

அட அட அட!!!! அந்த விளக்கம் என்னவென்றால்....................................
1. மத்திய அரசிடம் 15.5 ரூபாய்க்கு அரிசி வாங்கி அதை ஒரு ரூபாய்க்கு தமிழக மக்களுக்கு விற்றால் இழப்பு 14.5 ரூபாயா?

2. முறைப்படி ஏலம் விட்டிருந்தால் அது தனியார் ஏகாதிபத்திய கம்பனிகள் ஏலம் எடுத்து அதனால் மக்களுக்கு தொலைபேசி அலைப்புகளுக்கு அதிக செலவை வைத்திருக்கும்....
பதில் : முறைகேடாக வாங்கிய கம்பனிகள் ஒன்றும் சுதேசி கம்பனிகள் அல்ல. வாங்கிய உடனேயே அடுத்தவருக்கு விற்று பலகோடி கொள்ளை அடித்தவை....
இனி புரோட்டா கதை மூலம் ஸ்பெக்ட்ரம் விளக்கம்..................................

மொத்தமுள்ள 100 புரோட்டாவையும் பார்சல் வாங்குகிறோம். ஒரு புரொட்டாவின் விலை ரூபாய் 10. ஆனால் நமக்கு தான் எல்லோரும் வேண்டிவர்கள ஆயிற்றே... மேனேஜர் கண்காணிப்பில், சர்வரின் பரிந்துறையில் பில் 250 ரூபாயாக போடப்படுகிறது. நாம் சர்வருக்கு 600 ரூபாய் தருகிறோம். நமக்கு லாபம் ரூபாய் 400. சர்வருக்கு ரூபாய் 50, பில் போடுபவருக்கு 100 , மேனேஜருக்கு ரூ 200 லாபம் ஆனால் ஹோட்டலுக்கு இழப்பு என்கின்ற நஷ்டம் ரூ 750. இங்கே சர்வர் ஆ.ராசா, பில்லிங் கிளார்க் கனிமொழி, மேனேஜர் சோனியா !!!! நாம் தான் அனைத்து புரோட்டவையும் வாங்கியாயிற்றே வெளியில் ஒரு திருட்டு கூட்டத்திற்கு புரோட்டா ஒன்று ரூ 20 என 40 புரோட்டாக்களை விற்று நாம் அடைந்த லாபம் ரூ.800.ஆக நாம் செலுத்திய தொகை போக மீதி ரூ.200 மற்றும் கையிருப்பு 60 புரோட்டாகள்.. இந்த 60 புரோட்டாக்களை ரூ 9 ( குறைநத விலையில் சேவையாம்) அளவிற்கே விற்றால் கூட நமக்கு லாபம் 540 .. ஆக நாம் அடையும் லாபம் ரூபாய் 740!!!!! கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் உத்தியே நாட்டின் சொத்தை சகாய விலைக்கு கொள்ளை அடித்து , பாதியை மிகப்பெரிய லாபத்திற்கு விற்று மீதியை வேறு வழியில்லாமல்( ட்ராய் விதிப்படி ) சகாய விலையில் கொடுப்பது சேவையாம்!!!!
கவுண்டர் அட்டாக் : அடேய் !! அடி... அடேடி !!!! உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? விட்டா ஸ்பெக்ட்ரம்னா ரங்கநாதன் ஸ்ட்ரீட்ல 10 ரூபாய்க்கு கிடைக்கிறதுன்னு சொன்னாலும் சொல்லுவீங்க போல !!
2 பதிலடிகள்...:
பரோட்டா விளக்கம் பிரமாதம். இவ்வளவு கொள்ளை அடிச்சுட்டு எப்படி இவனுங்க கூசாம இப்படி பொய் சொல்றாங்க?
வாங்க பந்து . நன்றி உங்கள் முதல் வரவிற்கு !!!!
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!