}

Wednesday, July 15, 2009

கவுண்டரும்,செந்திலும் என் கடைசி இடுகையும்.....

என் புருசனும் கச்சேரிக்கு போனான் என்ற கதையாய் நானும் பதிவெழுதுகிறேன் என்றாகி விடுமோ என்கிற கவலை எனக்கு.. அதால் தான் செந்தில் அண்ணன் உதவியுடன் கவுண்டமணி அண்ணனிடம் ஐடியா கேட்கப்போகலாம் என்று வந்தேன்.. பிறகு நீங்களே பாருங்கள்..

செந்தில் : அண்ணே .. அண்ணே ... என்னண்ணே பண்றீங்க?

கவுண்டர் : வாடா பேரிக்கா தலையா...அது வேற ஒண்ணும் இல்லடா கோமுட்டி தலையா, வீட்ட ரெண்டு இன்ச் தள்ளி வைக்கலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.. வந்துட்டான் என்ன பண்றீங்கனு ஏது பண்றீங்கன்னு கேட்டுது..

செந்தில் : அதில்லேண்ணே.. உங்கள பாக்கறதுக்கு ஒருத்தர் வந்து இருக்கார்.. உங்க கிட்ட ஏதோ ஐடியா கேட்கணுமாம்..

கவுண்டர் : யார்ரா அது? அவன் என்ன பெரிய அமேரிக்கா ஜனாதிபதியா ..வரச்சொல்லுடா..

செந்தில் : வாங்க குறை ஒன்றும் இல்லை ..

கவுண்டர் : : என்னது குறை ஒண்ணும் இல்லையா? யார்ரா அவன் குறையில்லாம இருக்கிறவன்.. வரச்சொல்லு அவன..

குஒஇ : வணக்கமுங்க .. நான் தானுங்க அது..

கவுண்டர் : ஓ நீ தானா அது.. என்ன வேணும்? நீ என்ன பண்ற?

செந்தில் : அவர் பதிவருங்க..

கவுண்டர் : பதிவரா? ஓ சார் ரெஜிஸ்டரர் ஆபீஸ்ல வேலை பாக்குறாரா?இல்லே ஏதாவது யுனிவர்சிட்டியில் வேலை பாக்கிறாரா?

செந்தில் : அண்ணே அந்த பதிவர் இல்லேண்ணே.. இது ப்லாக் ..

கவுண்டர் : ஓ.. அந்த பதிவரா? நாட்டுல இந்த பதிவருங்க தொல்லை தாங்க முடியலப்பா.. புண்ணாக்கு விக்கிறவன்,குண்டூசி விக்கிறவன் எல்லாம் பதிவராம்.. அட அப்படியே இருந்தாலும் ஒழுங்கா எழுதி ஒண்ணாவ இருக்கீங்க? ஏதோ ஒண்ணங்கிளாஸ் பசங்க மாதிறி அவன் என் பென்சிலை திருடீட்டான் , இவன் என்ன கிள்ளி வச்சுட்டான்னு ஒரே சண்டை.. நீங்க எல்லாம் படிச்சவங்களா?


குஒஇ : அது வேற ஒண்ணும் இல்லீங்க.. நீங்க செந்தில் அண்ணனை உதச்சி பிரபலமாயிட்டீங்க.. நானும் இந்த பதிவு எழுதி......

கவுண்டர் : பதிவு எழுதி?????????? பிரபலமாகலாம்னு பாத்தியாக்கும்? நீ பிரபலமாகுறியோ இல்லியோ மத்தவங்களுக்கு ப்ராப்லமாகாம இரு அது போதும்..

குஒ இ: இல்லேண்ணே ஏதாவது ஐடியா இருந்தா..

செந்தில் : அண்ணே வேணும்னா உலகத்திரைப் படம் பத்தி விமர்சனம் எழுதச்சொல்லலாமா?

கவுண்டர் : க்கும்ம்ம். உள்ளூர் திரைப்படத்துக்கே இங்க வக்கு இல்லை. இதுல உலகத்திரைப்படம்.. அது எல்லாம் வேணாம் ராஜா.. அதுல அப்படி என்ன எழுவே? பாக்க வேண்டியத நல்லா பாத்துட்டு அப்புறம் அந்த டைரக்டர் அப்படி சொல்லி இருக்காரு, இப்படி சொல்லி இருக்காருணு நாமலே ஒரு கதை சொல்ல வேண்டியது ஏன்னா யார் அத போய் பாக்க போராங்க .. அட அனகொண்டாவ பாத்துட்டு பெண் பாம்பு பழிவாங்குதுண்ணு சொன்னாலும் சொல்லுவீங்க..

செந்தில் : இல்லேண்ணா யாராவது பிரபலமான பதிவர வம்பு சண்டைக்கு கூப்பிட்டு..

கவுண்டர் : யார்ரா பிரபலம்? இங்கே யாரும் பிரபலம் இல்லே.. இதுல எல்லாம் சமம் தான்.. நீ வேணா போய் பாரு நீ சொல்ர பிரபலத்தோட பழைய பதிவுகல.. யாரும் எட்டி பாத்திருக்க மாட்டாங்க..அப்படியே இருந்தாலும் அந்த பொலப்பு உனக்கு தேவையா?

செந்தில் : போங்கண்ணே... அப்புறம் தமிழ்மணத்தில எப்படி ஓட்டு வாங்குறது? சூடான இடுகையா எப்படி இருக்கிறது?

கவுண்டர் : தமிழ்மணமா? அது உன்ன விட நாத்தம் புடிச்ச இடம்டா.. அங்கே எல்லாம் ஓட்டு வாங்க நல்ல எழுத்து தேவையில்ல... வேற ஒண்ணு வேணும்.. ஆமா தமிழ்மணம் என்ன ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியா? அது பட்டம் குடுத்தா தான் நீ வாங்குவியா?

குஒ இ : அப்போ வேற என்ன பண்ண?

கவுண்டர் : உம்ம்ம்ம். வேணா கலைக்டர் ஆஃபிஸ்ல போய் ஃப்ல்ல கையெழுத்து போடு.. கேட்குறான் பாரு.. போ போய் உருப்படுர வழி இருந்தா பாரு.. வந்துட்டான். பெருசா.. ஆளையும் மண்டையையும் பாரு..

கு ஒ இ : சரிண்ணே..


ஆம்.. நண்பர்களே. இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி..

19 பதிலடிகள்...:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அட அப்படியே இருந்தாலும் ஒழுங்கா எழுதி ஒண்ணாவ இருக்கீங்க? //

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. //

கொடுத்து வைத்தவர் நீங்கள்..,

கிரி said...

Will come later :-(

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுரேஷ்.. நன்றி..

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரிண்ணே.. வாங்க..

Subha said...

//// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. //

ஆரம்பிச்சு 2 மாதத்துல பின் வாங்குறீங்களே...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க சுபா..
என்ன பன்றது? நேரம் இல்ல.. ஆனா பதிவ படிக்க வருவோம்..

Beski said...

//// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. //

என்ன தலைவா... இப்படிப் போறீங்க? நேரம் இருக்கும்போது எழுதலாமே! அடிக்கடி எழுதனும்னு அவசியம் இல்லை. மனம் ஏன் ஒப்பவில்லை?

Menaga Sathia said...

//// இதுவே என் கடைசி இடுகையாகும்.. ஏனோ மேலும் எழுத மனமும் நேரமும் ஒப்பவில்லை.. //
ஏன் ராஜ் என்னாச்சு.சும்மா எழுதுங்க உங்க பதிவு படிப்பதில் எனக்கு சந்தோஷம் ஏன்னா கவுண்டர் அட்டாக்கும் செந்தில் காமெடியும் நல்லாயிருக்கும்.அடிக்கடி எழுதுங்க.
இந்த அக்கா சொன்ன கேட்கனும் ஓகே வா..
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

கிரி said...

ராஜ் அவசரப்படாதீங்க..

உங்களை போல எனக்கும் பிரச்சனை இருந்தது..அதன் பிறகு நான் என் பதிவுகள் எழுதுவதை குறைத்துக்கொண்டேன் ..தற்போது எந்த வித பதிவுலக அரசியலிலும் சம்பந்தப்படாமல் மற்றும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிம்மதியாகவே இருக்கிறேன்..

என்னுடைய மன திருப்திக்கே எழுதுகிறேன்.. அதே போல நீங்களும் உங்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுதுங்கள்.. எழுதுவதை நிறுத்த வேண்டாம்.

பதிவு போதைக்கு அடிமையாகாமல் இருந்தால் போதுமானது

அன்புடன்
கிரி

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க எவனோ ஒருவன்.. நன்றி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வங்க அக்கா.. நன்றி.. பாக்கலாம் கா.. கொஞ்சம் இடைவெளிவிட்டு..

குறை ஒன்றும் இல்லை !!! said...

கிரிண்ணே.. நன்றி.. கண்டீப்பா முயற்சி செய்றேண்ணே..

சிநேகிதன் அக்பர் said...

நீங்களே இப்படி சொன்ன எப்படி.

எனக்கு தெரிந்து உங்களுக்கு நேரம் இல்லை சரியா.

உங்களுக்கு ஏற்பட்ட எண்ணம் எனக்கு இரண்டு வாரம் முன்பே ஏற்பட்டுவிட்டது. ஆனால் பதிவர் சண்டையை நினைத்து அல்ல. வேலை கெடுவதை நினைத்து. ஆனாலும் ஓய்வு நேரத்தில் பதிவு எழுதலாம் என்று முடிவை மாற்றிக்கொண்டேன்.

அப்படியென்றால் வாரம் ஒன்று ரெண்டு அல்லது ரெண்டு வாரத்துக்கு ஒன்று என்று எழுதினால் போதும்.

மற்றபடி நீங்க பதிவுலகைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏன்னா நாம அந்த சண்டையில இல்லை.(இங்கு யாரும் தெரியாமல் சண்டையிட வில்லை.எல்லாமே ஈகோ.)

நீங்கள் வந்த பிறகு என்னை மாதிரி நாலு நண்பர்கள்( நாலு பேரு மட்டும் என்றாலும்) கிடைத்துள்ளார்கள் என்று நினைத்தீர்களானால். கண்டிப்பாக நீங்கள் தொடர்ந்து எழுதுவீர்கள்.

என்னை பொறுத்தவரை பதிவு எழுதுவதை நண்பர்களுக்காக கடிதம் எழுதுவது மாதிரிதான் நான் நினைக்கிறேன்( இன்னும் கொஞ்சம் நாள் சென்றால் உருப்படியாக ஏதாவது எழுதலாம்) .

இதே க‌ருத்துதான் ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனவே முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அக்பர்..நன்றி.. உங்கள் கருத்துககும் அறிவுரைக்கும் நன்றி.. கண்டீப்பாக எழுத முயற்சி செய்கிறேன்..

Anonymous said...

உங்க அலும்புக்கு ஒரு அளவு இல்லையா??

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க மயில்.. எத அலும்புன்னு சொல்றீங்க?

Anonymous said...

உங்கள் ப்ளாக் நன்றாக உள்ளது..உங்களின் கவுண்டர் காமெடி பதிவுகள் நன்றாக இருக்கு..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாங்க அம்மு..
நன்றி..

Post a Comment

ஜெய் ஜக்கம்மா!! பதிவ படிச்சிட்டு பதில் சொல்லாம போறவங்களுக்கு நீயே நல்ல தண்டனை குடும்மா!!!