}

Monday, July 20, 2009

கவுண்டரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும்....

நம்ம கவுண்டருக்கு கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்க , அவர் கெட்ட நேரம் நம்ம ஊர் தொலைக்காட்சிகளை பார்க்க ஆரம்பித்தார். அவர் கையிலிருந்து ரிமோட்டால் ஒவ்வொரு சேனலாக மாற்ற ஆரம்பிக்க, நம் கவுண்டர் அட்டாக் ஆரம்பமாகிறது..

முதலில் மக்கள் தொலைக்காட்சி. அதில் தாங்கள் ஒரு காலத்தில் வெட்டிய மரங்களுக்காக இன்று ஆரம்பித்துள்ள பசுமை தாயகம் நிகழ்ச்சியும், சினிமாவில் புகை பிடிக்க கூடாது , மது அருந்தக்கூடாது என்கிற விவாதமும் நடை பெறுகிறது..

கவுண்டர் : என்னடா அநியாயம் இது, நல்லா வளர்ந்த மரத்த வெட்டி ரோட்டுல போட்ருவாங்களாம் அப்புறம் அதுக்கு பதிலா செடிய நட்டுவாங்களாம். இது எப்படி இருக்கு தெரியுமா? பத்து பேர கொலை பண்ணிட்டு அதுக்கு பதிலா புள்ளய பெத்து போடுர மாதிறி இருக்கு..அப்புறம் படத்தில என்ன பண்ணனும்னு டைரக்டர் தான் முடிவு செய்யனும்டா.. அத பண்ணாதீங்க,இத பண்ணாதீங்கண்னு நீங்க சொல்லக்கூடாது.. அப்புறம் நீங்க எதை செய்யனும் அப்படின்னு நான் சொல்ல வேண்டி இருக்கும்..

அடுத்து சேனலை மாற்ற , அதில் ஒரு நடனப்போட்டி, அந்த போட்டி நடுவர்கள் நடனமாடியவர்களிடம் அவர்கள் செய்த குறைகளை சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தனர்..

கவுண்டர் : என்னது கெமிஸ்ட்ரி பத்தலையா? அப்போ ஒரு ரூம் போட்டு குடுத்திடுங்கடா. நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி குழந்தய குடுப்பாங்க.. அது என்னடா தப்பு சொல்றீங்க? நாலாவது ஸ்டெப்ல நாக்கு வெளிய வந்திடுச்சு,மூணாவது ஸ்டெப்ல முடி நட்டுக்கிச்சுண்னு? வந்துட்டானுக பெரிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மாதிறி.. ஆளுகளையும் மண்டைகளையும் பாரு..

அடுத்து ஜெயா டிவி. அதில் பழைய எம்ஜியார் திரைப்படம், நினைத்ததை முடிப்பவன். கிளைமேக்ஸ் காட்சியில், எம்ஜியார், தனது தந்தை ஒரு முறை வைர வியாபாரிகளால் ஏமாற்றப்பட்டு இறக்க அதனால் தான் ஒரு வைரக் கொள்ளையனாக மாறி அனைத்து வைர வியாபாரிகளையும் பழிவாங்குவதாக கூறுகிறார்..

கவுண்டர் : தலைவரே.. ஃப்ளாஸ்பேக் நல்லாத்தான் இருக்குங்க.. ஆனா போலீஸ் ஒத்துக்கணும் இல்ல..அங்கே பாருங்க இந்த ஒண்றையணா ஃப்ளாஸ்பேக்கா அவனுக எப்படி அதிர்ச்சியா பாக்கறானுகண்ணு..

அடுத்து ஸ்டார் கிரிக்கெட், அதில் நடந்து முடிந்த ஒரு கிரிக்கெட் போட்டி பற்றி விவாதம் நடந்தது கொண்டிருக்கிறது..

கவுண்டர் : இந்த ரிடையர் ஆன ஆளுங்க தொல்ல தாங்க முடியலப்பா.. ஆடுர காலத்தில சரியா ஆடாம, உதைச்சி வெளியேத்துவனுக எல்லாம் இப்ப வந்து கருத்து சொல்றானுக.. அட இவனுக சொல்ர கருத்த எவனாவது கேட்பானா? பாரு அவள பாரு அவளுக்கு என்ன தெரியும்னு பக்கத்தில உக்கார வச்சு பேசிட்டு இருக்கீங்கடா? உங்கள எல்லாம் திருத்தவே முடியாதுடா..

அடுத்து கலைஞர் டிவியில் மானாட மயிலாட. நம்ம நமிதா தன் தமிழால் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கவுண்டர் : என்னடா இது தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை.. அவனவன் சங்கம் வெச்சு தமிழ வளர்த்தா இங்க நமிதாவ வச்சு தமிழ வளர்க்குறாங்க.. ஒரு காலத்தில தார ஊத்தி தமிழ வளர்த்தது இதுக்கு தானா? அரசியல்ல இது எல்லாம் சாதாரணம் அப்பா..

அப்படியே சன் டிவி, அதில் தங்களின் குப்பைகள் எல்லாம் தரமான குப்பைகள் என்று டாப் டென்னில் ஒருவர் கூறிக்கொண்டிருந்தார்..

கவுண்டர் : டேய்.. உங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே இல்லையாடா? அடேய்.. கோட்டு சூட்டு போட்ட கோமுட்டி தலையா. நீ சொல்ர படத்த ஒரு தடவ பார்ரா. அப்புறம் நீ போட்டிருக்கிற துணிய நீயே கிழிச்சிட்டு பைத்தியமா திரிவே..

கடைசியாக ஒரு சேனலை திருக அதில் லயித்து சத்தமே இல்லாமல் கண் கொட்டாமல் பார்க்க ஆரம்ம்பிக்கிறார். சரி விடுங்க.. பாத்திட்டு போகட்டும்..

என்னது அது என்ன சேனலா? அதாங்க.. அட அதாங்க .. அதே தாங்க..

18 பதிலடிகள்...:

Menaga Sathia said...

ஹா ஹா ஹா!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்கா..

தினேஷ் said...

கவுண்டர் லொள்ளு கலகல

Beski said...

எனக்கு தெரிஞ்சு போச்சு... அது அந்த சேனல்தான?

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சூரியன். நன்றி.. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க பெஸ்கி.. அதேதாங்க..

Admin said...

நல்ல பதிவு நண்பரே...

ஆனால் குறை ஒன்றும் இல்லை....

ஆ.ஞானசேகரன் said...

அது எந்த சேனலுனு தெரிந்து போச்சு, நீங்க எப்பவும் பாக்குற சுட்டி டீவி தானே

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சந்ரு.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க ஞானசேகரன். இம்புட்டு அப்பிராணியா இருக்கீங்களேண்ணே!!

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா சூப்பர்ங்ணா.......

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காந்தக் கண்ணழகிகள் புடைசூழ தலைவர் கருத்துச் சொன்னா இன்னும் நல்லா இருக்குமே...,

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுரேஷ்..

ஆமா காந்தக்கண்ணழகிகள் சூழ யாருக்கு நல்லா இருக்கும்??

சிநேகிதன் அக்பர் said...

கலக்குங்க , கலக்குங்க.

கவுண்டர் அட்டாக் அருமை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர்..
நன்றி..

*இயற்கை ராஜி* said...

ohh..antha channel ah...? pakkattum..pakattum:-))

*இயற்கை ராஜி* said...

mudiyalanga..Dr fees neenga than tharanum..sirichi varra vayiru valikku:-)))))

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ohh..antha channel ah...? pakkattum..pakattum:-))//

ஹி ஹி ஹி... நன்றி..

//mudiyalanga..Dr fees neenga than tharanum..sirichi varra vayiru valikku:-)))))//


நம்ம சுரேஷ் கிட்ட அனுப்பவாங்க..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!