}

Tuesday, March 9, 2010

ஆல்ட் +கன்ட்ரோல்+டெலிட்

நம்ம வேக்காடு வீராசாமி தயவுல நிறைய பேர் மின்சார பற்றாக்குறைய அனுபவிச்சிட்டு இருப்பீங்க.. இடுகை அவர பத்தினது இல்ல ... என்ன போல பல கணிணி நிறுவனங்களில வேலை செய்ரவங்களுக்கானது...



நம்ம நாட்டில இருக்கிர கணிணி நிருவன வல்லுநர்களுக்கு(!!!) ரொம்ப தெரிஞ்ச கணிணி வார்த்தை ஆல்ட் +கன்ட்ரோல்+டெலிட் ஆக தான் இருக்கும். ஏன்னா ஒவொருத்தரும் வேலைய முடுச்சிட்டி போரப்ப அவங்கவங்க கணிணிய ஆல்ட் +கன்ட்ரோல்+டெலிட் மூலமாக தான் லாக் பண்ணிட்டு கெளம்புவாங்க.. ஆனா முறையா கணிணி இயக்கத்த நிறுத்தாம(shutdown) இப்படி பண்ணீட்டு போனா என்ன நஷ்டம்? அதப்பத்தினது தான் இந்த இடுகை !!! ஒரு கணிணி முறையாக நிறுத்தப்படாமல் வெறுமனே ஆல்ட் +கன்ட்ரோல்+டெலிட் மூலம் லாக் செய்யப்பட்டால்(Hibernate) அது செலவளிக்கும் மின்சார அளவு 35 வாட் இந்த கணக்கின் அடிபடையில் நம்ம புரட்சிக்கலைஞர் பாணியில் ஒரு புள்ளி விபரக்கணக்கு...


ஒரு வாரத்திற்கு கணிணி உபயோகம் = 24*7=168 மணிநேரங்கள்..
இதில் வேலை(!!!) நேரம் 68 மணி நேரங்களாக வைத்துக்கொண்டால் ஒரு வாரத்திற்கு அது இயங்காமல் ஆனால் முறையாக நிறுத்தாமல் வைத்திருக்க ஆகும் நேர அளவு =100 மணி நேரம் ஒரு மாதத்திற்கு 4*100=400 மணி நேரங்கள்.

ஒரு சராசரி கணிப்பொறி நிறுவனத்தில் 250 கணிப்பொறிகள் இருப்பதாக வைத்துக்கொண்டால் 250*400=1,00,000 மணி நேரங்கள் .

ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 6 என கணக்கிட்டால் மொத்த இழப்பு ரூபாய் 21,000.
இங்கு இழப்பு பணம் மட்டும் எனில் பிரச்சினையில்லை ஆனால் மின்சாரம்? நாம் ஒவ்வொரு துளி மின்சாரத்தையும் செலவளிக்கும் போதும் மின்சாரத்தை தயாரிக்கும் பணியில் உள்ள ஊழியர்களின் நிலையைச் சற்று சிந்தித்தால் அவர்கள் அனல்மின்,அணுமின் நிலையங்களில் படும் பாடு கொஞ்சமாவது நியாயமாக மாறும்.ஆகவே அலுவலகத்தை விட்டு செல்லும் போது தயவு செய்து முறையாக கணிப்பொறி இயக்கத்தை நிறுத்தி நாட்டிற்கும் வீட்டிற்கும் ஒரு சிறிய பங்களிப்பை அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் !!!

இந்த இடுகையை எழுத காரணமாக இருந்த முன்னால் பாரத குடியரசு தலைவர் உயர்திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!