}

Tuesday, July 21, 2009

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து கொள்ள அல்லது கொல்ல வேண்டுமா?

மாடு பிடிச்சு இருப்பீங்க இல்ல அத பாத்தாவது இருபீங்க..இப்போ உலகம் எவ்வளவோ முன்னேரியாச்சு.. எத்தன நாளைக்குத்தான் மாட்டையும் ஆட்டையும் புடிக்கிறது? அதான் இப்போ நான் சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்சு பிடிக்க போறத பத்தி சொல்லித்தர போறேன்...

நியூட்டன் முறை...

முதலில் சிங்கம் உங்களை பிடிக்க விட வேண்டும்....
நியூட்டன் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர் வினை உண்டு..
ஆக சிங்கத்தை நாம் பிடித்து விட்டோம்..

கணிப்பொறியாளர் முறை..

ஒரு பூனையைப் பிடிக்க வேண்டும்.
அதை சிங்கம் எனக்கூறி அனைத்து சோதனைகளையும் செய்து.. பிறகு அத ஒரு சிங்கம் எனக்கூறி சோதனை முடிவை தரலாம்.
எவரேனும் பிரச்சினை என வந்தால் , அவர்களிடம் அதை சிங்கமாக மேம்படுத்துவதாக வாக்களிக்க வேண்டும்....

இந்திய போலீஸ் முறை

ஏதாவது ஒரு மிருகத்தைப் பிடித்து அதை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தி அதை தான் ஒரு சிங்கம் என ஒப்புக்கொள்ள வைக்கலாம்....

ரஜினி முறை (கிரி அண்ணன் மன்னிக்கவும்)

சிங்கத்தை அதன் குகையில் வந்து பிடிக்கப் போவதாக அதற்கு எச்சரிக்கை விடலாம்.
ஆனால் அந்த பக்கமே போகக்கூடாது.. சிங்கம் தானாக வயதாகி இறந்து விடும்..

கமல் முறை

சிங்கத்தை வைத்து தசாவதாரம் படம் எடுக்க போவதாக சொல்லலாம்.. அதை புலி,கரடி, யானை, மான் என அனைத்து வேசங்களையும் போட வைத்து கொன்று விடலாம்..


அஜித் முறை

சிங்கத்திற்கு தமிழ் கற்றுக் கொடுக்க வைக்கலாம். அஜித்தின் தமிழ் கொலையைத்தாங்க முடியாமல் சிங்கம் தானாக இறந்து போகும்..

விஜய் முறை

விஜய் நடித்த படங்களின் டிரெய்லரை காண்பிக்கலாம்.. சிங்கம் பக்கத்தில் இருக்கும் சுவற்றில் மோதி தற்கொலை செய்து கொள்ளும்..


டி ராஜேந்தர் முறை..

வீராச்சாமி பட கெட்டப்பில் கலர் கலராக ஆடை அணிந்து சிங்கத்தின் முன் குளோசப்பில் ஆட வைக்கலாம்.. சிங்கம் நெஞ்சு வெடித்து இறந்து விடும்..


டைரக்டர் மணிரத்னம் முறை..

அந்த சிங்கத்திற்கு சூரிய ஒளியே கிடைக்காத படி ஒரு இருண்ட குகையில் தள்ளுங்கள்.
அந்த குகையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றி வைத்து, சிங்கத்தின் காதருகே ஏதாவது புரியாத படி முணுமுணுங்கள்..
சிங்கம் அதிகபட்ச குழப்பத்திலும்,ஆற்றாமையாலும் தற்கொலை செய்து கொள்ளும்..

ஜார்ஜ் புஷ் முறை

சிங்கத்தை ஒசாமா பிலேடனுடன் தொடர்பு படுத்தலாம்.. பிறகு அமெரிக்க ராணுவத்தை விட்டு அதை கொன்று விடலாம்..


தோணி முறை.

கிரிக்கெட் போட்டியில் தோணிக்கு பந்து வீச வைக்கலாம்.

200 பந்துகளைப் பிடித்து 2 ரன் கள் எடுக்க வேண்டும்..

சிங்கம் களைத்து நம்மிடம் சரணடைந்து விடும்..


கீன்(Kean Softwares)முறை..

சிங்கத்தை வேலைக்கு எடுங்கள்..
அதை ஒரு வருடம் பென்ச்சில் சும்மா உட்கார வைக்க வேண்டும்..
ஒரு வருடம் கழித்து அதன் டெக்னாலஜியை மாற்றச்சொல்ல வேண்டும்..
தான் ஒரு சிங்கமா இல்லை எலியா என்ற குழப்பத்தில் இறந்து விடும்..


விப்ரோ முறை

சிங்கத்தை வேலைக்கு எடுத்த உடன் அதற்கு உடனடியாக ஒரு மெயில் ஐடி தர வேண்டும்..
தினமும் வரும் உபயோகமற்ற பல மெயில்களைப் பார்த்தே அது இறந்து விடும்..


ஐபிஎம் முறை..

சிங்கத்தை வேலைக்கு எடுங்கள்..
அடுத்த ஒரு மணி நேரத்தில் சிவப்பு அட்டையை கொடுங்கள்..
வேலை இழந்த சோகத்தில் தானாக இறந்து விடும்..மேனகா காந்தி முறை

சிங்கத்தை மேற்கூறிய பயங்கரத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.. பிறகு அதை மிகுந்த கவனத்துடன் காய் கறிகளை மட்டும் கொடுத்து கொன்று விடலாம்..நண்பர்களே.. இது எனக்கு ஒரு முறை வந்த மின் அஞ்சல்.. என்ன நம் திரை உலகம் போல அதை தமிழ் படுத்தி தந்துள்ளேன்.. யார் மனதையும் புண்படுத்த அல்ல..

19 பதிலடிகள்...:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிங்கத்தை தமிழ் திரையுலகில் நடிக்க வைத்தால் பாலாபிஷேகம், பீராபிஷேகம் தாங்காமல் போய்விடும்

சின்னத்திரையில் நடிக்க வைக்கலாம்
மானாட மயிலாட நடுவர்களின் பேச்சைக் கேட்டபிறகு இயல்பு மாறிவிடும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//காய் கறிகளை மட்டும் கொடுத்து //

இது அவங்களுக்குத் தெரியுமா?

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கர்ப்பனை வாழ்த்துகள்

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுரேஷ்.. அப்போ மத்ததெல்லாம் ஒத்துக்கறீங்களா? :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி ஞானசேகரன்..

Beski said...

வடிவேலு: டேய்! பார்ரா இவன... அரசியல்ல ஆரம்பிச்சு, இப்ப காமிடி பண்ணிட்டு இருக்கான். அப்படியே அந்த சிங்கத்த இங்க அனுப்பு. நா வாங்குற அடியப் பாத்துட்டு பயந்து போயி செத்துப்போயிரும். நாங்கல்லாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்ல...

ஹலோ... நேத்து வரேன்னீங்க.... வரவேயில்ல...

Beski said...

நல்ல காமெடி + அரசியல்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க பெஸ்கி .. நன்றி .. எங்கே வரேன்ன்னு சொன்னேன் ?

சிநேகிதன் அக்பர் said...

கலக்கலா சொல்லி இருக்கீங்க. நல்ல நகைச்சுவை.

Beski said...

//எங்கே வரேன்ன்னு சொன்னேன் ?//
அது காமெடி - வடிவேலு சொன்னது... வின்னர் படத்துல வர்ற மாதிரி படிக்கனும்.

அய்ய்யோ அய்ய்யோ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர் ..
நன்றி !!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவுண்டர் : ஓ அப்படியா .. பாத்துக்கலாம்

Anonymous said...

நான் கூட நீங்க சொந்தமா யோசிச்சதுனு நினைத்தேன் , ;))

சப்ராஸ் அபூ பக்கர் said...

வாசிச்சிட்டு போனேனா..... கடைசியில இடிச்சிட்டுங்க அண்ணா.....

வாழ்த்துக்கள்... தொடருங்கள்.......

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க விஜி.. என்ன செய்ய.. ஏதோ நம்மால் முடுஞ்சது..

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சப்ராஸ் அபூ பக்கர் நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Menaga Sathia said...

உங்க லொள்ளு தாங்க முடியலப்பா..இந்த பதிவை எப்படி படிக்காமல் விட்டேனே தெரியல.இப்பதான் பார்த்தேன்.
//வீராச்சாமி பட கெட்டப்பில் கலர் கலராக ஆடை அணிந்து சிங்கத்தின் முன் குளோசப்பில் ஆட வைக்கலாம்.. சிங்கம் நெஞ்சு வெடித்து இறந்து விடும்..//ரொம்ப நேரம் வாய்விட்டு சிரித்தேன் ராஜ்.
//மேனகா காந்தி முறை

சிங்கத்தை மேற்கூறிய பயங்கரத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.. பிறகு அதை மிகுந்த கவனத்துடன் காய் கறிகளை மட்டும் கொடுத்து கொன்று விடலாம்..//

என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலேயே...ம்ம்ம்ம்

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ரொம்ப நேரம் வாய்விட்டு சிரித்தேன் ராஜ்.//

நன்றிக்கா..

//என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலேயே...ம்ம்ம்ம்//
அட அப்படி வேற ஒரு கோணம் இருக்குள்ள?

*இயற்கை ராஜி* said...

:-)))))))))))))))))

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!