}

Monday, June 29, 2009

கருணாநிதி என்னவெல்லாம்(வெல்ல) செய்திருப்பார்??? தண்டோரா அண்ணன் தந்த தைரியத்தால் மீண்டும்..

இது வரை ஆயிர கணக்கான பதிவுகள் .. இலங்கை தமிழர்களையும் அவர் தம் இன்னல்களையும் பற்றி !! அதுவும் நமது முதல்வர் கருணாநிதியை பற்றி நல்லதும் பல பொல்லாததுமான பதிவுகள் .. என் பதிவும், அதுவும் முதல்(மீள்) பதிவும் அவரை பற்றியதே(பற்று கொண்டு அல்ல !!!!)

எல்லோரும் இது வரை கருணாநிதி பற்றி எழுதும் போது அவர் இதை செய்திருக்கலாம் அல்லது அதை செய்யாதிருக்கலாம் என்றே எழுதி வந்தனர் ..
ஆனால் எனக்கு ஒரு சின்ன கற்பனை ..

ஒரு வேலை இந்த அனைத்து துன்பங்களும் நிகழும் போது ஜெயா , காங்கிரஸின் உதவியோடு முதல்வராகவும் ஏனைய தலைவர்களும் கருணாநிதியும் ஒரே அணியிலும் இருந்து இருந்தால் எப்படி கருணாநிதி அதை எதிர் கொண்டு இருந்திருப்பார் ?

*அய்யகோ உடன்பிறப்பே என்று நாளும் பத்து மொக்கை கடுதாசி எழுதி இருப்பார் !!!

*கருணாநிதி செய்த அனைத்து கோமாளித்தனங்களையும்( அதாங்க தந்தி அடிப்பது, பேருக்கு ராஜினாமா கடிதம் வாங்குவது, தமிழர் சங்கிலி அமைப்பது, நன்கு மணி நேர உண்ணா விரதம் ) ஜெயா செய்திருந்தால் சன் தொலைக்காட்சியும் ,கருணாநிதி தொலைக்காட்சியும் அதை உலகுக்கே எதிர் மறையாக கொண்டு சேர்த்திருக்கும் !!!

* தினமும் ஈழக் கொடுமைகள் சன் மற்றும் கலைஞர் கருணாநிதி காட்டப்பட்டிருக்கும்.

* நக்கீரன் போன்ற வார முரசொலி பத்திரிக்கைகள் பல்வேறு ஜிகினா வேலைகலை அட்டைப்படங்களில் வைத்து காசு பார்த்திருக்கும்..

* முத்துகுமரன் ஒரு லட்சிய் மாவீரனாக அவர் தம் குடும்ப தொலை காட்சியில் கொண்டு சேர்க்கப்பட்டு இருப்பார் !!

* நண்பன் பிறகு இல்லவே இல்லை அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று பல்டி அடிக்க பயன் பட்ட திரு.பிரபாகரனை எனது மூத்த மகன் என்று சொல்லி இருப்பார் !!!

* சொக்க தங்கம் சோனியா பிய்ந்து போன தகரம் ஆக ஆக்கப்பட்டு இருப்பார்..

* காங்கிரஸ் மற்றும் அதிமுக ஒரு தமிழ் துரோக கட்சிகளாக சித்தரிக்கப்பட்டு அதை ஒரு தீண்டத்தகாத கட்சிகளாக தமது ஊடங்களின் மூலம் திணித்து இருப்பார் !!!

* இன்னும் என்ன வெல்லமோ செய்திருப்பார் தன்னை ஒரு தமிழின தலைவராக காட்ட .. ...


நல்ல வேலை அப்படி எதுவும் நடந்து எனது சந்ததியர் இவரை ஒரு தலை சிறந்த தலைவராக அடையாளம் காட்டப்படவில்லை !!!

கவுண்டர் அட்டாக் : டேய் தேங்கா மண்டயா.. ஆட்டோ வரும்டா. உன்னோட மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ ரெனியூல் பண்ணீட்டியாடா கேப்சூல் வாயா?

12 பதிலடிகள்...:

உண்மைத்தமிழன் said...

//கவுண்டர் அட்டாக் : டேய் தேங்கா மண்டயா.. ஆட்டோ வரும்டா. உன்னோட மெடிக்கல் இன்ஸ்சூரன்ஸ ரெனியூல் பண்ணீட்டியாடா கேப்சூல் வாயா?//

சூதானம் தம்பி..! அவ்ளோதான் சொல்லுவேன்..!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்கணே... நன்றிணே...

மணிஜி said...

தம்பி.....நல்லா இருக்கு..காரத்தை இன்னும் கூட்டு..எப்படி இருந்தாலும் ஆட்டோ கன்பார்ம்..அதனால....மெடிக்கல் இன்ஷுரன்ஸ் ரெனியுவல் பண்ணிடு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க தண்டோரா அண்ணே.. இன்னும் சிங்கப்பூருக்கு ஆட்டோ விடலேண்ணே...

SUMAZLA/சுமஜ்லா said...

வந்தாச்சு, rajpakkangal.tk மூலம். ஆனா, அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். உங்க டெம்ப்ளேட் அருமை. மஞ்சள் எழுத்தைப் பார்க்கத்தான் கொஞ்சம் கண்ணு கூசுது!

SUMAZLA/சுமஜ்லா said...

என்ன ஆச்சு என்னோட பின்னூட்டம்?

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுமஜ்லா.. நன்றி... நானும் இந்த எழுத்த மாத்த தான் முயற்சி பண்றேன்..

Anonymous said...

கவுண்டரே கொஞ்சம் நில்லுங்க, நானும் வரேன் ஆட்டோ எல்லாம் பத்தாது.. லாரி தான்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க மயில்..ஆஹா ஒணணு கூடியாச்சா?

ஆ.ஞானசேகரன் said...

பாத்து பேசுவோமா? எனக்கென்னவோ பயம்தான்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஞானசேகரன்.. ஹா ஹா.... சரிதான்...

Joe said...

டேய் பப்பாளித் தலையா, எங்கேயோ ஒக்காந்திக்கிட்டு, இணையத்தில எங்களப் பத்தி தப்பா எழுதினா எங்களுக்கு தெரியாதுன்னு நெனைச்சிட்டியா? மவனே உனக்கு சீக்கிரம் சங்கு தாண்டா! ;-)

தமி(ழீ)னத் தலைவர் வாழ்க.

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!