}

Wednesday, July 29, 2009

நானும், ஆந்திரா மெஸ்ஸும் , ஒரு ஃபுல் மீல்ஸும்...

நேற்று காலை அம்மிணியுடன் ஒரு சின்ன தகறாரு( ஆமா பெரிய வாய்க்கா தகறாரு என கேட்பது காதில் விழுகிறது) .. வாய்கா தகறாரெல்லாம் இல்லீங்க , வாய் தான் தகறாரு.. அதனால கோவத்தோடு காலையில சாப்பிடாம , மதியமும் சாப்பாடு கொண்டு போகாம ஆஃபீஸ் போயிட்டேன்..

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்னு சொல்லுவாங்க, எனக்கு பசின்னு நெனச்சாலே எல்லாம் போயிடும்.. அதனால காலையில கோவத்துடன் தி.நகர் உடுப்பி ஓட்டலில் ஒரு பொங்கல், வடை, கேசரி என அளவாக சாப்பிட்டு ஆஃபீஸ் போனேன்.. மதியம் சுமார் மூணு மணிக்கு சாப்பாடு சாப்பிடலாம்னு பக்கத்திலிருந்த ஒரு ஆந்திரா மெஸ் போனேன்..

ஆந்திரா மெஸ் போனதும் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள்.. என்னை இந்த அளவுக்கு வளர்த்தி விட்ட ஹைதராபாத் சாப்பாடு நினைவுக்கு வந்தது... ஆந்திரா சாப்பாடு என்றால் சில ஐட்டங்கள் கண்டீப்பாக இருக்கும், அவை பருப்பு பொடி எண்ணை, ஏதாவது ஒரு காய் பொறியல், ஒரு கூட்டு, காரமான ஒரு துவையல், கெட்டியான பருப்பு, தயிர், ஒரு ஊறுகாய் இருக்கும்..

அதுவும் நான் ஹைதியில் சாப்பிடும் மெஸ்ஸில் எல்லாம் அன் லிமிட்டெட் தான்.. எல்லாம் என்றால் எல்லாமே.. பருப்பு பொடி, எண்ணை, பொறியல், கூட்டு, என அனைத்தும் ஒவ்வொரு மேசைக்கும் தனித்தனியாக வைக்கப்படிருக்கும், நமக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.. அதுவும் அங்கு தரப்படும் தயிர் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.. அங்கே தயிர் கிண்ணத்தில் தர மாட்டார்கள், ஒரு பெரிய சட்டியில் எடுத்து வந்து வெட்டி போடுவார்கள்(எப்படி தான் கட்டுபடியாகிறதோ!!!)..அதுவும் இன்னும் வேணுமா, வேணுமா எனக் கேட்டு.. முழு சாப்பாட்டின் விலையும் அவ்வளவு ஒன்றும் அதிகம் இல்லை.. 32 ரூபாய் தான்,,

ஆக, இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு , ஓரளவுக்கு பெரிய ஆளாயி என் வீட்டிற்கு வந்தேன்.. வழக்கம் போல என் அம்மா என்னப்பா எளச்சு போயிட்டே எனக்கேட்டார் !!! ஹி ஹி ஹி என சமாளித்தபடி வீட்டில் எல்லோரையும் பயப்படுத்தி விட்டு , ஒரு சின்ன வேலையாக டைலர் கடைக்கு சென்றேன்...அங்கே அவரிடம் என்னண்ணே துணி தைச்சு இருக்கீங்க? பாருங்க உயரம் பத்தல என சொன்னேன்... அவரும் அப்படியா , இருக்காதே என சொல்லி அளந்தார்.. பேண்டின் உயரம், சரியாக தான் இருந்தது.. பிறகு தனது நோட்டை புரட்டி அளவை சரி பார்த்து சொன்னார்.. தம்பி உயரம் குறையல உங்க இடுப்பு அதிகமாயிடுச்சு அதனால தான்.. நீங்க உங்க இடுப்பை குறைக்கறீங்களா இல்ல பேண்டின் உயரத்தை அதிகரிக்கவா எனக்கேட்டார்.. அவர் கேட்டது எனக்கு கோபத்தை வர வைத்து.. ஆனால் அவருடைய அந்த டீல் ரொம்ப பிடித்து...எனவே பேண்டின் உயரத்தை அதிகரிக்க சொல்லி வந்தேன்..

இப்படி பெருமை மிக்க ஆந்திரா மெஸ்ஸை நினைத்து சாப்பிட அமர்ந்தேன்.. இங்கேயும் அதே மெனு ஆனால் சற்று சுவை குறைவாக, தயிரும் அளவாக.. தயிர் என்றதும் எனக்கு நியாபகம் வருபது.. அந்த தயிருடன் சர்க்கரை கலக்கி சாப்பிடும் பழக்கம்.. அதை இந்த ஆந்திரா மெஸ்ஸில் இருந்து தான் கற்றேன்.. ஆக நன்றாக சாப்பிட்டு விட்டு அலுவலகம் திரும்பி பின் வீட்டிற்கும் சென்றேன்...

வீட்டில் சாப்பாடு ரெடியாக இருந்தது.. ஆனால் பசி இல்லாததால்(கோவமாம்) எதுவும் சாப்பிடாமல் தூங்கி விட்டேன்

கவுண்டர் : மகா ஜனங்களே.. பாருங்கய்யா இந்த அநியாயத்த.. ஒருத்தன் அன் லிமிட்டெட் மீல்ஸ மூணு மணிக்கு சாப்பிட்டு நைட் வரைக்கும் பசி எடுக்கலேண்ணா எந்த அளவுக்கு சாப்பிட்டு இருப்பான்? இவன மாதிறி ரெண்டு பேர் போதும் அந்த கடைய காலி பண்ணீட்டு அவங்கள அப்படியே திருப்பதி அனுப்பிடுவான்.. பாருங்க , தெரிஞ்ச பையன் ஊரு பக்கம் வந்தா சாப்பாடு போடுலாம்னு மட்டும் தப்பி தவறி கூப்புராதீங்க.. அப்புரம் உங்க கதி அதோ கதி தான் ...

37 பதிலடிகள்...:

Menaga Sathia said...

//மகா ஜனங்களே.. பாருங்கய்யா இந்த அநியாயத்த.. ஒருத்தன் அன் லிமிட்டெட் மீல்ஸ மூணு மணிக்கு சாப்பிட்டு நைட் வரைக்கும் பசி எடுக்கலேண்ணா எந்த அளவுக்கு சாப்பிட்டு இருப்பான்? இவன மாதிறி ரெண்டு பேர் போதும் அந்த கடைய காலி பண்ணீட்டு அவங்கள அப்ப்டியே திருப்பதி அனுப்பிடுவான்.. பாருங்க , தெரிஞ்ச பையன் ஊரு பக்கம் வந்தா சாப்பாடு போடுலாம்னு மட்டும் தப்பி தவறி கூப்புராதீங்க.. அப்புரம் உங்க கதி அதோ கதி தான் ...//
எப்படியோ நான் தப்பித்தேன்.இப்ப தான் சாட்ல சொல்லி வாய மூடல அதுக்குள்ள் இந்த பதிவு.எல்லோரும் கவனமா இருங்க மக்களே...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//எப்படியோ நான் தப்பித்தேன்.இப்ப தான் சாட்ல சொல்லி வாய மூடல அதுக்குள்ள் இந்த பதிவு.எல்லோரும் கவனமா இருங்க மக்களே...//

அக்கா நீங்களே இப்படி சொன்னா?

சம்பத் said...

///ஆக, இப்படி சாப்பிட்டு சாப்பிட்டு , ஓரளவுக்கு பெரிய ஆளாயி என் வீட்டிற்கு வந்தேன்.. ///

நம்ம தலைவரு ஒரே பட்டுள்ள பெரிய ஆளா ஆகுற மாதிரி நீங்க ஒரு மெஸ்னாலேயே பெரிய(?) ஆளா ஆகிருக்கீங்க...

சம்பத் said...

///வீட்டில் சாப்பாடு ரெடியாக இருந்தது.. ஆனால் பசி இல்லாததால்(கோவமாம்) எதுவும் சாப்பிடாமல் தூங்கி விட்டேன்///

ஜக்கம்மா இதுக்கெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்களா..ஹி ஹி...

jothi said...

ஆந்திரா மெஸ்னா, நமக்கு அந்த பருப்பு கீரைதான்

அப்புறம் ஹைத்ராபாத்தில் பாரடைஸிலும், பாவோச்சியிலும் பிரியாணி சாப்பிட்டு இருக்கிங்களா?? அது பிரியாணி,.. சென்னையில நமக்கு கிடைக்கிறதெல்லாம் பிரியாணி இல்ல,.. அது தக்காளி சாதம்,..

ஆனால் இது கலக்கல் பதிவு

Malini's Signature said...

உங்க வீட்டு அம்மிணிக்கு இது எல்லாம் தெரியுமா?...பாவம் அவங்க சாப்பிடமே இருந்து இருக்க போறாங்க எல்லாம் ஒரு அனுபவம்தான்... :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வீட்டில மிச்சம் ஆன சாப்பாடு மறுநாளாலானும் உங்களுக்கேதான பரிமாறப்படும். பேசாம எழுந்து சாப்பிட்டு விடுங்கள்

GEETHA ACHAL said...

பாரவாயில்லை அண்ணா...எங்கள் வீட்டிக்கு வாங்க சாப்பிட என்று நாங்கள் அன்போடு கூப்பிட்டாலும் நீங்க தான் வரவே மாட்டேன் என்கிறிங்க....

சிநேகிதன் அக்பர் said...

அது தான் உங்கள் வளர்ச்சியின் ரகசியமா.

பார்த்தாலே தெரியுது.

தினேஷ் said...

அருமைய்யா ,,,

நான் சொன்னது ஆந்திரா பருப்ப..

கார்த்திக் said...

அருமை.. எனக்கு ஆந்திரா மெஸ்-லயே சாப்டுவந்த மாதிரி ஒரு feeling-ங்க.. அந்த பருப்பு பொடி, கோவக்காய் பொறியல் combination... அக்க. அக்க...

Anonymous said...

//இப்படி பெருமை மிக்க ஆந்திரா மெஸ்ஸை நினைத்து சாப்பிட அமர்ந்தேன்.. இங்கேயும் அதே மெனு ஆனால் சற்று சுவை குறைவாக, தயிரும் அளவாக.. //

ரொம்ப ஏமாற்றமோ?

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

ஆ.ஞானசேகரன் said...

//அந்த டீல் ரொம்ப பிடித்து...எனவே பேண்டின் உயரத்தை அதிகரிக்க சொல்லி வந்தேன்..//

நல்ல டீல்தான் போங்கோ

sivanes said...

நீங்க சாப்பிடுங்க ராசா! இப்ப சாப்டாம பின்னே எப்ப?

ஆனா ஐயாவுக்கு மலேசியா பக்கம் வர்ர ஐடியா ஏதும் இருந்துச்சுன்னா முன் கூட்டியே சொல்லிருங்கையய்யா! நான் முன்னெச்சரிக்கையா, ஊரையே காலிபண்ணிட்டு வேற எங்காச்சும் ஒடிப்போயிர்றேன் :))))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நம்ம தலைவரு ஒரே பட்டுள்ள பெரிய ஆளா ஆகுற மாதிரி நீங்க ஒரு மெஸ்னாலேயே பெரிய(?) ஆளா ஆகிருக்கீங்க...//
ஹி ஹி ஹி...
//ஜக்கம்மா இதுக்கெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்களா..ஹி ஹி...//

மாட்டாங்க சம்பத்.. நம்ம அம்மா தானே!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அப்புறம் ஹைத்ராபாத்தில் பாரடைஸிலும், பாவோச்சியிலும் பிரியாணி சாப்பிட்டு இருக்கிங்களா?? அது பிரியாணி,.. சென்னையில நமக்கு கிடைக்கிறதெல்லாம் பிரியாணி இல்ல,.. அது தக்காளி சாதம்,..//

வாங்க ஜோ.. ஹிம்ம்ம.. நியாபகப்படுத்தீட்டீங்களே ஜோ..சரியா சொன்னீங்க.. ரெண்டு மிளகாய சேர்த்து போட்டுட்டு கேட்டா ஹைதி பிரியாணின்னு சொல்றாங்க..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//உங்க வீட்டு அம்மிணிக்கு இது எல்லாம் தெரியுமா?...பாவம் அவங்க சாப்பிடமே இருந்து இருக்க போறாங்க எல்லாம் ஒரு அனுபவம்தான்... :-)///

வாங்க ஹர்சினி அம்மா.. இல்லீங்க அவங்கள பாத்தா சாப்பிடாத மாதிறி தெரியல..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//வீட்டில மிச்சம் ஆன சாப்பாடு மறுநாளாலானும் உங்களுக்கேதான பரிமாறப்படும். பேசாம எழுந்து சாப்பிட்டு விடுங்கள்//

வாங்க சுரேஷ்...இல்லை அது வேறு யருக்கோ தரப்பட்டு வி்ட்ட தாம்.. அதனால என்னன்னு இன்னும் தெரியல..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//பாரவாயில்லை அண்ணா...எங்கள் வீட்டிக்கு வாங்க சாப்பிட என்று நாங்கள் அன்போடு கூப்பிட்டாலும் நீங்க தான் வரவே மாட்டேன் என்கிறிங்க....//
விடு பாச மலரே.. கண்டீப்பா அதுக்கு ஒரு நாள் கிடைக்காமலா போய் விடும்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அது தான் உங்கள் வளர்ச்சியின் ரகசியமா.

பார்த்தாலே தெரியுது.//

வாங்க அக்பர்.. ஹீம்ம்ம்ம்ம்.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அருமைய்யா ,,,

நான் சொன்னது ஆந்திரா பருப்ப..//

வாங்க சூரியன்.. சுட்டுட்டீங்களே!!!

Subha said...

//அன் லிமிட்டெட் மீல்ஸ மூணு மணிக்கு சாப்பிட்டு நைட் வரைக்கும் பசி எடுக்கலேண்ணா எந்த அளவுக்கு சாப்பிட்டு இருப்பான்?// இப்படி சாப்டுதான் பெருசானீங்களா ராஜ்? இருந்தாலும் நல்ல மனசுப்பா உங்களுக்கு...உங்களைப் பற்றி உண்மையை பறை சாற்றும் அளவுக்கு :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அருமை.. எனக்கு ஆந்திரா மெஸ்-லயே சாப்டுவந்த மாதிரி ஒரு feeling-ங்க.. அந்த பருப்பு பொடி, கோவக்காய் பொறியல் combination... அக்க. அக்க...//

வாங்க கார்த்திக்..நம்ம ஆளா நீங்க?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இப்படி பெருமை மிக்க ஆந்திரா மெஸ்ஸை நினைத்து சாப்பிட அமர்ந்தேன்.. இங்கேயும் அதே மெனு ஆனால் சற்று சுவை குறைவாக, தயிரும் அளவாக.. //

ரொம்ப ஏமாற்றமோ?//

வாங்க அம்மு.. நீங்க தான் என்னை நல்லா புரிஞ்சு இருக்கீங்க.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அந்த டீல் ரொம்ப பிடித்து...எனவே பேண்டின் உயரத்தை அதிகரிக்க சொல்லி வந்தேன்..//

நல்ல டீல்தான் போங்கோ//

வாங்க ஞானசேகரன்.. ஹி ஹி ஹி நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நீங்க சாப்பிடுங்க ராசா! இப்ப சாப்டாம பின்னே எப்ப?

ஆனா ஐயாவுக்கு மலேசியா பக்கம் வர்ர ஐடியா ஏதும் இருந்துச்சுன்னா முன் கூட்டியே சொல்லிருங்கையய்யா! நான் முன்னெச்சரிக்கையா, ஊரையே காலிபண்ணிட்டு வேற எங்காச்சும் ஒடிப்போயிர்றேன் :))))//

கண்டீப்பா சொலலாம தான் வருவோம்..சிவனேசு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அன் லிமிட்டெட் மீல்ஸ மூணு மணிக்கு சாப்பிட்டு நைட் வரைக்கும் பசி எடுக்கலேண்ணா எந்த அளவுக்கு சாப்பிட்டு இருப்பான்?// இப்படி சாப்டுதான் பெருசானீங்களா ராஜ்? இருந்தாலும் நல்ல மனசுப்பா உங்களுக்கு...உங்களைப் பற்றி உண்மையை பறை சாற்றும் அளவுக்கு :)//

வாங்க சுபா.. நன்றி..

priyanka said...

//தயிர் என்றதும் எனக்கு நியாபகம் வருபது.. அந்த தயிருடன் சர்க்கரை கலக்கி சாப்பிடும் பழக்கம்.. அதை இந்த ஆந்திரா மெஸ்ஸில் இருந்து தான் கற்றேன்..//

அட!! நீங்களுமா?? என்னவரும் ஆந்திராவில் ஒரு வருடம் இருந்திருக்கிறார் என் கல்யாணத்திற்கு முன்.. அவரும் அன்ற மெஸ் விசிறி!!

அவர் சொல்லி சொல்லி எனக்கும் இந்த தயிரில் சக்கரை பழகி விட்டது!!

இப்போ... நீங்க நினைவு படுத்திடீங்க...!! இன்னிக்கி மதியம் சாப்டுடவேன்டியது தான்!!;-)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இப்போ... நீங்க நினைவு படுத்திடீங்க...!! இன்னிக்கி மதியம் சாப்டுடவேன்டியது தான்!!;-)//

வாங்க பிரியங்கா.. தாக்குங்க...

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா....

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஹாஹாஹா....//

வாங்க விக்னேஷ்வரி .. நன்றி..

*இயற்கை ராஜி* said...

unga madam ah blog padikka sollanum...:-))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//unga madam ah blog padikka sollanum...:-))//

அவங்களுக்கு தெரிஞ்சதால தான் இப்போ டையட்டாம்..

Suresh Kumar said...

//unga madam ah blog padikka sollanum...:-))//

அவங்களுக்கு தெரிஞ்சதால தான் இப்போ டையட்டாம்./////////////////////


அப்போ அவங்க பிளாக்கை படிச்சிட்டாங்களா ? பாஸ் பயர் பாக்ஸ் ல உங்க கமென்ட் பாக்சில பேஸ்ட் வேலை செய்ய மாட்டேங்குது சுமா செக் பண்ணி பாருங்க

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அப்போ அவங்க பிளாக்கை படிச்சிட்டாங்களா ? //

வாங்க சுரேஷ்... நான் படச்சு தெரிஞ்சுக்கற ஆள் இலல.. பாத்தாலே தெரிஞ்சுக்கிற ஆள்.. (எப்படிடா ராஜ்... என்னமோ போடா கலக்குறே!!)

//பாஸ் பயர் பாக்ஸ் ல உங்க கமென்ட் பாக்சில பேஸ்ட் வேலை செய்ய மாட்டேங்குது சுமா செக் பண்ணி பாருங்க//
அப்படியா? நானும் பயர் பாக்ஸ் தான் உபயோகிக்கிறேன்..

கிரி said...

//அதுவும் நான் ஹைதியில் சாப்பிடும் மெஸ்ஸில் எல்லாம் அன் லிமிட்டெட் தான்//

சென்னையிலும் எல்லாம் ஆந்திரா மெஸ் லையும் அப்படி தான் என்று நினைக்கிறேன்

அப்ப ராஜ் பக்கத்துல நின்னா அவ்வளவு தான் போல இருக்கு..நானெல்லாம் அதிசய மனிதனா தெரிவேன் போல இருக்கே

குறை ஒன்றும் இல்லை !!! said...

//சென்னையிலும் எல்லாம் ஆந்திரா மெஸ் லையும் அப்படி தான் என்று நினைக்கிறேன் //

வாங்க கிரி அண்ணே.. சென்னையில சாப்பாடு, சாம்பார் மட்டும் தான்னே அன் லிமிட்டெட்.. ஆனா ஹைதியில் தயிர் அன் லிமிடெட் அண்ணே.. அத வேற எங்கேயும் நான் இது வரை பாக்கல..

/அப்ப ராஜ் பக்கத்துல நின்னா அவ்வளவு தான் போல இருக்கு..நானெல்லாம் அதிசய மனிதனா தெரிவேன் போல இருக்கே//

ஹி ஹி ஹி.. தெரியலண்ணே.. பாப்போம்..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!