}

Monday, July 27, 2009

கவுண்டர் செந்திலுக்கு சொல்லும் வாழ்க்கை தத்துவம்...

கவுண்டர் மனைவி: ஏங்க ,, ஏங்க.. யோவ்.. எந்திரி யா.. மணி பத்தாக போகுது .. இன்னும் தூக்கம்.. ஹீம்ம்ம்.,என்ன கல்யாணம் பண்ணிக்க ஏவனோ ஒருவன்பெஸ்கி கேட்டாக, கணவுகளே சுரேஷ் கேட்டாக இன்னும் யாராரோ பொண்ணு கேட்டு வந்தாங்க.. என் நேரம், கெரகம் உன் கிட்ட மாட்டிக்கிட்டேன்.. எந்திரிங்க, இந்தாங்க , இந்த ஐநூறு ரூபாய மளிகை கடக்காரன்னுக்கு கொடுத்திடுங்க.. நேத்திலிருந்து நாலைஞ்சு தடவ ஆள் அனுப்பீட்டாங்க..

கவுண்டர் : ஓங்கி மூஞ்சி மேல அப்பிருவேன்,. என்னடி காலங்காத்தால கலர் கலரா ரீல் சுத்துர? விட்டா அரேபியாவிலிருந்து வசந்த் கேட்டாக, மலேசியாவிலாவிலிருந்து சிவசேனு கேட்டாகன்னு சொல்லுவே போல இருக்கு? உங்கப்பன் என்ன துபாய் ஷேக்கா? நீ என்ன பெரிய கிளியோ பாட்ராவா? தூக்க நாயக்கம் பாளையத்தில சாணி மிதிச்சிட்டு இருந்தவள உங்கப்பன் ஸ்கூல் டீச்சர்னு ஏமாத்தி தலையில கட்டீட்டான்.... நான் எங்கே எப்படி இருக்க வேண்டிய ஆளு..

புலம்பிய படியே வாய் கொப்பளித்த நீரை திடீரென வந்த செந்திலின் மீது துப்பி விடுகிறார்..

செந்தில் : என்னணே.. என் மேல துப்பீட்டீங்க?
கவுண்டர் : ஆமா .. தினமும் காலையில உன் மூஞ்சியில துப்பணும்னு வேண்டுதல்.. குப்பத்தொட்டி மாதிறி மூஞ்சி வச்சிருந்தா உன் மூஞ்சில தாண்டா துப்ப தோணும்..

செந்தில் : போங்கண்ணே.. வழ்க்கையே புடிக்கல..

கவுண்டர் : என்னது வாழ்க்கையே புடிக்கலையா? ஆமா இவரு பெரிய கப்பல் அதிபர்.. சேது கால்வாயில கப்பல் விட முடியலன்னு கவலப்படுறார்.. டேய் நீ ஒரு ஆளு, நீ வாழ்ரது ஒரு வாழ்க்கை .. அது உனக்கு புடிக்கலியா?

செந்தில் : அண்ணே... கிண்டல் பண்ணாம .. ஒரு வழி சொல்லுங்க..

கவுண்டர் : ஹா ஹா ஹா. இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணுங்கறது.. உனக்கு சொன்னா புரியாது.. வா உன்ன வச்சே உனக்கு வாழ்கைத்தத்துவத்தை புரிய வைக்கிறேன்....(ஒரு சிரு குப்பை தாளை எடுத்து ) இந்தாடா மண்டையா.. இந்த பேப்பர கொஞ்சம் தூக்கி புடி...

செந்தில் : சரிண்ணே( கண்ணகி சிலம்பை பிடிப்பது போல தன் கையால் அந்த குப்பை காகித்தை தூக்கிப்பிடிக்கிறார் )..
கவுண்டர் : ஏண்டா மண்டையா.. இந்த பேப்பர அப்படியே ஓரு நிமிசம் தூக்கி புடிச்சிட்டு இருந்தா என்ன ஆகும்?
செந்தில் : ஒண்ணும் ஆகாதுண்ணே..
கவுண்டர் : ஒரு மணி நேரம் தூக்கி புடிச்சிருந்தா?

செந்தில் : கை வலிக்கும்ணே..

கவுண்டர் : அப்படியே ஒரு நாள் ஃபுல்லா தூக்கி புடிச்சிருந்தா?

செந்தில் : என் கையே போயிடும்ணே..

கவுண்டர் : அப்போ அத எப்படி தடுப்பே?

செந்தில்: இந்த பேப்பர, அப்படியே வாயில போட்டு முழுங்கிடுவேண்ணே..

கவுண்டர்: அட வருமைக்கு பொறந்தவனே..அந்த பேப்பர இப்படி சுக்கு நூறா கிழிச்சு தூக்கி போடணும்டா..
மண்டையா சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. நம்ம வாழ்க்கையில தினமும் 100 பிரச்சினைகளை பாக்குறோம்.. அதில 99 இந்த, குப்பை மாதிறி ஒண்ணுக்கும் ஆகாத பிரச்சினைகள்.. அந்த பிரச்சினைகளை இப்படி தூக்கி வீசிட்டா எந்த பிரச்சினையும் இல்லை, ஆனா தேவையில்லாம தூக்கி வெச்சிருந்தா உன் கை போக இருந்த மாதிறி வாழ்க்கையும் போயிடும்.. அதனால தேவையில்லாத பிரச்சினைகளை இப்படி தூக்கி எறிஞ்சிட்டு சந்தோசமா இரு போ...

செந்தில் : ஹி ஹி ஹி.. இப்போ புரிஞ்சுது..

கவுண்டர் மனைவி : என்னங்க இன்னும் கெளம்பலியா?

கவுண்டர் : க்ஹூம் .. டேய் ஓடிடு உன்னவிட பெரிய தொல்லை வருது.. டேய் இங்கிருந்த 500 ரூபாய் எங்கேடா?

செந்தில் : போங்கண்ணே.. நீங்க தானே குப்பைய கிழிச்சு வீசச்சொன்னீங்க .. அதான் அதையும்.........

38 பதிலடிகள்...:

sivanes said...

//விட்டா அரேபியாவிலிருந்து வசந்த் கேட்டாக, மலேசியாவிலாவிலிருந்து சிவசேனு கேட்டாகன்னு சொல்லுவே போல இருக்கு?//

ஐயா ராசா, ரொம்ப நன்றிய்யா! (கடவுளே என்னைக் காப்பாத்து!)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஐயா ராசா, ரொம்ப நன்றிய்யா! (கடவுளே என்னைக் காப்பாத்து!)//

வாங்க சிவனேசு.. நன்றி..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தினமும் காலையில உன் மூஞ்சியில துப்பணும்னு வேண்டுதல்.. குப்பத்தொட்டி மாதிறி மூஞ்சி வச்சிருந்தா உன் மூஞ்சில தாண்டா துப்ப தோணும்..
//

அப்படியே அவங்க ஸ்டைல்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அப்படியே அவங்க ஸ்டைல்//

வாங்க சுரேஷ்.. நன்றி.. அப்பாடா கிண்டலடிச்சத கண்டுக்கல...

சம்பத் said...

என்னங்க...நல்ல காமெடி பண்ணிட்டு லாஸ்ட் ல சீரியசா தத்துவம் சொல்லிட்டீங்க...அப்படியே புல்லரிச்சு போச்சுங்கோ...

சம்பத் said...

என்னங்க...அப்படியே அந்தே கமென்ட் மாடரேசன எடுத்து விட கூடாதா?

jothi said...

அப்படியே கவுண்ட்ஸ் மாதிரியே டயலாக். சூப்பர்

ஆ.ஞானசேகரன் said...

//செந்தில் : போங்கண்ணே.. நீங்க தானே குப்பைய கிழிச்சு வீசச்சொன்னீங்க .. அதான் அதையும்........//

நல்ல கர்ப்பனை வாழ்த்துகள் நண்பரே.

ப்ரியமுடன் வசந்த் said...

// விட்டா அரேபியாவிலிருந்து வசந்த் கேட்டாக, மலேசியாவிலாவிலிருந்து சிவசேனு //

வேணாம்டா சாமீ

கவுண்டர் காமெடி கல கல........

குறை ஒன்றும் இல்லை !!! said...

//என்னங்க...நல்ல காமெடி பண்ணிட்டு லாஸ்ட் ல சீரியசா தத்துவம் சொல்லிட்டீங்க...அப்படியே புல்லரிச்சு போச்சுங்கோ...//
வாங்க சம்பத்.. முதல்ல சீரியசா தான் பதிவ போடலாம்னு பாத்தேன்... ஆனா கவுண்டர வச்சா நல்லா இருக்குமேன்னு..

//என்னங்க...அப்படியே அந்தே கமென்ட் மாடரேசன எடுத்து விட கூடாதா?//

இல்லீங்க... நான் படிச்சப்புறம் தான் மத்தவங்களுக்கு தெரியப்படுத்தணும்னு நினைக்கிறேன்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அப்படியே கவுண்ட்ஸ் மாதிரியே டயலாக். சூப்பர்//
நன்றி ஜோதி...

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நல்ல கர்ப்பனை வாழ்த்துகள் நண்பரே.//

நன்றி ஞானசேகரன்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//வேணாம்டா சாமீ

கவுண்டர் காமெடி கல கல.....//

வாங்க வசந்த்.. ஹி ஹி ஹி, நன்றி..

Admin said...

சூபர் கலக்கிட்டிங்க இனி என்ன..........

குறை ஒன்றும் இல்லை !!! said...

//சூபர் கலக்கிட்டிங்க இனி என்ன..........//

வாங்க சந்ரு.. நன்றி..

Joe said...

பிரமாதம்.

சில எழுத்துப் பிழைகளை சரி செய்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

"Location: நல்லவர் இதயத்தில் : India " கிளிக் பண்ணிப் பாத்தேன், No profiles found eror வந்தது, நான் தான் கெட்ட பயல்னு நினைச்சா, இந்த நாட்டில நல்லவன்னு எவனுமே இல்லையா? ;-)

Anonymous said...

கவுண்டர் நடிக்கும் பொழுது நீங்க தான் டியாலாக் ரைட்டர்ரா இருந்தீங்களோ?

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

. said...

ரொம்ப அருமையா இருந்துச்சுங்க... அப்படியே காட்சி கண்முன்னாடி நடந்த மாறி இருக்கு...

ரொம்ப நேரம் ஆயிற்றுக்கே நீங்க இடுகைய வெளியிட்டு.. இப்போ 'கமெண்ட் போஸ்ட் பண்லாமா வேணாமானு' யோசிச்சிற்றுந்தேனுங்க!

கமெண்ட் மெசேஜ் அஹ பாத்துட்டு சிரிப்பு வந்துடுச்சி போங்க...


உங்க ஜெக்கம்மாக்காகத் தான் இந்த கருத்து வெளியீடு!!

Beski said...

அய்யய்யோ... நா அப்படியெல்லாம் கேக்கவே இல்ல...
இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//பிரமாதம். //

வாங்க ஜோ .. நன்றி

//சில எழுத்துப் பிழைகளை சரி செய்தால் இன்னும் நல்லாயிருக்கும். //

அப்புறம் அந்த எழுத்து பிழையை சொன்னா சரி செய்து விடுகிறேன் !!!!

//"Location: நல்லவர் இதயத்தில் : India " கிளிக் பண்ணிப் பாத்தேன், No profiles found eror வந்தது, நான் தான் கெட்ட பயல்னு நினைச்சா, இந்த நாட்டில நல்லவன்னு எவனுமே இல்லையா? ;-)
//

:))))))))))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//கவுண்டர் நடிக்கும் பொழுது நீங்க தான் டியாலாக் ரைட்டர்ரா இருந்தீங்களோ?//

வாங்க அம்மு .. நன்றி ..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ரொம்ப அருமையா இருந்துச்சுங்க... அப்படியே காட்சி கண்முன்னாடி நடந்த மாறி இருக்கு... //

வாங்க பிரியங்க .. நன்றி ..


ரொம்ப நேரம் ஆயிற்றுக்கே நீங்க இடுகைய வெளியிட்டு.. இப்போ 'கமெண்ட் போஸ்ட் பண்லாமா வேணாமானு' யோசிச்சிற்றுந்தேனுங்க!

//கவுண்டர் : அதெல்லாம் கவலை படாதேம்மா !! எத்தனை நாள் கழிச்சு கமெண்ட் போட்டாலும் இவன் பதில் சொல்லுவான் .. கேட்டா நான் ஓட்டுக்கு எழுதல என் பாட்டு எழுதறேன்னு சொல்லுவான் !!!//


//கமெண்ட் மெசேஜ் அஹ பாத்துட்டு சிரிப்பு வந்துடுச்சி போங்க...

உங்க ஜெக்கம்மாக்காகத் தான் இந்த கருத்து வெளியீடு!!//

நன்றி தாயே ... ஜக்காம்மா

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அய்யய்யோ... நா அப்படியெல்லாம் கேக்கவே இல்ல...
இந்த கதையில் வரும் அனைத்தும் கற்பனையே.//

ஹா ஹா பெஸ்கி எல்லாம் எங்களுக்கு தெரியும் !!!

*இயற்கை ராஜி* said...

விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌

சிநேகிதன் அக்பர் said...

கவுண்டர வச்சு இவரு அடிக்கிற லூட்டி தாங்க முடியலை : )

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல காமெடி

குறை ஒன்றும் இல்லை !!! said...

//விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க‌//

கவுண்டர்: இவன் ஃபிரியா கிடைச்சா எத வேணாலும் வாங்குவான்.. விருதா .. கண்டீப்பா வருவான் போங்க..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//கவுண்டர வச்சு இவரு அடிக்கிற லூட்டி தாங்க முடியலை : )//

வங்க அக்பர் ... பாராட்டுறீங்களா இல்ல திட்டுறீங்களா?

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நல்ல காமெடி//

வாங்க ஸ்டார்ஜன்.. நன்றி..

*இயற்கை ராஜி* said...

ha...ha...sirichi sirichi vayiru valikkuthunga
:-)))))

ithai vachi oru movie eduthudalam pola:-))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ha...ha...sirichi sirichi vayiru valikkuthunga
:-)))))

ithai vachi oru movie eduthudalam pola:-))//

வாங்க இயற்கை.. நன்றி..

Menaga Sathia said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு ராஜ்,அதுவும் வசந்த் வைத்து காமெடி சூப்பரோ சூப்பர்.நான் சிரிக்கிறதை பார்த்து என் பொண்ணு வேற பயப்படுது.//கவுண்டர் : க்ஹூம் .. டேய் ஓடிடு உன்னவிட பெரிய தொல்லை வருது.. டேய் இங்கிருந்த 500 ரூபாய் எங்கேடா?

செந்தில் : போங்கண்ணே.. நீங்க தானே குப்பைய கிழிச்சு வீசச்சொன்னீங்க .. அதான் அதையும்.........//
உங்க கவுண்டர் காமெடி சூப்பர்.நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.அதனால் காமடி கிங் பட்டம் தரேன் ராஜ் ஏத்துக்குங்க.
ஆமாம் நீங்க தான் ப்ரீயா எத குடுத்தாலும் ஏத்துக்குவீங்க சொல்லிட்டிங்கல்ல அதான் இந்த பட்டம்!!

Malini's Signature said...

/ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!/

இப்படி பயபடுத்திபுட்டீங்களே!!!!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அதனால் காமடி கிங் பட்டம் தரேன் ராஜ் ஏத்துக்குங்க.
ஆமாம் நீங்க தான் ப்ரீயா எத குடுத்தாலும் ஏத்துக்குவீங்க சொல்லிட்டிங்கல்ல அதான் இந்த பட்டம்!!//

வாங்க அக்கா. பாராட்டர மாதிறி பாராட்டிட்டு கடைசியில இப்படி கிண்டல் அடுச்சிட்டீங்களே..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இப்படி பயபடுத்திபுட்டீங்களே!!!!!!///
வாங்க ஹர்சினி அம்மா.. நன்றி... இல்லேண்ணா யாரும் கண்டுக்க மாட்டாங்க இலல?

Jaleela Kamal said...

ஜக்கம்மாவை சொல்லி பயங்காட்டிட்டீங்க, அதனால‌ ஒன்ன்னும் சொல்லாம‌ போக‌ ப‌ய‌ம்.


கவுண்ட மணி செந்தில் என்றீல்லை எல்லா நகைச்சுவையையும் ரொம்ப பிடிக்கும், வாழ்வில் இருக்கும் அனைத்து சோகத்தையும் பஞ்சாய் பறகக் வைக்கும், ரொம்ப அப்படியே கவண்டமணி மிஞ்சிட்டீங்க....

Jaleela Kamal said...

ஓங்கி மூஞ்சி மேல அப்பிருவேன்,. என்னடி காலங்காத்தால கலர் கலரா ரீல் சுத்துர? விட்டா அரேபியாவிலிருந்து வசந்த் கேட்டாக, மலேசியாவிலாவிலிருந்து சிவசேனு கேட்டாகன்னு சொல்லுவே போல இருக்கு? உங்கப்பன் என்ன துபாய் ஷேக்கா? நீ என்ன பெரிய கிளியோ பாட்ராவா? தூக்க நாயக்கம் பாளையத்தில சாணி மிதிச்சிட்டு இருந்தவள உங்கப்பன் ஸ்கூல் டீச்சர்னு ஏமாத்தி தலையில கட்டீட்டான்.... நான் எங்கே எப்படி இருக்க வேண்டிய ஆளு..


hi hi hi hee hee haa haaa

குறை ஒன்றும் இல்லை !!! said...

//கவுண்ட மணி செந்தில் என்றீல்லை எல்லா நகைச்சுவையையும் ரொம்ப பிடிக்கும், வாழ்வில் இருக்கும் அனைத்து சோகத்தையும் பஞ்சாய் பறகக் வைக்கும், ரொம்ப அப்படியே கவண்டமணி மிஞ்சிட்டீங்க....//

வாங்க ஜலீலா.. நன்றி..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!