}

Friday, July 24, 2009

நானும் உலகத்திரைப்படத்திற்கு விமர்சனம் செய்கிறேன்(கண்டீப்பாக வயதானவர்களுக்கு மட்டும் அனுமதி )!!!

நண்பர்களே.. நானும் முதல் முறையாக ஒரு உலகத்திரைப்படத்தை பார்த்து அதை விமர்சனம் செய்யலாம் என முடிவெடுத்து , பர்மா பஜாரில் சென்று பத்து ரூபாய்க்கு ஒரு படத்தை வாங்கி வந்து இன்று பார்த்தேன்,.. படம் சுமார் 100 நிமிடங்கள் ஓடியது.. ஒரே மூச்சில் பார்த்து விட்டு அதை விமர்சனம் செய்யலாம் அந்த படத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இந்த இடுகை..

எட்கர்ட் ஆலன் போ என்ற அயல் நாட்டவர் திரைப்படம் பற்றி கூறும் போது , திரைப்படமானது ஒரு குதிரைப்பந்தயம் போல துவங்கி அதே வேகம் மற்றும் விருவிருப்புடன் முடிய வேண்டும் என்கிறார்...அவர் கூற்றுப்படியே இந்த படமானது மிக விருவிருப்புடன் துவங்கி அதே விருவிருப்புடன் முடிந்தது...

சரி விமர்சனத்திற்கு வருவோம்...


































கவுண்டர் : நாங்க பாத்த படம் உலக சினிமா தானுங்க.. இந்த மாதிறி உலக சினிமாவுல கதா நாயகன், கதா நாயகி மட்டும் தான் வேறங்க.. ஆனா கதை ஒண்ணு தாங்க...அதனால விமர்சனம் எதுவும் இல்லேங்க...

25 பதிலடிகள்...:

Admin said...

குறை ஒன்றுமே இல்லை நல்ல விமர்சனம்..

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் நல்லாதான் இருக்கே........

வடிவேலு said...

அடங்கொன்னியா... இதான் உலக விமர்சனமா?
என்னது வயசானவங்களுக்கு மட்டுமா? வழக்கமா வயதுக்கு வணந்தவர்களுக்கு மட்டும்னு தான சொல்வாய்ங்க!? பயபுள்ள நம்மள ஏமாத்திருச்சே!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சந்ரு.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஞாசேகரன்.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க வடிவேலு பெஸ்கி... நன்றி..

Menaga Sathia said...

விமர்சனத்திற்க்கு கீழே ஒன்னும் இல்லையே,வெறும் ப்ளாங்கா இருக்கு.எனக்கு மட்டும் தான் அப்படித் தெரியுதா ராஜ் சொல்லுங்க.

எப்படியோ இதுல இருந்து என்ன தெரியுதான்னு வயசானவங்களுக்கு மட்டும் தான் படம் தெரியும் போல.என்னை மாதிரி சின்ன பொண்ணுங்களுக்கெல்லாம் தெரியாது ஹி ஹி .அப்பாடி நாம தப்பித்தோம்....

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆமாங்க அக்கா. நீங்க சின்ன புள்ள தான்...

Anonymous said...

உங்க வயசுக்கு சரியான படம்தான் போல இருக்கு...

//பர்மா பஜாரில் சென்று பத்து ரூபாய்க்கு ஒரு படத்தை வாங்கி வந்து//

அடப்பாவி"இந்த" படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதிவியா நீ??

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க மயில்.. ஹி ஹி ஹி... அதான் ஒண்ணும் எழுதல இல்லை???

Anonymous said...

எனது ப்ளாக்கில் நீங்கள் கொடுத்துள்ள கருத்திற்கு நன்றி..வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அம்மு.. நன்றி..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வெள்ள மனம் உள்ள மச்சான்
விமர்சனம் சூப்பருங்க

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுரேஷ்.. நன்றிங்க உங்க வருகைக்கு..

தினேஷ் said...

சீ ஆய்பையா ..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சூரியன் நன்றி.. ஹி ஹி ஹி.

சம்பத் said...

விமர்சனம் அருமை. படத்தை பற்றி அக்கு வேறு அணி வேராக அலசி அராந்துள்ளீர்கள்.

பி.கு :
கமென்ட் கண்டிப்பாக காமெடிக்காக எழுதப்பட்டதல்ல.

சம்பத் said...

வடிவேலு: எங்களுக்கும் பாலோ பண்ண தெரியும். நாங்களும் அடிக்கடி வருவோம்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சம்பத்.. நன்றி.. வடிவேலுவுக்கும்...

//கமென்ட் கண்டிப்பாக காமெடிக்காக எழுதப்பட்டதல்ல.//

என்னா வில்லத்தனம்!!!

கிரி said...

யப்பா! சாமி

குறை ஒன்றும் இல்லை !!! said...

//யப்பா! சாமி//

வாங்க கிரி அண்ணே... வேற எந்த உலக திரைப்படம் பார்த்தாலும் புரிவதில்லைண்ணே!!!

*இயற்கை ராஜி* said...

:-) nalla vimarsanam..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//:-) nalla vimarsanam.//
ஹி ஹி ஹி நன்றி..

Unknown said...

////ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!////

இன்றைக்கு தான் பார்க்கிறேன் உங்க ப்ளாக் ஆனால் பதில் கொடுக்காமல் போக பயமா இருக்கு!!! விமர்சனம்னு நீங்க கொடுத்த தண்டனையே போதும்!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இன்றைக்கு தான் பார்க்கிறேன் உங்க ப்ளாக் ஆனால் பதில் கொடுக்காமல் போக பயமா இருக்கு!!! விமர்சனம்னு நீங்க கொடுத்த தண்டனையே போதும்!!! //

வாங்க தாமரை செல்வி.. தங்கள் முதல் வரவுக்கு நன்றி.. இது விமர்சனம் அல்ல !!!

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!