}

Wednesday, August 12, 2009

ஈழத்தமிழர்களுக்கு அமர்ப்பணம்...

இறைவா எரித்து விடு எங்களையும்..!!
நீ ,வால் கொண்டு வைத்த தீ ஆறினாலும்,
போர் கொண்டு வைத்த தீ தொடர்கிறது...!!
உணர்ந்தாலும்,உணராமல்,
நினை
ந்தாலும் எளிதில்,

உண்கையில்,உறங்கையில் மறக்கிறோம் அதை..!!

அவர்க்கு உண்மையில் எதிரிகள், அவர்களா..??
உணர மறுக்கும் நம்மை விட..??
உடல் நொந்தாலே உளரிடும் ஓர் வார்த்தை அம்மா,
மண் கூட தாய் தானே..!!
தாய்காக போராடும் உறவினர்கள்,
நோய்க்காக என்ன செய்ய..??

இறப்பது எதிரியானால்,சிரிப்பதில் அர்த்தமில்லை,
உயிர் போகும் வலி ஒன்றாய் இருப்பதால்..
இறைவா நிறுத்திடு போரை,
இல்லை எரித்திடு எங்களையும்,
உணர்ந்தாலும்,உணர மறுத்திடும் எங்களையும்..!!

இறுதியாய் ஒன்று,
இணையுங்கள் இந்தியராய்,
சிறு நகரம் தாண்டி செல்ல அனுமதி வாங்கும் நிலையை,
அனுமதியோம் ஒரு நாளும்..!!

************************************************************************************


கண்ணீர் அஞ்சலி..!!

~~~~~~~~~~~~~~~~

மனிதா என்று இறந்தாய்..??
யாருக்கும் தெரியாமல்..
நீ பிறந்ததற்கு சாட்சியம் உள்ளது..
அச்சிலும் சிலர் அகத்திலும்..

கடவுளே..??..!!..
இல்லை உன்னிடமும் சொல்ல முடியாது..
வாள் கொண்டு ,வேல் கொண்டு , நூல் கொண்டு,
நீயும் வண்ணமாய் நிற்பதனால்..

எப்படி இறக்க ஆரம்பித்தோம் நாங்களும்..??
எட்டிப் பார்த்தால் கட்டிக் கொள்ளும் ஓர் தொற்று ,
சாதியாய், மதமாய், இனமாய்
இன்னும் எப்படியெல்லாம் இயலுமோ அப்படியே...
அனைத்தும் தொற்றிக் கொண்டதால்...

சிந்தைக்குள் நுழைந்துவிட்டால்..
அதன் வேலை அது பார்க்கும்..

கண்ணா பார்த்தாயா..??
கீதை மிக பத்திரமாய் எங்களிடம்...
நீ உரைத்த அனைத்தையும் உதறிவிட்டு,
ஓர் வரியை மட்டும் எடுத்துக் கொண்டோம் அதுவும் உனக்காக...

"எங்களிடம்"..எனும் போதே அதன் வேலை அது துவங்கி இருந்தால்,
மாற்றிக் கொள்ளுங்கள் "மக்களிடம்"...

ஓர் வரிக்கு பூங்கொத்தும் ,
"எங்களுக்கு.?" மலர்வளையமும்..!!
கண்ணீருடன்..!!

________________________________________


மிக முக்கிய பின் குறிப்பு:
இது சத்தியமா நான் எழுதலேங்க.. ஆனா இத சொந்தம் கொண்டாட எனக்கு உரிமை இருக்கு.. ஏன்னா இந்த கவிதை எழுதினதே என் தம்பி தான்..

12 பதிலடிகள்...:

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

எண்ணக்குமுறல்கள் ஈடேற வாழ்த்துக்கள். அருமை அருமை

ஆ.ஞானசேகரன் said...

கவிதை நல்லாயிருக்கு உங்கள் தம்பிக்கு வாழ்த்து சொல்லிடுங்க நண்பா.

Sukumar said...

** உயிர் போகும் வலி ஒன்றாய் இருப்பதால்.. **
** அவர்க்கு உண்மையில் எதிரிகள், அவர்களா..??
உணர மறுக்கும் நம்மை விட..?? **
** வால் கொண்டு வைத்த தீ ஆறினாலும் **

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.... உங்கள் தம்பிக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்...

Saravanan Trichy said...

கண்ணீரும் வலியும் கலந்து எழுதிருகார்!

Beski said...

நமக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை.

தம்பிக்கு வாழ்த்துக்கள்.

Suresh Kumar said...

கவிதை நல்லாயிருக்கு உங்கள் தம்பிக்கு வாழ்த்து சொல்லிடுங்க நண்பா ////////

Repeattttu

. said...

சொல்ல வேண்டியதை அழகா சொல்லி இருக்கார் உங்க தம்பி! வாழ்த்துக்கள் சொல்லிடுங்க அவருக்கு என் சார்பிலும்..


//அவர்க்கு உண்மையில் எதிரிகள், அவர்களா..??
உணர மறுக்கும் நம்மை விட..??//

உண்மை தான்... :(

Admin said...

கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்.... உங்களுக்கல்ல உங்கள் தம்பிக்கு... சொல்லிவிடுங்கள் அவரிடம்

Menaga Sathia said...

கவிதை நல்லாயிருக்கு!!வாழ்த்துக்கள் உங்களுக்கில்லை உங்க தம்பிக்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

உங்கள் தம்பிக்கு பாராட்டுக்கள்

sivanes said...

உணர்வை சுடும் வரிகள்!
உயிரை வருத்தும் வார்த்தைகள்!

அருமை! அருமை!

அன்புடன் மலிக்கா said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள் இருவருக்கும்..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!