நம் இந்திய நாட்டில்  முட்டு சந்தில் க்ரிக்கெட்  விளையாடப்பட்டாலும் கூட அது நமது வீரர்கள்(அப்போ ராணுவம் மற்றும் உயிர் காப்பவர்கள்?)என்றால் நாம் அனைவரும் கண்டீப்பாக நமது நேரத்தை அங்கே செலவிடுவோம்...
மிக அண்மையில் நடைபெற்ற 20-20 உலக கோப்பை போட்டியில் நமது நடப்பு சாம்பியன் மண்ணை கவ்வியது அனைவரும் அறிந்ததே!! அதன் காரணம் பலராலும் பல விதத்திலும் அலசப்பட்டது,படுகிறது, படும்...
இது நம்முடைய காரணங்கள்...
நமது தோல்விக்கு முழு காரணமும் தோணியே.. ஏன் என்றால் ......
*   விளம்பரத்தில் அதிகம் வருமானம் இருப்பதால் மைதானத்தை   விட வெளியில் தான்  அதிகம் ஆடுகிறார்.
*   கடந்த பல ஆட்டங்களில் தோணியால் வென்ற ஆட்டங்களை விட தோற்ற ஆட்டங்களே அதிகம்.. இவரின் கடந்த கால ஆட்டங்களின் விபரங்கள்-
எதிரணி            விளையாடிய வரிசை    ரன்      பந்து 4 6    முடிவு
இங்கி                6 வது ஆட்டக்காரர்         30        20     2 -    தோல்வி
மே இ               5 வது ஆட்டக்காரர்         11         23      - -   தோல்வி
அயர்லாந்து     3 வது ஆட்டக்காரர்          14         13      1   -   வெற்றி
பங்ளாதேஷ்    3 வது ஆட்டக்காரர்          26        21      -    1 வெற்றி
நியூசி               5 வது ஆட்டக்காரர்        28(NO)    30       2     -   தோல்வி
நியூசி               6 வது ஆட்டக்காரர்         2             6      -   - தோல்வி
இலங்கை        5 வது ஆட்டக்காரர்         13          17      1    - வெற்றி
ஆஸ்தி            5 வது ஆட்டக்காரர்           9         27      1    - தோல்வி
ஆஸ்தி            5 வது ஆட்டக்காரர்      9(NO)          5         -    1   வெற்றி
பாகிஸ்            5 வது ஆட்டக்காரர்           6           10    -        - வெற்றி
ஆக மேற்கூறிய புள்ளி விபரங்களின் கணக்கு படி தோணியால் ஒரு ஆட்டம் கூட  இன்னும் சொல்ல போனால் எந்த ஒரு 20-20 ஆட்டமும் தோணியால் தனிப்பட்ட முறையில் வெல்லப்படவில்லை என்பதே உண்மை...
*  உங்களில் யாரேனும் கிரிக்கெட் விளையாடுபவராக இருந்தால் அல்லது விளையாடப்படுவதை நேசிப்பவராய் இருந்தால் தோணியின் பேட்டிங் ஸ்டைலையும் அவர் விளையாடும் விதத்தையும் கண்டீப்பாக ரசித்திருக்க மாட்டீர்கள்..
* நீங்கள் கேட்கலாம் ஏன் தோணி மட்டும் , மற்றவர்கள் என்ன மிக சிறந்த ஆட்டக்காரர்களா என்று? கண்டீப்பாக ஒவ்வொரு ஆட்டக்காரருமே அவரவது பங்களிப்பை தங்களால் இயன்ற அளவிற்கு அளித்திருப்பர் தோணியை தவிர..
ஏனெனில்   தோணியின் இடம் உறுதி செய்யப்பட்டு விட்டது.. இது தவறு. எந்த ஆட்டக்காரருக்கும் அவர் தம் இடம் நன்கு     விளையாடினால் மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும்..
* இது மட்டும் இன்றி நல்ல அணித்தலைவராகவும் செயல்பட  முடியவில்லை. மூன்றாம் நிலையில் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த ரைனாவை மாற்றி இறக்கி, சாப்பல் இர்ஃபான் பதானை நாசம் செய்ததை போல ரைனாவின் ஆட்டத்தையும் கெடுத்தார்.
* பகுதி நேர பந்து வீச்சாளர்களை சரியாக உபயோகப்படுத்தாமல் சொதப்பினார்.
* இது வரை மற்ற வீரர்களினால் வென்று அதன் மூலம் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். இனி என்ன செய்வார் பார்ப்போம்...
ஹும்... என்ன புலம்பி என்ன பயன்.. அவன் பொலப்ப அவன் பாக்குறான்.. நம்ம பொலப்ப?????
Tuesday, June 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
 

2 பதிலடிகள்...:
//ஹும்... என்ன புலம்பி என்ன பயன்.. அவன் பொலப்ப அவன் பாக்குறான்.. நம்ம பொலப்ப?????//
நல்லா சொன்னிங்க...
என்னை பொருத்தவரை கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு.இதுவே நம் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு இந்த மரியாதை,பிரபலம்,புகழ் இருக்கா....
//நல்லா சொன்னிங்க...
என்னை பொருத்தவரை கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டு.இதுவே நம் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு இந்த மரியாதை,பிரபலம்,புகழ் இருக்கா....//
நன்றி தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் ...
என்ன செய்ரதுங்க ? எல்லாம் நம் விதி ...
Post a Comment
ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!