டிருந்தாள்.

சலீம் வானத்தை ஒரு முறை பார்த்து.. "அல்லாஹ் இவர்கள் திருவிழா நன்றாக நடக்கட்டும்..!!" என்று பிரார்த்தித்துக் கொண்டான்.

Wednesday, July 8, 2009

கதை (சத்தியமாக எந்த போட்டிக்கும் அல்ல!!)

மிகச் சரியாக துவாரத்தில் சாவியைப் பொருத்தி, மணிக்கட்டை வலதுபுறமாகத் திருப்பினான் மோகன். கண்கள் வாசலை நோக்க, கதவு திறந்திருந்தது. விரல்களால் கார்க்கதவு பூட்டப்பட்டுள்ளதா என்று பார்த்துக்கொண்டே அதை ஒட்டி இருந்த கெஸ்ட் ஹௌஸைப் பார்க்க, வேலு பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

வேலு, கண்ணனின் கண்டுபிடிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணன் ஒரு எழுத்தாளன்; விதம் விதமாக எழுதுவான்; இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாய்த் தேடுவான். ஒத்ததிர்வுகளால் வார்த்தைகளை ஒன்று சேர்த்து மூளையின் செல்களைத் தூண்டும் விதமாய் ஒரு கதை எழுத வேண்டும் என்பது அவனது நீண்ட நாளைய லட்சியம்.

அப்படிப்பட்ட சிந்தனையில், வார்த்தைகளை மாற்றி மாற்றி அடுக்கி அதன் அதிர்வுகளை கவனித்துக்கொண்டே தெருவில் நடக்கையில், தெருவோரம் கந்தலான நிலையில் வேலு கிடந்தான். பசியால் உடலைக் கூட அசைக்க முடியாமல், கண்கள் மட்டும் போவோர் வருவோரை நோக்கி அங்கும் இங்குமாய்த் திரும்பின. அனைத்துக் கண்களுக்கும் இவன் ஒரு காட்சிப் பொருளாய்த் தெரிய, இவன் மட்டும் அருகில் சென்று உதவி செய்து, தன்னுடன் அழைத்து வந்தான்.

வேலு வந்த சிறு தினங்களிலேயே கண்ணனை முழுதும் புரிந்து கொண்டான். காஃபி போட்டுத் தருவதும், புத்தகம், பேப்பர் இவற்றை சேகரிப்பதும் விருப்பப்பட்டால் தோட்ட வேலை செய்வதும் தன்னுடைய வேலை என சொல்லாமலேயே புரிந்து கொண்டான்.

ஒரு தாளில் தான் சேகரிக்கும் விபரங்களை எழுதி வேலுவிடம் படிக்கச் சொல்வான் கண்ணன். ஒன்றையே திரும்பத் திரும்ப, ஒவ்வொரு முறை தனக்கு காஃபி தரும் போதும் படித்து காட்டச் சொல்வான். நாள் கணக்காய், வாரக் கணக்காய், சில சமயம் மாதம் கூட, படிக்கச் சொல்வான்.

வேலுவின் ஒவ்வொரு மாற்றத்தையும் குறித்துக் கொள்வான். அவன் உறக்கத்தின் தன்மை கேட்டு அறிந்து கொள்வான், கனவுகள் ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் குறித்துக் கொள்வான். வேலு ஒரு முறை கூட எதற்கு என்று கேட்டதில்லை. திரும்பத் திரும்பப் படிக்க அவன் சலித்துக் கொண்டதும் இல்லை.

கிட்டத்தட்ட வேலு கண்ணனின் நடமாடும் ஆய்வுக் கூடம் போல் ஆகியிருந்தான். கண்ணன் பல கருத்துக்களை அவனுடன் பகிர்ந்து கொள்வான். கண்ணணாய்க் கேட்காமல் வேலு கருத்துரைக்க மாட்டான். வேலுவின் கருத்துக்களைக் கண்ணன் உன்னிப்பாய் கவனிப்பான். ஒரு நல்ல கலைஞனுக்கு, தன் கருத்தை மதிப்பவனை விட மறுக்காதவர் துணையே வேண்டும். அந்த வகையில் வேலு, கண்ணனின் கலைத் துணை போல் ஆகி இருந்தான்.

சிந்தனைகளைக் கலைத்தவனாய் மோகன் கண்ணனின் வீட்டிற்குள் பிரவேசித்தான். அந்த நகரத்தின் தலைசிறந்த மன நல மருத்துவர்களில் ஒருவன் மோகன். கண்ணனின் நெடுங்கால நண்பன். அதிகாலை நடை முடித்து, கண்ணனுடன் காஃபி அருந்துவது அவனது நீண்ட கால வழக்கம். மாடியின் இடது மூலையில் கண்ணனின் எழுதும் அறை. இன்று சற்றுத் தாமதமாய் வந்ததால் அவன் அங்குதான் இருப்பான்.

கண்ணன் தலை கவிழ்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தான். அவனைப் பற்றி அறிந்ததால் யோசிக்காமல் கதவை தட்டினான்.

அவன் தலை திருப்பி, தலை அசைத்தான்.

"ஒரு சின்ன ஹெல்ப், நேத்து வேலு பார்க் போகும்போது சின்ன ஆக்ஸிடெண்ட், கால்ல அடி பட்டிடுச்சு, கீழ கிட்சன்ல நீயே காஃபி போட்டு வெய்யேன்.. நான் இப்போ வந்திடறேன்."

மோகன் சரி என்பதாய்த் தலை அசைத்து வெளியேற, மீண்டும் தலை கவிழ்ந்து எழுத ஆரம்பித்தான்.

ஒரு புன்னகையுடன் கண்ணன், தன் கோப்பையை வாயில் பொருத்தினான்.

"இன்னிக்கு, எனக்கு ஒரு சில டவுட்ஸ் உன்கிட்ட கிளியர் பண்ணிக்க வேண்டி இருக்கு!",

"தாராளமா, அது என்ன என்கிட்ட?!" என்றான் கண்ணன்.

"காரணம் இருக்கு, இப்போ என்கிட்ட வந்திருக்கிற கேஸ் ஒரு எழுத்தாளர். ஏதோ ஒரு சில கதைகள் எழுதி இருக்கார், அவ்வளவுதான். பெருசா யாருக்கும் தெரியாது. அவருக்கு ஒரு பிரச்சினை; அதுவும் அவர் எழுத்தாலே."

"புரியல, எழுத்தால என்ன பிரச்சினை?"

"அவர் கதையைக் கற்பனை பண்ணும்போது, அது ஒரு சிந்தனை அப்படிங்றத மறந்திடறாரு, அந்தக் கற்பனையை நிஜம்னு நம்பறார்.." மோகன் கண்களை மேல் நோக்கித் திருப்பி, இதற்கு மேல் எப்படிச் சொல்வது என சிந்தித்தான்.

"இப்போ, நீ முக்கியமா யாரையாவது சந்திக்கப் போற, நீ என்ன செய்வ? அவர் கிட்ட என்ன பேசணும்னு, முன்னாடியே கொஞ்சம் சிந்தனை பண்ணி வெச்சுக்குவே, அவருடைய பதில்கள் எப்படி இருக்கும்னு கொஞ்சம் நீயே சிந்திச்சும் வெச்சுக்குவே.. உன்னுடைய சிந்தனைக்கு மாறா இருந்தா எந்த மாதிரி பதில் சொல்லலாம்னும் யோசிப்ப. அதுல நீயே ரெண்டு பேராவும் இருப்ப, அதனால இத உன்னோட புத்தி பொய்னு கலைச்சிட்டு வெளியே வந்திரும். இங்க உன்னோட சிந்தனை கற்பனை மேல ஆதிக்கம் செய்யும். ஆனா அவருக்கு அப்படி இல்ல. அவர் பேசப் போற ஒருத்தர் கூட கற்பனைல தன்னுடைய கேள்விகளைக் கேட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பதில்களையும், அவர் மறுத்தா என்ன செய்யணும்கிறதையும் கற்பனை மூலமாவே யோசிப்பார். அவரோட சிந்தனை எல்லாமே கற்பனை வாயிலாவே நடக்கும். அதாவது கற்பனை இல்ல, மனம்னு சொல்லலாம், சிந்தனை மேல ஆதிக்கம் செலுத்தும்."

நீண்ட பெருமூச்சொன்றை விட்ட கண்ணன், "ஸோ, இப்போ நாம அவரோட கற்பனையாகிய சிந்தனையை நிறுத்தணும்னு சொல்ற?",

"இல்லை.. பிரச்சினை இதோட முடியல. இப்படி அவர் கற்பனை பண்ணி, கற்பனை பண்ணி, தான் சந்திக்கிற ஒவ்வொருத்தருடைய பேசும் விதத்தையும் பழகும் விதத்தையும் வெச்சு, அவங்கள அதி தீவிரமா உணர்ந்து அவங்களோட தன்மை மறு நாள் எப்படி இருக்கும்னு முந்தைய நாளே உணர்ந்து இருக்கார்!"

மோகன் சொல்வதையே உற்றுக் கவனித்து சிறிது நேர மவுனத்திற்குப்பின்..
"அதாவது ஒரு நாள் எல்லாரை விடவும் முன்னால இருக்கார்னு சொல்ற? சரி, இது அவருக்குத் தெரியுமா?"

"இல்லை, அவருக்குத் தெரியாது, அவருக்கு என்ன பிரச்சினைன்னு நாங்க கண்டுபிடிக்கவே ரொம்ப நாள் ஆயிடுச்சு. அவருக்குத் தெரியாமத்தான் ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டு இருக்கோம். சரி, சொல்லு ஒரு எழுத்தாளனா இவரோட பிரச்சினை உனக்கு எப்படிப் படுது? உனக்கு ஏதாவது தோணுதா?"

"ஒரு நாள் முழுக்கத் தூங்க வெச்சுப் பார்க்கலாமே? சரி, இதால என்ன பிரச்சினை அவர்க்கு?"

"ம்ம், அதுவும் பண்ணிப் பார்த்தோம், ஆனா முழிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் அவரோட உணரும் தன்மை மாறிடறது. பிரச்சினைன்னு பார்க்கப்போனா, இப்போ அவரோட பார்வைக்கு தான் சந்திக்கிற எல்லாத்தையும் ஒரு நாள் கழிச்சு எப்படித் தெரியுமோ, அப்படியே இப்போ பார்க்கிறார். அதுவும் ஒருத்தர சந்திக்கும் போதுதான் இது நடக்குது. இதுக்கு வேற ஏதோ பண்ணனும். அதான் உன்கிட்ட கேட்டா ஏதாவது யோசனை சொல்வேன்னு?"

"ம்ம், கொஞ்சம் நிதானமா செயல்பட வேண்டிய ஒன்றுதான். மொதல்ல புதுசா யாரையும் அவர சந்திக்க விடாமப் பார்த்துக்கனும். கற்பனைக்கும் சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை அவராகவே உணரச் செய்யணும். அவர் ஒரு எழுத்தாளர்ங்கிறதால இதையே உனக்குத் தோணின ஒரு கதையா சொல்லி அவரையே எழுதச் சொல்லலாம். ஏன்னா, தன்னுடைய பிரச்சினைகளைப் பத்தி சிந்திக்கிறதவிட கைப்பட எழுதும்போது அதன் மேல கவனம் கொஞ்சம் அதிகமா இருக்கும். அப்பறம் இருக்கவே இருக்கு யோகா, மெடிட்டேஷன் ஏதாவது பண்ணச் சொல்லலாம்!"..சற்று நீளமாய்ப் பேசிவிட்டு இரண்டு முறை மேலும் கீழுமாய் தலை ஆட்டி மோகனைப் பார்க்க.

"ம்ம், கரெக்ட், இத அவரே உணர்ந்தாதான் சரிப்படும். எனக்கு நீ இன்னொரு சின்ன ஹெல்ப் பண்ணனும். அவரைக் கண்டிப்பா எழுதச் சொல்லணும். இருந்தாலும் இத ஒரு கதை வடிவில நீ எழுதிக் குடுத்தா இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும். அவரால ஒரு வேளை எழுத முடியலைன்னா உன்னுடைய கதையக் காட்டிப் படிக்கச் சொல்லலாம் இல்ல.. இதக் குடுத்து நீங்களா இருந்தா எப்படி எழுதுவீங்கன்னு கேட்கலாம்"

கெஞ்சும் விதமாய்க் கேட்டுவிட்டு அவனையே பார்க்க,

"சரி, எழுதிட்டாப் போச்சு. ஆனாலும் உனக்கு உன் வேலை மேல இவ்வளவு அக்கறை இருக்க கூடாதுடா. நேத்து இந்த நேரம் யாருடைய ஃபோனையோ அட்டன்ட் பண்ணப் போய், வைஃப் பாத் ரூம்ல வழுக்கி விழுந்து சீரியஸ்ஸா இருக்கறதா சொன்ன, இப்போ வந்து பேஷண்ட்டப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்க... .கொஞ்சம் குடும்பத்தையும் பார்த்துக்கோ!"

சிரிப்புடன் கண்ணன் சொல்ல, ஏதும் பேசாமல் மோகன், "நீ சொன்னதுக்கு அப்பறம்தான் ஞாபகமே வருது.. நான் ஹாஸ்பிடல் போகணும். சரி.. நாளைக்குப் பார்க்கலாம்.. கதைய மறந்திடாத"

அவன் எழுந்து கை குலுக்க, கண்டிப்பாய் என்பதாய் கண்ணன் தலை அசைத்தான்.

மோகன் கார்க் கதவை மூடி வெளியே செல்வதற்காக கதவு திறந்துள்ளதா எனப் பார்க்க.. வேலு அப்போதுதான் திறந்து வைத்துவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தான். அவசர அவசரமாக மொபைலில் ஹோம் என்பதைக் கண்டுபிடித்து அழைக்க, எதிர் முனை கிடைத்ததும் கத்தினான். "பாத்ரூம் பக்கம் மட்டும் போய்டாத..."..

பதிலுக்கு பதிலாக ஏதோ ஒரு அலறல் சப்தம் கேட்க அவன் செய்வதறியாது திகைத்தான்.

சிறிது நேரம் கழித்து நீர் விழும் சப்தம் மட்டும் கேட்க, அவன் காரை விரைந்து இயக்கினான். அவனுடய கார் இயங்கும் வேகத்தை விட அவன் இதயம் இயங்கும் வேகம் அதிகமாய் இருப்பது போல் தோன்றியது.

வீட்டிற்கு மிக அருகில் வந்தும் அவனால் சமாதானம் கொள்ள இயலவில்லை. தன்னுடைய தவற்றிற்கு வருந்தி விழி மூடி இங்கும் அங்குமாய் தலை அசைக்க திடீரென, வேலு வீட்டை விட்டுக் கிளம்பியது பிம்பம் போல் தோன்றியது



கவுண்டர் அட்டாக் : மக்களே.. இவன் இம்சை தாங்கல்.. யாராச்சுக்கு இந்த கதை புரியுதா? இதுக்கு பேர் கதையா?