}

Wednesday, August 5, 2009

டைடல் பார்க்கில் நம்ம கவுண்டர் ... பாகம் 1

கவுண்டர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று பின் அங்கே கணிபொறி வல்லுனராக வேலை செய்து பின் பல கோடிகளை சம்பாத்திது இந்தியா வருகிறார்.. இல்லை,இல்லை இது சிவாஜி ரீமேக் இல்லை.. அந்த அளவிற்கு கேவலமாக இல்லாவிட்டாலும் சிறிதளவேணும் மாறுபட்டது..

நம்ம கவுண்டர் இந்தியா வந்ததும், செந்திலின் உதவியுடன் ஒரு மிகப் பெரிய கணிப்பொறி சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிவு செய்கிறார்.. நிறுவனத்திற்கு பெயரும் வைத்தாயிற்று.. தங்கள் நிறுவனத்திற்கு ஆள் எடுக்க செய்தித்தாளில் விளம்பரமும் செய்து , தற்போது ஆள் எடுக்க நேர்காணல் நடக்கிறது.... இனி நாம் நேர்காணல் நிகழ்ச்சிக்கு போவோம்..

செந்தில் : பாஸ், பாஸ்....

கவுண்டர் : டேய்.. கீ போர்ட் வாயா.. நாம என்ன கொள்ள கூட்டமா நடத்துறோம்? இது சாப்ட்வேர் கம்பனி டா..பாஸ் பாஸ்னு கூப்பிட்டு வேர ஏதோ தொழில் பண்றோம்னு நினைக்க போறாங்க.. அதுவும் உன்ன பாத்தா புள்ள புடிக்கிறவன் மாதிறியே இருக்கு..

செந்தில் : வேற எப்படிணே கூப்புடரது?

கவுண்டர் : ஹ்ம்ம்.. அமெரிககவில கூப்புடற மாதிறி மிஸ்டர் பெல்ன்னு கூப்புடு..

செந்தில் : ஓகே.. மிஸ்டர் பெல்.. இண்டர்வியூக்கு வந்திருக்கரவங்கள கூப்புடவா?

கவுண்டர் : ம்ம்ம்ம்... கூப்புடு

டி ஆர் : சார் வணக்கம்.. என் பேரு டி ஆரு.. ஊருக்குள்ள எனக்கு நல்ல பேரு..

கவுண்டர் : அய்யோ அம்மா... என்னடா இது புதர் பேசுது?

செந்தில் : அண்ணே அது புதர் இல்ல.. நல்லா பாருங்க..

கவுண்டர் : நல்லா பாக்குறதுக்கு இவன் என்ன நமிதா படமாடா? நல்ல பேண்ட் சர்ட் போட்ட கரடி மாதிறி இருக்கான்..
ஆமா என்ன என்ன புராஜக்ட் எல்லாம் பண்ணி இருக்கே?

டிஆர் : சார்.. என் லேட்டஸ்ட் ப்ரொஜக்ட் வீராசாமி.. இது ராணுவ சம்பந்தமான் புராஜக்ட் .. சமீபத்தில அமெரிக்கா வாங்கீட்டு போயிருக்காங்க..

கவுண்டர் : என்னது அமெரிக்காவா? எதுக்கு?

டிஆர் : இல்லே சார். அந்த பின்லேடன் தொல்ல தாங்கலயாம்.. அதான் அவன் நடமாடுர ஏரியாவில நம்ம புராஜக்ட் பத்தி எடுத்து சொல்லி அவனை வளைச்சி பிடிக்க போறாங்களாம்..

கவுண்டர்: ஆமா.. இவன வண்டலூர்லயே தேடுவாங்க போல இருக்கு.. இதுல இவன் வேற.. எந்திரிச்சு போக சொல்லு.. அடுத்தவ வரச்சொல்லு..

விஜய் : ந்ண்ண்ணா வணக்கங்கண்ணா!!

கவுண்டர் : வணக்கம் எல்லாம் இருக்கட்டும் யாரு நீ?

விஜய் : யாரு புரோக்ராம் எழுதினா பக் வந்து கம்ப்யூட்டரெல்லாம் நாசமா போகுமோ .. அவன் தான் தமிழ்..

கவுண்டர் : ஓ.. அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா நீ? என்ன பண்ணுவ வேலைக்கு எடுத்தா?

விஜய்: ஒரு முறை நான் எழுதின புரொகிராம நானே டெஸ்ட் பண்ண மாட்டேன்,,,

கவுண்டர் : அப்போ பிரியமுடன் வசந்த்தா வந்து சரி பண்ணுவாரு? கேள்வி கேட்டா பதில் சொல்லுடா.. பன்ச் டயலாக்குன்ற பேரில என்னனமோ சொல்லிட்டு.. நீ என்னன்ன புராஜக்ட் எல்லாம் பண்ணி இருக்கே?

விஜய் : நிறைய பண்ணி இருக்கேங்க..அதுல முக்கியமா இந்த வில்லு . பத்தி சொல்லனும், அது மாதிறி உலகத்திலேயே.......

செந்தில்( இடைமறித்து) மிஸ்டர் பெல்......ஒரு நிமிஷம்....

விஜய் : சைலன்ஸ்.. பேசிட்டு இருக்கோமில்ல?????

கவுண்டர் : அடேங்கப்பா.. செஞ்சது குப்பை புராஜக்ட், இதில உனக்கு இத்தன லவுட்டு ? ஒழுங்கா ஓடிப்போயிடு...அடுத்தவ வரச்சொல்லு..

அஜித் : வணக்கம்..

கவுண்டர் : வணக்கம்.. உன்ன பத்தி சொல்லு..

அஜித் : நான் தனியாள் இல்ல..எனக்கு பின்னால ஒரு கூட்டமே இருக்கு

கவுண்டர் : எங்கே காணொம்? இப்படிதாண்டா ரொம்ப நாளா சொல்லி ஏமாத்துறீங்க.. திருந்துங்கடா

அஜித் : நான் கோட் பண்ணி வந்த பக் இல்ல.. தான வந்த பக்... அது..

கவுண்டர் : எதுடா?.

அஜித் : அது தான் ..

கவுண்டர் : அய்யோ ராமா..தாங்க முடியலியே.. முதல்ல இவன அனுப்புடா வெளிய .. டேய் கரிச்சட்டி மண்டையா.. முடியலடா. மீதிய கொஞ்ச நேரம் கழிச்சு வச்சுக்கலாம்

செந்தில் மனதில் ( இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் விசுவநாதன்,விஜய காந்த், நமிதா, ஸ்டார்ஜன், அக்பர், சுரேஷ், பெஸ்கின்னு பல பேர எப்படி சமாளிக்க போறாரோ!!!!)

26 பதிலடிகள்...:

Malini's Signature said...

/இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் விசுவநாதன்,விஜய காந்த், நமிதா, ஸ்டார்ஜன், அக்பர், சுரேஷ், பெஸ்கின்னு பல பேர எப்படி சமாளிக்க போறாரோ!!!!)

ஹா ஹா சூப்பர்

/அதுவும் உன்ன பாத்தா புள்ள புடிக்கிறவன் மாதிறியே இருக்கு../

Malini's Signature said...

ஆமா நீங்க எப்ப பாஸ் ஆகபோறீங்க???

sivanes said...

//இப்படிதாண்டா ரொம்ப நாளா சொல்லி ஏமாத்துறீங்க.. திருந்துங்கடா//

சாமீ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்!
சொல்றது யாரு ?
கவுண்டரா! இல்ல குறை ஒன்றும் இல்லை யா ?

Menaga Sathia said...

//செந்தில் மனதில் ( இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் விசுவநாதன்,விஜய காந்த், நமிதா, ஸ்டார்ஜன், அக்பர், சுரேஷ், பெஸ்கின்னு பல பேர எப்படி சமாளிக்க போறாரோ!!!!) //சூப்பர்ர்ர்ர்ர் ராஜ்

அப்புறம் இதுல வசந்தையும் சேர்த்தது காமெடி சூப்பர்ர்.இன்னும் எழுதுங்க தம்பி.

//ஆமா நீங்க எப்ப பாஸ் ஆகபோறீங்க???//ரிப்பீட்ட்........

GEETHA ACHAL said...

சூப்பர் போங்க...எப்படி தான் இப்படி எல்லாம்...

இதுல வேற கம்முனு இருக்கும் நம்ம தம்பி வசந்தையை வேற இழுத்திட்டிங்க...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அய்யாவின் கஜானா

காமெடி கஜானா காலியே ஆகாது

jothi said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

Anonymous said...

ராஜ் நீங்கள் தான் முதலில் பதிவு போட்டு பிரியாணி ஆசையை தூண்டி விட்டீர்கள் அதான் இனிக்கு செஞ்சுட்டேன்..நீங்களும் செஞ்சு பாருங்கள் அதே டேஸ்ட் கிடைக்கும்..ஒரு பதிவில் நீங்கள் "நம்மூரில் ஹைதி பிரியாணி போல் கிடைக்க மாட்டேன்குது"னு சொல்லி இருந்தீர்கள்..இந்த விதத்தில் செய்து பாருங்கள் அதே சுவை கிடைக்கும்..என் ப்ளாக்கில் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாருங்கள்..

பி.நோ.:கவுண்டர் கலாட்டா தொடரட்டும்.

அன்புடன்,
அம்மு.

Admin said...

கலக்கலோ, கலக்கல்.... வாய் விட்டுச் சிரிச்சன் நோய் விட்டுப் போகுமா... மன்ன்னிக்கவும் அப்படி நோயல்லாம் இல்ல ப்ளக் எழுதுற நோயத் தவிர...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல மிமிக்ரி பார்த்த திருப்தி இருக்கு நண்பா.... கலக்குங்கோ... நல்ல கலக்கல் தொடர்தான்..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் ...............//

வரச்சொல்லுங்க பாஸ்

Suresh Kumar said...

என்ன தல இப்படி சிரிக்க வச்சிட்டீங்க

Beski said...

//செந்தில் மனதில் ( இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் விசுவநாதன்,விஜய காந்த், நமிதா, ஸ்டார்ஜன், அக்பர், சுரேஷ், பெஸ்கின்னு பல பேர எப்படி சமாளிக்க போறாரோ!!!!)//

அய்யய்யோ ஜக்கம்மா காப்பாத்து...

கார்த்திக் said...

அற்புதம்.. எப்படீங்க.. ரூம் போட்டு யோசிச்சீங்களா???

சிநேகிதன் அக்பர் said...

ஆகா கவுண்டர் அட்டாக்கில் நம்ம பேரும் இருக்கா.

கலக்கலா சொல்லி இருக்கீங்க. கவுடண்டர் சொன்ன மாதிரியே இருக்கு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

******** ஹர்ஷினி அம்மா சொன்னது *******************

/இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் விசுவநாதன்,விஜய காந்த், நமிதா, ஸ்டார்ஜன், அக்பர், சுரேஷ், பெஸ்கின்னு பல பேர எப்படி சமாளிக்க போறாரோ!!!!)

ஹா ஹா சூப்பர்

ஆமா நீங்க எப்ப பாஸ் ஆகபோறீங்க???//


வாங்க !!! இப்போதைக்கு இல்லேங்க !!!!

_______________________________________________________________________________________________________________


**************************சிவனேசு சொன்னது***********************

//இப்படிதாண்டா ரொம்ப நாளா சொல்லி ஏமாத்துறீங்க.. திருந்துங்கடா//

// சாமீ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்!
சொல்றது யாரு ?
கவுண்டரா! இல்ல குறை ஒன்றும் இல்லை யா ?//

ரெண்டு பேரும் தான்...

____________________________________________________________________________________________________________________

###########################Mrs.Menagasathia சொன்னது #####################

//செந்தில் மனதில் ( இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் விசுவநாதன்,விஜய காந்த், நமிதா, ஸ்டார்ஜன், அக்பர், சுரேஷ், பெஸ்கின்னு பல பேர எப்படி சமாளிக்க போறாரோ!!!!) //சூப்பர்ர்ர்ர்ர் ராஜ்

அப்புறம் இதுல வசந்தையும் சேர்த்தது காமெடி சூப்பர்ர்.இன்னும் எழுதுங்க தம்பி.

//ஆமா நீங்க எப்ப பாஸ் ஆகபோறீங்க???//ரிப்பீட்ட்........//

வாங்க .. நீங்களும் ரிப்பீட்ட் போட ஆரம்பிச்சச்சா?

__________________________________________________________________________________________________________________________

#################கீதா ஆச்சல் சொன்னது ###########################################

சூப்பர் போங்க...எப்படி தான் இப்படி எல்லாம்...

இதுல வேற கம்முனு இருக்கும் நம்ம தம்பி வசந்தையை வேற இழுத்திட்டிங்க...//

வாங்க... ஹி ஹி ஹி.. என்ன எல்லோரும் வசந்த இப்படி குறி வைக்கறீங்க ?

____________________________________________________________________________________________________________________________
#########################Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது ###############3

// அய்யாவின் கஜானா

காமெடி கஜானா காலியே ஆகாது//வாங்க .. நன்றிங்க..

_________________________________________________________________________________________________________________________

குறை ஒன்றும் இல்லை !!! said...

###################### jothi சொன்னது ############################################

//சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது//

வாங்க.. நன்றிங்க..

______________________________________________________________________________________________________________________

########################### Ammu Madhu சொன்னது ##################################
// ராஜ் நீங்கள் தான் முதலில் பதிவு போட்டு பிரியாணி ஆசையை தூண்டி விட்டீர்கள் அதான் இனிக்கு செஞ்சுட்டேன்..நீங்களும் செஞ்சு பாருங்கள் அதே டேஸ்ட் கிடைக்கும்..ஒரு பதிவில் நீங்கள் "நம்மூரில் ஹைதி பிரியாணி போல் கிடைக்க மாட்டேன்குது"னு சொல்லி இருந்தீர்கள்..இந்த விதத்தில் செய்து பாருங்கள் அதே சுவை கிடைக்கும்..என் ப்ளாக்கில் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாருங்கள்..

பி.நோ.:கவுண்டர் கலாட்டா தொடரட்டும்.

அன்புடன்,
அம்மு.//


வாங்க அம்மு நன்றி..

______________________________________________________________________________________________________________________________
##################### சந்ரு சொன்னது #################################################

//கலக்கலோ, கலக்கல்.... வாய் விட்டுச் சிரிச்சன் நோய் விட்டுப் போகுமா... மன்ன்னிக்கவும் அப்படி நோயல்லாம் இல்ல ப்ளக் எழுதுற நோயத் தவிர...//

வாங்க நன்றிங்க

_____________________________________________________________________________________________________________________________________________________________

############################## ஆ.ஞானசேகரன் சொன்னது ###################################

// நல்ல மிமிக்ரி பார்த்த திருப்தி இருக்கு நண்பா.... கலக்குங்கோ... நல்ல கலக்கல் தொடர்தான்..//


வாங்க நன்றிங்க..

_____________________________________________________________________________________________________________________________________________________________


######################SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது ####################################

//இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் ...............//

வரச்சொல்லுங்க பாஸ்//


வருவோம் வருவோம்

_______________________________________________________________________________________________________________________________________________________
################## Suresh Kumar சொன்னது #################################

என்ன தல இப்படி சிரிக்க வச்சிட்டீங்க

நன்றிங்க.. ஏதோ நம்மால முடுஞ்சது

______________________________________________________________________________________________________________________________________________________

#########################எவனோ ஒருவன் சொன்னது ######################

//செந்தில் மனதில் ( இதுக்கே இப்படிண்னா, இன்னும் ராமராஜன், பூர்ணம் விசுவநாதன்,விஜய காந்த், நமிதா, ஸ்டார்ஜன், அக்பர், சுரேஷ், பெஸ்கின்னு பல பேர எப்படி சமாளிக்க போறாரோ!!!!)//

அய்யய்யோ ஜக்கம்மா காப்பாத்து...//

ஹா ஹா ஹா..

__________________________________________________________________________________________________________________________________________________________

################# கார்த்திக் சொன்னது #######################################

// அற்புதம்.. எப்படீங்க.. ரூம் போட்டு யோசிச்சீங்களா???//

வாங்க நன்றி.. அப்படி எல்லாம் இல்லீங்க..

____________________________________________________________________________________________________________________________________________________________

############################# அக்பர் சொன்னது ############################

// ஆகா கவுண்டர் அட்டாக்கில் நம்ம பேரும் இருக்கா.

கலக்கலா சொல்லி இருக்கீங்க. கவுடண்டர் சொன்ன மாதிரியே இருக்கு.//

வாங்க.. நாமலும் இருக்கோம்ல...

_______________________________________________________________________________________________________________________________________________________________
_______________________________________________________________________________________________________________________________________________________________

தினேஷ் said...

சூப்பர் தல அதும் விஜய் பார்ட் அட்டகாசம் ..

இன்னும் மற்றவர்களும் தேர்வில் எப்படி பேசுவாங்கனு சீக்கிரமே சொல்லிபுடுங்க

Nathanjagk said...

கலக்கல்!

ப்ரியமுடன் வசந்த் said...

கலக்கல்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//சூரியன் சொன்னது

சூப்பர் தல அதும் விஜய் பார்ட் அட்டகாசம் ..

இன்னும் மற்றவர்களும் தேர்வில் எப்படி பேசுவாங்கனு சீக்கிரமே சொல்லிபுடுங்க//

வாங்க சூரியன். நன்றி... கண்டீப்பா..

______________________________________________________
// ஜெகநாதன் சொன்னது

கலக்கல்!//

வாங்க ஜெகநாதன் நன்றி..தங்கள் முதல் வருகைக்கு்..
________________________________________________________// பிரியமுடன்.........வசந்த் சொன்னது

கலக்கல்//

வங்க வசந்த்.. நன்றி..

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

எப்படியாவது அந்த வேலையை எனக்கு வாங்கி குடுத்திடுவீங்கல்ல???

Jaleela Kamal said...

ராஜ் க‌வுண்ட‌ர் காம‌டி ம்ம் சூப்ப‌ர்.....
காமடி எதா இருந்தாலும் முத ஆள் நான் தான்.

அதுவும் கம்புயுட்டரில் செந்தில், கவுண்டர் கேட்கவே வேணாம்.
நல்ல வே சிரிச்சாச்சு.

வாங்க என் சுவையான சமையல் பாகத்திற்கும்.

www.jaleelakamal.blogspot.com

Jaleela Kamal said...

//கவுண்டர் : வணக்கம் எல்லாம் இருக்கட்டும் யாரு நீ?

விஜய் : யாரு புரோக்ராம் எழுதினா பக் வந்து கம்ப்யூட்டரெல்லாம் நாசமா போகுமோ .. அவன் தான் தமிழ்..

கவுண்டர் : ஓ.. அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா நீ? என்ன பண்ணுவ வேலைக்கு எடுத்தா?
கவுண்டர் : அய்யோ ராமா..தாங்க முடியலியே.. முதல்ல இவன அனுப்புடா வெளிய .. டேய் கரிச்சட்டி மண்டையா.. முடியலடா. மீதிய கொஞ்ச நேரம் கழிச்சு வச்சுக்கலாம்//

பு ஹா ஹா ஹா புவா ஹா ஹா

குறை ஒன்றும் இல்லை !!! said...

########கிறுக்கல் கிறுக்கன் சொன்னது##########.

//எப்படியாவது அந்த வேலையை எனக்கு வாங்கி குடுத்திடுவீங்கல்ல???//


கண்டீப்பா ஆனா இன்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணனும் !!

______________________________________________________
$$$$$$$$$$$Jaleela சொன்னது $$$$$$$$$$$$$$$

// ராஜ் க‌வுண்ட‌ர் காம‌டி ம்ம் சூப்ப‌ர்.....
காமடி எதா இருந்தாலும் முத ஆள் நான் தான்.

அதுவும் கம்புயுட்டரில் செந்தில், கவுண்டர் கேட்கவே வேணாம். நல்ல வே சிரிச்சாச்சு.

வாங்க என் சுவையான சமையல் பாகத்திற்கும்.

/ பு ஹா ஹா ஹா புவா ஹா ஹா//

வாங்க ஜலீலா.. நன்றி.. நான் உங்க பக்கத்த துரத்துர ஆளுங்க.. நீங்க சொல்லாமலேயே வருவோம்..

Anonymous said...

என்னுடைய ப்ளாக்கில் உங்களுக்கு மூன்று விருதுகள் இருக்கிறது வந்து பெற்றுக்கொள்ளவும்.

ப்ரொபைல் படத்தில் இருப்பது நீங்களா ராஜ் ?

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!